Categories
உலக செய்திகள்

கொரோனாவை விரட்டிவிட்டோம்…. கட்டுப்பாடுகளை நீக்கும் நாடு ….!!

தங்கள் நாடு கொரோனா சங்கிலியை உடைத்து விட்டதால் அடுத்த திங்களன்று கட்டுப்பாடுகளை தளர்த்த போவதாக நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நான்காம் நிலை கட்டுப்பாட்டினை ஏப்ரல் 27ஆம் தேதி முடித்துக்கொள்ள இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடேர்ன் தெரிவித்துள்ளார். மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க மே 11 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும். மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின்கீழ் பள்ளிகள் திறக்கப்படும். கட்டுமானம் மற்றும் வனத் துறை தொடர்பான நிறுவனங்கள் உட்பட தொழில்நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். நான்காம் […]

Categories
உலக செய்திகள்

சீனாவை ”களமாடும் கொரோனா” புது மாகாணத்தில் பரவல் – அதிர்ச்சி

மீண்டும் சீன மாகாணத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் சீனாவில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியதால் இது இரண்டாவது கொரோனா அலையாக இருக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது, ஜியா பகுதியில் இருக்கும் மக்கள் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் இடையே இந்தக் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இவ்வாறு தொற்று பரவ தொடங்கியதன் காரணமாக பயணம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.வீட்டிலிருந்து வெளியே வருபவர்கள் மாஸ்க் அணிய வலியுறுத்துவதும் உடலின் வெப்பநிலையை […]

Categories
உலக செய்திகள்

நீங்க சொல்லுறது பொய்….!! அப்படிலாம் பண்ண முடியாது – சீனா பதிலடி …!!

கொரோனா வைரஸை மனிதர்களால் உருவாக்க முடியும் என்பது சாத்தியமற்ற செயல் என வூஹான் வைராலஜி இன்ஸ்டியூட்டின் இயக்குனர் தெரிவித்துள்ளார் சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் முழுவதிலும் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டியூட்டில் இருந்து வெளிவந்தது என கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த இன்ஸ்டியூட் கொடுத்துவந்த நிதியை நிறுத்த போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான இன்ஸ்டியூட்டின் இயக்குனர் யுவான் ஜிமிங் டெலிவிஷன் ஒன்றில் பேட்டி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா போல 9 நாடுகள்….. நாங்க தான் டாப் …. காலரை தூக்கி விடும் டிரம்ப் …!!

இந்தியா போன்ற 9 நாடுகளைவிட அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார் உலக நாடுகளில் கொரோனா தொற்றினால்  அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் நாடான அமெரிக்காவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவைப் போன்று ஒன்பது நாடுகளைவிட அதிக அளவிலான கொரோனா பரிசோதனை அமெரிக்காவில் நடைபெற்றுள்ளதாக நாட்டின் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசிய பொழுது, “அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு எதிரான போர் […]

Categories
உலக செய்திகள்

ரூ. 1,24,10,91,33,09,800…!! ”சீனாவிடம் கேட்டு பீல்” அனுப்பிய ஜெர்மனி ……!!

தங்களுக்கு இழப்பீடு தொகை தரவேண்டும் என 149 பில்லியன் யூரோக்களை கேட்டு ஜெர்மனி சீனாவுக்கு பில் அனுப்பியுள்ளது சீனாவில்  தொடங்கி உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்த கொரோனா தொற்று பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெர்மனி சீனாவிற்கு பில் ஒன்றை அனுப்பி உங்களால் எங்களுக்கு 149 பில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,24,10,91,33,09,800) நஷ்டம் என்று கூறியுள்ளது. அதோடு அந்த பில்லில் திரைப்படத்துறையில் ஏற்பட்ட இழப்பிற்கு 72 பில்லியன் யூரோக்கள், […]

Categories
உலக செய்திகள்

மக்கள் கூட்டம்..!! பூவை வைத்து தடுத்த ஜப்பான்… செம ஐடியா ….!!

பூங்காவில் மக்கள் கூடுவதை தவிர்க்க 10,000 பூக்களை மலர செய்து ஜப்பான் அரசு அசத்தியுள்ளது கொரோனா தொற்றில் இருந்து விடுபட முடியாமல் உலகநாடுகள் பலவும் தவித்து வருகின்றன. தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றவும் சுத்தமாக கைகளை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத மக்களை கட்டுப்படுத்த  ஜப்பான் அரசு புதிதாய் ஒரு முயற்சியை கையாண்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் சகுரா நகரில் வருடந்தோறும் மலர் விழாவானது நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் விழா கொரோனா தொற்று பரவலின் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில்…! ”கொள்ளையர்கள் வெறியாட்டம்” …. 47 பேர் பரிதாப பலி …!!

நைஜீரியாவில்  கொள்ளையர்களின் தொடர் தாக்குதலினால் 47 பேர் கொல்லப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டின் வடக்கே கட்சினா என்னும் பகுதியில் ஏராளமான கிராமங்கள்இருக்கின்றது.  விவசாய தொழில் செய்யும் பலர் அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தத்சென்மா, சபானா மற்றும் தன்மூசா ஆகிய மாவட்டங்களில் இருக்கும் பல கிராமங்களை இலக்காக வைத்து மோட்டார் பைக்குகளில் வந்த கொள்ளையர்கள் திட்டமிட்ட மற்றும் தொடர்ச்சியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 47 பேர்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அதிபர் முகமது புகாரியின் […]

Categories
உலக செய்திகள்

காற்றில் பறந்த ஊரடங்கு….!! ”ஒரே இடத்தில் கூடிய”… லட்சக்கணக்கானோர் ….!!

பங்களாதேஷில் ஊரடங்கை மீறி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இறுதிசடங்கில் கூடியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களின் தலைவரான மௌலானா ஸுபைர் அஹ்மத் அன்சாரின் இறுதி சடங்குக்கு 5 பேருக்கு மேல் கூட கூடாது என்று அறிவுறுத்தி இருந்த நிலையிலும் கட்டுக்கடங்காத அளவு மக்கள் வந்து கூடியுள்ளனர். இஸ்லாமிய அமைப்பின் தலைவர் என்ற காரணத்தால் அவருக்கு இறுதி சடங்கு நிகழ்த்த மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். பிரஹ்மன்பரியா மாவட்டத்தில், சாலைகளில் மக்கள் அதிகளவில் நிரம்பியதால் அதனை கட்டுப்படுத்த முடியாத அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு உடை..! சிகிச்சையை நிறுத்தும் மருத்துவர்கள் ? சிக்கலில் பிரிட்டன் …!!

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்காவிட்டால் சிகிச்சை அளிப்பதை நிறுத்தி விடுவோம் என எச்சரித்துள்ளனர் இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் 596 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால்  மொத்தம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16060 என பதிவாகியுள்ளது. அதோடு ஒரே நாளில் 5850 பேர் புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையின் காரணமாக தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள நோயாளிகளுக்கு அளித்துவரும் சிகிச்சை நிறுத்தப்படும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். துருக்கியில் இருந்து தரப்படுவதாக இருந்த […]

Categories
உலக செய்திகள்

403 வருடம்…! ”கல்லா கட்டிய தொழிற்சாலை” மூட வைத்த கொரோனா …..!!

கொரோனா தொற்றின் தீவிரம் உணர்ந்து 403 ஆண்டுகள் மூடப்படாத மதுபான தொழிற்சாலை மூடப்படுகிறது  சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாட்டை பொறுத்தவரை பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அடுத்ததாக ஜெர்மனியில் தொற்றின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. அங்கு மட்டும் 1.43 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதன் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு முடிவுரை…! ”10 லட்சம் தடுப்பூசி ஆய்வு” பிரிட்டன் போட்ட ஸ்கெட்ச் …!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை செப்டம்பர் மாதத்திற்குள் கண்டுபிடிக்க பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் களமிறங்கியுள்ளது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிரிட்டனில் நோய் தீவிரம் அதிகமானதை தொடர்ந்து அங்கிருக்கும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் புதிதாய் முயற்சி ஒன்றில் களமிறங்கியுள்ளது. தடுப்பூசியை கண்டுபிடிக்க ஒரு வருட காலம் ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனாவிற்கான தடுப்பூசியை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி…!! ”இப்போதைக்கு தயாராகாது” – கைவிரித்த WHO….!!

கொரோனா தொற்றை தடுப்பூசி இல்லாமல் எதிர்கொள்ள அனைவரும் தயாராகிக் கொள்ள வேண்டுமென உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது கொரோனா தொற்று பல நாடுகளுக்கு பரவி பல உயிர்களை எடுத்துள்ளது. இந்நிலையில் தொற்றை தடுப்பதற்கான மருந்து விரைவில் உருவாகும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நாபோரோ எச்சரித்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த டேவிட் நாபோரோ அனைத்து வைரஸ்களுக்கு திறன்மிக்க தடுப்பூசிகள் உருவாக்குவதற்கான தேவைகள் ஏற்படாது. சில […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயம் இல்லை, ஊரடங்கை நீக்குங்க…. ஜெர்மனியில் போராட்டம்….!!

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் ஜெர்மனியில் தொற்று காரணமாக 4500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டார். அதன்படி உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணும் நடைமுறை தடை விதித்தும் அழகு நிலையங்கள் முடி வெட்டும் கடைகள் ஆகியவையும் மூடப்பட வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சீனர்களால் தயாரிக்கப்பட்டது – நோபல் பெற்ற அறிஞர் பகீர் தகவல் ..!!

எய்ட்ஸ் நோயை கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் கொரோனா மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கானு யாரு சொன்னது, சீனா தான் – எனக்கு தெரியும் – டிரம்ப் பதிலடி .!!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவை விட அதிகம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகையே வேட்டையாடும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை பதம்பார்த்துள்ளது. அங்கே 7 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி,  39ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திபில் ட்ரம்ப்பிடம் கேள்வி கேட்ட போது, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா அல்ல, சீனா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவில் கொரோனாவால்ஏற்பட்டுள்ள உயிரிழப்பை சீனாவிடம் ஒப்பிட்டால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் உலகம்…. பரிதவிக்கும் ஏழை நாடுகள், கடனில் மூழ்கும் அபாயம் …!!

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஏழை நாடுகள் பல கடனால் மூழ்கும் ஆபத்து இருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா தொற்றினால் ஏழை நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு கடனில் மூழ்கும் அபாயம் உள்ளது என ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் துணை தலைவர் ஆமினா முஹம்மத் இது குறித்து தெரிவித்த பொழுது, “சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று இன்று வரை உலகையே ஆட்டிப் படைத்து […]

Categories
உலக செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய அமெரிக்கா…. அலற போகும் சீனா…. உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

வூஹானின் ஆய்வுக் கூடத்திலிருந்து தொற்று பரவியதா என்பது குறித்து அமெரிக்கா விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறியும் என டிரம்ப் கூறியுள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது […]

Categories
உலக செய்திகள்

தயாரான தடுப்பூசி ? 7 நாளில் சோதனை – கொரோனாவுக்கு ஆப்பு வைக்கும் பிரிட்டன் ..!!

கொரோனா தடுப்பு மருந்தை ஏழு நாட்களுக்குள் மனிதர்களிடம் சோதனை செய்ய ஆராய்ச்சி குழு முடிவெடுத்துள்ளது சீனாவில் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. கொடிய தொற்றான கொரோனா வைரஸ்க்கு  உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க 21 ஆராய்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு ரூபாய் 133 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் […]

Categories
உலக செய்திகள்

மோடி எடுத்த முடிவு…. புகழின் உச்சியில் இந்தியா…. ஐநா சபையே பாராட்டுது …!!

கொரோனவை விரட்டிட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐநாவின் பொது செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பயத்தை காட்டிக் கொண்டிருக்கும் கொடூர கொரோனா வைரசுக்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதேவேளையில் கொரோனவை எதிர்த்து போராடி வரும் உலக நாடுகள்  அதற்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் […]

Categories
உலக செய்திகள்

வேணும்னு பண்ணி இருந்திங்கனா – நீங்க அவ்வளவு தான் – டிரம்ப் எச்சரிக்கை ..!!

கொரோனவை சீனா வேண்டுமென்று பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார். சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மரணம் அடைந்து வருவது மக்களின் மன நிம்மதியை உலுக்கியுள்ளது. உலகிலேயே வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்கா கொரோனவால் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது. இது சீனாவில் உருவாக்கப்பட்டது என்றும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை சிதைத்து சீனா முன்னேறுவதற்கு சீனா தொடுத்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை விரட்டி…!! ”உங்களை பாதுகாக்கும் நாடுகள்” எவை தெரியுமா ?

கொரோனா பாதிப்பில் மக்களை காப்பாற்றி, மக்களுக்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இன்றுவரை 147, 337 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிறப்பான சிகிச்சை அளித்து மக்களை பாதுகாக்கும் நாடுகள் எது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி மக்களின் உயிரை குடிக்கும் கொடூரனாக இருந்து வரும்  கொரோனாவை சிறப்பாக கையாண்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து மக்களை வீட்டுக்கு அனுப்பி வைக்த்து பாதுகாக்கும் நாடுகளே தற்போது பாதுகாப்பான […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் என்ன தான் நடக்கிறது… நான் சந்தோஷமா இல்ல… அதிபர் டிரம்ப்!

கொரோனா பாதிப்பை பொருத்தவரை சீனாவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். உலகளவில் நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனா போரில் களமிறங்கி கைகொடுக்கும் நாசா….!!

கொரோனா தொற்றைத் தடுக்க முடியாமல் திணறி வரும் அமெரிக்காவிற்கு உதவ நாசா மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க தொடங்கியுள்ளது சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிலும் பெருமளவு பாதித்து பல உயிர்களை பலி எடுத்துள்ளது. அதில் அமெரிக்கா அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றினை சமாளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் அமெரிக்கா பெரிதும் திணறி வருகிறது. இச்சூழலில் அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கலிபோர்னியா மாகாண […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கு முக்கியமல்ல, பொருளாதாரம் பாதிக்கும்… அதிபர் மீது பாய்ந்த மந்திரி பதவி நீக்கம்

பிரேசில் அதிபர் செயல்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் விமர்சித்து பேசியதால் சுகாதாரத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை எடுத்துள்ள கொரோனாவிற்கு  இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதல் மூலமாகவே தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறியதன் காரணமாக பல நாடுகளில் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தி வீட்டிலேயே மக்கள் இருக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு முரண்பாடாகவே பிரேசில் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

சீனாவை விட்டுறாதீங்க, உடனே விசாரியுங்க – டிரம்புக்கு கோரிக்கை …!!

கொரோனா தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள அதிபர் டிரம்ப்க்கு  7 எம்பிக்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் அதிபர் டிரம்புக்கு நாட்டின் குடியரசு கட்சியின் செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோ தலைமையிலான எம்பிகள் குழு ஒன்று திரண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். கடிதத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு, கொரோனா வைரஸின் தோற்றம் ஆகியவை பற்றி வெளிப்படையான விசாரணையை தொடர நட்பு நாடுகளான தென்கொரியா, ஐரோப்பிய, ஜப்பானுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி 7 எம்பிக்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா யுத்தம்… ஆல்ப்ஸ் மலையில் ஒளிரும் இந்திய தேசிய கொடி… ஸ்விஸ் மரியாதை!

கொரோனாவை  எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த மலை சிகரத்தில் இந்திய தேசியக் கொடியை ஒளிர விடப்பட்டுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனா அச்சத்தால் பல நாடுகள் முடங்கியுள்ள நிலையில் ஸ்விட்ஸர்லாந்தின் மிக உயர்ந்த […]

Categories
உலக செய்திகள்

நான் அதிபர் மகள் – காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்… டிரம்ப் மகளால் சர்சை …!!

அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் ஊரடங்கை மீறி குடும்பத்தினருடன் நியூஜெர்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது உத்தரவு. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகளான இவாங்கா வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிக்கு மூத்த ஆலோசகராக இருக்கிறார். இவரது கணவரும் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.அமெரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

வயசாயிடுச்சுனு, சரியா கவனிக்கல – முதியோர்களை கைவிட்ட நாடுகள் …!!

சில நாடுகளில் முதியோர் இல்லங்களில் மட்டும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர் என்னும் தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவி ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து போன்ற  நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்பலி எண்ணிக்கையை அதிகரித்தது. இந்நிலையில் இந்த நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்று போலவே இருப்பது வருத்தம் கலந்த ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் சுமார் 18 முதல் […]

Categories
உலக செய்திகள்

சீனா பொய் சொல்லிடுச்சு, இனி எல்லாரும் அப்படி செய்வாங்க – WHO வேதனை

சீனாவைப் போன்றே மற்ற நாடுகளும் இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் தெரிவித்துள்ளார் சீனாவின்  வூஹான் நகரில்  பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. ஆரம்பக் கட்டத்தில் சீனாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வெகு விரைவில் கட்டுக்குள் வந்தது. இதனைத்தொடர்ந்து சீனா கொரோனா பாதிப்பு தொடர்பாக உண்மையை மறைப்பதாக பல நாடுகள் குற்றம் சுமத்தி வந்தன. இந்நிலையில் வூஹான் நகரின் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் பணிக்குழு சார்பில் அறிக்கை […]

Categories
உலக செய்திகள்

ஜாக்கிரதையா இருந்துக்கோங்க….. 120 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும் – ஐ.நா எச்சரிக்கை

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 120 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும் என ஆப்பிரிக்க கண்டத்தை ஐநா எச்சரித்துள்ளது ஆப்பிரிக்கா கண்டத்தில் பிப்ரவரி 14 அன்று முதல் கொரோனா பாதிப்பு எகிப்தில் பதிவானது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் அதிக உயிரிழப்பை சந்தித்தது அல்ஜீரியா. அதனைத் தொடர்ந்து எகிப்து, மொராக்கோ, தென் ஆப்பிரிக்கா உள்ளது. தொற்றின் காரணமாக ஆப்பிரிக்காவில் 3 லட்சம் முதல் 33 […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு அஞ்சி நடுங்கிய சீனா… உலக நாடுகளிடம் அம்பலப்பட்டது …!!

கொரோனா வைரஸ் உயிரிழப்பால் அமெரிக்கா பெரும் துயரை சந்தித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

இரையான அமெரிக்கா…!! நேற்று 2,535 பலி, 4 நாட்களில் 13,514 பேர் மரணம் …!!

கொரோனா வைரஸ் உயிரிழப்பால் அமெரிக்கா பெரும் துயரை சந்தித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் சடுகுடு ஆடும் சீனா!

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சீனா 4ஆவது முறையாக மறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் இன்று பரபரப்பாக என்ன பேசிக்கொள்வது சீனா கொரோனா உயிரிழப்பை எண்ணிக்கையில் சடுகுடு ஆடுகின்றது. ஏன் இப்படி பேசிக் கொள்கிறார்கள் ? சீனா வெளியிட்ட உயிரிழப்பு, அதாவது நேற்று முன்தினம் வரை  உயிரிழப்பு சீனாவில் 3,342. ஆனால் நேற்று என்ன சொல்லி இருக்காங்க என்றால், 4,632. அதாவது வித்தியாசம் மட்டும் ஒரே நாளில் சீனாவைப் பொறுத்தவரை 1,290. இது ஒரே நாளில் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

நாங்க மருந்து கொடுக்குறோம், நீங்க பயங்கரவாதிய கொடுக்குறீங்க – இந்திய ராணுவ தளபதி வேதனை

மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது என இந்திய ராணுவ தளபதி கூறியுள்ளார். உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் காஷ்மீரில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில தினங்களாக பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில் காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் தளபதி எம்.எம்.நாரவனே இரண்டு தினங்கள் அங்கு சுற்றுப்பயணமாக சென்றார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

கொத்துக்கொத்தாக மரணம்…. சரியான நேரத்தில், அற்புத கண்டுபிடிப்பு – அசத்திய மருத்துவர் …!!

ஒரே சமயத்தில் ஏழு நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கும் கருவியை கண்டுபிடித்த மருத்துவரை மக்கள் பாராட்டியுள்ளனர் உலக அளவில் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களில் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு செயற்கை சுவாசம் சரியான சமயத்தில் கிடைக்கப்பெறாமல் அதன் காரணமாக இறந்தவர்கள் அதிகம் உள்ளனர். இதன் காரணமாக செயற்கை சுவாசம் வழங்க வென்டிலேட்டரின்  தேவை அதிகமாகி உள்ளது. உரிய நேரம் கொடுக்கப்படாத செயற்கை சுவாசம் நோயாளியின் மரணத்தை உறுதி செய்கிறது. அமெரிக்காவில் […]

Categories
உலக செய்திகள்

ஆம்..! உண்மையை மறைத்தோம் – ஒப்புக்கொண்ட சீனா – காண்டான உலக நாடுகள் …!!

கொரோனாவினால்  பலியானவர்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பதில் தவறு நடந்து விட்டது எனக்கூறி 50 சதவீதம் இறப்பை அதிகரித்துள்ளது சீன அரசு  சீனாவில் வூஹானில் முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்டது. கொரோனாவின் மையமாக விளங்கிய வூஹான் தற்போது அதிலிருந்து மீண்டு உள்ளது. ஆனால் சீனா கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விகிதத்தை மறைத்ததாக அமெரிக்கா சந்தேகத்தை எழுப்பிய நிலையில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை சீனா 50% உயர்த்தியுள்ளது. இறப்பை கணக்கிடுவதில் தவறு நடந்ததாகவும் அதன் காரணமாகவே தற்போது சதவீதம் அதிகரித்ததாகவும் காரணம் […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா சுத்தமா இருங்கள் – சீனாவுக்கு மிரட்டல்….. அசிங்க படுத்திய அமெரிக்கா …!!

சீனா உலகிற்கு கொரோனா வைரசை பரப்பியதா என்று விசாரணை நடப்பதால் சுத்தமாக இருங்கள் என சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருக்கும் கடல் உணவு சந்தையிலிருந்து கொரோனா பரவியதாக கூறப்பட்டது ஆனால் விஞ்ஞானிகளின் கவனக்குறைவினால் வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து பரவியது என்ற செய்திகளும் வெளிவந்தன. அமெரிக்க  அறிவியலாளர் ஸ்டீவன் மாஷர், கொரோனா தொற்று பரவியதாக கூறப்படும் சந்தைக்கும் வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கும் 10 மைல் தூரம் தான் இருக்கிறது என்பதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலியால் பிரிட்டன் எடுத்த அதிரடி முடிவு – நீளும் ஊரடங்கு

ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஊரடங்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு தொடரும் என்று வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி நல்ல பலனைக் கொடுத்துள்ளது. இதன்காரணமாக இங்கிலாந்தில் மேலும் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும். ஊரடங்கை தளர்த்துவது என்பது இப்போதைய சூழலுக்கு சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கும். அதோடு ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

மிரட்டும் கொரோனா, நாடு முழுவதும் அவசர நிலை – ஜப்பான் அரசு முடிவு

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அவசர நிலையை செயல்படுத்த ஜப்பான் பிரதமர் முடிவு செய்துள்ளார்  உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா ஜப்பானில் அதன் தாக்கத்தை முன்பைவிட அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோன்று பலியானவர்களின் எண்ணிக்கையும் 200 கிட்ட  நெருங்கியுள்ளது.  இந்நிலையில் வைரஸ் பரவுவதை தடுக்க பிரதமர் ஷின்ஜோ அபே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அறிகுறி உடனே தென்படாது – பீதியை கிளப்பும் சீனா …!!

அறிகுறி ஏதும் இன்றி கொரோனா தொற்று பாதிக்கப்படுவது ஆபத்து நிறைந்தது என சீன தேசிய சுகாதாரக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.  சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படும் 6764 நோயாளிகளில் 1297 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறிகள் இருந்ததாகவும் மற்றவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை எனவும் சீன தேசிய சுகாதார குழு தலைவர் மீ பென்ங் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஐந்தில் நான்கு நோயாளிகளுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இந்த நிலை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சிக்கிய சீனா… சின்னாபின்னமாக போகுது…. மீண்டும் தயாரான கொரோனா …!!

சீனாவில் மீண்டும் கொரோனா தலைதூக்க தொஙடக்கியுள்ளது அந்நாட்டுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சந்தையிலிருந்து பரவவில்லை….. அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

சீனாவின் சந்தையில் இருந்து கொரோனா பரவவில்லை அது வைரஸ் ஆய்வு கூடத்தில் இருந்து வெளி வந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது சீனாவில் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா பல நாடுகளுக்கு பரவி அதிக அளவு உயிரிழப்பையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனா மீது அமெரிக்கா பல குற்றச்சாட்டுகளை சுமத்தி சில அதிர்ச்சித் தகவல்களையும் வெளியிட்டுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து வைரஸ் பரவியது எனக் கூறப்பட்ட நிலையில் வூஹானில் இருக்கும் வைராலஜி […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் வாடிய காதல், சிட்டாய் பறந்த காதலன் – சிறையில் அடைபட்ட துயரம் …!!

கொரோனா தொற்று அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் காதலியைத் பார்க்க வெளியே சுற்றியதால் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் கொரோனா பரவலைத் தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்ப்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொற்றின் வீரியத்தை அறியாத பலர் ஊரடங்கை மீறி செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல நாடுகள் ஊரடங்கை மீறுபவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து வருகின்றன. அவ்வகையில் ஆஸ்திரேலியாவிலும் ஊரடங்கை மீறினால் சிறை தண்டனையை […]

Categories
உலக செய்திகள்

அவுங்கள இருக்கட்டும்னு விடக் கூடாது, உடனே சரி பண்ணனும் – சீண்டிய டிரம்ப்

உலக சுகாதார அமைப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் சீனாவில் பரவும் கொரோனா தொற்று குறித்த உண்மைகளை மறைப்பதாகவும் குற்றம்சாட்டி அதற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் என ஜி 7 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விவாதம் மேற்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

35,000 பேர் உயிரும் போச்சு, 2.2 கோடி பேர் வேலையும் போச்சு – குமுறும் அமெரிக்கர்கள் ….!!

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் அதிகமாவதோடு வேலை இழப்பு பிரச்சனையும் அதிகரித்துள்ளது உலக நாடுகளில் வெகுவாக பரவ தொடங்கிய கொரோனா தொற்றுக்கு 2152000 பேர் பாதிக்கப்பட்டு 145,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் புள்ளிவிபரம் கொடுத்துள்ளது. இதில் அதிக உயிர்களை பலி கொடுத்த நாடாக அமெரிக்காவே உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து, இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 67 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  […]

Categories
உலக செய்திகள்

நடுங்க வைக்க போகும் கொரோனா – விஞ்ஞானிகள் கணிப்பில் உலகமே அதிர்ச்சி…!!

அமெரிக்காவில் கொரோனா குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்னும் தகவலை வெளியிட்டுள்ளனர் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து கணித கணக்கீடு மூலமாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஆய்வின் முடிவில் சில முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளனர். சமூக இடைவெளி விடுவதை உடனடியாக நிறுத்தினால் அது அதிக அளவு புதிய கொரோனா நோயாளிகளை உருவாக்கக்கூடும். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எதுவும் இதுவரை இல்லாத […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வந்த முதல் நபர் யார்..? சீனாவை கவனிக்க போகும் அமெரிக்கா …!!

உலகையே ஆட்டிப்படைக்கும் புதிய கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றி இருக்கும் அப்படின்னு சொல்லி எல்லார் மனசுலயும், ஒரு கேள்வி இருக்கிறது. விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்த வைரஸ் என்று நமக்குத் தெளிவாகத் தெரியும். விஞ்ஞானிகள் சரியாக இது எங்கிருந்து வந்திருக்கும் ? எப்படி விலங்கிலிருந்து மனிதனுக்கு வந்திருக்கும் ? என்ற ஒரு ஆய்வில் இறங்கி இருக்காங்க. இந்த ஆய்வினை சக்தி வாய்ந்த நாடுகளின் உளவுத் துறையும் சேர்ந்து உள்ளது. சீனா ஆய்வகத்தில் துள்ளி குதித்த வைரஸ்ஸா ?  கொரோனா சீனாவின் […]

Categories
உலக செய்திகள்

புரட்டி எடுத்த கொரோனா….. 7 லட்சம் பாதிப்பு, 35,000ஐ தொடும் மரணம் – 3 நாளில்10,977 பேர் பலி ..!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொத்துக்கொத்தாய் மக்கள் செத்து மடிவது உலக நாடுகளை உலுக்கியுள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.   நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் கொடுங்க வேலை பாக்குறோம் – அமெரிக்காவில் செவிலியர்கள் சஸ்பெண்டு…!!

கலிபோர்னியாவில் மருத்துவமனை ஒன்றில் N95 மாஸ்க் தராமல் வேலை செய்ய மாட்டோம் எனக் கூறிய நர்சுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மருத்துவர்களின் முக்கிய பாதுகாப்பு கவசமான N95 […]

Categories
உலக செய்திகள்

மரணத்தால் அலறிய இத்தாலி – கொரோனாவை கட்டுப்படுத்தியது எப்படி? வெளியான தகவல் …!!

கொரோனா தொற்றுக்கு அதிக அளவு உயிர் பலியை கொடுத்த இத்தாலி தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது எப்படி எனும் தகவல் வெளியாகியுள்ளது உலக நாடுகளை கொரோனா தொற்று பரவ தொடங்கி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதிக உயிரிழப்புகளை கொடுத்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இத்தாலி தற்போது மூன்றாம் இடத்தில் வகிக்கிறது. இதுவரை இத்தாலியில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் […]

Categories

Tech |