பிரபல நாட்டில் மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. பிரபல நாடான சீனாவில் உள்ள எசோவ் நகரில் 20-க்கும் மேற்பட்ட மாடிகளை கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு மிகப்பெரிய பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் பன்றிகள் வளர்க்கப்படுகிறது. மேலும் அதற்கு உணவு அளிப்பதற்காக 30 ஆயிரம் மையங்கள் உள்ளது. இந்நிலையில் பன்றிகளின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கும் வகையில் கட்டிடத்தின் வெப்ப அளவை சீராக வைக்கவும், காற்றை சுத்திகரிக்கவும் மிக நவீன இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. […]
Tag: உலக செய்தி
கப்பல் எஞ்சின் பழுதாகியதால் கரைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இங்குள்ள சிட்னி கடற்கரையிலிருந்து சரக்கு கப்பல் ஒன்று கிளம்பியது. இதில் 21 பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த கப்பலின் எஞ்சின் திடீரென பழுதாகி கடலில் நிற்கிறது. இந்நிலையில் பலத்த காற்று வீசுவதால் கப்பல் மீண்டும் கரைக்கு அடித்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கப்பலை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏராளம். இதற்கு எதிராக மக்கள் பல்வேறு வகையான தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 23,18,64,969 ஆகும். இதனைத் தொடர்ந்து 20,84,55,822 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். குறிப்பாக இந்த கொரோனா தொற்றுக்கு பலியானோர் […]
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு உதவும் விதமாக அமெரிக்க அதிபர் சுமார் 330 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக ஒதுக்கியுள்ளதாக அமெரிக்க சிறப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வாபஸ் பெறப்படவுள்ளது. இதற்கிடையே தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள 421 மாவட்டங்களில் 3 ல் 1 பங்கை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் […]
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா காரிஸ் பயணம் செய்த விமானத்தில் திடீரென தொழில்நூட்பக்கோளாறால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அரசு முறை பயணமாக மெக்சிகோ மற்றும் கவுத்தமாலா நாட்டிற்கு செல்வதற்காக வாஷிங்டனிலுள்ள விமானப்படை தளத்திலிருந்து தனி விமானம் மூலம் அதிகாரிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதால் விமானம் உடனடியாக அவசர அவசரமாக வாஷிங்டன் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் […]
சீனாவில் அரங்கேறுவது இனப்படுகொலை என்று அறிவித்த பிரிட்டன் நாடாளுமன்றம் அதனை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சீனாவின் சின்ஜியாங்கிலுள்ள உய்குர் முஸ்லிம்கள் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரிட்டன் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்த கன்சர்வேட்டிவ் எம்.பி நுஷ்ரத் கானி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை எம்.பிக்கள் ஆதரித்தனர். அனால் எம்பிகளின் ஆதரவுகள் இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமான முடிவுகளை எடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஏனெனில் […]
அமெரிக்காவில் பெண் ஒருவர் இன்னொரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ப்ரூக்லினில் இருக்கும் கடைக்கு நிக்கல் தாமஸ் என்ற 51 வயதான பெண் நடந்து செல்கிறார் .அப்போது திடீரென்று அவர் பின்னால் வந்த 38 வயதான லதீஷா பெல் என்ற பெண் துப்பாக்கியால் அவரை சுட்டு விடுகிறார். காயப்பட்ட நிக்கல் தாமஸ் போலீசாரின் உதவியால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் […]
சீனாவில் செல்போன் வெடித்து ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சீனாவில் ஒருவர் தனது பையில் வைத்துள்ள செல்ஃபோன் வெடித்ததில் அவர்மீது தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகளை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பையில் ஏதோ திடீரென்று வெடித்து தீப்பிளம்பு வெளியேறுகிறது. அது அவரின் கை ,இடுப்பு மற்றும் முகத்தில் தீக்காயங்கள் ஏற்படுகிறது. […]
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை அதிவேகமாக ஓட்டி சென்ற இளைஞருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் லிங்க்கான்ஷிரில் உள்ள ஸ்பல்டிங் அருகிலுள்ள ஒரு சாலையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி 22 வயதான ட்ரெசி ஹெர்குலிஸ் என்ற நபர் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அந்த வழியாக வந்த போலீஸ் காரை பார்த்தவுடன் அவர் இன்னும் படுவேகமாக ஓட்டி சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றுள்ளனர். மிக வேகமாக சென்ற அந்த […]
ஸ்விட்ஸர்லாண்ட் நதியில் சர்க்கரை ஆலை கழிவு கலந்ததால் மீன்கள் செத்து மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவா தீயணைப்பு வீரர்கள் மின் மோட்டர் மூலம் நதியில் தண்ணீரை பம்ப் செய்து வருகின்றனர். அப்போது தவறுதலாக டார்டாகினி என்ற இடத்தில் உள்ள தண்ணீரில் சர்க்கரை ஆலை கழிவுகள் கலந்து விட்டது .அதனால் தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும் மீன்கள் செத்து மிதக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் நதிக்குள் ஆக்சிஜன் […]
அமெரிக்காவில் ஓட்டுனர் இல்லாமல் பயன்படுத்திய டெஸ்லா கார் மரத்தில் மோதியதால் அதில் பயணித்த 2 பேர் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டெஸ்லாவின் 2019 ‘மாடல் S’ காரில் இரண்டு பேர் ஓட்டுநர்கள் இல்லாமல் பயணித்துள்ளனர். அந்த கார் ஆட்டோ பைலட் சிஸ்டம் மூலம் தன்னிச்சையாக இயங்க கூடியது என்பதால் காரில் ஓட்டுநர் இருக்கையில் யாரும் அமர்ந்திருக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர் . அதிவேகமாக […]
பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் தாத்தாவின் இறுதி சடங்கின் போது ஒன்றாக இணைந்து சென்ற காட்சிகள் வெளியாகிள்ளது. பிரிட்டன் மகாராணி கணவர் பிலிப்பின் மரணம் பிரிட்டன் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவரை குறித்த நினைவலைகள் எழுந்தது. மேலும் அவரின் மரணம் குறித்த செய்திகள் வெளியான போதெல்லாம் மக்களின் மனதில் இன்னொரு கேள்வியும் எழுந்தது மறுப்பதற்கில்லை. அது என்னவென்றால் பிலிப்பின் இறுதி சடங்கின் போதாவது ஹரியின் மனைவியான மேகனால் பிரிந்த ராஜ குடும்பம் மீண்டும் இணையுமா என்ற […]
மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹலேங்கின் முகத்தை காலணிகளில் ஸ்டிக்கராக ஒட்டி உள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ராணுவத்தினர் அரசுத் தலைவரான ஆங் சாங் சூகி மற்றும் அனைத்து தலைவர்களையும் கைது செய்து ஆட்சியை கவிழ்த்து இராணுவத்தின் பிடியில் நாட்டை கீழ் கொண்டுவந்தனர். அதனையடுத்து கடந்த இரண்டரை மாதங்களாக மக்கள் அனைவரும் ராணுவத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தில் […]
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா கட்டுபாடுகளை நெகிழ்த்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை பெடரல் கவுன்சில் அறிவித்துள்ளதாவது ஏப்ரல் 19 ல் இருந்து உணவகங்கள், மதுபான விடுதிகளில் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண ,குடிக்க அனுமதிக்கலாம் என்று அறிவித்துள்ளது. கொரோனா தொற்று நாட்டில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றாலும் கட்டுப்பாடுகளை நாம் ரிஸ்க் எடுத்துதான் நெகிழ்த்தி உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சரான அலன் பெர்சேட் கூறியுள்ளார். மேலும் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு […]
அமெரிக்காவில் கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள லூசியானா கடற்கரையில் 129 அடி ‘சீகார் பவர்’ எனும் வணிக கப்பல் ஒன்று புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியுள்ளது .இதனைத்தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர் .மேலும் சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க கடலோர காவல்படை தளபதியான வில்சன் கூறுகையில் ,கப்பலில் மொத்தம் 19 பேர் பயணித்ததாகவும் அதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 6 […]
அமெரிக்காவில் 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளது. சிகாகோவை சேர்ந்த ஆடம் டோலிடோ என்ற 13 வயது சிறுவன் கடந்த மார்ச் 29ஆம் தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனுடைய கையில் துப்பாக்கி இருந்ததால் சுட்டதாக போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால் சிறுவனின் கையில் துப்பாக்கி இல்லை என்று அவரின் குடும்பத்தினர் கூறியுனர். இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த […]
அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது . அமெரிக்காவின் 2020 ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டது உட்பட சைபர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப் போவதாக அமெரிக்கா செய்திகள் வெளியிட்டுள்ளது .அதில் 30 ரஷ்ய நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடையை விதிக்கப் போவதாகவும் தூதரக அதிகாரிகளுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. […]
ஜப்பானில் கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யப்போவதாக பொதுச்செயலாளர் டோஷிஹிரோ நிக்காய் தெரிவித்துள்ளார். ஜப்பானில் கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் ஜூலை 23 தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இதில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஜப்பானில் 5,13,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 0. 4% பேருக்கு மட்டும் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]
எலான் மஸ்க்கின் 90 களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பயனர் ஒருவர் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவரான எலான் மஸ்க் தனது 90களில் எப்படி இருந்தார் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்ற தகவலை ட்விட்டரில் ப்ரனே பதால் என்ற நபர் வெளியிட்டுள்ளார் .அவர் ட்விட்டரில் எலான் மஸ்க்கின் பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . மேலும் அந்த ட்வீட்டில் எலான் மஸ்க் 90களில் பாலோ ஆல்டோ வில் ‘ராக்கெட் […]
ஈராக்கில் அமெரிக்கப் படைத்தளம் அமைந்துள்ள விமானநிலையத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் மாகாணமான குர்திஸ்தானில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் அமைந்துள்ள அமெரிக்கப் படையினர் படைத்தளம் மீது குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களால் இந்த தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று குர்திஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் யாருக்கும் […]
அமெரிக்காவில் 9 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பற்றி அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது . அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் தென்கிழக்கில் உள்ள ஆரஞ்சு நகரில் வியாழக்கிழமை அன்று மர்ம நபர் ஒருவரால் 9 வயது சிறுவன் உட்பட 4 பேர் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். சமீபத்தில் 44 வயதான aminadab gaxiola gonzalez துப்பாக்கி சூடு நடத்தியதாக அவர் காயமடைந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் […]
கொரோனா தொற்றுக்கான அஸ்ட்ரோஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்தியதால் 30 பேருக்கு அரிய ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டதாக பிரிட்டன் மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். அஸ்ட்ரோஜனகா தடுப்பூசிகளை செலுத்துவதால் இரத்த உறைவு ஏற்படுவதாக பல செய்திகள் வெளியாகியது. இருப்பினும் ரத்த உறைவு ஏற்படக்கூடிய அபாயத்தை விட கொரோனா தொற்றை தடுப்பதில் தடுப்பூசியின் நன்மைகள் அதிகமாக இருப்பதால் அதனை செலுத்துவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகினர்.இதனால் பல ஐரோப்பிய நாடுகளும் தடுப்பூசிகளை செலுத்துவதை ஆரம்பித்தனர். எனினும் ரத்த உறைவு போன்ற கடுமையான பாதிப்பால் […]
சீனாவில் வேலைக்கு செல்லும் ஒருவர் தன் குழந்தையைத் தன்னுடன் கூடைக்குள் வைத்துக்கொண்டு செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. சீனாவை சேர்ந்த லீ என்பவர் கூரியர் நிறுவனம் ஒன்றில் பொருட்களை டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார். அவர் தன்னுடன் தனது 2 வயதான Fie ‘er எனும் தன் மகளையும் வேலைக்கு செல்லும் போது வாகனத்தில் பொருட்கள் வைக்கும் பெட்டியில் வைத்து தன்னுடன் அழைத்துச் செல்கிறார் .மேலும் fie 5 மாத குழந்தையாக இருக்கும் போதே […]
ஜெர்மனியில் போக்குவரத்து நிறுவனத்தின் காட்சி அறையில் நிறுத்தப்பட்டன பேருந்துகள் மொத்தமாக எரிந்து சாம்பலாகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் Dusseldorf நகரில் வியாழக்கிழமை இரவு போக்குவரத்து நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த 40 பேருந்துகள் திடீரென்று மொத்தமாக எரிந்து சாம்பலாகி உள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தீ விபத்தின் போது தொடர்ந்து வெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். மேலும் தீவிபத்தால் பல மில்லியன் […]
அழகி போட்டியில் வென்ற பெண்ணை அவரின் கணவர் தலையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள நோவாட்வின்ஸ்க் என்ற இடத்தில் 33 வயதான ஓல்கா ஷில்லியாமீனா என்ற பெண்ணின் தலையற்ற உடல் பனி நிறைந்த வனப்பகுதியில் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓல்காவை ஏற்கனவே 5 நாட்களாக காணவில்லை என்று அவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் அவரின் தலையற்ற உடல் கிடைத்தது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு இறப்பதற்கு முன் போலீஸ் அதிகாரிகளிடம்’ நான் கெட்டவன் அல்ல, ப்ளீஸ் ‘என்று கெஞ்சிய காட்சிகள் வெளியாகியுள்ளது . அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜார்ஜ் பிளாய்டு மரணம் போலீசுக்கும்,இனவாதத்திற்கும் இடையில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது. தற்போது மிநீயாபொலிஸ் நீதிமன்றத்தில் அவர் கொல்லப்பட்டதற்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் தாமஸ் லேன் ஜே, அலெக்சாண்டர் குயெங் மற்றும் டோ தோ ஆகியோர் தான் ஜார்ஜை கைது செய்த அதிகாரிகள். அவர்களின் உடம்பில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் […]
எவர் கிவன் சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்டு போக்குவரத்து தடை ஏற்பட்டதால் மொத்தமாக 1 பில்லியன் வரை செலவாகும் என்று எகிப்து அரசின் சூயஸ் கால்வாய் ஆணையம் கூறியுள்ளது. மார்ச் 23ஆம் தேதி எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் சரக்கு கப்பல் ஒன்று சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி மாட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட 6 நாட்கள் தீவிர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. தற்போது கிரேட் பிட்டர் ஏரியில் சரக்கு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சூயஸ் […]
அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது வன்புணர்வு குற்றசாட்டை போலீசார் பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவன் என்பதால் அவன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த செய்திகளை போலீசார் வெளியிடவில்லை. இதனையடுத்து குயின்ஸ் பகுதியை சேர்ந்த சட்டத்தரணியான அந்தோணி மர்டோன் சிறுவன் மீது குற்றச்சாட்டு வைத்ததற்காக அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் சிறுவனுக்கு தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாது […]
ஆஸ்திரேலியாவில் மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட நபர் மீது கருணை காட்ட வேண்டும் என்று அவரின் சட்டதரணி கோரிக்கை வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட நபரான 48 வயதான ரிச்சர்ட் பார்சி என்பவர் விசாரணைக் கைதியாக உள்ளார் .இவர் போதை பொருள் வைத்திருத்தல் ,கடுமையான காயம் ஏற்படுத்துதல், பொது ஒழுக்கத்தை மீறுதல் ,பொறுப்பற்ற நடத்தை ஆகிய 4 குற்றச்சாட்டுகளில் அவர் மீதுல்லது. பார்சியும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.மேலும் 4 விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் […]
கனடாவை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கனடாவின் ஹலிபக்சில் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.10 மணிக்கு சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென்று விலகி அருகில் இருந்த சிமெண்ட் தடுப்பு மீது மோதியுள்ளது.இந்த விபத்தில் கார் ஓட்டுனரான 71 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறினர்.
அமெரிக்காவில் டிக்டாக் சவாலை முயற்சித்த சிறுவன் மூளைச்சாவடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 12 வயதான யோசுவா ஹைலீஸஸ் என்ற சிறுவன் டிக் டாக் சவால் ஒன்றை முயற்சித்து மார்ச் 22ஆம் தேதி குளியலறையில் பேச்சு மூச்சின்றி கிடந்ததை அவனின் இரட்டை சகோதரர் கண்டு பெற்றோருக்கு கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் யோசுவா டிக் டாக் சவாலின் ஒரு பகுதியாக ஷூலேஸால் மூச்சு திணற வைத்துள்ளதாக கூறுகின்றனர் . மேலும் 3 நாட்களுக்கு […]
அறிவியல் ஆலோசகர்களின் அறிவுரைகளை கேட்பதில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதி மீது குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரோன் கடந்த வசந்த காலத்திலிருந்து அறிவியல் ஆலோசகர்களின் கருத்துகளை மறுத்து பள்ளிகளை திறந்துள்ளதாக வலது சாரியினரரான மரின் லே பென் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று அறிவியல் ஆலோசகர்கள் கூறிய கருத்துகளை மேக்ரான் எதிர்த்துள்ளார். அதனால் மேக்ரோனின் சகாக்களே ஜனாதிபதி தொற்று நோய் நிபுணராகிவிட்டார் என்று கூறி விமர்சித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை போட்டுக் கொண்ட அமெரிக்கர் ஒருவருக்கு அதிபயங்கர பக்க விளைவு ஏற்பட்டுள்ளது . அமெரிக்காவின் விர்ஜினியாவை சேர்ந்த 74 வயதான ரிச்சர்ட் என்பவர் கொரோனா தொற்றுக்கான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை இம்மாதம் மார்ச் 6ஆம் தேதி செலுத்திக் கொண்டுள்ளார் .தடுப்பூசி போட்டுக் கொண்ட நான்கு நாட்களில் அவர் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு சிவப்பு நிற பெரும் புள்ளிகள்கள் தோன்றியுள்ளது .உடம்பு முழுவதும் சிவப்பு நிறமாக […]
ஜெர்மனியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள நாடுகளிலிருந்து ஜெர்மனிக்கு குடிபுகுவோரின் எண்ணிக்கை 2020ல் பாதியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஐ கணக்கிடும் போது மொத்தமாக ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 31 % குறைந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஜெர்மனிக்கு இந்தியர்கள் வருவது மிகவும் குறைந்து விட்டதாகவும், சீனா மற்றும் அமெரிக்கர்களை பொருத்தவரை ஜெர்மனிக்கு வருபவர்களை விட ஜெர்மனியை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை […]
கொரோனா தொற்றின் பிந்தைய உலகிற்கான புதிய ஒப்பந்தத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட மற்ற நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் . பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கொரோனா தொற்று என்பது எல்லாரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லாததை நினைவூட்டுவதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கொரோனா தொற்று தொடர்பான தயாரிப்புக்காகவும் எதிர்கால சுகாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காகவும் புதிய ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் […]
மொசாம்பிக் நாட்டில் வெளிநாட்டவர்கள் 50 பேரின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மொசாம்பிக் நாட்டில் பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் 50 பேரின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் ஒன்றிலிருந்து 17 வாகனத்தில் வெளியேறிய வெளிநாட்டவர்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரமாரியாக தாக்கி உள்ளதாகவும் அதில் பலரை பிணைக்கைதியாக வைத்து கொடூரமாக கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எரிவாயு சேகரிக்கும் நகரமான பால்மாவில் […]
பிரிட்டனில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பாலியல் வன்முறை தொடர்பான செயல்களில் மூழ்கிக்கிடப்பதாக புகார்கள் வந்துள்ளது . ஆசிய அமெரிக்கரான 22 வயதான சோமா சாரா என்பவர் பாதி சீனர் என்பதால் பிரிட்டனில் படித்து வரும் போது பல பிரச்சினைகளை சந்தித்து உள்ளார். பலரும் அவரிடம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘என்னுடன் வருகிறாயா’என்றெல்லாம் ஆபாசமாக பேசியதாக கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கின் போது சக தோழிகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த க்கஷ்டங்களை பற்றி சாராவிடம் கூறியுள்ளனர்.அதனால் சாரா everyone’s […]
கனடாவில் நள்ளிரவில் மாயமான பெண்ணொருவர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . கனடாவில் ரொரண்ரோவை சேர்ந்த 23 வயதான பிரிட்டானியா போல்ட் என்பவர் கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் ஜேன் தெருவில் கடைசியாக காணப்பட்டு பிறகு காணாமல் போயுள்ளார். அவரை கண்டு பிடிப்பதற்காக போலீசார் அவர் காணாமல் போன அன்றைக்கு அணிந்திருந்த உடைகள் மற்றும் அவரின் உயரம் பற்றி தகவல் வெளியிட்டது. மேலும் பொது மக்களின் உதவியையும் போலீசார் நாடினர். அதற்கு பிறகு […]
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஜெர்மனில் அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயமாக விதிகளை கடைபிடிக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளார். ஐரோப்பா முழுவதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் செயல்பட்டு வருவது அதிருப்தியை ஏற்படுத்துவதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார். நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அவசரகால தடைகள் எல்லாம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை மாநிலங்கள் கடைப்பிடிக்காமல் இருந்தால் பெரும் […]
லண்டனில் காவல்துறையில் பணியாற்றி வரும் 150 அதிகாரிகள் குற்றவாளிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினரால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி லண்டன் நகரில் பணியாற்றி வருகின்ற 150 போலீஸ் அதிகாரிகள் பணியில் சேர்வதற்கு முன்பு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அறிவித்துள்ளது. தற்போது 32,000 காவலர்கள் லண்டன் பெருநகர காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர் .சில போலீஸ் அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல் துறையை பொருத்தவரை கட்டாய நிராகரிப்புக்கு வழி வகுக்கும் சில தவறுகள் […]
ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ள இரண்டு உயர் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லின்டா ரெனால்ட்ஸ் மற்றும் அட்டர்னி ஜெனரலாக இருந்த கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகிய இருவரும் பாலியல் குற்றச்சாட்டுகள் காரணத்தால் திங்கட்கிழமை முதல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அமைச்சரவையில் வேறு சில பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தின் உயர் சட்ட அதிகாரியான போர்ட்டர் சக ஊழியர் ஒருவரை 1988ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது […]
பிரிட்டன் ராணியின் பேரனான பீட்டர் பிலிப்ஸ் திருமணமான பெண்ணை ஸ்காட்லாந்திற்கு சென்று பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் ராணியின் பேரனான பீட்டர் பிலிப்ஸ் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஸ்காட்லாந்துக்கு திருமணமான பெண்ணை பார்க்க சென்றதாக பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் பீட்டருக்கு கொரோனா காலத்தில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தாயாருடன் வசித்து வரும் பிலிப்ஸை போலீசார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். பீட்டர் ஃபிலிப்ஸ் தொழில் சம்பந்தமாக […]
எகிப்தில் ஒன்பது மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 8 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து தலைநகரமான கெய்ரோவில் சனிக்கிழமை இரவு 9 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது .விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி இறந்ததாகவும் மேலும் 29 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டனர். சம்பவ இடத்தில் மீட்பு குழு இரவு நேரம் தேடுதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .மேலும் எகிப்தில் […]
இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளான இன்று பல தேவாலயத்தில் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தோனேஷியாவில் மக்காசர் நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதளுக்காக உள்ளே சென்றுள்ளார். அனைவரும் தேவாலயத்தின் உள்ளே இருந்துள்ளனர். பக்தர்களுக்கு நடுவில் செல்ல முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது […]
எலான் மஸ்க்கின் ஒரு ட்வீட் 30 நிமிடங்களில் 60,000பேரால் லைக் செய்யப்பட்டு 6000க்கும் அதிகமானோரால் மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர் தனது ட்விட்டரில் வியாழக்கிழமை அன்று ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார் .அதில் அவர் அவரைப்பற்றி ஒரு ஊழல் செய்தி வெளியானால் அப்போது அவரை எல்லாம் எலோங்கேட் என்று அழைக்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார். If there’s ever a […]
அமெரிக்கா கடற்கரையில் திடீரென்று துப்பாக்கிதாரிகள் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகின . அமெரிக்காவில் வர்ஜினியா கடற்கரையில் இரவில் துப்பாக்கிதாரிகள் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களை போலீசார் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.அந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயங்களுடன் தப்பி விட்டதாகவும் போலீசார் தகவல் வெளியிட்டனர். இதனை குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி தெரியவில்லை என்று கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு […]
ஸ்விட்சர்லாந்தில் வரும் கோடைகாலத்திலிருந்து கொரோனாவிற்க்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக் கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். கொரோனா தொற்றுக்காக கட்டுப்பாடுகள், விதிமுறைகள் போடப்பட்ட நிலையில் ஸ்விட்சர்லாந்தில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முழுமையாக கட்டுப்பாடுகளை விலக்க முடியும் என நம்புவதாகவும் அது தொடர்பான விபரங்களையும் வெளியிட்டுள்ளனர். அவற்றில் கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்திதான் கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்த முடியும் என்று கூறியுள்ளனர். பைசர் மற்றும் மொடெர்னா நிறுவனங்களிலிருந்து கொரோனா தடுப்பூசிகளை ஆர்டர் செய்ததாகவும் அவற்றிலிருந்து ஜூலை இறுதி […]
மியான்மரில் போராட்டங்களில் ஈடுபடுவோரை இராணுவ ஆட்சி குழுவினர் தலையிலும் முதுகிலும் சுட்டுக் கொல்வோம் என்று வெளிப்படையாகவே எச்சரிக்கை செய்துள்ளனர். மியான்மரில் பிப்ரவரி 1 ஆட்சிக்கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டக்காரர்களின் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 320 க்கு மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடுகின்ற அனைவரையும் பெண்கள் ,சிறுமிகள் என்று பாராமல் பாரபட்சமில்லாமல் சுட்டுக்கொன்றனர். இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு […]
அமெரிக்காவில் ஆசியா மீதான இனவெறி தாக்குதல் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று முதலில் பரவ தொடங்கியதிலிருந்து கொரோனாவை பரப்பி விட்டது ஆசியர்கள் தான் என்று கூறி அமெரிக்கர்கள் அவர்களை முதலில் அடித்தார்கள் .தற்போது காரணமே இல்லாமல் அவர்களை பார்க்கும் இடம் எல்லாம் அடித்து தாக்குகிறார்கள். அதில் செவ்வாய்க்கிழமை அன்று நியூயார்க்கில் பெண்மணி ஒருவர் மீது வெள்ளையர்கள் சிறுநீர் கழித்து உள்ளனர். அதேபோன்று நியூயார்க் சுரங்க ரயிலில் 68 வயதான நாராயன்ஜெ போதி என்ற இலங்கையர் […]
அமெரிக்காவில் ஆசியா நாட்டு முதியவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய நபரின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் ஆசியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியில் 84 வயதான ராங் சின் லியோ என்பவர் பிரான்சிஸ்கோவில் பேருந்திற்காக சாலை ஓரத்தில் வாக்கரில் அமர்ந்தபடி இருந்துள்ளார்.அப்போது திடீரென்று ஒரு இளைஞன் வந்து லியோவை மிதித்து கீழே தள்ளி உள்ளான்.அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத்தொடர்ந்து லியோவை தாக்கிய 23 வயதான எரிக் […]