தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் திமுக அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றியடைந்தது. இந்த உள்ளாட்சித்தேர்தலில் பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் நடந்தன. அந்தவகையில் கோவை குருடம்பாளையம் ஒன்றியத்தில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால் பிரபலமானார். பலரும் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாக்கி வந்தனர். இதனையடுத்து தற்போது முத்து என்பவர் அடித்துள்ள நோட்டீஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் 9வது வார்டில் 6 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். […]
Tag: உள்ளாட்சித்தேர்தல்
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் விழுப்புரம் அருகே வளவனூர் அடுத்த நாரையூர் கிராமத்தில் போட்டியிடும் திமுக மற்றும் […]
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் அக்டோபர் 21, 25 மற்றும் 28ம் தேதி என மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 21-ஆம் தேதியும், புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை, கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 25-ஆம் தேதியும், புதுச்சேரியில் உள்ள மற்ற அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 28ஆம் தேதி […]