Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்குமா….? ஆய்வில் உலக சுகாதார அமைப்பு…. கோரிக்கை விடுத்த பாரத் பயோடெக் நிறுவனம் ….!!

உலக சுகாதார அமைப்பிடம் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்குமாறு  பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு  இன்னும்  அங்கீகாரம் கொடுக்கவில்லை. மேலும் இதனை அவசர பயன்பாட்டு பட்டியலிலும்  சேர்க்க படவில்லை. இதனையடுத்து கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பயோடெக் ஹைதராபாத் நிறுவனம் அங்கீகாரத்தை பெறுவதற்காக  தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு பற்றிய விவரங்கள் என மூன்று கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் போன்ற அனைத்து தகவல்களையும் சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளன. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

70,00,000பேர் மரணம்…! அதிர வைத்த ரிப்போர்ட்…. பெரும் அதிர்ச்சி தகவல் …!!

காற்று மாசுபாடு காரணமாக நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி  ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் எதிர்பார்த்ததை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் குறிப்பாக இந்தியா உலகின் மிகுந்த மாசுபட்ட பகுதிகளில் ஒன்றாக தொடர்ந்து விளங்கி வருகிறது. உதாரணமாக பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட டெல்லியில் 17 மடங்கும், மும்பையில் 8 மடங்கும், கொல்கத்தாவில் 9 மடங்கும், சென்னையில் 5 […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய திட்டம்.. இந்திய அரசின் முடிவிற்கு உலக சுகாதார மையம் வரவேற்பு..!!

இந்தியா மீண்டும் தடுப்பூசி தயாரித்து ஏற்றுமதி செய்ய தீர்மானித்திருப்பதை உலக சுகாதார அமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த போது தடுப்பூசிகளை பிற நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மேலும், தடுப்பூசிகள் தயாரிப்பும் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்திய அரசு தங்களிடம் இருக்கும் உபரி தடுப்பூசிகளை, மீண்டும் ஏற்றுமதி செய்யவிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரியான மான்சுக் மாண்ட்வியா நேற்று கூறியிருக்கிறார். மத்திய […]

Categories
உலக செய்திகள்

கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்குமா….? ஆலோசனை நடத்த முடிவு…. தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் என்னும் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனம் தான்  கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. மேலும் அது தடுப்பூசி தொடர்பான ஒட்டுமொத்த செய்திகளையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பியுள்ளது. அதாவது கோவாக்சின் தடுப்பூசி குறித்த அனைத்து செய்திகளையும் அனுப்பியுள்ளது. அது என்னவென்றால் தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்கள், செயல்திறன் மற்றும் மூன்று கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் […]

Categories
உலக செய்திகள்

ரெடியானது அடுத்த கட்ட ஆய்வு…. உயிர் பலிகளை குறைக்குமா…? தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

கொரோனாவால் உயிரிழப்பதை தடுப்பதற்காக அடுத்த கட்ட ஆய்வுக்கு 3 மருந்துகளை உட்படுத்த போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளை சார்ந்த துறைகளும் அயராது தங்களுடைய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி உலக சுகாதார அமைப்பும் கொரோனாவை விரட்டியடிக்க 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சிகளில் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவை பயனுள்ளதாக அமைகிறதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி ஏற்கனவே 4 மருந்துகள் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவ உதவி பெறுவது அவசியம்..! கொரோனாவிற்கு பின் ஏற்படும் பாதிப்புகள்… எச்சரிக்கும் WHO..!!

உலக சுகாதார அமைப்பு கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. அதாவது சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இது கட்டாயம் இல்லை….உலக சுகாதார அமைப்பு….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் இன்னும் பள்ளி மற்றும் கல்லூரிகள் எதுவும் திறக்கப்படவில்லை. அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிக்கு வரவேண்டும் என சில நாட்டு அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் புதிய பாதிப்பு…. WHO எச்சரிக்கை…!!!

உலகளவில் கொரோனா இரண்டாவது அலையானது முதல் அலையைவிட அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட  நடவடிக்கைகள் எடுக்கபட்டு வந்ததால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் புதிய பாதிப்பு அதிகமாகி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் செலுத்தி கொள்ளாதவர்களே தீவிர தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

என்ன…! கொரோனா டெல்டாவின் மற்றொரு மாறுபாடா…? தொற்றை முற்றிலும் அழிக்க முடியாது…. எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு….!!

கொரோனாவை முற்றிலும் அழிப்பதென்பது முடியாத காரியம் என்று உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார். மேலும் இவர் கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கயிருக்கும் விளையாட்டு வீரர்களில் யாரெல்லாம் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் பயன்படுத்த அனுமதி கொடுங்க…. விண்ணப்பம் கொடுத்த இந்தியா…. பரிசீலனையில் இறங்கிய உலக சுகாதார அமைப்பு….!!

கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலகளவில் அங்கீகாரம் கொடுப்பதற்கு பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தன்னுடைய இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்சின் சென்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் பாரத் பயோடெக் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த கோவேக்சின் தடுப்பூசியை உலகளவில் அவசர காலமாக பயன்படுத்துவதற்கு அனுமதி […]

Categories
உலக செய்திகள்

கலந்து போடாதீங்க…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…. தலைமை விஞ்ஞானியின் தகவல்….!!

உலக நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா வைரஸிற்கு எதிராக செலுத்தி வரும் தடுப்பூசிகளை கலந்து போடுவதால் பெரும் ஆபத்து உருவாகும் என உலக சுகாதார தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த தடுப்பூசிகளை மக்கள் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணையாக போட்டுக்கொண்டு வருகின்றனர். அதிலும் சில நாடுகள் பக்கவிளைவுகளிலிருந்து தப்பிப்பதற்காக முதல் தவணை செலுத்திய பின் இரண்டாவது தவணை […]

Categories
உலக செய்திகள்

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் நல்ல ரிசல்ட்.. WHO-ன் தலைமை ஆய்வாளர் தகவல்..!!

உலக சுகாதார அமைப்பினுடைய தலைமை ஆய்வாளரான சௌமியா சுவாமிநாதன், பரிசோதனையில் கோவாக்சின் தடுப்பூசி நன்றாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான, கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் நிலையின் பரிசோதனைக்கான முடிவுகள் வெளியானது. இதில் கொரோனாவை  எதிர்த்து 77.8% செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல டெல்டா வைரஸை எதிர்த்து 65.2% செயல் திறன் கொண்டிருக்கிறது. மேலும் நாடு முழுவதும் சுமார் 25 நகர்களில் கொரோனாவால் பாதிப்படைந்த 130 நபர்களை வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசியின் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியுடன் முகக்கவசம் அணிவதும் அவசியம்.. உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி பேச்சு..!!

உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய நாட்டிற்கான பிரதிநிதி டெல்டா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் மற்றும் தடுப்பூசி இரண்டும் அவசியம் என்று தெரிவித்துள்ளார். டெல்டா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், முகக்கவசம் அணிந்துகொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய பிரதிநிதியான வுஜ்னோவிக் கூறியிருக்கிறார். யூடியூபில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளதாவது, டெல்டா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியுடன் சேர்த்து முகக்கவசமும் அணிந்துகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

என்ன…! தடுப்பூசி பற்றாக்குறையா…? உலகையே அச்சுறுத்தும் கொரோனா…. வேண்டுகோள் விடுத்த பிரபல அமைப்பின் தலைவர்…!!

ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஒரே வாரத்தில் கொரோனா தொற்று 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஒரே வாரத்தில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா 40 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதனையடுத்து உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதனாம் கூறியதாவது, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறையால் ஏழை நாடுகள் தவித்து வருகிறது. இந்நிலையில் பணக்கார நாடுகள் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகளை ஏழை நாடுகளுக்கு வழங்க […]

Categories
உலக செய்திகள்

இங்க ஒருத்தருக்கு கூட கொரோனா இல்ல..! அறிக்கை சமர்ப்பித்த பிரபல நாடு… உலக சுகாதார அமைப்பு தகவல்..!!

உலக சுகாதார அமைப்பிடம் வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட உறுதி செய்யப்படவில்லை என்று அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை ஆகியவற்றின் காரணமாக அந்நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தார். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா கடந்த 10-ஆம் தேதி வரை தங்கள் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டுல கொரோனா இல்லவே இல்லையா…? சுமார் 30,000 த்திற்கும் மேலானோருக்கு செய்யப்பட்ட பரிசோதனை…. அறிக்கையை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

சுமார் 30,000 த்திற்கும் மேலானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்குக் கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தலைவர் தெரிவித்துள்ளார். வட கொரியா நாட்டில் ஜூன் 10-ஆம் தேதி வரை சுமார் 30 ஆயிரத்திற்கும் மேலானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒரு நபருக்கு கூட தொற்று உறுதிசெய்யப்படவில்லை. மேலும் சுமார் 6 நாள் இடைவெளியில் 733 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 149 பேருக்கு இன்ஃப்ளூயன்சா போன்ற நோய்களும், சுவாச நோய்த் […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையா..? உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்..!!

உலக சுகாதார அமைப்பு குழந்தைகளுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்துவது முன்னுரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி நிபுணரான டாக்டர் கேட் ஓ பிரையன் தெரிவித்துள்ளதாவது, குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு தடுப்பூசிகளை செலுத்த, பணக்கார நாடுகள் அதிகமாக அங்கீகரிக்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை உலக சுகாதார நிறுவனம் முதன்மையாக கருதவில்லை. குழந்தைகளுக்கு பெரும்பாலும் கடும் நோய் பாதிப்பு ஏற்படுவது இல்லை. மேலும் உயிரிழப்புகளும் இல்லை. எனவே குழந்தைகளுடன் தொடர்பு […]

Categories
உலக செய்திகள்

சீனா தயாரித்த இரண்டாம் தடுப்பூசி.. உலக சுகாதார அமைப்பு அனுமதி..!!

சீனா தயாரித்த சினோவேக் என்ற தடுப்பூசியை அவசர கால உபயோகத்திற்கு, உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.  உலக சுகாதார அமைப்பு, சீன தயாரிப்பான சினோவேக் என்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை அவசரகால உபயோகத்திற்கு பயன்படுத்துவதற்கு அனுமதியளித்துள்ளது. இதற்கு முன்பு சீனா தயாரித்த சினோபார்ம் என்ற தடுப்பூசிக்கும் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக சீன தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்ததால், உலக நாடுகளும், எளிதில் அனுமதியளித்து, இறக்குமதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் மோசமான நிலைக்கு…. இது மட்டும் தான் காரணம் – உலக சுகாதார அமைப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. கொரோனா தீவிரமடைய காரணம் என்ன..? உலக சுகாதார அமைப்பு விளக்கம்..!!

இந்தியாவில் தற்போது கொரோனா உச்சத்தை அடைய காரணம் என்ன என்று உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  உலக நாடுகள் முழுவதையும் புரட்டிப்போட்ட கொரோனா, தற்போது இந்தியாவில் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்திருக்கிறது. மேலும் இந்தியாவின் வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. எனவே நாடு கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இதனால் உலக சுகாதார […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பேரழிவை உண்டாக்கும்…. இதற்கு இந்தியாவே சான்று…. உலகசுகாதார அமைப்பு வேதனை…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சுனாமி போன்று இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவே இல்லாத நாடு… வியப்பில் ஆழ்ந்த WHO…!!!

வடகொரியா தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என தொடர்ந்து கூறுவது உலக சுகாதார அமைப்பு வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் […]

Categories
தேசிய செய்திகள்

50,000 மரணங்கள் நிகழும்…. இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை…? – உலக சுகாதார அமைப்பு விளக்கம்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஏப்ரல் 15க்குள் கொரோனா மரணங்களின் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது! இந்தியாவுக்கு எச்சரிக்கையா… இல்லவே இல்லை… WHO…!!!

இந்தியாவில் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டிவிடும் என பரவிய தகவல் உண்மையல்ல. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா எங்கு தோன்றியது..? மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆய்வு.. உலக சுகாதார அமைப்பு வெளியீடு..!!

உலக சுகாதார அமைப்பானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.   வௌவாலிலிருந்து கொரோனா வைரஸானது பிற விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவியுள்ளது என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் கொரோனா எங்கு ஆரம்பித்தது என்பது தொடர்பான ஆய்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இது குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கையானது மத்திய சீனாவில் இருக்கும் உயர்பாதுகாப்பு ஆய்வகத்திலிருந்து கொரோனா வெளியேறியதா? அல்லது இறக்குமதியான […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் 3ல் ஒரு பங்கு பெண்கள்…. “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கின்றனர்” அதிர்ச்சி தகவல் …!!!

உலக மகளிர் தினத்தன்று உலக சுகாதார அமைப்பானது பெண்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக சுகாதார அமைப்பானது பெண்களைப் பற்றி ஆய்வு நடத்தி உள்ளது. இதில் உலக அளவில் 736 மில்லியன் கணக்கில் பெண்கள் உள்ளனர். இந்தப் பெண்கள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. எனவே உலக சுகாதார அமைப்பின் ஆய்வை முதன்மையாகக் கொண்டு கணக்கிடப்பட்டது உலகிலுள்ள 15 முதல் 24 வயதிற்கு உட்பட்ட நான்கில் ஒரு பங்கு பெண்கள் உடல் […]

Categories
உலக செய்திகள்

நாம் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும்…. அப்போதான் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும்…. WHO இயக்குனர் நம்பிக்கை…!!

நாம் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவியதால் பெரும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான மைக்கேல் ரியான், நாம் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “கொரோனா பரவலை முடிந்தவரை கட்டுப்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

ஐந்தில் ஒருவருக்கு இந்த பிரச்சனை இருக்கு… இப்படியே போனா பல பேர் பாதிக்கப்படுவாங்க…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!!

ஐந்தில் ஒருவருக்கு செவிப்புலன் பிரச்சினை இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. உலகில் வாழும் மனிதர்களில் பல பேருக்கு செவிப்புலன் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை வரும் நாட்களில் அதிகமாகாமல் இருக்க அதற்கான தடுப்பு மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்தில் தொற்றுகள், நோய்கள், பிறப்பு […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் தானே அறிவித்தீர்கள்… இதனை உடனடியாக செய்யுங்கள்… புதிய WTO தலைவர் பிரிட்டனிற்கு எச்சரிக்கை…!!

உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவர், பிரிட்டன் உடனடியாக உபரி தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உபரி தடுப்பூசிகளில் பெரும்பாலானவற்றை ஏழை நாடுகளுக்கு அளிப்பதாக வெள்ளிக்கிழமை அன்று ஜி-7 கூட்டத்தில் அறிவித்திருந்தார். உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவரான Ngozi Okonjo-Iwelea என்பவர் பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்றிருக்கிறார். ஆனால் உபரி உள்ள வரை காத்திருக்காமல் அளிக்கவேண்டிய தடுப்பூசிகளை விரைவாக ஏழை நாடுகளுக்கு பிரிட்டன் வழங்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பத்தாதுன்னு இது வேறயா…! பாதிப்பை எதிர்கொள்ள தயாராக இருங்கள்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

எபோலோ பரவல் பாதிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஆறு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2013-2016 ஆம் ஆண்டில் மிகவும் மோசமான கொடிய தொற்று நோயாக எபோலா பரவல் இருந்தது. சிரியா, லியோன் மற்றும் லைபீரியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தத் தொற்று நோய் காரணமாக 14,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது காங்கோ நாட்டில் 300 பேருக்கும் கினியாவில் 109 பேருக்கும் எபோலா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எபோலோ பரவலால் […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் தான் போட்டுவிட்டீர்களே… மற்றவர்களுக்கு வழிவிடுங்களேன்… உலக சுகாதார அமைப்பு பிரிட்டனுக்கு வலியுறுத்தல்…!!

உலக சுகாதார அமைப்பானது, பிரிட்டன் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது.  உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி அளிக்கும் திட்டத்தில் பிரிட்டன், இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகள் தான் முதன்மையில் உள்ளது. இதில் பிரிட்டன் எளிதில் பாதிப்படையக்கூடிய மக்களுக்கு முதல்நிலை தடுப்பூசிகளை வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள்  செலுத்தி முடிக்கக்கூடிய நிலையில் உள்ளது. மேலும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் இருக்கும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும், இலையுதிர் கால […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போடாதீங்க…! கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை… உலக சுகாதார அமைப்பு பரபரப்பு…!!

உலக சுகாதார அமைப்பானது மாடெர்னா நிறுவனம் தயாரித்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கர்ப்பிணிகள் செலுத்திக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பானது, மூன்று வாரங்களுக்கு முன்னரே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பாக எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் எந்த ஒரு நிறுவனமும் கர்ப்பிணி பெண்களுக்கு சோதனைகள் செய்து தங்களின் தடுப்பூசி அவர்களுக்கு பாதுகாப்பானது தான் என்பதை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது கர்ப்பிணிப் பெண்கள் மூன்று மில்லியன் பேர் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அசுர வேகம்…! புதுப்புது வகையான கொரோனா… உலகிற்கு அடுத்த எச்சரிக்கை …!!

உலக சுகாதார அமைப்பு பிரிட்டானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உரு மாறிய கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரிட்டானியாவில் உரு மாற்றம் அடைந்துள்ள புதிய வகையான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், பிரித்தானியாவில் VOC 202012/01 என அழைக்கப்படும் புதிய வகை வைரஸ் முன்பிருந்த வைரஸ்களை விட மிகவும் எளிதாக பரவும் என்றும் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது. கடந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“இளைஞர்களை தாக்கும் இதயநோய்”… உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்..!!

இன்றைய நவீன உலகில் இளைஞர்களை இதய நோய் அதிக அளவில் தாக்குவதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இன்றைய நவீன காலத்தில் 60 சதவீத இளைஞர்கள் இதய நோய் தாக்குவதாகவும், இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதிகரிக்கும் வேலை பளு, மன அழுத்தம், ஃபாஸ்ட் ஃபுட், உடற்பயிற்சி இல்லாமை போன்றவை காரணங்களால் இதய நோய் உருவாகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இதனால் பெரும்பாலும் இளைஞர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் பிறப்பிடம் எது…? ஆய்வு செய்ய…. சீனா கிளம்பும் ஆய்வாளர்கள்…!!

கொரோனாவின் பிறப்பிடம் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பு சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுகாண் நகரில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதுமாகப் பரவி மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் 2019 ஆம் வருடம் இறுதியில் வுகானில் உள்ள மார்க்கெட்டில் பரவ தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் இந்த வைரஸ் உருவாகவில்லை என்று அந்நாட்டின் தரப்பில் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா உருவானது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ஆரம்பம் குறித்து…. WHO விசாரணைக்கு – சீனா மறுப்பு…!!

கொரோனா உருவான ஆரம்பம் குறித்து WHOன் விசாரணைக்கு சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவியது சீனாவில்தான். சீனாவிலுள்ள வுகான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் உருவாகியது. ஆனால் இந்த பற்றிய தகவல்களை வெளிப்படையாக இதுவரை சீனா எந்த தகவலும் வழங்கவில்லை. சீனா வெளிப்படையாக இருந்திருந்தால் உலகநாடுகள் இந்த பேரிடரை சந்தித்திருக்குமா? இதை தவிர்த்திருக்கலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக […]

Categories
உலக செய்திகள்

“உருமாறிய கொரோனா” உலகம் முழுவதும் வேகமாக பரவுகிறது – உலக சுகாதார அமைப்பு…!!

உலகின் பல நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்புதெரிவித்துள்ளது . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்டமாக கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து உருவாகிய புதிய வகை உருமாறிய கொரோனா முந்தைய கொரோனாவை விட வீரியமிக்கதாகவும், வேகமாகவும் பரவி வருவதாக கூறப்படுகின்றது. இதனால் பல நாடுகள் ப்ரிட்டனினுடனான […]

Categories
உலக செய்திகள்

ஒன்றல்ல, இரண்டல்ல… நான்காக மாறிய கொரோனா வைரஸ்… அதிர்ச்சி தகவல்…!!!

உலகம் முழுவதும் நான்கு வகையான கொரோனா வைரஸ் உருமாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“உலகின் கடைசி பெருந்தொற்று” கொரோனா கிடையாது…. இன்னும் இருக்கு – WHO எச்சரிக்கை…!!

கொரோனா வைரஸ் தான் உலகின் கடைசி பெருத்தொற்று கிடையாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார். கொரோனா வைரஸிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது பிரிட்டனில் புதிதாக ஒரு வைரஸ் பரவி வருகிறது. மேலும் அந்த வைரஸ் முந்தைய வைரசை விட வேகமாக பரவுவதால், உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இந்த வைரஸ் கேரளாவில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பூமிக்கு அழிவு நிச்சயம்… WHO தலைவர் கடும் எச்சரிக்கை…!!!

நம் பூமியை அச்சுறுத்தும் காலநிலை மாற்றத்தை கவனிக்கத் தவறினால் அழிவு ஏற்படுவது நிச்சயம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
உலக செய்திகள்

இது முடிவு இல்லை…! கடைசி தொற்று அல்ல… உலகிற்கு ஷாக்… வெளியான பரபரப்பு தகவல் ..!!

கொரோனா வைரஸ், உலகின் கடைசி பெருந்தொற்று அல்ல என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தொற்றுநோய்களைத் தடுக்க உலகம் தயாராக இருப்பதை கண்காணிக்கும், “The Global preparedness monitoring board”, கொரோனா பரவல் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன் தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. பெருந்தொற்று ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள எந்தவிதத்திலும் தயாராகவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தொற்றுநோய்க்கு எதிராகத் தயாராக இருக்கும் சர்வதேச நாள் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டு பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இறுதி இல்லை… இன்னும் இருக்கு… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

புதிய வகை கொரோனா…. தடுக்க செய்ய வேண்டியவை – WHO தகவல்…!!

புதிய வகை வைரஸை தடுக்க இந்த முறைகளை கடைபிடிக்க வேண்டு என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக வீச தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் மீண்டும் ஊரடங்கிற்கு சென்றுள்ளது. தற்போது பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், அது முந்திய வைரஸை விட மிக வேகமாக பரவி வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எனவே பல்வேறு நாடுகள் பிரிட்டனின் விமானப் போக்குவரத்தை நிறுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

JustIn: பள்ளி, கல்லூரிகள் திறப்பு – வெளியான புதிய அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் தொற்று பரவி உலகமே அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வைரஸ் பரவல் பல நாடுகளில் இரண்டாம் நிலையை எட்டியுள்ளது. சில நாடுகளில் குறைந்து வருகிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவிலும் தற்போதைய நிலையில் கொரோனா தொற்று குறைந்து கொண்டு இருக்கின்றது.  இதனால் கொரோனா பரவலை மேலும் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக நாடு நாடு முழுவதும் இந்தியாவில் பள்ளி – […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே மெர்சல்…! “கொரோனவை வச்சு செஞ்ச நாடு” … WHOவே பாராட்டி அசத்தல் …!!

கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட கனடா நாட்டினை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. கனடா உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கொரோனாவுக்கு எதிராக போராட எடுத்த முயற்சிகள் அனைத்தும் பாராட்டப்பட வேண்டிய விஷம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கனடாவின் “எம்பயர் கிளப்பில்”உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்காக ottawa அளித்துள்ள 440 மில்லியன் நன்கொடையை குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் இந்தக் கொரோனா நோய் பல நாடுகள் ஒன்றாக இணைந்து ஒரே […]

Categories
உலக செய்திகள்

தொற்றை தடுக்க தடுப்பூசி போதாது…. இதுவும் அவசியம்…. WHO தலைவர் வெளியிட்ட தகவல்…!!

கொரோனாவை  தடுக்க தடுப்பூசி மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றினால் 54 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார இயக்குனர் பேசியபோது, “தடுப்பு மருந்து தற்போது இருக்கும் மருந்துகளை பூர்த்திசெய்ய தான் கண்டுபிடிக்க படுகிறதே தவிர அவற்றுக்கு மாற்றாக அல்ல. அதோடு தடுப்பு மருந்து மட்டுமே தொற்றை தடுக்க போதுமானதாக இருக்காது. சில கட்டுப்பாடுகளுடன் தான் தடுப்பு மருந்து வரும். […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பு மருந்து மட்டுமே போதுமானது இல்லை” – உலக சுகாதார அமைப்பு…!!

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு தடுப்பு மருந்து மட்டுமே போதுமானது கிடையாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் தொற்றாக மாறி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பால் இதுவரை 13 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 5.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பல்வேறு நாடுகள் இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

நாம் சோர்ந்துவிட்டோம்…. பசிக்கும் வறுமைக்கும் தடுப்பூசி இல்லை – WHO தலைவர்

வறுமை, பசி, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் போன்ற வற்றிற்கு தடுப்பூசி இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார் கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி உயிர்  மட்டுமில்லாமல் பொருளாதாரத்தை பதித்து பல இடங்களில் அதிக வறுமையையும் பசியையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் கூறுகையில், “நாம் கொரோனாவிடம் சோர்ந்துவிட்டோம். ஆனால் நம்மிடம் கொரோனா சோர்வு அடையவில்லை. தன்னை விட […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சம்” பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு…. தனிமைப்படுத்திக்கொண்ட சுகாதார அமைப்பின் தலைவர்…!!

கொரோனா பதிப்பு உடையவருடன் தொடர்பில் இருந்ததால் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.  உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டேட்ரோஸ் ஆதோனம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் தனக்கும் பாதிப்பு இருக்கக்கூடும் என்ற பயத்தில் டேட்ரோஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் என்னுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. எனக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை நலமாக தான் உள்ளேன். ஆனாலும் உலக சுகாதார நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் ஆரோக்ய சேது செயலி…150 மில்லியன் பேர் யூஸ் பன்றாங்க… உலக சுகாதார அமைப்பு… வெளியிட்ட தகவல்…!!!

இந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்ய சேது செயலியை 150 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி அவர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்பதற்கு ஒரு செயலி உருவாக்கப்பட்டது. அதனை ஸ்மார்ட் போனில் டவுன்லோட் செய்து விட்டால், நெட்வொர்க் மூலமாக அவர்கள் எங்கு இருக்கிறார்கள் […]

Categories

Tech |