Categories
உலக செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு…. இரங்கல் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி…!!!

இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் தாயார் மரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீராபென்னிற்கு 99 வயதான நிலையில், இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாயாரின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அங்கு தன் தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு, இறுதி சடங்குகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து காந்திநகரில் இருக்கும் மயானத்தில் அவரின் உடலை […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் குறைந்த கொரோனா…. நீக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…!!!

இந்தோனேசிய நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், இந்தோனேசிய அரசு கொரோனா விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது. அந்நாட்டு அதிபரான ஜோகோ விடோடோ கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அந்நாட்டில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தில் 1.7 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்ததால், கொரோனாவிற்கு எதிரான […]

Categories
உலக செய்திகள்

மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு…. மொத்தமாக 33 வருடங்கள் சிறை தண்டனை…!!!

மியான்மர் நாட்டின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகிக்கு ஊழல் போன்ற பல வழக்குகளின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதி அன்று ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு, நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி உட்பட முக்கியமான தலைவர்களை வீட்டு சிறையில் அடைத்தனர். ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டது, ஊழல் போன்ற பல வழக்குகளின் […]

Categories
உலக செய்திகள்

ஜனவரி 5-ஆம் தேதி முதல்…. சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை… அமெரிக்க அரசு அறிவிப்பு…!!!

அமெரிக்க அரசு, வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியிருக்கிறது. இது பற்றி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான அமெரிக்க மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீன நாட்டிலிருந்து அமெரிக்கா வருபவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 7,000 மக்கள் பரிதாப பலி…. ஐ.நா வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரில் தற்போது வரை 7000 மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர், சுமார் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த, கடும் போரில் உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது வரை  போரில் அப்பாவி பொதுமக்கள் 7 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் […]

Categories
உலக செய்திகள்

வியட்நாமில் விபத்துக்குள்ளான படகு…. தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்கள்…!!!

வியட்நாமிற்கு அருகில் கடலிலிருந்து மீட்கப்பட்ட இலங்கை தமிழர்கள் 152 பேர் தாய் நாட்டிற்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமிற்கு அருகில் பெரிய படகு ஒன்றில் பயணித்த இலங்கை தமிழர்கள் 302 பேர் விபத்தில் சிக்கினர். அந்த படகு கடலில் கவிழ்ந்து விழுந்து தத்தளித்து. நீரில் மூழ்கியவர்களை கடற்படையினர் போராடி மீட்டு விட்டார்கள். அதன் பிறகு, அவர்கள் வியட்நாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த படகில் பயணித்தவர்கள் வேறு நாட்டில் குடியேறும் நோக்கில் தப்பியதாக கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே, இலங்கை வெளியுறவு அமைச்சகமானது, […]

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்… தலீபான்களை கடுமையாக கண்டித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்…!!!

இந்தியா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, தலிபான்களை கடுமையாக கண்டித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலீபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கக்கூடிய வகையில் கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தினர். அந்த வகையில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க, தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற, தடை அறிவிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், தற்போது இந்திய நாட்டின் தலைமையில் இயங்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலானது, பெண்கள் மீதான கடும் கட்டுப்பாடுகளுக்கு தலிபான்களை கடுமையாக […]

Categories
உலக செய்திகள்

சூடானில் கோர விபத்து…. லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து…. 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சூடான் நாட்டில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 16 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடான் என்னும் வடக்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான கார்டூமிலிருந்து டார்பர் மாகாணத்தில் இருக்கும் பேசர் நகரத்திற்கு சென்ற பேருந்தில் 30-க்கும் அதிகமான பயணிகள் இருந்திருக்கிறார்கள். அந்த பேருந்து, ஓம்துர்மன் நகரத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் கட்டுப்பாடின்றி சென்ற பேருந்து சாலையோரத்தில் நின்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியது. பயத்தில், […]

Categories
உலக செய்திகள்

Breaking: வெள்ளத்தில் மூழ்கி 29 பேர் பலி…. பெரும் சோகம்…!!!

பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாகின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 12 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

சீன மக்களுக்கு கட்டாய பரிசோதனை…. ஜப்பான் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

சீன நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. சீன நாட்டில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து பல நாடுகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்களில் மக்களுக்கு தீவிர பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் அரசு, சீன நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி அந்நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா தெரிவித்திருப்பதாவது, வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

கண்ணிவெடியில் சிக்கி வெடித்து சிதறிய பேருந்து…. 10 நபர்கள் பரிதாப பலி…!!!

ஆப்பிரிக்காவில் கண்ணிவெடியில் மாட்டி பேருந்து வெடித்து சிதறியதில் பத்து நபர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். புர்கினோ பாசோவில் கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து பல தீவிரவாத அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பக்கத்து நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் தீவிரவாதத்தை அழிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அங்கு தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், புர்கினோ பாசோ […]

Categories
உலக செய்திகள்

இடைவிடாமல் கொட்டித்தீர்த்த பேய்மழை…. வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த மழையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடந்த திங்கட்கிழமை பலமான காற்று வீசியதோடு பலத்த மழை விடாமல் பெய்தது. இந்த கனமழையால் அங்கிருக்கும்  நகர்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கியது. பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்பால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

கீழே விழுந்து விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்…. வீரர்கள் மூவர் உயிரிழந்த பரிதாபம்…!!!

நைஜரில் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்ததில் இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டின் ராணுவத்திற்குரிய மில் எம்ஐ-17 என்ற வகை ஹெலிகாப்டர் நைஜர் நாட்டின் நியாம் என்னும் நகருக்கு புறப்பட்டு சென்றிருக்கிறது. அதில் ராணுவ வீரர்கள் மூவர் இருந்திருக்கிறார்கள். அந்நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையத்திற்குள் விழுந்து தீப்பற்றி எரிந்தது. அதனைத்தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்தவர் மரணம்…. பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!!

ஒடிசாவில் ஒருவார இடைவெளியில் அடுத்தடுத்து 2 ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் ஒருவர் ரஷ்ய எம்பியும், அதிபர் புதினை விமர்சித்தவர் எனவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்தவரும், அந்நாட்டு பணக்கார நாடாளுமன்ற உறுப்பினருமான பவெல் அன்டனவ் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். இந்நிலையில் பவெல் அன்டனவ் தான் தங்கி இருந்த அறையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவிற்குள் அத்துமீறி புகுந்த ட்ரோன்கள்…. வடகொரியா அதிரடி…!!!

வடகொரியா, தென்கொரிய நாட்டிற்குள் அத்துமீறி ட்ரோன்களை அனுப்பியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகள் மேற்கொண்டு தென்கொரியாவையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று தென்கொரிய நாட்டிற்கு ஐந்து ட்ரோன்களை வடகொரியா அனுப்பியிருக்கிறது. தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் அவை அத்துமீறி புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரிய நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜியோங்கி மாகாணத்திற்குள் அந்த ட்ரோன்கள் நுழைந்து வட்டமிட்டுள்ளன. அதில், […]

Categories
உலக செய்திகள்

102 பிள்ளைகள் பெற்றவர் எடுத்த திடீர் முடிவு…. ஒரு வழியா முடிவுக்கு வந்தாச்சிப்பா…!!!!

உகாண்டா நாட்டை சேர்ந்தவர் மூசா. 61 வயதாகும் இவர் பல திருமணங்கள் செய்து பல பிள்ளைகளை பெற்றுள்ளார். இந்நிலையில் 12 மனைவிகள் மற்றும் 102 பிள்ளைகளை கொண்ட உகாண்டா நாட்டு மூசா ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறார். அதாவது குடும்பத்தை கவனித்துக்கொள்ள சரியான வருமானம். இல்லாததால் அவர் தன் மனைவிகளை கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள சொல்ளியுள்ளாராம். 67 வயதாகும் மூசாவுக்கு 102 பிள்ளைகளும், 568 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு 6 வயது முதல் 51 வயது வரை பிள்ளைகள் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் பயங்கரம்…. டயர் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்து…. 6 நபர்கள் பலி…!!!

நைஜீரிய நாட்டில் பேருந்தின் டயர் வெடித்து, விபத்து ஏற்பட்டதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பவுச்சி என்னும் மாகாணத்தின், கஞ்சுவா என்னும் நகரத்தில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பேருந்தின் டயர் வெடித்ததில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, ஆறு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் கோர விபத்து…. பனிப்புயலில் சிக்கி பல முறை உருண்ட பேருந்து… 4 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

கனடா நாட்டில் உருவான பனிப்புயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் நான்கு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் கடும் பனிப்புயல் ஏற்பட்டதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்க நாட்டின் பக்கத்து நாடான கனடா நாட்டிலும் பனிப்புயல் உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாண்ட்ரீல்  மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நேரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் […]

Categories
உலக செய்திகள்

கேளிக்கை விடுதியில் துப்பாக்கிசூடு தாக்குதல்…. இளம்பெண் பரிதாப பலி…!!!

இங்கிலாந்தில் இருக்கும் கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒரு பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் வலாசே என்ற நகரில் இரவு நேரத்தில் மட்டும் இயங்கக்கூடிய ஒரு கேளிக்கை விடுதி அமைந்திருக்கிறது. அதில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிக மக்கள் கூட்டம் இருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று தன் துப்பாக்கியால் மக்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் ஒரு இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

தடம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயில்…. அம்மோனியா வாயு வெளியேறி 51 பேருக்கு மூச்சுத்திணறல்…!!!

செர்பியா நாட்டின் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், அம்மோனியா வாயு  வெளியேறியதில் 51 நபர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செர்பியாவின் பைரோட் நகரத்திலிருந்து, புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று அம்மோனியா வாயுவை எடுத்துச் சென்றது. அந்த தண்டவாளத்தில் ரயில் சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று  தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த சரக்கு ரயிலில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியா வாயு வெளியேறி காற்றில் கலந்து விட்டது. அந்த நச்சு காற்றை சுவாசித்த 51 நபர்கள் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் சும்மா விடுவோமா…. தென்கொரியாவின் எல்லைக்குள் நுழைந்த வடகொரிய போர் விமானங்கள்…. வெளியான தகவல் ….!!!!

வடகொரியாவின் போர்  விமானங்கள் தென்கொரிய  எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை மோதல் பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் வடகொரியா  அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் ஆளில்லாத டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான்  எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதனை பார்த்து உஷாரான தென்கொரிய  விமானப்படை போர் விமானங்கள், உளவு  விமானங்கள், ஹெலிகாப்டர்கள்  மூலம் விரைந்து சென்றனர். இதனையடுத்து வடகொரியா ஆளில்லாத […]

Categories
உலக செய்திகள்

OMG: நோயுடன் போராடும் ஜாம்பவான் பீலே…. மருத்துவமனையில் குவிந்த குடும்பத்தினர்…. ஏன் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே  உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் கால்பந்து ஜாம்பவான் பீலே  ஆவார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை பாலோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெருங்குடலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதனால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று […]

Categories
உலக செய்திகள்

இது எங்கள் மத அடையாளம்…. பிரபல நாட்டில் “கடற்படையில் சீக்கியர்கள் தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக் கொள்ளலாம்”…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில்  தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் சீக்கிய இனத்தை சேர்ந்த ஆண்கள் தலைப்பாகையும், தாடியும் வைத்துள்ளனர். இவர்கள் அதனை தங்களது மத அடையாளமாக கருதுகின்றனர். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் கடற்படைக்கு ஏகாஷ் சிங்க், ஐஸ்கிரத்  சிங், மிலாப் சிங் என்ற 3 சீக்கியர்கள் தேர்வாகியுள்ளனர். ஆனால் அவர்கள் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் தலைப்பாகையையும், தாடியையும் அகற்ற வேண்டும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் நீதிமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் விவகாரம்…. நடுநிலைத்தன்மையில் உள்ளோம்…. சீன வெளியுறவு மந்திரி கருத்து…!!!

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரில் நடுநிலை வகிப்பதாக சீன வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவிற்கு, சீனா ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீன நாட்டின் தலைநகரான பிஜிங்கில் நடந்த ஒரு நிகழ்வில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் வாங் யி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் சூழலைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஆதரவாக இயங்காமல், எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றி […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் பயங்கரம்…. ஆற்றில் கவிழ்ந்து விழுந்த பேருந்து…. 6 நபர்கள் பலியான பரிதாபம்…!!!

ஸ்பெயின் நாட்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பொன்டேவேத்ரா என்ற மாகாணத்தின் செர்டெடோ-கோடோபேட் நகரத்தில் ஒரு பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து சாலை ஓரத்தில் இருக்கும் ஆற்றினுள் கவிழ்ந்து விழுந்து விட்டது. இதில் அந்த பேருந்தில் பயணித்த 6 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து தொடர்பில் […]

Categories
உலக செய்திகள்

உச்சகட்ட கொடூரம்….!! பிரபல நாட்டில் “சிறையில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை”…. வெளியான பகிர் தகவல்….!!!!

பிரபல நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் ஒரு இளம் பெண்ணை சரமரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்நாட்டு  பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அரசு இரும்பு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷிய போர்…. பேச்சுவார்த்தைக்கு அழைத்த புதின்…. மறுக்கும் உக்ரைன்…. ஏன் தெரியுமா….?

உக்ரைனும் அதன் ஆதரவு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா 11 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் ரஷியா உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது. இதனால் உக்ரைனுக்கு  ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் போரை முடிவுக்கு […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் ” பெண்கள் என். ஜி. ஓ பணியில் ஈடுபட தடை…. அமெரிக்கா கடும் கண்டனம்….!!!!

பிரபல நாட்டில்  பெண்கள் என்.ஜி.ஓ  பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்களின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால் தலீபான்கள் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெண்கள் உயர்கல்வி பயில கூடாது என தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்களில்  பெண்கள் பணியாற்ற தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்கா கூறியதாவது, “உலகம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…. மனைவியுடன் வெள்ளைமாளிகையை அலங்கரித்த ஜோ பைடன்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தன் மனைவியுடன் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அலங்கரித்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். உலக நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பான கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக வருடந்தோறும் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்த வருடத்தில் பனிப்புயலால் அமெரிக்க மக்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே எளிமையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்….? திடீரென துப்பாக்கி சூடு நடத்திய நபர்…. அலறி துடித்த மக்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வாழும் மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் இண்டியானா  மாகாணத்தில் உள்ள புளூங்டன்  நகரில் ஒரு வணிக வளாகம் அமைந்துள்ளது. அந்த வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் வெடித்து சிதறிய “எரிவாயு டேங்கர் லாரி”…. பரிதாபமாக உயிரிழந்த 8 பேர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் நடந்த விபத்தில் 8  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள  ஜோகன்னஸ்பர்க் நகரின்  சாலையில் நேற்று எரிவாயு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி அதே பகுதியில் இருந்த பாலத்தின் மீது மோதி வெளியே வர முடியாமல் சிக்கியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள்  லாரியை பத்திரமாக மீட்க முயன்றனர். ஆனால் திடீரென லாரி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 8 பேர் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பேஸ்புக் நிறுவனம் மீது 6 ஆயிரம் கோடி அபராதம்…. ஏன் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!!

பிரபல நிறுவனத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. அப்போது அந்நாட்டு  பேஸ்புக் பயனர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ்  அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியது. இதனால் நிறுவனம் இது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 4  ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 6 ஆயிரம்  கோடி ரூபாயை அபராதமாக செலுத்துவதாக […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு ஐடியாவா….? சீனாவில் புதிய முககவசம்…. வைரலாக பரவும் வீடியோ….!!!!!

ஒருவர் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது உலக நாடுகளில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. அதாவது ஓமைக்ரானின்   மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால்  பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல் பலி எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு தான் பெண்கள் உயர்கல்வி கற்க தடை விதித்தோம்…. ஆப்கான் மந்திரி கூறிய விளக்கம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் உயர்கல்வியை கற்பதற்கு தடை விதிக்க வினோதமான காரணத்தை அந்நாட்டு மந்திரி கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது, பெண்கள் மேல்கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும், எதிர்ப்பதோடு நாடு முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சர்வதேச அளவிலும் இதற்கு கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் உயர்கல்வித்துறை மந்திரியாக இருக்கும் நேடா முகம்மது தெரிவித்திருப்பதாவது, கல்லூரிக்கு செல்லும் […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள்…. சீனாவிடம் உதவி கோரும் அமெரிக்கா…!!!

வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா, சீன நாட்டின் உதவியை கோரியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்வது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் ஆண்டனி ப்ளிங்கன், வடகொரிய நாட்டை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக சீனாவிடம் உதவி கோரியுள்ளார். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் சீன நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். அங்கு வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனை குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகள் பற்றி விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! பாகிஸ்தானில் நடந்த தாக்குதல்…. பரிதாபமாக உயிரை விட்ட 6 பேர்…. கதறி துடிக்கும் குடும்பங்கள்….!!!!

பிரபல நாட்டில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு அருகே போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது திடீரென தற்கொலை படையை சேர்ந்தவர்கள்  தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு போலீசார் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த பலரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா….!! பிரபல நாட்டில் “இந்தியருக்கு லாட்டரி மூலம் அடித்த ஜாக்பாட்” …. எத்தனை கோடி தெரியுமா…. திகைத்துப் போன குடும்பத்தினர்….!!!!

பிரபல நாட்டில் வேலை பார்க்கும் இந்திய வாலிபருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. துபாயில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனத்தில்  இந்தியாவை சேர்ந்த அஜய் ஓகுலா என்பவர் வேலை பார்த்து வருகிறார் . இவர் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் வாங்கிய லாட்டரி மூலம் 33 கோடி ரூபாய்  பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, “எனக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததை  என்னால்  நம்ப முடியவில்லை. இதன் மூலம் நான் கோடீஸ்வரனான செய்தியை […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் தொடங்கிய குளிர் காலம்…. ரத்து செய்யப்பட்ட விமானங்கள்…. கவலையில் அதிகாரிகள்….!!!!

பிரபல நாட்டில்  விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள்  அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிகமான பனிப்பொழிவு காரணமாக வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. இந்நிலையில் நேற்று இதன்  காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஆயிரத்தி  400-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்றுள்ளது. இந்த பனிப்பொழிவு தொடர்ந்தால் விமான போக்குவரத்து சேவை மிகவும் பாதிக்கப்படும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

உயிரிழந்து கிடந்த முதியவர்… பிண்ணனியில் இருக்கும் சிறுமிகள்…. கனடாவில் பரபரப்பு சம்பவம்…!!!

கனடா நாட்டில் 8 சிறுமிகள் சேர்ந்து ஒரு முதியவரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் ரயில் நிலையத்தின் அருகில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் சந்தைப்பகுதியில் 59 வயதுடைய ஒரு முதியவரை சிறுமிகள் எட்டு பேர் சேர்ந்து தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக துணை மருத்துவர்களை அழைத்தனர். அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “பெண்களுக்கு உயர்கல்வி மறுப்பு”…. கொந்தளித்த இங்கிலாந்து பிரதமர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இங்கிலாந்து பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றனர். அதேபோல் தற்போது பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்கு தடை விதித்துள்ளனர். இது அங்குள்ள மாணவிகளை கண்ணீரில் தள்ளி உள்ளது. மேலும் இதுகுறித்து இங்கிலாந்து பிரதமர்  கூறியதாவது,”எனக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் அவர்களுக்கு தந்தை என்ற நிலையில் இருந்து என்னால் இதனை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தீவிரமடைந்த கொரோனா… நிரம்பிய மருத்துவமனைகள்… மருந்து பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்…!!!

சீன நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா, சமீப மாதங்களாக சற்று அடங்கியிருந்தது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் உருமாற்றமடைந்த பி-எப் 7 என்ற வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், சீன நாட்டில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அங்கு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மருந்து பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு பிற […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்…. பெண்ணிற்கு கிரெம்ளின் மாளிகையில் வீரப்பதக்கம்…. அதிபர் புதின் பாராட்டு….!!!!

ரஷிய அதிபர் புதின் ஒரு பெண்ணை மிகவும் பாராட்டியுள்ளார் உக்ரைன் மீது ரஷியா தொடந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்து தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜரினா என்ற பெண் உக்ரைனில்  போர் நடக்கும் இடத்துக்கு சென்று செய்தி சேகரித்ததுடன், ரஷிய படை வீரர்களுக்கு  47 மில்லியன் பவுண்டுகளை வழங்கி  உதவியுள்ளார். அப்போது அவரது காலில் திடீரென வெடிகுண்டு சிதறல்கள்  பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரஷிய அதிபர் புதின் கிரெம்ளின் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பயங்கர மோதல்…. சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர்…!!!

இஸ்ரேல் படையுடன் நாட்டுடன் நடந்த மோதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் பலர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இஸ்ரேல் அரசு, அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக கூறி அழித்துவிட முயன்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மேற்கு கரையின் காசா […]

Categories
உலக செய்திகள்

எரிபொருள் டேங்க் வெடித்து பற்றி எரிந்த தீ… தீயணைப்பு வீரர் பலியான பரிதாபம்..!!!

கொலம்பியாவில் தீப்பற்றி எரிந்து எரிபொருள் டேங்க் வெடித்ததில் தீயணைப்பு படை வீரர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் வடப்பகுதியில் இருக்கும் பாரன் கில்லா துறைமுகத்தின் அருகே அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென்று எரிபொருள் டேங்க் வெடித்தது. இதில் தீப்பற்றி எரிந்ததால் பணியாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேகமாக ஓடினர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு குழுவினர், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர். அருகே இருக்கும் எரிபொருள் டேங்குகளில் […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாக தேடப்பட்ட போதை பொருள் மன்னன் கைது…. நாடு கடத்திய அதிகாரிகள்…!!!

ஆசியாவில் தேடப்பட்ட போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் டிசே சி லோப் என்ற நபர் போதைப்பொருள் கடத்தலில் மன்னராவார். சீனாவை சேர்ந்த இவர், கனடாவின் குடியுரிமையை பெற்று ஜப்பானிலிருந்து நியூசிலாந்து நாடு வரை ஆசிய பசிபிக் நாடுகளில் பல ஆயிரங்கள் கோடி மதிப்பு கொண்ட போதை பொருட்களை கடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வருடத்தில் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச காவல்துறையினர் அவரை கைது […]

Categories
அரசியல் உலக செய்திகள்

கால்பந்தின் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா…. கொண்டாட்டத்தில் ரசிகை செய்த காரியம்… எழுந்துள்ள சர்ச்சை…!!!

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒரு ரசிகை திடீரென்று தன் மேலாடை கழட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கால்பந்து உலக கோப்பை போட்டியானது, கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 36 வருடங்கள் கழித்து பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கால்பந்து சூப்பர் ஸ்டாரான, மெஸ்ஸிக்கு நம் நாட்டிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஏக்கம் […]

Categories
உலக செய்திகள்

OMG: அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடியை கடந்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று  ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 10 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே  7 ஆயிரத்து 330 ஆகும். மேலும் இதுவரை 11 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என  […]

Categories
உலக செய்திகள்

பெண்ணிடம் ஆபாச பேச்சு…. வைரலான ஆடியோ…. சர்ச்சையில் சிக்கிய இம்ரான் கான்….!!!!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா  தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது பதவியை இழந்தார். இதனால் அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர்  ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசுவதும், தனது வீட்டிற்கு அந்த  பெண்ணை அழைப்பது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கியது கொரோனாவின் கோரத்தாண்டவம்…. சீனாவிற்கு WHO எச்சரிக்கை…!!!

சீன அரசுக்கு, கொரோனா குறித்த தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார மையமானது  வேண்டுகோள் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனா சமீப மாதங்களாக அடங்கியிருந்தது. எனவே மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இந்நிலையில், மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. கொரோனா தோன்றியதாக கூறப்படும் சீன நாட்டில் தான் தற்போது அதிவேகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. அங்கு உயிரிழப்புகளும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா குறித்த தகவல்களை […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “கடலில் மூழ்கிய போர்க்கப்பல்”….. பரிதாபமாக உயிரிழந்த மாலுமிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் கப்பல் மூழ்கிய விபத்தில் மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாடான தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதியில்  கடந்த 3 நாட்களுக்கு முன்பு  போர்க்கப்பல் ஒன்று வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்த கப்பலில் 100-க்கும் மேற்பட்ட மாலுமிகள் இருந்துள்ளனர். அப்போது திடீரென கப்பல் புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். […]

Categories

Tech |