அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரைத்த நிலையில் இந்த மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்கிறார்.
Tag: உள் ஒதுக்கீடு
கர்நாடகாவில் மாற்று பாலினத்தவர்களுக்கு மாநில அரசு வேலைகளில் ஒரு சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி எஸ்டி பொதுப் பிரிவு என அனைத்து பிரிவிலும் ஒரு சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும்,பணிக்கு விண்ணப்பிக்கும் போதே இதை குறிப்பிடும் வகையில் ஆண், பெண் ஆகியவற்றைத் தொடர்ந்து இதர என்ற பகுதி இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த அறிவிப்பு மாற்று பாலினத்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் […]
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த தமிழ்வழி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் நேற்று ஒப்புதல் அளித்தார். தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழ் வழியில் படித்து […]
அரசு பள்ளியில் 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கான கலந்தாய்வும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கின்ற 7.5% இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞ்ர் ஒருவர் முறையீடு செய்தார். முறையீட்டை ஏற்ற […]
அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிப்பது சரித்திர சாதனை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க அதிகமான கல்லூரிகளைத் திறந்துள்ளோம். அதன் விளைவாக இன்றைய தினம் நாட்டிலேயே உயர்கல்வி படிப்பிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கின்றது. கலை மற்றும் […]
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அரசு பள்ளி மாணவருக்கு மருத்துவ பட்டப்படிப்பில் 7.5 உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக இயற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்காக கிட்டதட்ட 45 நாட்களுக்கு மேலாக தமிழக அரசு […]
தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுக நிலைப்பாடு. நீட் தேர்வு விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்ததுபோல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் குடும்ப அரசியலை அறிமுகப்படுத்தியதே திமுக தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் காலதாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இழுத்தடிப்பது கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசியவர் ஆளுநர் கால தாமதம் செய்வதற்கான காரணம் என்று கேள்வி எழுப்பினார். உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி […]