ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன் தினம் நடந்த சூப்பர் 12 லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாறு சாதனை படைத்தது. இந்த வெற்றியால் 2 போட்டிகளில் 3 புள்ளிகளை பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. அதேசமயம் இரண்டு போட்டிகளிலுமே […]
Tag: உலக சாதனை
உலக வரலாற்றில் இதுவரை கிடைக்கப்பெற்ற வைரங்களில் பிங்க் நிற வைரம் தான் மிகவும் விலை உயர்ந்தது . ஹாங்காங்கில் சோதேபி ஏல நிறுவனம் 11.15 கேரட் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரத்தை 49.9 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது. அவர் உண்மையான மதிப்பு 21 மில்லியன் டாலர் என்ற நிலையில் ஏலம் விடப்பட்டதில் 49.9 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.கடந்த 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபத்திற்கு 23.60 கேரட் வில்லியம்சன் பிங்க் நிற வைரம் […]
வங்கதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தரையில் உட்கார்ந்து கொண்டு ஒரே நிமிடத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்திருக்கிறார். வங்காள தேசத்தின் தாக்குர்காவன் பகுதியில் வசிக்கும் ரசெல் இஸ்லாம் என்ற இளைஞர் தன் சிறு வயது முதலே ஸ்கிப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அப்போதிலிருந்து அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார். எனவே ஸ்கிப்பிங்கில் பல சாதனைகள் படைத்தவ அவர் தற்போது தரையில் அமர்ந்து கொண்டு வெகு வேகமாக ஒரு நிமிடத்திற்குள் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விளைப் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல்வலு பயிற்சியாளராக இருக்கிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இரும்பு மனிதன் போட்டியில் 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் ஒரு கனரக வாகனத்தை கயிறு மூலம் 40 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்று உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு உலக சாதனையை கண்ணன் படைத்துள்ளார். […]
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் கான்ஸ்டன்டினோஸ் கொடோபிஸ் என்பவர் கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைமுடியை வைத்து அப்படி என்ன செய்து விட்டார் என்ற கேள்வி எழலாம். டிரிம்மர் உதவியுடன் விரைவாக முடி வெட்டி சாதனை படைத்துள்ளார். இதற்கு இவர் எடுத்து கொண்டது 47.17 வினாடிகள். இதனை செய்து முடித்ததும் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நீதிபதிகள் வருகின்றனர். Need a quick trim? How […]
உலகம் முதலுதவி தினத்தை முன்னிட்டு ஒரே இடத்தில் 5386 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று உலக சாதனை படைத்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மைதானத்தில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற முதல் உதவி விழிப்புணர்வு செய்முறை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க அரசுப்பள்ளி கல்லூரி, அண்ணா […]
எலைட் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி பால் செபஸ்டின் பேராதரவில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தன்னிகரில்லா ஆத்மார்த்த உழைப்பிலும் பெரும் முயற்சியில் முனைவர் படையல் சிவக்குமார் உலக சாதனை நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. Flame off no oil- no boil என்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி ஆத்மார்த்த சீடரும் விஞ்ஞானியுமான டாக்டர் சி அழகர் ராமானுஜம் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார். இந்த மாபெரும் உலக சாதனை […]
பெண்கள் ஒவ்வொரு துறையிலும் பல சாதனைகளை புரிந்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் பெண்கள் செய்யும் சாதனை நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது. கேரளாவை சேர்ந்த ரெஹ்னா ஷாஜகான் என்ற 25 வயதான இளம் பெண் ஒரே நாளில் 81 ஆன்லைன் படிப்புகளை முடித்து சர்வதேச உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதை கேட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் கொரோனா சமயத்தில் ஒரே நாளில் சுமார் 55 ஆன்லைன் படிப்புகளை […]
சென்னை தீவு திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் 1500 மாணவர்கள் உணவு தயாரித்து சாதனை படைத்துள்ளனர். உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவு திடலில் மூன்று நாள் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டது. உணவு வீணாவதை தடுக்க எடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த உணவு வகை […]
மெக்சிகோவில் உலகில் மிக நீளமான சாண்ட்விச் தயாரிக்கப்பட்ட புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் வென்னிஸ்டியானோ கரன்சியா நகரில் 17 ஆவது டோர்டா கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் டோர்டா சாண்ட்விச் என்ற உணவு வகை 242.7 அடி நீளத்திற்கு தயாரிக்கப்பட்டது. மேலும் அந்த சாண்ட்விச் இரண்டு நிமிடங்கள் ஒன்பது வினாடிகளில் அடுக்கி நேரத்திலும் சாதனை படைத்துள்ளார்கள் அந்நாட்டின் சமையல் கலைஞர்கள். சுமார் 800 கிலோ எடை உள்ள இந்த நீளமான சாண்ட்விச்சை உருவாக்குவதற்கு பல்வேறு […]
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண்பதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சி கேம்பியன் மேல்நிலைப் பள்ளியில் […]
ஆஸ்திரேலியாவில் அதிகாரப்பூர்வமற்ற தேசம் நடனம் என்று நட்புஷ் நடனம் கூறப்படுகிறது. இந்த நடனம் ரெட் பாஷ் இசை திருவிழாவில் அனைவரும் கூடி மகிழ்ச்சியாக நடமாடினர். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க பாடகி டினர் டர்னரின் சுதந்திர பாடலுக்கு முல்லட், குட்டை பாவாடையான டூடஸ், டைனோசர் உள்ளிட்ட வேடம் அணிந்து மக்கள் நடனம் ஆடினர். இந்த நடனத்தில் 4,084 பேர் ஒரே இடத்தில் கூடி நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர்.
இத்தாலி நாட்டில் சுமார் 12,042 பெப்சி பாட்டில்களை சேமித்து ஒரு நபர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இத்தாலியில் வசிக்கும் 52 வயதுடைய கிறிஸ்டியன் என்ற நபர் உலகிலேயே அதிகமான பெப்சி பாட்டில்களை சேமித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். இவர் உலகில் இருக்கும் அனைத்து கண்டங்களில் இருந்தும் 12,042 பெப்சி பாட்டில்கள் சேமித்திருக்கிறார். ஜவுளி நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருக்கும் இவர் கடந்த 1989 ஆம் வருடத்தில் இருந்து பெப்சி பாட்டில்களை பொழுதுபோக்காக சேமித்து […]
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 10 வயது பள்ளி மாணவர் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் மற்றும் நவநீதம் ஆகியவரின் மகன் ரவி கிருஷ்ணா. இவருக்கு பத்து வயதாகிறது. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். ரவி கிருஷ்ணா தனது இரு கால்களுக்கும் இடையே உடலை முன்னோக்கி வளைத்து பின்புறமாக தலையை மேல் நோக்கிப் பார்க்கும் பாதகுண்டலாசனம் என்ற யோகாசனத்தை ஒரு நிமிடத்தில் 32 முறை செய்து உலக […]
கேரள மாநிலம் பீருமேட்டையில் கிருஷ்ணப்ரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரு வந்தானம் கிராம பஞ்சாயத்தில் என்ஜினீயராக இருக்கிறார். இவருடைய சகோதரர் பெயர் கிருஷ்ணபிரசாத் ஆகும். திருமணத்துக்கு பின் முண்ட காயத்தில் தங்கியுள்ள கிருஷ்ணப்ரியா வருடந்தோறும் ஒவ்வொரு சர்வதேச சகோதரர்கள் தினத்தன்றும் (மே 24) தன் சகோதரருக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் இந்த வருடம் வேலையின் காரணமாக குறிப்பிட்ட நாளில் அவரால் அண்ணனுக்கு கடிதம் எழுதமுடியவில்லை. அதன்பின் மற்றொரு நாளில் கிருஷ்ணப்ரியா, அண்ணனுக்கு கடிதம் […]
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த யுகேஜி படிக்கும் சிறுவன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சம்பவம் வைரலாகி வருகின்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியை சேர்ந்த சரவணன்- மனோன்மணி என்பவரின் மகன் கே எம் தக்ஷன். வாலரை கேட் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். தற்போது ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களிலும் தலா 10 க்கும் மேற்பட்ட வார்த்தைகளையும், தமிழ் உயிர் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் அடங்கிய 173 சொற்கள், 100 […]
இந்த உலகத்தில் முதல் சைக்கிளை உருவாக்கியது பிரான்ஸ் நாடு தான். ஆனால் இப்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய மாடல் டிசைன் சைக்கிளை உருவாக்கியது இங்கிலாந்து. ஆனால் இந்த உலகத்திலேயே மிக நீளமானது இந்த பைசைக்கிள் தான். இந்த சைக்கிளில் கிட்டத்தட்ட 35 பேர் பயணம் செய்யலாம். 117 அடி 5 இஞ்ச்நீளம் கொண் டுள்ள உலகின் மிக நீளமான சைக்கிளில் இரண்டு சக்கரங்களில் மட்டுமே இயங்குகின்றது. இரண்டு நபர்களால் இயங்கும் வகையில் மிக இலகுவான இடையில் உறுதியான பாதங்களை […]
உலகநாடுகளின் வல்லரசுப் போட்டியில் முழுவீச்சில் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு நாடு சீனா. தன்னுடைய தொழில்நுட்ப வளர்ச்சியை வைத்து ஒவ்வொரு நாளும் உலக நாடுகளை மிரண்ட வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. சீனாவின் அசுர தொழில்நுட்ப வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லாக மின்னல் வேகத்தில் பறக்கக்கூடிய ரயிலை சோதனை செய்து கெத்து காட்டு இருக்கிறது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இரண்டு ரயில்கள் இரண்டு தனித்தனி பாதையில் நேருக்கு நேராக ஓடு பாதையில் மணிக்கு 870 கிலோ மீட்டர் […]
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் என்ற நபர் வசித்து வருகிறார். அவருக்கு செல்லப்பிராணி நாய் ஒன்று உள்ளது. அந்த நாய் சிஹுவாஹுவா என்ற வகையை சேர்ந்தது. அதன் பெயர் டோபிகீத். இந்த நிலையில் அந்த நாய் 21 வருடங்கள் 66 நாட்களை கடந்து வாழ்ந்து வருகின்றது. அதில் என்ன சிறப்பு என்றால் அந்த வகை நாய்கள் அதிகபட்சமாக 12 முதல் 18 வருடங்கள் மட்டுமே உயிர் வாழும். ஆனால் இந்த நாய் அதையும் […]
இந்த உலகிலேயே விலை உயர்ந்த, அதிகம் செலவு செய்த வேர்ல்டு ரெக்கார்டு எதுவென்று உங்களுக்கு தெரியுமா?. ஒவ்வொருவரும் உலக சாதனை புரிய அதிக அளவு செலவு செய்கின்றனர். அதன்படி உலகிலேயே அதிக அளவு செலவு செய்து செய்த வேர்ல்டு ரெக்கார்டு இதுதான். இந்த உலகத்தின் விலை உயர்ந்த வேர்ல்டு ரெக்கார்டு பூமியில் செய்யப்படவில்லை. அதனை பூமிக்கு மேலே செய்துள்ளனர். அதன் பெயர் என்னவென்றால் இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன். இதன் மதிப்பு என்னவென்றால் 150 பில்லியன் அமெரிக்கன் டாலர். […]
பின்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்ட ஒரு பன்னாட்டு தகவல் தொடர்பு நிறுவனம் நோக்கியா ஆகும். நோக்கியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை, மொபைல் சாதனங்கள் தயாரிப்பு, இணையம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பதுறைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நோக்கியா கம்பெனியின் உலகளாவிய ஆண்டு வருமானம் 5.7 பில்லியன் யூரோக்கள் ஆகும். இப்போது வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என ஏராளமான சமூக வலைதளங்கள் இருக்கிறது. ஆனால் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலானோர் நோக்கியா […]
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் பல்வேறு சிறப்பு குணங்களை கொண்டிருக்கும். அதிலும் சில உயிரினங்கள் மக்களை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். சில உயிரினங்கள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் கூட இடம் பிடித்துள்ளன. அப்படி ஒரு உயிரினத்தைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஒரு சின்ன கிராமம் தான் அத்தோலி. சில காலங்களில் இந்த கிராமத்தை பற்றி அந்த ஊர் மக்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் […]
விருதுநகர் மாவட்டதில் 11 வயது சிறுமி வாளை கிழி ஆசனத்தை அந்தரத்தில் தொங்கியபடி செய்து உலக சாதனை படைத்தது உள்ளார். விருதுநகர் மாவட்டம் சூலக்கரையாச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்- பார்வதி தம்பதியினர். இவர்களுடைய மகள் முஜிதா(11) கடந்த ஐந்து வருடங்களாக யோகா கற்றுக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில் இந்த சிறுமி கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி 8 நிமிடம் 25 மீட்டர் உயரத்தில் வளையத்தின் மேல் உடம்பை […]
அமெரிக்காவில் தடகள வீராங்கனை ஒருவர் அதிக உயரம் உடைய ஹீல்ஸ் அணிந்துகொண்டு அதிக முறை தாவிக்குதித்து கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா மோனிகா கடற்கரையில் என்ற கடற்கரையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் ஓல்கா ஹென்றி என்ற தடகள வீராங்கனை உயரமான ஹீல்ஸ் அணிந்தவாறு கயிற்றின் மீது அதிகமுறை தாவி குவித்து உலக சாதனை படைத்திருக்கிறார். https://www.instagram.com/p/CaP0TwODkc_/ அவர், ஒரு நிமிடத்தில் இந்த சாகசத்தை செய்திருக்கிறார். கின்னஸ் உலக […]
2 நிமிடத்தில் 60 வகையான குரல்களை எழுப்பி 2 வயது குழந்தை உலக சாதனை படைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பி. குமாரபாளையம் அடுத்துள்ள சடையாம்பாளையத்தில் பெரியநாயகம் அவரது மனைவி எலிசபெத் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 வயது 5 மாதங்களே ஆனா தெல்பியா என்ற மகள் உள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை 2 நிமிடத்தில் 60 வகையான குரல்களை எழுப்பி உலக சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாது 155 நிழல்படங்கள் […]
யூடியூப் பக்கத்தில் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற ஒரே அரசியல் தலைவர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு யூடியூபில் இணைந்த மோடி தனது திட்டங்களையும், தனது “மான் கி பாத்” நிகழ்ச்சிகளையும் பதிவிட்டு வருகிறார். இதுவரை அவர் 164 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளார். அது போல ட்விட்டரில் அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட அரசியல் தலைவர்கள் பட்டியலில் ஒபாமாவுக்கு (13 கோடி) அடுத்த இடத்தில் மோடி (7.5 கோடி) இருப்பது குறிப்பிடத்தக்கது..
அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் வருடத்தில் உருவான மின்னல் உலகிலேயே மிகவும் நீளமான மின்னல் என்று சாதனை படைத்திருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் வருடத்தில் ஏப்ரல் மாதத்தின் போது 770 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய மின்னல் உருவானது. இந்த மின்னலானது, அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் இருந்து கொலம்பஸ் நகரம் வரைக்கும் இருக்கும் தூரத்தை உள்ளடக்கியிருந்தது என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த சாதனைக்கு முன்பு கடந்த 2018 ஆம் வருடத்தில் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதியன்று […]
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்னைடர் என்னும் இளைஞர் மிகவும் வித்தியாசமான முறையில் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஸ்னைடர் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் விமானத்தின் மூலம் எகிப்திற்கு சென்று அதிலிருந்து சுமார் 13,500 அடி உயரத்திலிருந்து தன்னுடைய பிரண்ட்ஸ்வுடன் குதித்துள்ளார். அதன் பின்பாக ஸ்னைடர் சுமார் 8,300 அடி உயரம் வரும் வரை காற்றில் 160 முறை சுழலத் […]
வியட்நாமில் இரண்டு சகோதரர்கள் ஒருவர் மீது மற்றொருவர் தலைகீழாக நின்றுகொண்டு நூறு படிகளை கடந்து உலக சாதனை படைத்துள்ளனர். வியட்நாம் நாட்டில் வசிக்கும், ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப் ஆகிய இரு சகோதரர்களுக்கும், சிறுவயதிலிருந்தே சாகச விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் இருந்திருக்கிறது. எனவே பலவகையான சாகசங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அதன்படி, கீழே ஒருவர் நின்றுகொண்டு, அவரின் தலையில் மற்றொரு சகோதரர் […]
ஆப்பிரிக்காவில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த பின்பு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். ஆப்பிரிக்காவில் இருக்கும் மாலி என்ற பகுதியை சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற பெண் கடந்த மே மாதத்தில் 9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார். இது உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. அவர் கர்ப்பமடைந்திருந்த போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மருத்துவர்கள் ஏழு குழந்தைகள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் பிரசவத்தின் போது ஆண் குழந்தைகள் 4 மற்றும் பெண் […]
ஜப்பானில் ஒரு நபர் ஒலிம்பிக் போட்டியை நேரில் கண்டு உலக சாதனை படைக்க விரும்பிய நிலையில், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த 45 வயதுடைய கசுனோரி தகிஷிமா என்ற நபர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை காண சுமார் 40 ஆயிரம் டாலர்களுக்கு டிக்கெட்டுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு, ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண அனுமதி கிடையாது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. எனவே ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்த்து உலக சாதனை […]
உலகில் மிக குள்ளமான பசு ஒன்று வங்கதேசத்தில் உள்ளது. இந்த பசு உலக சாதனையை படைத்துள்ளது. சமீபகாலமாக ஒரு வெள்ளை பசுவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அனைவரும் இது போட்டோஷாப்பை செய்யப்பட்டது என்று கூறினார். ஆனால் இது உண்மையான பசுதான். வங்கதேச தலைநகர் தாக்கா பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அக்ரோ ஃபார்ம் என்ற மாட்டுப் பண்ணையில் இந்த பசு உள்ளது. இந்த பண்ணையில் உள்ள […]
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் பெறுகிறார். இதையடுத்து இவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக தான் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் என்ற உலக சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார். மிதாலி ராஜ் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவியேற்றதிலிருந்து […]
ஆஸ்திரேலியா ஆண்கள் அணியின் ,ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் உலக சாதனையை, ஆஸ்திரேலியா மகளிர் அணி முறியடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கு பெற்றது . இந்த ஒரு நாள் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிக் கொண்டனர் . இந்த தொடருக்கான முதலாவது ஆட்டம் மானது நேற்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்றது . இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் […]
கேஜிஎஃப் 2 டீசர் உலக சாதனை பெற்றுள்ளதால் ரசிகர்கள் அதனை கொண்டாடிவருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். இதை தொடர்ந்து கேஜிஎப் இரண்டாம் பாகத்தையும் பிரசாந்த் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.இப்படத்திற்கான டீஸர் கடந்த ஜனவரி மாதம் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அது தற்போது உலக அளவில் சாதனை படைத்துள்ளது. ஏனென்றால் தற்போது வரை கேஜிஎப் 2 டீசரை 175 மில்லியனுக்கு […]
தஞ்சையில் உலக மகளிர் தினத்தன்று , ஓட்டுரிமையை பணத்திற்காக விற்பதை தடுக்க வலியுறுத்தும் வகையில் உலக சாதனை நடைபெற்றது. பட்டுக்கோட்டை பகுதியில், அணைக்காடு சிலம்பக்கூடத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ,தேர்தலில் ஓட்டுக்காக பணம் வாங்குவதை தவிர்க்க வலியுறுத்தி, உலக சாதனை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் எஸ். இ. டி வித்யா தேவி பள்ளியை சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் மாணவி வர்ஷிகா கலந்து கொண்டார். இவர் செங்கப் படுத்தான்காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து […]
ஐஸ்சை பயன்படுத்தி 24 மணி நேரத்தில் 2 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை உருவாக்கி இந்தியா உலக சாதனையை படைத்துள்ளது. இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. 24 மணி நேரத்தில் 5 ஆயிரம் டன் சிமெண்ட் மற்றும் 500 டன் பனியை பயன்படுத்தி இரண்டு கிலோமீட்டர் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. இந்தியாவின் சாலை கட்டுமானத்தில் மிகப்பெரிய சாதனையாக இந்த செயல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலை குஜராத்தின் வதோதரா நகரை மும்பை மற்றும் டெல்லி உடன் […]
தமிழகத்தை சேர்ந்த லட்சுமி சாய் ஸ்ரீ என்ற சிறுமி 58 நிமிடங்கள் 46 வகையான உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்களில் 46 வகை உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். இது உலக சாதனை யுனிகோ தலைமை நீதிபதி சிவராமன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஒரு மணி நேரத்தில் 30 வகை உணவுகளை தயாரித்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கேரளாவின் 10 வயது சிறுமியின் […]
சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யூனிகோ உலக சாதனையை படைத்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர் ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயின்று வந்துள்ளார். சிறுவர்-சிறுமிகள் அதிகமாக இல்லத்திலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தற்போதைய காலகட்டம் உள்ளது. இந்நிலையில் இந்த சூழ்நிலையை பயனுள்ளதாக மாற்றிய லட்சுமி […]
26 ஆண்டுகள் பழைய கருவில் இருந்து ஒரு குழந்தை பிறந்து உலக சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் 27 ஆண்டுகள் கருவிலிருந்து குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு மாலி கிப்சன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1992-ஆம் ஆண்டு குழந்தையின் கரு உறைய வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. டீனா மற்றும் பென் கிப்சன் தம்பதியர் இந்த கருவை தத்தெடுத்து, பிறகு கடந்த பிப்ரவரி மாதம் உறைந்த நிலையில் இருந்து வெளியேற்றப்பட்டு, அக்டோபர் மாதம் குழந்தை பிறந்துள்ளது. 27 ஆண்டுகளுக்குப் […]
பல்வேறு நாடுகளின் தேசியக் கொடியின் பெயர்கள் சூரிய கிரகங்களின் பெயர்கள் உள்ளிட்ட 18 தலைப்புகளைக் கொண்ட மனப்பாடமாக ஒப்பித்து உலக சாதனை நிகழ்த்தியதற்காக திருப்பூரை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தாராபுரம் சென்னியப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த மல்லீஸ்வரன் அனிதா தம்பதியனரின் 4 வயது மகள் சக்தி வெண்பா 18 தலைப்புகளை பாடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளின் தேசியக் கொடியின் பெயர்கள், சூரிய கிரகங்களின் பெயர்கள், தமிழ் […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே 3 வயது குழந்தை 9 வினாடிகளில் 22 மொழிகளை சொல்லும் அபாரதிறமை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அவிநாசி அடுத்த செய்யூர் அருகே லூர்துபுரம் ஓநாய் பாறை பகுதியைச் சேர்ந்த ரவி பெஸ்ஸில் தம்பதியரின் மூன்று வயது மகள் அன்டோனா இந்தியாவில் உள்ள 22 மொழிகளில் பெயர்களை அதிவேகமாகவும் குறைந்த நேரத்திலும் உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் மாநிலத்தின் பெயரை சொன்னால் உடனடியாக அதன் தலை […]
கேரளாவின் காசராகோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமத் ஷம்னா என்ற முதுகலை மாணவி அமெரிக்கன் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கேரளா மாநிலம் மராம்பள்ளியில் அமைந்துள்ள எம்.இ.எஸ் கல்லூரியில் முதுநிலை வணிக நிர்வாகம் (எம்பிஏ) படித்து வருபவர் ஷம்னா. இவர் குறுகிய காலத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான படிப்புகளை முடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். வெறும் 35 நாட்களுக்குள் 628 ஆன்லைன் டிப்ளமோ படிப்புகளை முடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் […]
கோவை சூலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விமல்ராஜ் தனது கால்களில் சலங்கை அணிந்தபடி பறை பெரியமேளம் மற்றும் துடும்பு நையாண்டி ஆகிய கிராமிய இசைக்கருவிகளை தொடர்ந்து 5 மணி நேரம் இசைத்து சாதனை படைத்துள்ளார். மாணவர் விமல்ராஜின் இந்த சாதனை நோடல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
பிரேசிலில் உருவான மின்னல் வெட்டு அதிக தூரத்தை கடந்து உலக சாதனையை படைத்துள்ளது பிரேசிலில் ஒரு நாள் மழை பெய்த பொழுது 709 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்னல் வெட்டு ஏற்பட்டு புதிய உலக சாதனை படைத்து இருப்பதாக உலக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மழை பெய்த நாளில் ஏற்பட்ட மின்னல் வெட்டு சாதனை படைத்துள்ளது. ஏறக்குறைய 709 கிலோமீட்டரை இந்த மின்னல் வெட்டு கடந்து […]