உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இது உலகம் முழுவதும் பரவியது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து மீண்டும் சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோப்ரயஸ் கூறியதாவது. “சீனாவில் தற்போது அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே அந்நாட்டு அரசு தடுப்பூசிகள் போடுவதை […]
Tag: உலக செய்திகள்
அமெரிக்கா, தென்கொரிய நாட்டுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள, கொரிய தீபகற்பத்தில் விமானங்களை குவித்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டு தென்கொரியாவையும், ஜப்பான் நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே, அந்த 2 நாடுகளின் நெருங்கிய நட்பு நாடான் அமெரிக்கா, வடகொரியாவிடும் அணு ஆயுதங்களை கைவிட வலியுறுத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, வடகொரியா, ஜப்பான் நாடுகளிடையே அடிக்கடி மோதல் உண்டாகிறது. இதனிடையே, வடகொரிய நாட்டின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், அமெரிக்காவும் தென்கொரியாவும் சேர்ந்து கொரிய […]
பாகிஸ்தானில் உள்ள பன்னு நகரில் பயங்கரவாத எதிர்ப்பு மையம் உள்ளது. இங்கு கைது செய்யப்பட்ட பல பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் பயங்கரவாதிகளுடன் விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பயங்கரவாதி போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில் கடுகாயம் அடைந்த 2 போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற பயங்கரவாதிகளை விடுவித்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை […]
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலக வேண்டும் என பலர் வாக்களித்துள்ளனர். உலகில் உள்ள பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரை வாங்கினார். இதனையடுத்த அவர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக ஊடக தளங்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்ட கணக்குகளை முடக்கப்போவதாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. […]
பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு மீது நேற்று முன்தினம் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் […]
சீன நாட்டில் 60% மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகலாம் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. எனவே, கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இந்நிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர். எனவே, சீன அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிகமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், மூத்த […]
சீன நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் கடும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால், மக்கள் அதனை எதிர்த்து தீவிரமாக போராட தொடங்கினர். எனவே, மூன்று வருடங்கள் கழித்து விதிமுறைகளில் தளர்வு கொண்டுவரப்பட்டது. இதனால், மீண்டும் அங்கு கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. உயிர் பலிகளும் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பலிகள் குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையில், பீஜிங் மாகாணத்தில் மருத்துவமனையில் […]
ஈராக் நாட்டில் காவல்துறையினரின் கவச வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 9 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்திற்கு அருகில் இருக்கும் கிர்குக் நகரத்தில் காவல்துறையினர், கவச வாகனத்தில் சென்ற சமயத்தில் தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் மேற்கொண்டனர். அவர்கள், வெடிகுண்டுகளை வீசி எறிந்ததோடு, வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதலும் நடத்தியதில் காவல்துறையினர் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. […]
கூகுளில் டிராபிக் ஏற்பட்டதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கர்த்தார் நாட்டில் உள்ள லுசைல் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மட்டும் அர்ஜென்டினா அணிகள் மோதியது. இந்நிலையில் இரு அணிகளும் மாற்றி மாற்றி கோல் அடிக்க கோப்பையை வெல்வதில் இரு அணிகளும் இடையே கடுமையான போட்டி நிலவியது. பின்னர் இறுதியில் போட்டி 3-3 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து பெனால்டிக் கிக் முறையில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு […]
வடகொரிய அரசு செயற்கைக்கோளை வானில் செலுத்தி, சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலினுடைய தீர்மானங்களை மீறி செயல்படுவதும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் வடகொரியாவின் வழக்கமாகிவிட்டது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய இரண்டு ஏவுகணைகளை அடுத்தடுத்து ஒரே நாளில் வடகொரியா சோதனை மேற்கொண்டது. அந்த ஏவுகணையானது, ஜப்பான் நாடு வரை பாய்ந்து தாக்கக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியா முதல் உளவு செயற்கைக்கோளை வானில் […]
பிரபல நாட்டில் OTT தளங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் நிறைவேற்றப்படுகிறது. பிரித்தானியாவின் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்டனர். இதனால் நெட்ஃபிளிக்ஸை ஒழுங்குபடுத்த நாட்டின் ஒளிபரப்பு கண்காணிப்பு அமைப்பான Ofcom எனப்படும் தகவல் தொடர்பு அலுவலகத்தை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அங்கீகரித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ofcom- ன் அதிகார வரம்பில் அனைத்து புதிய ஸ்ட்ரீமிங் தளங்களையும் வைக்கும் […]
ராஜ குடும்பத்தினர் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் வீட்டில் ஒரு அறையில் மர்மங்கள் உள்ளது. ஆண்டுதோறும் கிறிஸ்மஸ் பண்டிகையை பிரித்தானியா ராஜ குடும்பத்தினர் மிகவும் விமர்சியாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை sandringham House என்னும் வீட்டில் கொண்டாட இருக்கின்றனர். ஆனால் இந்த வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் பணியாளர்கள் செல்ல பயப்பட்டுள்ளனர். இதனால் மகாராணியார் பாதிரியார் ஒருவரை தனியாக அழைத்து வந்து பிரார்த்தனை செய்துள்ளார். மேலும் மன்னர் சார்லஸ் சில ஆண்டுகளுக்கு முன்பு […]
பிரபல நாட்டில் 2 பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராஜன்பூர் மாவட்டத்தில் சிந்து நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை தற்போது கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சாலை வழியாக இன்று காலை வந்த 2 பேருந்துகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]
உலக அழகி பட்டத்தை இந்திய பெண் பெற்றுள்ளார். கடந்த 1984-ஆம் ஆண்டு முதல்முறையாக திருமணம் முடிந்த பெண்களுக்கான உலக அழகி போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் இன்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடுவராக கடந்த 2001-ஆம் ஆண்டில் அழகி பட்டத்தை தட்டிச் சென்ற இந்தியாவை சேர்ந்த டாக்டர் அதிதி கோவித்ரிகர் நடுவராக இருந்தார். இதனையடுத்து இந்த போட்டியில் பல நாடுகளில் இருந்து […]
பிரபல நாட்டில் நடந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபல நாடான பாகிஸ்தானில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷன் மீது ஒரு அமைப்பு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட சில தினங்களிலேயே பதவி விலகப் போவதாக கடிதம் அளித்துவிட்டேன் என்று போப் பிரான்சிஸ் கூறியிருக்கிறார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், கடந்த சனிக்கிழமை அன்று தன் 86 ஆம் பிறந்த நாளை கொண்டாடினார். சமீப நாட்களாக உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு சிரமப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், கடந்த 2013 ஆம் வருடத்தில் போப் ஆண்டவராக தன்னை தேர்ந்தெடுத்த சில தினங்களில் உடல்நல பாதிப்புகளால் பதவி […]
பிரபல நாட்டில் இடிபாடுகளில் சிக்கி இருந்த குழந்தையின் சடலத்தை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷியா 11 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைனில் உள்ள கார்கிவ் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி ரஷியா சுமார் 70 ஏவுகணைகளை வீசியது. அதில் 60 ஏவுகணைகளை வான்பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துவிட்டது. மீதமுள்ள ஏவுகணைகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றை தரைமட்டமாகியுள்ளது. இதில் ஏராளமான […]
அதிக அளவில் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 11 மாதங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது. தற்போது உக்ரைன் தங்களது பகுதிகளை மீட்கும் பணியில் இறங்கியுள்ளது. மேலும் இதுகுறித்து உக்ரைன் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “இந்த […]
பிரபல நாட்டில் விமானம் ஓடு பாதையில் மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நேற்று போர் விமானம் ஒன்று தரையிறங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓடு பாதையில் விமானம் மோதியது. இதனையடுத்து விமானி உடனடியாக விமானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல நாட்டில் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள கெட்டெரிங் நகரில் கேரளாவை சேர்ந்த அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அஞ்சு மற்றும் அவரது 2 குழந்தைகளும் வீட்டில் படுகாயங்களுடன் கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]
பிரபல நாட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் தங்களது வீட்டிற்கு கிளம்பியுள்ளனர். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் […]
பிரபல நாட்டில் லஞ்சம் பெற்ற இந்திய வம்சாவளி மருத்துவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சான்டியாகோ நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லோகேஷ் என்ற நரம்பியல் மருத்துவர் வசித்து வருகிறார். இவர் பணிபுரிந்து வந்த மருத்துவமனைக்கு முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வரும் மக்களிடமிருந்து கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை 27 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது […]
பிரபல நாட்டில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் உள்ள மத்திய சதுக்கம் பகுதிகள் ரேடிசன் புளூ என்ற ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் பல மீன்கள் மக்களின் பார்வைக்காக வளர்க்கப்பட்டு வந்தது. மேலும் இங்கு வருபவர்கள் தொட்டியின் கண்ணாடி பகுதி வழியே உள்ளே நீந்தி சென்று கடல்வாழ் மீன் இனங்களை பார்வையிடலாம். இந்நிலையில் இன்று திடீரென […]
உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தினுடைய 29,743 கோடி பங்குகளை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரராக இருந்த எலான் மஸ்க் அந்த அந்தஸ்தை இந்த வார தொடக்கத்திலேயே இழந்துவிட்டார். இந்நிலையில் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவின் 2,20,00,000 பங்குகளை 3.58 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அதே சமயத்தில், திடீரென்று இவ்வளவு பங்குகளை அவர் விற்க என்ன காரணம்? என்பது […]
கால்பந்தின் அரையிறுதியில் மொரோக்கா அணி தோல்வியடைந்ததால், கோபடைந்த ரசிகர்கள் கலவரத்தை உண்டாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை கால்பந்தின் அரை இறுதிப் போட்டியானது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் மொராகோ அணியானது, பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால், மொராக்கோ ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள். மேலும் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் கலவரத்தை உண்டாக்கினர். காவல்துறையினர் மீதும் கற்களை தூக்கி எறிந்தார்கள். மேலும் பெல்ஜியத்தில் காவல்துறையினர் மீது மொராக்கா ரசிகர்கள், பட்டாசுகளை கொளுத்தி போட்டனர். […]
தைவானை பயங்கர நிலடுக்கம் தாக்கியதில் மக்கள் கடும் பீதியடைந்து, தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். தைவான் தீவானது, புவிதட்டுகள் அவ்வப்போது நகரும் இடத்தில் அமைந்திருக்கிறது. இதனால் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும். அந்த வகையில், கிழக்கு கடலோர பகுதியில் நேற்று மிகப்பெரிய நிலநடுக்கம் உண்டானது. இந்த நிலநடுக்கமானது, 6.2 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் தலைநகரே இந்த பயங்கர நிலநடுக்கத்தில் குலுங்கிப்போனது. இதில் மக்கள் பீதியடைந்து குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களிலிருந்து தப்பி தெருக்களில் […]
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் அந்த நாட்டு அரசுக்கும், டைக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கென்யா நீதிமன்றத்தில் எத்தியோப்பிய உள்நாட்டு போரின்போது வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான பதிவுகளை பரப்பியதாக முகநூல் செயலியின் தாய் நிறுவனமான மெட்டா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மெட்டா நிறுவனத்தில் செயல்பாடுகளால் போரில் ஏற்பட்ட இழப்புகளுக்கு 16 ஆயிரம் […]
இங்கிலாந்தை சேர்ந்த எட்டு வயது குழந்தை தன் பெற்றோர் கடனை திரும்ப செலுத்த பணம் தருமாறு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் அனுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கிவிட்ட நிலையில், குழந்தைகள் ஆர்வமுடன் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் எழுத தொடங்கியுள்ளனர். இது பொதுவாக பின்பற்றப்படும் வழக்கமாகும். அதன்படி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்மி என்ற எட்டு வயதுடைய சிறுமி கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது பொதுவாக குழந்தைகள் […]
உலக சுகாதார மையத்தின் தலைவர் அடுத்த வருடத்தில் கொரோனா தொற்று உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது என்று தெரிவித்திருக்கிறார். மூன்று வருடங்களாக உலக நாடுகளை கொரோனா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது உலக நாடுகள் படிப்படியாக கொரோனாவிலிருந்து மீண்டு கொண்டிருக்கின்றன. தற்போது வரை உலகளவில் சுமார் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு பலியாகி உள்ளது. இந்நிலையில், தற்போதும் கொரோனா தொற்றுக்கு சர்வதேச சுகாதார அவசரநிலை அவசியமா? என்பது பற்றி தீர்மானிப்பதற்காக உலக சுகாதார மையத்தின் சார்பாக […]
காங்கோ நாட்டில் பலத்த மழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு உண்டாகி 141 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல பகுதிகளில் கடும் நிலச்சரிவு உண்டானது. இதில் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனது. […]
ஐ.நா. தலைமையகத்தில் இந்தியா சார்பில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் தலைமையகம் அமைந்துள்ளது. தற்போது இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறது. இதனால் இந்தியா பரிசாக மகாத்மா காந்தியின் சிலையை அளித்துள்ளது. இந்த சிலையை திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகிய 2 பேரும் இணைந்து சிலையை திறந்து வைத்தனர். இந்த சிலையை பிரமாண்டமான […]
பிரபல நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என கூறி போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் 490 […]
பிரபல நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளை அரசு முறையாக பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை […]
இந்தியா தங்களது எல்லைப்படை வீரர்களை கட்டுப்படுத்த வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சலபிரதேசத்தில் உள்ள யங்ட்சி பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நமது நாட்டின் எல்லை பகுதிக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். இதனை பார்த்த இந்திய வீரர்கள் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் இரு நாட்டின் வீரர்களும் காயம் அடைந்தனர். ஆனால் இந்திய படைகள் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக […]
பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு பகுதியில் வசித்து வந்த ஒரு நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த நபர் விம்பிலா நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு […]
நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் பாதுகாப்பான முறையில் தரையிறங்கியுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் மனிதனை நிலவுக்கு வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஆளில்லா ஓரியன் வெண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் திடீரென ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பல தடைகளுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
வன்முறைக்கு காரணமானவர்களை குறி வைத்துள்ளதாக ஜெர்மனி நாட்டில் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி ஒரு பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலரை […]
சீன நாட்டில் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். சீன நாட்டில் கொரோனா அதிகரித்ததால் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதால் மீண்டும் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி பெற்று இருக்கிறது. சுற்றுலா பயணிகள் தங்களின் விடுமுறையை கொண்டாட உற்சாகத்தோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் மாகாணங்களுக்குள் பயணிக்க விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் முக்கியமான சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதில் பயணிகளை கவர்வதற்கு என்று […]
பிரபல நாட்டில் ஓட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான கான்பூரில் பிரபல ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு சீன நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவார்கள். அதேபோல் இன்றும் ஏராளமானோர் ஓட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் இதுவரை வெளிவரவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் […]
ரஷிய துணை பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ரஷியா சர்வதேச அளவிலான எரிபொருள் விலையை உயர்த்தியது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி 7 நாடுகள் கூட்டத்தில் ரஷியா இறக்குமதி எண்ணெய்க்கு விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது என்று முடிவு செய்தது. அதேபோல் ஜி 7 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300க்கும் அதிகமான விசை படகுகளுடன் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று மீன் பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் அந்த சமயத்தில் சோதனை பணியை மேற்கொண்டிருந்த நிலையில், எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி ஐந்து விசை படகுகளை கைப்பற்றியதோடு, மீனவர்கள் 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]
இங்கிலாந்தில் விவாகரத்தான பெண், முகநூல் காதலனால் ஏற்பட்ட துயரத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய Rachel Elwell என்ற பெண் சமீபத்தில் தன் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். தனிமையில் வாடிய அவர் முகநூல் தளத்தில் ஸ்டீபன் என்ற நபருடன் அறிமுகமானார். இணையதளம் வழியாகவே இருவரும் பல மணி நேரங்கள் உரையாடினர். இந்நிலையில், ஒரு நாள் பணி நிமித்தமாக உக்ரைன் நாட்டிற்கு செல்வதாக ஸ்டீபன் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு சில நாட்கள் உக்ரைனிலிருந்து Rachel-உடன் […]
பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் அண்ணியான கேட் மிடில்டன் குறித்து கூறியதை கேட்டு இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் இருவருடைய நெட்பிலிக்ஸ், தொடரின் முதல் பாகம் வெளியானது. அதில் கேட் மிடில்டனை இளவரசர் வில்லியம், காதலிக்கவில்லை. ராஜ குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதற்கு அச்சுக்கு ஏற்பது போன்று இருப்பதற்காகவே திருமணம் செய்தார் என்று ஹாரி தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கருத்தால் இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாரி தெரிவித்ததாவது, […]
ஈரான் நாட்டில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டாவது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அன்று சரியாக ஹிஜாப் அணியாத காரணத்தால் ஒரு இளம் பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் தாக்கியதில் 16ஆம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு ஹிஜாபை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு மாதங்களாக நீடிக்கும் இந்த போராட்டத்தின் வெற்றியாக முஸ்லிம் மத சட்டங்கள் […]
பிரபல நாட்டில் பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ரிசால் மாகாணத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று டனாய் நகரில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று அதேபகுதியில் அமைந்துள்ள ஆற்றை கடக்க முயன்றுள்ளது. அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசார் […]
பிரபல நாட்டின் ஐடி வல்லுனர் இந்தியா சர்வதேச சந்தையில் ஆட்சி செய்வதாக கூறியுள்ளார். சீன நாட்டில் உள்ள ஒரு பகுதியில் ஐடி வல்லுனரான மைக் லியு என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியா மற்றும் சீனாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்து “இந்திய தகவல் தொழில்நுட்பத்தின் எழுச்சி” என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “எங்கள் நாட்டின் தொழில்நுட்ப வருமானம் பெரும்பாலும் உள்நாட்டிலிருந்து கிடைக்கிறது. […]
டுவிட்டர் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடகமான டுவிட்டரை வாங்கினார். பின்னர் டுவிட்டரில் புளூ டிக் வசதியை பெற வேண்டும் என்றால் மாதம் தோறும் 659 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறினார். இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலி கணக்குகளை கண்டறிவதற்காக தற்காலிகமாக புளூ டிக் நிறுத்தப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து டுவிட்டர் […]
பிரபல நாட்டில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு 5 நாளில் 3 அதிபர்கள் மாறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோ காஸ்ட்டிலோ வலதுசாரியான கெய்கோவை வீழ்த்தி அதிபர் ஆனார். ஆனால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோ காஸ்ட்டிலோ கூறியதாவது, “நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்படும். […]
இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் ஊழலை குறைப்பதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 9-ஆம் ஊழல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதேபோல் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ஊழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் வடகொரிய அரசால் நடத்தப்படும் எஸ்.இ.கே. என்கின்ற அனிமோஷன் ஸ்டுடியோ தொழிலாளர்களுக்கு குறைந்த வருமானத்தை வழங்கி அதிகமான வேலையை வழங்குகிறது என அமெரிக்கா பல்வேறு குற்றங்களை சாட்டியது. மேலும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவு […]
பிரபல நாட்டில் காரின் மீது வேட்டைக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Warluis என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஏராளமானோர் பயணித்தனர்.அப்போது திடீரென வேட்டைக்காரர்கள் காரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து Warluis பகுதியின் மேயரான Dominique Mored கூறியதாவது, “பல வேட்டைக்காரர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். […]