தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்லாமல் நம்முடைய அண்டை நாடுகளான வங்காளதேசம்,இலங்கை மற்றும் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.ஆனால் அங்கு கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் கிருஷ்ணரின் லீலை தான் என அனைவரும் அறிந்திருப்போம். உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசுரனை வீழ்த்தி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வெற்றி பெற்ற பின்னர் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது […]
Tag: உலக நாடுகள்
கொரோனா பரவலுக்கு பின்னர் உலக நாடுகளில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 2023 ஆம் ஆண்டு மிக மோசமானதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் IMF தெரிவித்துள்ளது. உக்ரைன் போர், கொரோனா வைரஸ் மற்றும் வட்டி விகிதங்களை ஏற்றி வரும் நாடுகள் என்று பல விஷயங்களை IMF சுட்டி காட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகின் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் மட்டுமே இருக்கும் என கணித்துள்ளது. மேலும் பணவீக்கம் 9.5 சதவீதத்தை […]
உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்து வருகின்றது. உக்ரைனில் இந்த நான்கு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷ்ய அதிபர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அப்போது இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புதன் வெளியிடுவார். மேலும் ரஷ்ய அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 4 பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய தலைநகரில் கூடியிருக்கின்றார்கள். உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக […]
அர்ஜெண்டீனா வனப்பகுதியில் 70 ஆண்டுகளுக்குப் பின் பிறந்துள்ள 2 ஜாகுவார்கள். அர்ஜெண்டீனா வனப்பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள ஜாகுவார்களை மீட்டெடுக்கும் முயற்சியில் விலங்கு நல அமைப்புகள் அவற்றைப் பிடித்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தி வருகின்றன. அந்த குட்டிகள் வளர்ந்ததும் வனப் பகுதியில் மீண்டும் விட்டுவிட்டு வருகின்றனர். அவ்வாறு கடந்த ஆண்டில் விடப்பட்ட ஜாகுவார் ஒன்று 2 குட்டிகளை ஈன்றுள்ளது. ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜாகுவார்கள் வனப்பகுதியில் பிறந்துள்ளதால் விலங்கு நல ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். […]
ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் வழங்கிய ஆயுதங்களுக்கு ஆன செலவு தொகை வெளியாகியிருக்கிறது. ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் ஐந்து மாதங்களாக தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் ராணுவ உதவிகளை அளித்து கொண்டிருக்கிறது. எனினும், தங்களுக்கு கனரக ஆயுதங்கள் வழங்குமாறு உக்ரைன் அதிபர் உலக நாடுகளிடம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் நேட்டோ நாடுகளிடம் நவீன ஆயுதங்களை தங்களுக்கு வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். […]
ஈரான் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 5 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் நாட்டில் தெற்கே ஹார்முஜ்கன் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை திடீரென கூடுதலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்டுள்ளது. அதன்படி முதல் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது தரைப்பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சில மணிநேரம் கழித்து இரண்டாவது நிலநடுக்கமானது அளவுகோலில் 6.3 […]
ஜெர்மனியிலுள்ள எல்மாவ் நகரில் ஜி 7 மாநாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டை 2 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஜி 7 மாநாட்டில் 7 நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர். அதாவது ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு சென்றுள்ளார். இவரை ஜெர்மனி அதிபர் ஒலாஃப் ஸ்காட்ஸ் வரவேற்றார்.
இந்த உலகில் இதுவரை எத்தனையோ போர்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் என்பதை இந்த உலகம் கண்டிராத மிகவும் பயங்கரமான ஒரு போர் ஆகும். இதுவரை இந்த உலகத்தில் 2நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களைக் கொண்ட போர் தொடுத்துள்ளன. அப்படிப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்த கூடிய நாடு அமெரிக்கா. ஜப்பானில் Hiroshima and Nagasaki என்ற 2 முக்கிய நகரங்களில் 2 குண்டுகளை போட்டனர். இந்த குண்டுகளால் 1.5 லட்சத்தில் இருந்து 2.5 வரையிலான மக்கள் இறந்திருக்கலாம் […]
ஸ்வீடன் நாட்டின் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்தாண்டில் உலக நாடுகளின் பாதுகாப்புத் துறை செலவு 2.1 லட்சம் கோடி டாலரை தாண்டியுள்ளது. ஸ்வீடன் நாட்டின் பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்தாண்டு உலக நாடுகளின் பாதுகாப்பு துறை செலவு 2.1 லட்சம் கோடி டாலரை தாண்டியுள்ளது. இது இந்திய மதிப்பீட்டின்படி 162 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது குறித்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த […]
ரஷ்ய போர் குறித்து நூதன முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி உலகநாடுகளின் ஆதரவை பெறுவதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் டான்பாஸ் நகரத்தின் மீது ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி தன் ட்விட்டர் பக்கத்தில் உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தங்களது நாடுகளின் அரசிற்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் உக்ரைன் நாட்டிற்கு கனரக ஆயுதங்களை அனுப்புமாறு கேளுங்கள் என்றும் கூறியிருக்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2022/04/20/2387511424604524543/636x382_MP4_2387511424604524543.mp4 அவரின் இந்த கோரிக்கை வைரலாக பரவியது. […]
ரஷ்ய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்தால், அதன் விலை இரு மடங்காக அதிகரிக்கும் என்று உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருவதால், உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. மேலும் கடும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாடுகள் திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கத்திய நாடுகள் தடை […]
ரஷ்ய நாட்டிற்கு உதவும் பெலாரஸ் நாட்டின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. ரஷ்ய படைகளை தங்கள் நாட்டில் குவிப்பதற்கு பெலாரஸ் உதவியது. மேலும், உக்ரைன் நாட்டிற்குள் பெலாரஸ் படைகள் நேரடியாக களமிறங்கியுள்ளன. இதனை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்தன. எனவே, ரஷ்யாவுடன் இணைத்து பெலாரஸ் நாட்டின் மீதும் உலக நாடுகள் பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் ராணுவத்திற்குரிய தொழில்நுட்பத்திற்கான ஏற்றுமதியை பாதிக்கும் வகையில், அமெரிக்கா, […]
ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது குண்டு மழை, வான்வழி, தரைவழி, கடல்வழி உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே 4-வது நாளாக தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச பணப்பரிவர்த்தனையான SWIFT வங்கி முறையிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் SWIFT வங்கி முறையிலிருந்து அமெரிக்கா, பிரிட்டன், […]
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவை உலக நாடுகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் உலகெங்கும் போராட்டம் அதிகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை அன்று படையெடுக்கத் தொடங்கியது. தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி என்று தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. ராணுவ நிலைகளை மட்டும் தான் தாக்குவதாக கூறிய ரசியா, தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் பயங்கர தாக்குதல் நடத்துகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் உக்ரைன் நாட்டின் மக்கள் மீது வருத்தம் […]
சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது 38.17 கோடி நபர்கள் அந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த வைரஸ் அனைவரிடத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகளவில் தற்போது வரை இந்த கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.17 கோடியை தாண்டியுள்ளதாக […]
உலக நாடுகள் முழுக்க ஒட்டுமொத்தமாக சுமார் ஆயிரம் கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் தற்போது வரை மொத்தமாகக் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 37 கோடியே 40 லட்சமாக அதிகரித்திருக்கிறது. எனவே, உலகம் முழுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நிலவரத்தின் படி உலக நாடுகள் முழுக்க ஆயிரம் கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் 425 கோடி மக்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் […]
உலக நாடுகளில் மொத்தமாக 37.28 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது கொரோனா பல வகைகளில் உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. எனவே, அனைத்து நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா ஒவ்வொரு நாடுகளிலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதிகமான மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் தொற்றின் வீரியம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 37.30 கோடி மக்கள் கொரோனாவால் […]
உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 985 கோடி தடுப்பூசிகள்மக்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35.79 கோடியாக இருக்கிறது. எனவே, அனைத்து நாடுகளிலிலும் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரத்தின்படி, உலகநாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 985 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 416 கோடி நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டனர் என்பது தினசரி அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.
ஒமிக்ரான் வைரஸ் எல்லை மீறி பரவி வருவதால் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தயாராகி வருகிறது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலிய பிரதமர் நப்தாலி பென்னட் ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றவும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீடுகளை விட்டு வெளியே வரவும் அறிவுறுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க நாட்டுடனான பயணங்களுக்கும் இஸ்ரேலில் தடை […]
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் உலக ரீதியான பொருளாதார உயர்வு குறையக்கூடும் என்று international monetary fund நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் ஓமிக்ரான் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் international monetary fund நிறுவனத்தின் தலைவரான கிறிஸ்டினா முக்கிய […]
தென்னாபிரிக்க அரசு, ஓமைக்ரான் வைரஸ் தொடர்பில் வெளியில் தெரிவித்ததற்கு எங்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும், தண்டிக்கக்கூடாது என்று உலக நாடுகளிடம் தன் வருத்தத்தை தெரிவித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாட்டில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டது. இது அதிக வீரியம் கொண்டது என்றும் வேகமாக பரவும் திறன் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு […]
அமேசான் காடுகள் அழிக்கப்படுவது கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவிற்கு, இந்த வருடம் அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். பிரேசில் நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனமானது, இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், கடந்த ஒரு ஆண்டில் அமேசான் காடு, சுமார் 22% அதிகமாக அழிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமேசான் காடுகள், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2020-21 ஆம் வருடத்தில் 13 ஆயிரத்து 235 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிந்திருக்கிறது. இது […]
உலக நாடுகள் அனைத்தும் வருடந்தோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச ஆண்கள் தினத்தை பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியரான டாக்டர் ஜெரோம் என்பர் தான் முதன்முதலாக தோற்றுவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஜெரோம் என்பவர் வரலாற்று பேராசிரியராக பணி புரிந்துள்ளார். இதனையடுத்து இவருடைய தந்தை நவம்பர் 19ஆம் தேதி பிறந்துள்ளார். இதனை தொடர்ந்து இவருடைய தந்தை பிறந்த நவம்பர் 19ஆம் தேதியை நினைவு கூறும் வகையில் அந்த தேதியை அனைவரும் சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடுமாறு […]
தலிபான்களின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானை அங்கீகரிக்காவிடில் உலக நாடுகளுக்கு பிரச்சினை உண்டாகும் என்று அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று பெண்ணுரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வதற்கு, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகள் தவிர வேறு எந்த ஒரு நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தலிபான்களின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், […]
உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 150 மில்லியன் மக்கள் வீடு இல்லாமல் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கும் பல்வேறு மக்கள் சாலைகளில், நண்பர்கள் வீடு, தற்காலிகமான ஒரு இடத்தில் மற்றும் பாதுகாப்பற்ற தனியார் போர்டிங் குடியிருப்புகள் போன்ற இடங்களில் வசிக்கிறார்கள். இவ்வாறு, கனடா நாட்டில் 10,000 நபர்களுக்கு 10 பேர் குடியிருப்பின்றி வாழ்ந்து வருவதாக தெரியவந்திருக்கிறது. அந்த வகையில், இந்த வருடத்தில் மட்டும், இரவு நேரத்தில் 25,000-த்திற்கும் அதிகமான மக்கள் கனடாவில் வீடின்றி பிற இடங்களில் […]
கொரோனா தொற்றுக்கு எதிரான மாத்திரைக்கு முன்பதிவு செய்யுமாறு சுவிட்சர்லாந்து பெடரல் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க நாட்டின் Merck & Co என்ற நிறுவனத்தின் கொரோனாவிற்கு எதிரான தயாரிப்பான molnupiravir என்னும் மாத்திரையால், கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகின் பல நாடுகளும் இந்த மாத்திரையை பெற முன்பதிவு செய்வதற்கு போட்டிபோட்டு வருகிறது. ஆனால், சுவிட்சர்லாந்து மட்டும் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக இந்த மாத்திரை நிறுவனத்தை அணுகவில்லை என்று […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற, அந்நாட்டுடன் உலக நாடுகள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியிருக்கிறார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியவுடன், தாங்கள் முன்பு ஆட்சி செய்தது போன்று, தற்போது ஆட்சி நடத்தப் போவதில்லை. பெண்களின் அடிப்படை உரிமைகளை மதிப்போம் என்று கூறியிருந்தனர். ஆனால், தற்போது அவர்களின் செயல்பாடுகள், அதற்கு மாறாக இருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், அமெரிக்காவின் ஒரு பத்திரிகையில் தெரிவித்திருப்பதாவது, தலிபான்கள், தாங்கள் ஆட்சியை சிறப்பாக நடத்த, உலக […]
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தான் நாடு குறித்து முக்கிய நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. அமெரிக்கா திடீரென்று தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப்பெற தீர்மானித்தது. எனினும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற பல நாடுகளுக்கு அந்த தீர்மானத்தில் சம்மதமில்லை. அமெரிக்கா திடீரென்று தன் படைகளை திரும்பப்பெற தொடங்கியது தான் தலிபான்களுக்கு நாட்டை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்து விட்டது. ஆனால், இதனை இப்படியே விட முடியாது என்று முடிவெடுத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இன்று ஐக்கிய […]
ஆப்கானிஸ்தானில் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இதையடுத்து அங்கிருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் அலறி அடித்துக்கொண்டு மற்ற நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். இந்நிலையில் அனைத்து நாடுகளுடனும் சுமூகமான நட்புறவு கொள்வதற்கு தாங்கள் விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலிபான் செய்தி தொடர்பாளர் கூறுகையில், புதிய அரசு வெளியுறவுக் கொள்கையின் படி சுமூக உறவையே நாங்கள் நாடுகிறோம். எந்த வெளிநாட்டு தூதரக வளாகத்தில் தலிபான்கள் நுழைய மாட்டார்கள். அனைத்து நாடு தூதரகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும். […]
உலக நாடுகள் அனைத்தும் ராணுவதற்காக செலவிடப்படும் தொகைகள் அதிகரித்துகொண்டே செல்கிறது. உலகளவில் ராணுவத்திற்காக கடந்த ஆண்டு மட்டும் 1987 பில்லியன் டாலர்கள் செலவாகியுள்ளது. இது 2019 ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.6% அதிகமாகும். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் படி உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% சரிவு கண்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு மொத்தம் செலவிடப்பட்ட 1981 மில்லியன் டாலர் தொகையில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து ஆகிய […]
தடுப்பூசி வாங்குவதில் உலக நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் நிகழ்கிறது. கொரோனா வைரஸ் ஒழிப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் தற்போது வரை 212 கொரோனா தடுப்பூசிகள் ஆய்வில் வளர்ந்து வருகிறது. இருப்பினும் சில தடுப்பூசிகள் மட்டுமே அவசர தேவைக்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளில் இருந்து தடுப்பூசி பெறுவதற்கு பல நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. இதில் அதிக வருமானம் கொண்ட நாடுகள் தான் அதிக தடுப்பூசியை […]
இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை கேட்டு உலக நாடுகள் அனைத்தும் முந்தியடித்துக் கொண்டு போட்டியிடுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் இன்னும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதற்கு எதிரான தடுப்பு ஊசி எப்போதும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் […]
உலகில் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் சிலர் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா விட மிகப்பெரிய ஆபத்தை எதிர் காலத்தில் காத்திருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மைக்கேல் ரியான் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறினார். இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் விரைவாக பரவி வருகிறது. உலகின் […]
பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனோ வைரஸ் தாக்கத்தால் உலகின் பல நாடுகள் பிரிட்டனை தனிமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனோவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் பிரிட்டனிலுள்ள புதிய வகை வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இப்புதிய வைரஸ் ஆனது லண்டன் மற்றும் இங்கிலாந்தில் உள்ள தென்கிழக்கு பகுதியில் தீவிரமாகி […]
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் 11 மாதம் ஆகியும் குறைந்தபாடில்லை. பல நாடுகளில் அதன் இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 11 மாதங்களில் உலக அளவிலேயே நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 10,000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது தொடங்கி விட்டதா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. […]
உலக நாட்டு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதற்காக இந்திய நாட்டில் விலையும் மஞ்சளை நாடுவதால் அதனுடைய விலை அதிகரித்துள்ளது . கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாட்டு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுமொத்த உலக நாடுகளும் கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு கையில் எடுத்து இருக்கக்கூடிய பொதுவான சில வழிகள் தங்கள் நாட்டு மக்களை ஊரடங்கின் மூலம் கட்டுப்படுத்தி வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வைப்பது, அதே சமயம் நல்ல ஆரோக்கியமான உணவுகளை […]
இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பெருமிதம் கூறியுள்ளார். இந்தியாவின் உலக புகழ்பெற்ற ‘இந்தியா குளோபல் வீக்’ என்ற வார உச்சி மாநாடு லண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இளவரசர் சார்லஸ், காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றார்.அதில் தனது கருத்துக்களை கூறிய இளவரசர் சார்லஸ் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான வாழ்க்கை முறையும் நிலையான எதிர்காலம் உருவாக்குவதை பற்றியும் மற்ற உலக நாடுகள் இந்தியாவிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும் என புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் […]
இந்தியா தடை செய்த சீன நாட்டின் செயலிகளை 79 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா-சீனா எல்லையோரம் இருக்கும் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியா பல்வேறு வகைகளில் சீனாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதல் நிகழ்ந்த பிறகு, நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள், கோசங்கள் மக்கள் […]
இந்தியா-சீனா இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவிற்கு உதவ எந்தெந்த நாடுகள் முன்வரும் என்பது பற்றிய தொகுப்பு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எப்பொழுதும் சுமூகமான உறவு இருந்ததில்லை திபேத் ஆக்கிரமிப்பு, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக உதவி செய்தல், இமாலய அத்துமீறல், வடகிழக்கு இந்தியாவில் அத்துமீறல்களில் இந்தியாவிற்கு பிரச்சனை கொடுக்கும் நாடாகவே சீனா அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சனையினால் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சில வீரர்களை […]
சீனா ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என உலக நாடுகள் சந்தேகின்றனர். சீன விஞ்ஞானிகள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வின் போது தவறுதலாக கொரோனா வைரஸை உருவாக்கியிருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எய்ட்ஸ் நோயை கண்டுபிடித்ததற்கு நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நாட்டு அறிஞர் லூக்மோன் தஃதெத் இத்தகவலை கூறியிருக்கிறார். வூஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வுக் கூடத்தில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் போது […]
வளர்ந்த நாடுகளை தாக்கி கதிகலங்க வைத்த கொரோனா தொற்று பல சிறிய நாடுகளுக்குள் நுழைய முடியாமல் தவித்து நிற்கின்றது வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்றவைகளே கொரோனாவை கண்டு கதிகலங்கி நிற்கும் நிலையில் சிறிய நாடுகளில் இதுவரை கொரோனா தொற்று அடி எடுத்து வைக்கவில்லை எனும்பொழுது ஆச்சரியம் அதிகரிக்கிறது. அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர் ஆனால் ஆஸ்திரேலியாவின் அருகே அமைந்திருக்கும் சிறு சிறு நாடுகளில் இதுவரை ஒருவர் கூட கொரோனா தொற்றினால் […]
கொரோனவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அவசரப்பட்டு முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பெரும் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்திருப்பதாக கருதப்பட்டாலும், 16 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் சமூக பரவல் அபாயகரமாக அதிகரித்துள்ளது என்றார். கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள […]
கொரோனோவின் கோரப் பசிக்கு உலகின் பல நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இரவு நிலவரப்படி கோரோனோவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை வேகமாக 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 71 ஆயிரத்து தாண்டிவிட்டது. உயிரிழப்பை பொருத்தவரை 14,887 பேருடன் இத்தாலி முதலிடம் வகிக்கிறது. அங்கு மட்டும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் 694 பேர் உயிரிழந்தால் பலி எண்ணிக்கை 12,641 எட்டியது. அமெரிக்காவில் […]