உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோவிற்கு தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இந்தியாவும் போட்டியில் குதித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவற்றில் சைடஸ் கேடிலா, சீரம் என இரு நிறுவனங்கள் மட்டுமே உலக சுகாதார அமைப்புகளிடம் பதிவு செய்து சர்வதேச அளவில் போட்டியில் இருப்பதை உறுதி செய்துள்ளது. உலகின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 700 கோடியை தாண்டி விட்டதால், ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாராவது வரவேற்கத்தக்கது என்று சர்வதேச தடுப்பூசி […]
Tag: உலக செய்திகள்
உலக சுகாதார நிறுவனம் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் பரவாது என்பது உள்ளிட்ட தவறான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக நடந்து கொண்டதாக உலக சுகாதார நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், கொரோனா விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கூறியது. இந்நிலையில் கொரோனா […]
கொரோனா ஊரடங்கை மீறியதால் பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் முக்கியமாக அந்த நாட்டிலுள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் லாகோசில் என்ற பகுதியில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால் அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கும், இறுதி சடங்கு மற்றும் திருமணங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியேறி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்த கொடிய கொரோனா தாக்குதலால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் […]
பலூனில் கட்டப்பட்ட நாய் ஒன்று பறந்து அந்தரத்தில் தொங்கியபடி நிற்கும் வீடியோ இணையதளத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்க்கப்பட்டுள்ளது. பீட்டர் என்ற பெயரில் சமீபத்தில் டிக்டாக்கில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் நாய் ஒன்று உடலில் பலூனை கட்டிக்கொண்டு நிற்கிறது. தொடர்ந்து நாயை பிடித்திருக்கும் பெண் அதனை விட்டதும், வாயு நிரப்பப்பட்ட பலூனால் நாய் அந்தரத்தில் தொங்கியபடி நிற்கிறது. இந்த வீடியோ எங்கு எப்போது படமாக்கப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. https://youtu.be/r6KmO62LjLE
அமெரிக்காவில் கொரோனாவின் கோரப்பசிக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் உலக அளவில் […]
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இன்னும் […]
கொரோனோவின் கோரப் பசிக்கு உலகின் பல நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இரவு நிலவரப்படி கோரோனோவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை வேகமாக 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 71 ஆயிரத்து தாண்டிவிட்டது. உயிரிழப்பை பொருத்தவரை 14,887 பேருடன் இத்தாலி முதலிடம் வகிக்கிறது. அங்கு மட்டும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் 694 பேர் உயிரிழந்தால் பலி எண்ணிக்கை 12,641 எட்டியது. அமெரிக்காவில் […]
இங்கிலாந்தில் குழந்தைகள் அற்ற பூங்காவில் ஆடுகள் துள்ளி விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி ஏராளமான இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனிடையே வடமேற்கு பகுதியில் உள்ள லங்காசியர் பகுதிகளில் விளையாடுவதற்கு குழந்தைகள் இன்றி பூங்கா ஒன்று வெறுமையாக காணப்பட்டது. இதனால் அதற்குள் நுழைந்து சில ஆட்டு குட்டிகள் துள்ளி விளையாடின, அப்பொழுது ரவுண்டாபோட் கருவிகளில் ஆட்டுக்குட்டிகள் சுற்றி சுற்றி விளையாடின. https://www.facebook.com/100004322918531/videos/1566894146798001/
வேகமாக பரவி வரும் கொரோனோவால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வேண்டிய மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கும் இந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதனுடைய அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிடப்பட்டிருந்தது. இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் […]
அமெரிக்காவிற்கு ரஷியா அதிபர் வழங்கிய மருத்துவ உபகரணங்கள், பலரது உயிரை காப்பாற்றும் என அதிபர் ட்ரம்ப் கூறினார். உலகையே நிலைகுலைய செய்யும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து உருவெடுத்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 2 லட்சத்து 77 ஆயிரத்து 161 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதல் காரணமாக 7 ஆயிரத்துக்கும் 392 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றினால் ஏற்படும் […]
புகை பிடிப்பவர்களுக்கு தான் கொரோனா வைரஸால் அதிகம் பதிப்படைவர் என்றும் மிகப்பெரிய ஆபத்து உங்களுக்கு உள்ளது என்றும் உலக மருத்துவ துறை வல்லுனர்கள் அனைவரும் விளக்கம் அளித்துள்ளனர். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு, புகை நமக்கு பகை, புகை பிடிக்காதீர்கள் என்று பல வழிகளில் மக்களுக்கு விளம்பரத்தின் மூலம் புரிய வைக்கின்றனர். ஆனால் இது சிகரெட் பாக்கெட் முதல் திரையரங்கம் வரையிலும் இந்த வசனம் இடம் பிடிக்கிறது. ஆனால் புகை பிடிப்பதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் […]
கொரோனாவின் கோரத்தாண்டவம் பச்சிளம் குழந்தையும் விட்டு வைக்கவில்லை, பிறந்து 42 நாட்கள் ஆன குழந்தை இந்த தொற்றினால் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் மேலும் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உருவெடுத்த கோரோனோ வைரஸ் இப்பொழுது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவி நிலைகுலைய செய்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை […]
உலகளவில் கொரோனா : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,780 ஆகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,84,381 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனோவால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்: இத்தாலி – 11,591 ஸ்பெயின் – 7,716 அமெரிக்கா – 3,148 பிரான்சு – 3,024 ஈரான் […]
உலகையே நிலைகுலைய வைக்கும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை ஆரம்பத்தில் எவ்வாறு அறிய முடியுமென்று அமெரிக்க எளிய முறையை கூறியுள்ளது. உலக நாடுகளை நாளுக்கு நாள் அச்சுறுத்தி காவு வாங்கி வருகிறது கொரோனா வைரஸ்.காய்ச்சல், இருமல், சளி என பல தொல்லைகள் வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இதைப்போல புதிய தகவல் ஒன்றை அமெரிக்க வெளியிட்டுள்ளது. அதில் காது, தொண்டை நோயியல் அகாடமியின் தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி கூறியுள்ளார். அதாவது, […]
உலகளவில் கோரோனோ தோற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,31, 609 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தையும் தாண்டியது. அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்க முதலிடம். அமெரிக்க பாதிக்கப்பட்டவர்கள் – 69,425 பலியானவர்கள் – 1,045 குணம் அடைந்தவர்கள் – 428 இந்தியா பாதிக்கப்பட்டவர்கள் – 719 பலியானவர்கள் […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒத்தி வைப்பதை தவிர்க்க முடியாது என்று ஜப்பான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32வது ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . ஆனால் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு நாடுகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனோவின் தாக்கம் காரணமாக […]
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. மேலும், வளைகுடா நாடுகளில் இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவில் 392, பஹ்ரைனில் 310, ஐக்கிய அரபு அமீரகத்தில் 153 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நோய் […]
சீனாவுக்கு வெளியே இத்தாலி நாட்டில் தான் உயிர்க்கொல்லி வைரஸ் தன்னுடைய கோரத்தாண்டவத்தை தொடர்ந்து வருகிறது. அங்கு வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ஒரே நாளில் 349 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் இத்தாலியில் வைரஸ் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து 2100 கடந்துவிட்டது. இத்தாலியில் புதிதாக 3833 பேர் வைரசுக்கு இலக்காக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 28,000 ஆக அதிகரித்திருக்கிறது. அதில் 2000 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் […]
வீடியோ கால் மூலமாக தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்த மகன், கோரோனோ அறிகுறியால் ஏற்பட்ட சோகம் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! கொரோனா அறிகுறி இருப்பதாக கருதி மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்ட மகன் அங்கிருந்தபடியே தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை பார்க்க நேர்ந்த சோகம், கேரளாவில் நடந்திருக்கிறது. கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபீக் என்ற 30 வயது இளைஞன் கடந்த 8ம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார். கட்டிலிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று […]
கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுக்குள் வந்தது எப்படி.? சீனாவில் வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் வேளையில், அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் இது எப்படி சாத்தியமானது என்று பார்க்கலாம். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவத் தொடங்கியதும், சீனா கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி உஹான் மாகாணத்தில் முதல் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. ஜனவரி 14ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் சீன அரசால் […]
உலகை அச்சுறுத்தும் கொரோனா மக்களின் உயிர்களை காவுவாங்கியது, அதோட மட்டும் விட்டுவிடாமல் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகான் நகரிலிருந்து எரிமலைபோல் எழுந்த கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் மேலும் 90 நாடுகளில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகையே அச்சுறுத்தும் இந்த கொரோனா உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர், […]
இலங்கை நாடாளுமன்றத்தை திடிரென்று கலைத்தார், அந்நாட்டின் அதிபரான கோத்தபய ராஜபக்சே, அப்பொழுது அவர் தேர்தல் நடைபெறும் தேதியையும் தெரிவித்தார். இலங்கைக்கு 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து அத்தேர்தல் முடிவில் செப்டம்பர் மாதம் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. ஆட்சிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக நேற்றிரவு திடீரென அறிவிப்பு விடுத்தார். இந்நிலையில் அரசாணையும் உடனடியாக வெளியானது. ஏப்ரல் 25ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், […]
ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தபட்டிருந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் […]
அமெரிக்காவில் பெண்ணின் தலையில் துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஷகினா இவர் (ஓரினச்சேர்க்கையாளர்) ஜெனட் மெட்லி என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஷகினா வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினார். அவர் வீட்டின் அருகில் வரும்போது மர்ம நபர் ஒருவர் இரண்டு முறை அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயம் அடைந்த ஷகினா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் […]