எவரெஸ்ட் சிகரத்துக்கு உரிமை கொண்டாடும் சீன அரசின் ஊடகத்துக்கு நேபாளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை முழுவதுமாக சீனா வைத்திருப்பதாக சீன அரசின் ஊடகமான, சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (China Global Television Network- CGTN ) செய்தி வெளியிட்டது. மேலும், “அன்பே நேபாளம், இது நியாயமானது என்று நீங்கள் நினைக்கவில்லையா? இதனை நீங்கள் எங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்” என்றும் அந்த செய்தி நிறுவனம் ட்வீட் செய்திருந்தது. இதையடுத்து சீனாவின் ஆதரவு செய்தியாளர்கள், சீன-திபெத்தின் எவரெஸ்ட் […]
Tag: உலகம்
அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மீதான சீன நேரடி முதலீடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு குறைத்துள்ளது. உலக நாடுகளை மிரட்டிய கரோனா வைரஸ், அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். பல ஆயிரம் மக்கள் வேலையிழக்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது. கடந்த 10 ஆண்டுகளில், முதல்முறையாக சீன அரசு அமெரிக்காவில் செய்யும் நேரடி முதலீட்டை குறைந்துள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. நேரடி முதலீட்டில் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மீதான முதலீட்டைதான் குறிக்கிறது. ஆனால், பங்குகள் […]
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவை உலுக்கி வந்த கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]
கனடாவில் அத்தியாவசிய ஊழியர்களுக்கான மாத சம்பளத்தை எதிர்பாராத அளவு அதிகரித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார் கனடா நாடு முழுவதிலும் இருக்கும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கான ஊதியத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக உயர்த்தியதோடு நாட்டை வழி நடத்துவதற்கு நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பணயம் வைத்து போராடுகிறீர்கள். ஆனால் குறைந்த ஊதியம் பெற்று வருகிறீர்கள். நீங்கள் ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அத்யாவசிய ஊழியர்களுக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு 1,35,963 ரூபாய்க்கு குறைவாக இருக்கக் கூடாது […]
அமெரிக்காவில் ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்த குற்றத்திற்கு இந்தியர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியரான ராஜிந்தர் சிங் என்பவர் அப்னா பஜார் என்ற பெயரில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை பயன்படுத்தி பொருட்களை 200% விலைகளை உயர்த்தி மக்களிடம் விற்பனை […]
ஒபாமா தற்போதைய அதிபர் டிரம்பை சுயநலவாதி என்றும் பழமைவாதி என்றும் விமர்சனம் செய்துள்ளார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 40 லட்சமாக உயர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து […]
பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் நாடு சவக்காடாக மாறும் என நிபுணர்கள் பிரதமர் ஜான்சனை எச்சரித்துள்ளனர் பிரித்தானியாவில் 45 நாட்களுக்கு மேலாக அமலில் இருந்த ஊரடங்கை பிரதமர் ஜான்சன் தளர்த்த போவதாக வெளியான தகவலை தொடர்ந்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் இறப்பு விகிதம் குறைந்து வருவதனால் பிரதமர் ஜான்சன் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்த முடிவு செய்துள்ளார். ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்று ஜான்சனும் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாமென பிரிட்டனை சேர்ந்த பெரும்பாலானோர் கருத்து […]
கோவிட்-19 தொற்றை ட்ரம்ப் கையாண்ட விதம் ஒரு குழப்பமான முழு பேரழிவுக்கு வித்திட்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா விமர்சித்துள்ளார். அமெரிக்காவில், பொதுவாக முன்னாள் அதிபர்கள் இந்நாள் அதிபர்கள் குறித்தோ ஆட்சி குறித்தோ பெரும்பாலும் விமர்சிக்கமாட்டார்கள். ஆனால் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா இந்நாள் அதிபர் ட்ரம்ப் கரோனா தொற்றை முறையாகக் கையாளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த விமர்சனம் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமை தனது […]
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது அணு ஆயுதங்களை அதிகமாக கையில் வைத்துக்கொண்டு மற்ற நாடுகளை அச்சுறுத்தி வந்த ஈரானுடன் ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய 6 வல்லரசு நாடுகள் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். அணுசக்தி ஒப்பந்தம் என அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி தனது அணு ஆயுத கையிருப்பை ஈரான் படிப்படியாக குறைத்துக்கொள்ளவேண்டும். அதற்குக் கைமாறாக அந்நாட்டின் மீது பொருளாதார […]
உலக சுகாதார நிறுவனம் சீனாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே உலக மக்களை கொரோனா குறித்து தாமதமாக எச்சரித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனாவால் உலக நாடுகள் முழுவதும் பெருமளவு பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவும் என்ற உண்மையை தாமதமாக கூறியதாகவும் குற்றம் சுமத்தி வந்தார். இந்த கொரோனா விவகாரத்தில் சீனா அதிபர் ஜின்பிங் உலக சுகாதார அமைப்பின் […]
ஒரு பரிசுத் தொகையை வாங்க சென்றவருக்கு அதைவிட பெரிய பரிசு தொகை கிடைத்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது அமெரிக்காவில் ஒருவர் லாட்டேரியில் கிடைத்த $1,000 (இந்திய ரூபாய்க்கு 75504) பரிசுதொகையை பெற காத்திருந்த சமயம் வாங்கிய இன்னொரு லாட்டரி சீட்டுக்கு $177,777 (இந்திய ரூபாய்க்கு 13422874 ) பரிசு விழுந்துள்ளது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Virginia-வை சேர்ந்த ஜெப் மெலிக் என்பவருக்கு லாட்டேரியில் $1,000 பரிசு கிடைத்துள்ளது. கிடைத்த பரிசு தொகையை பெறுவதற்காக லாட்டரி வாடிக்கையாளர் […]
டிரம்ப் மகளின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இவான்கா டிரம்ப்க்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது கொரோனா தொற்றினால் அமெரிக்காவே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை நெருங்கும் நிலையில் 77,180 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்பின் தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த […]
அதிபர் டிரம்பின் மகளுக்கு தனிப்பட்ட உதவியாளராக பணிபுரிந்து வருபவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவன்கா டிரம்பின் தனிப்பட்ட உதவியாளர் கேடிக்கு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் கொரோனா பாதிக்கப்பட்ட மூன்றாவது ஊழியராக அவர் உள்ளார் என ஊடகமொன்று தெரிவித்திருந்தது. கேடி டிரம்பின் மகளுக்கு தனிப்பட்ட உதவியாளராக இருந்து வந்தார் ஆனால் பல வாரங்களாக அவர் இவருடன் இல்லை. இரண்டு மாதங்கள் தொலைபேசியிலேயே பணிபுரிந்து வந்துள்ளார். கொரோனா […]
முதுகுவலி என்று மருத்துவமனை சென்றவருக்கு ஸ்கேனில் 3 கிட்னி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் பிரேசில் நாட்டை சேர்ந்த 38 வயதான நபர் ஒருவர் மருத்துவமனைக்கு சென்று முதுகுவலி என மருத்துவரிடம் கூறியுள்ளார். எனவே மருத்துவர் அவரது உடலை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு சாதாரண முதுகுவலி தான் வேறு எந்தப் பெரிய பாதிப்பும் இல்லை என கூறி உள்ளார். ஆனால் அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்டில் முதுகு வலி என வந்தவருக்கு மூன்று கிட்னி இருப்பதை […]
30 வருடங்களுக்கு முன்பு இறந்த தாயின் சாம்பல் பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டதை கண்டு மகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரிட்டனில் மார்க் ஹாரிஸ் என்பவருக்கு தற்போது 41 வயது ஆகின்றது. இவரது தாய் 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பல் தாழி எனப்படும் பானையில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு கல்லறையின் அருகே புதைக்கப்பட்டது. இந்நிலையில் தனது தாயின் சாம்பலை சிறிதளவு எடுத்து தான் செய்து அணிய இருக்கும் செயினில் சேர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு தாயின் […]
சுகாதார ஊழியருக்கு வழங்க சேமித்து வைக்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான முகக் கவசங்கள் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தின் சிறப்புமிக்க தொழில் நகரமான மான்செஸ்டரின் புறநகர் சல்போர்ட். இங்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தேசிய சுகாதார ஊழியர்களுக்கு வழங்க இருந்த 1.5 கோடி ருபாய் மதிப்பிலான 80,000 முகக்கவசங்கள் அங்கிருக்கும் மருத்துவ உபகரணங்கள் சேமிப்பு குடோன் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் 3 பேர் நள்ளிரவு 3 மணிக்கு […]
உயிருடன் புதைக்கப்பட்ட தாய் மூன்று நாட்களுக்குப்பின் உயிருடன் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Shannxi என்னும் மாகானத்தில் என்ற Zhang பெண் தனது மாமியாரை காணவில்லை எனவும் அவரை தனது கணவர் Ma சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து சென்றதாகவும் பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து Maவை காவல்துறையினர் விசாரித்ததில் அவர் தன் தாயை உயிருடன் ஒரு இடத்தில் புதைத்து விட்டதாக உண்மையை கூறியுள்ளார். அவர் கூறிய […]
கொரோனா தொற்றின் காரணமாக அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் மட்டும் 2 கோடி மக்கள் வேலை இழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்ததோடு பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பெரிதும் தாக்கியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா தொற்றினால் அதிக அளவு பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்று […]
உலகில் நடக்கும் யுத்தம் மற்றும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதாபிமான நோக்கத்தில் நிவாரண பணிகளை செய்யும் முகமாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ளது. செம்பிறை சங்கம் செஞ்சிலுவை சங்கம் என பெயரில் வித்தியாசத்தை கொண்டிருந்தாலும் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்வைத்து செயல்படும். அரபுநாடுகளில் சிலுவை என்ற குறியீடுக்கும் வார்த்தைக்கும் மாறாக பிறை என்ற குறியீடும் வார்த்தையும் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 178 தேசிய கிளைகள் கொண்ட இந்த அமைப்பு மனிதாபிமான […]
அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இரண்டு பெரும் தாக்குதலை காட்டிலும் கொரோனா அதிக அழிவை ஏற்படுத்தி இருப்பதாக அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்துள்ளார் கொரோனா தொற்றினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அங்கு 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்து 3 கோடி அமெரிக்கர்கள் வேலை இன்றி நிவாரணம் கேட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு உள்நாட்டு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. […]
ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றினால் 80% பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 3392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 104 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் காபூலில் 500 பேரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 50 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் 50கோடி மக்கள் தொகையில் 80% மக்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. குடிப்பெயர்வுக்காண சர்வதேச அமைப்பின் ஆப்கானிஸ்தான் அதிகாரி நிக்கோலஸ் பிஷப் கூறியதாவது ஜனவரி […]
5 வயது சிறுவன் 228 ரூபாயுடன் தனக்கு லம்போகினி வாங்க பெற்றோரின் காரை வேகமாக எடுத்துக்கொண்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவில் இருக்கும் உட்டா மாகாணத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சாலை விதிகளை மீறி அதிவேகமாக கார் ஒன்று சென்றுள்ளது இதனை கவனித்த போலீசார் தங்களது வாகனத்தில் சென்று விரட்டிப் பிடித்து உள்ளனர். விரட்டி பிடிக்கப்பட்ட காரை திறந்து பார்த்த பொழுது காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரை வேகமாக இயக்கி வந்தது […]
கொரோனா தொற்றுக்கான மருந்து குறித்த ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் 61500 கோடி ரூபாய் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி 36 லட்சத்திற்கும் அதிகமானவர்களை பாதித்து 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பலியை எடுத்துள்ளது. இதுவரை தொற்றுக்கான தடுப்பு மருந்தும், நோயிலிருந்து தீர்வு பெறுவதற்கான மருந்தும் உருவாக்கப்படவில்லை. ஆனால் மருந்தை கண்டறியும் முயற்சி உலகம் முழுவதிலும் தீவிரமாக நடந்து வருகின்றது. எப்பொழுது மருந்து கண்டுபிடிக்கப்பட்டு எப்போது […]
சீனா அமெரிக்கா இடையே போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் கொரோனா தொற்று காரணமாக சீனா பெரும் பின்னடைவை அடைந்து வரும் நிலையில் அமெரிக்காவுடன் போர் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இது குறித்த அறிக்கையை சீன பாதுகாப்பு அமைச்சகம் ஜனாதிபதி உட்பட உயர்மட்ட தலைவர்கள் அனைவருக்கும் ஒப்படைத்துள்ளது. சீனாவிற்கு எதிராக உலக நாடுகளில் கடுமையான போக்கு 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முக்கிய சம்பவத்திற்குப் பின்னர் இருந்ததை காட்டிலும் […]
கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு பெண் பயிற்சியாளர்களை கூகுள் நியமித்துள்ளது உலக அளவில் பிரபலமான நிறுவனமான கூகுள், இந்தியாவில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுரை வழங்க, கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு அது தொடர்பான சுகாதார ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள பெண் பயிற்சியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “முதல் கட்டமாக கூகுள் மேப் மூலம் […]
அமெரிக்காவில் ஜூன் ஒன்றிலிருந்து ஒரு நாளைக்கு 3000 பேர் தொற்றினால் இறக்கும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது வல்லரசு நாடான அமெரிக்கா, கண்ணுக்கு தெரியாத வைரசின் பிடியில் சிக்கி திணறி வருகின்றது. மற்ற நாடுகளை விட அதிக பாதிப்பை அமெரிக்கா தினமும் சந்திக்கிறது. கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிர்ப்பலி வேகமாக 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்ட போகின்றது. அமெரிக்காவில் ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்தி, பொருளாதார நடவடிக்கைகளை பல மாகாணங்களும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அங்கு உள்நாட்டு அறிக்கை ஒன்று […]
அமெரிக்கா தவறு செய்துவிட்டதாக சுகாதாரத் துறை அலுவலர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை பலி எடுத்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது அமெரிக்கா. இதனை தொடர்ந்து கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் அதிபர் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குனர் ரிக் பிரைட் அமெரிக்கா மீது […]
கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீன பேராசிரியரை அமெரிக்காவில் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் லியு கொரோனா குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் அவரது வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ரோஸ் காவல்துறை […]
கொரோனா தொற்றை மூலிகை மருந்து மூலம் கட்டுப்படுத்தி உள்ளதாக மடகாஸ்கர் அதிபர் தெரிவித்துள்ளார் மடகாஸ்கர் தீவில் கொரோனா தொற்றினால் 128 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் நேரவில்லை. அந்த தீவில் காணப்படும் ஆர்டிமீஸியா என்னும் தாவரத்திலிருந்து மலேரியா நோய்க்கு மருந்து தயார் செய்யப்படுகின்றது. அதே மருந்து கொரோனா தொற்றையும் அளிக்க வல்லது என மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா தெரிவித்துள்ளார். இயற்கையாக தயாரிக்கப்படும் அந்த மருந்திற்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என பெயரிட்டு இருப்பதாக கூறிய […]
பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு விமானப்படையில் பைலட்டாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தர்பார்கர் தான் பெரிய மாவட்டம் இதுவே இந்து மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்த இளைஞர் ராம் தேவ் என்பவர் பாகிஸ்தான் விமானப்படையில் தற்போது பைலட்டாக சேர்க்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினராக விளங்கும் இந்து மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் பாகிஸ்தான் விமானப்படையின் விமானியாக சேர்வது இதுவே முதல் முறை. இதுகுறித்து பாகிஸ்தானிய இந்து […]
சீனாவிற்கு முன்னதாகவே பிரான்சில் தோற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார் சீனாவின் வூஹான் சென்ற வருடம் டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தோற்று தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் மற்ற நாடுகளில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இதுவரை கொரோனாவால் 36 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பரவியதாக கூறப்பட்டது ஆனால் சீன அரசு உலக சுகாதார அமைப்பிடம் டிசம்பர் 31-ஆம் தேதி […]
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தான் தனது உயிரை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு 11 நாட்கள் கழித்து ஏஞ்சலா என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது இதயம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை கண்டுபிடித்து கூறியுள்ளனர். மார்ச் 22 அன்று செல்சியா மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு ஸ்கேன் மூலம் இதயம் மற்றும் நுரையீரலை சுற்றி திரவம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அவர் […]
லண்டனில் இருக்கும் NHS நைட்டிங்கேல் மருத்துவமனைக்கு புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக கிழக்கு லண்டனில் இருக்கும் ExCel சென்டரில் NHS நைட்டிங்கேல் மருத்துவமனை ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியில் இருந்து இயங்கி வந்தது. நாலாயிரம் படுக்கைகள் அமைந்த மருத்துவமனையில் பெரும்பாலான படுக்கைகள் காலியாகவே காணப்பட்டது. முதல் மூன்று வாரத்தில் 51 நோயாளிகளுக்கு மட்டுமே மொத்தமாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நைட்டிங்கேல் மருத்துவமனைக்கு NHS பிரிட்டன் எவ்வளவு செலவு […]
பெல்ஜியம் துணை பிரதமர் மாஸ்க் அணிய திணறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. பெல்ஜியம் துணைப் பிரதமரான Koen Geens தையல் நிலையம் ஒன்றிற்கு 35000 துணியாலான மாஸ்க்குகளை தன்னார்வலர்கள் செய்து நாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். அங்கு அவருக்கும் மாஸ்க் கொடுக்கப்பட்டது. Koen Geens மாஸ்க்கை அணிய தெரியாமல் முதலில் நெற்றியில் அதனை அணிய அவரது காதுகளுக்குள் மாஸ்க் செல்லவில்லை. https://video.dailymail.co.uk/preview/mol/2020/05/04/2690830845026808644/636x382_MP4_2690830845026808644.mp4 பின்னர் கண்கள் மீது அணிந்து மூக்கையும் வாயையும் மாஸ்க்கை இழுத்து […]
பைக் ஓட்டி வந்த குரங்கு சிறுமியை தரதரவென இழுத்துச் சென்றது பார்ப்போர் மனதை பதட்டம் அடைய செய்துள்ளது கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதனால் சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஏற்றார் போல் வித்தியாசமான மற்றும் அபூர்வமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணமுள்ளது. அவ்வகையில் இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு “நாம் நிச்சயமாக […]
கொரோனா தொற்று அச்சத்தினால் 3 லட்சம் பேர் கெட்ட பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது கொரோனா தொற்றுப் பரவல் அச்சத்தினால் பிரித்தானியாவில் நல்ல விஷயம் ஒன்று நடந்துள்ளது. அது பிரித்தானியர்கள் 3 லட்சம் பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு உள்ளனர் என்பதுதான். புகை பிடிப்பவர்களை தான் கொரோனா எளிதில் தாக்கும் வாய்ப்பு உள்ளது என தகவல் பரவியதை தொடர்ந்து, அச்சமடைந்த மக்கள் 3 லட்சம் பேர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளனர் என […]
உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் 38 நாடுகள் எந்த உயிரிழப்பையும் சந்திக்காதது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, தடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்சியின் கொள்கை பரப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஏப்ரல் 11 கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் யார் கண்களுக்கும் தென்படாமல் தலைமறைவாக இருந்துள்ளார். இதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்து விட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் உர தொழிற்சாலை ஒன்றை திறப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்தார் கிம். தொழிற்சாலை திறப்பு […]
சீனாவில் கொரோனா தொடர்பாக என்ன நடந்தது என்பது பற்றிய வலுவான அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் இருக்கும் லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பான பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசிய பொழுது, “கொரோனா தொடர்பாக சீனாவின் வூஹான் நகரில் என்ன நடந்தது என்பதை நாங்கள் வலுவான அறிக்கையாக வெளியிடுவோம். அது இறுதியான முடிவாக இருக்கும் என நினைக்கின்றேன். கொரோனா உலக அளவில் பரவும் தொற்றாக மாறுவதற்கு முன்னர் […]
ஊரடங்கு சமயத்தில் விதிமுறையை மீறி பப் முன்பு கூடியிருந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பிரித்தானியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வருவதற்கும் பொது இடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிக அளவில் கூடும் சினிமா தியேட்டர், பப், மால் போன்றவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கென்ட் […]
லிதுவேனியாவில் விமான நிலையங்களை தியேட்டர்களாக மாற்றி மக்கள் கார்களில் அமர்ந்து படம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் 10ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை சில நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. கடைகளுடன் இருக்கும் சிற்றுண்டி சாலைகள், திறந்தவெளி உணவகங்கள் மற்றும் நூலகங்களை திறப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. அந்நாட்டில் சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து […]
சீனாவின் கொரோனா மரபணு ஆய்வாளர் நாட்டைவிட்டு தப்பியதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்து பதிலளித்துள்ளார் சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய தொடக்கத்தில் கொரோனா குறித்து முதல் முறையாக எச்சரிக்கை விடுத்த வவ்வால் பெண்மணி எனும் ஆய்வாளர் தன் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்பட்ட தககவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்களில் ஒருவரான வூஹான் நகரை சேர்ந்த Shi Zhengli கொரோனா மரபணு தொடர்பை முதன் முறையாக கண்டுபிடித்தவர். அரசின் […]
ஒரே இரவில் ஒருவர் 55 மில்லியன் டாலர் சொந்தக்காரர் ஆகி மிக பெரிய பணக்காரர் ஆகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது கனடாவின் ரொரன்ரோ பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற லாட்டரி குலுக்கல் போட்டியில் yellowknife நகரில் வசிக்கும் ஒருவருக்கு 55 மில்லியன் டாலர் பரிசுத் தொகை விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வெஸ்டன் கனடா லாட்டரி கார்ப்பரேஷன் வெளியிட்டது. ஆனால் இதுவரை பரிசு தொகை விழுந்த நபர் இதுகுறித்து கோரவில்லை. அதேபோன்று லாட்டரி குலுக்கலில் ஆறுதல் பரிசாக […]
சொந்த நாட்டிற்கு திரும்பிய ஸ்பானிஷ் மக்கள் விமான விபத்தில் சிக்கி தொடர்ந்து மரணமடைந்துள்ளனர் பொலிவியாவின் ராணுவ விமானம் விபத்து ஏற்பட்டதில் இரண்டு விமான குழு உறுப்பினர்கள் மற்றும் ஸ்பெயின் குடிமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு விமான படை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு நகரமான டிரினிடாட் அருகே பீச் கிராஃப்ட் பரோன் பி-55 எனும் சிறிய ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்ட 4 ஸ்பெயின் […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 45 ஆயிரத்து 050 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 லட்சத்து 28 ஆயிரத்து 511 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளுக்கும் மேல் பரவியது. இதன் […]
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, தடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கட்டுப்படுத்திய இந்தியா : […]
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் கையில் கை மணிக்கட்டில் இருக்கும் அடையாளத்தால் அவர் அறுவை சிகிச்சை செய்திருக்கக்கூடும் என கருதுகின்றனர் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் சில தினங்களாக யார் கண்களுக்கும் புலப்படாமல் இருந்ததால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் இறந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று உரத்தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு கிம் ஜாங் உன் வந்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகங்கள் […]
செனட் சபையின் முன்னாள் பெண் ஊழியர் ஜோ பிடென் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜோ பிடேன். வருகிற நவம்பர் மாதம் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குவது ஜோ பிடேன் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முன்னதாக கடந்த வருடம் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பிடேன் களம் இறங்கிய பொழுது அவருக்கு எதிராக […]
வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக தகவல் பரவியதற்கு மூன்று காரணங்கள் உள்ளது என நிபுணர்கள் வரிசைப்படுத்தி உள்ளனர். சர்ச்சைக்குரிய நாயகனான வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் கடந்த சில தினங்களாக அனைவராலும் பேசப்பட்ட தலைவர். உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வந்த நிலையில் ஏவுகணை சோதனை நடத்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். ஏப்ரல் 11 அன்று கட்சி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட கிம் அதன்பிறகு எந்த விழாவிலும் பங்கேற்காமல் வெளியில் […]
கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா சிறந்த நடவடிக்கைகளை எடுத்து தலைமை பொறுப்பிற்கு உயர்ந்துள்ளது என அமெரிக்கா பாராட்டியுள்ளது இந்தியா-அமெரிக்கா விவகாரங்களுக்கான பாராளுமன்ற குழுவின் இணை தலைவரான ஜார்ஜ் ஹோல்டிங் எம்பி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, கொடிய வைரசுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் தலைமைப் பொறுப்புக்கு இந்தியா உயர்ந்துள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்பு சிறப்பு வாய்ந்தது. தற்போதைய சூழலில் இது மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்தியா கொரோனா தொற்றை தடுக்க மிகவும் கடுமையாக போராடி வரும் சூழலில் அமெரிக்கா […]