சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் முடங்கியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 67,152 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 3ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 48வது நாளாக அமலில் உள்ள நிலையில் மே 17ம் தேதிக்கு பின்னர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் […]
Tag: ஊரடங்கு உத்தரவு
ஊரடங்கின் கடைசி வாரம் நாளை தொடங்குகிறது, நம்பிக்கையோடு இருங்கள் என ப.சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 62,939ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109ஆக உள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது […]
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 62,939ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,358ஆக உள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு […]
மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மே 4 முதல் மே 17 நள்ளிரவு 12 மணி வரை […]
தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் […]
கடலூர், திருவாரூர், அரியலூர், தஞ்சையை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் மொத்தம் 1,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. […]
கடந்த மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ.1,000 பெறாதவர்கள் இந்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதி […]
முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை மே 2ம் தேதி கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் […]
மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் எந்தவித மாற்றமும் இல்லை, மே 3 வரை ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் […]
மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,892ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி […]
தமிழக விவசாயிகளுக்கு வரும் 30ம் தேதி வரை அளிக்கப்பட்ட சலுகைகளை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. விளை பொருட்களை பாதுகாத்து சேமிக்க கிடங்கு வசதி மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது. கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் 30 நாட்கள் செலுத்த தேவையில்லை என தமிழக அறிவித்துள்ளது. பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாகவும், காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். […]
கொரோனா காரணமாக மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து செய்யப்படுவதாக அழகர் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா. இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பது. திருவிழா நாட்களில் தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி […]
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இல்லாதிருந்தால் 73,000 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 490 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4,078 பேர் குணமடைந்துளளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருவோர் விகிதம் 20.57% ஆக […]
பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ. 31,235 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 8 கோடி விவசாயிகளுக்கு ரூ. 16,146 கோடி வரை நிதி உதவு அளிக்கப்பட்டுள்ளது. 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ. 10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. 2.82 கோடிக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10.6 லட்சம் […]
சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ள. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் தான் அதிகமாக உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 373ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 117 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அம்பத்தூரை தொடர்ந்து கடைசியாக 15 ஆவது மண்டலமாக மணலியிலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது […]
ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போதும் சில தொழில்களுக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுகுறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்தது. […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களையும் அரசு காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி தேர்வுகள் மற்றும் 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மார்ச் 27ம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மே […]
தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த தளர்வுகளும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் […]
தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என […]
கேரள அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. […]
ஊரடங்கு முடியும் வரை பத்திரப்பதிவு துறைக்கு அத்தியாவசிய பணியிலிருந்து விலக்கு தர முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்., 20ம் தேதி முதல் சில தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம், ஆனால் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் ஊரடங்கு தொடர்பாக தற்போதைய […]
இலவச உணவுக்காக வரிசையில் நிற்கும் நிலையில், இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது என ப. சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக தாக்கியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 15,000ஐ கடந்துள்ளது. நாட்டில் 15,712 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 507 பேர் உயிரிழந்த நிலையில், 2,231 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் மக்கள் படும் துயரங்கள் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கருத்து […]
தமிழகத்தில் புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,792லிருந்து 15,712 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 488லிருந்து 507ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில […]
கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகத்தில் இதுவரை 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள் மற்றும் மருந்து பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் டாஸ்மாக் கடைகளும், பார்களும் அடைக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் போதைக்காக ஷேவிங் லோஷன், வார்னிஷ், மெத்தனால் , கள்ளச்சாராயத்தை குடித்து கிட்டத்தட்ட 10 […]
ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை திருப்பித் தர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை […]
ஊரடங்கின் போது மத்திய அரசின் வழிமுறைகளை எந்த சமரசமின்றி செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற நெறிமுறைகள் நெறிமுறைகளை மத்திய அரசு இன்று காலை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. […]
மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,565 ஆக உயர்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் 11,439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 377ஆக அதிகரித்துள்ள நிலையில் 1,306 பேர் கொரோனா […]
ஊரடங்கு உத்தரவால் தமிழ் புத்தாண்டை வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்துள்ளன. கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடும் நடைமுறைகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி […]
கொரோனவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அவசரப்பட்டு முன்கூட்டியே தளர்த்தினால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதனோம் இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பெரும் தொற்றின் பாதிப்பு சற்று குறைந்திருப்பதாக கருதப்பட்டாலும், 16 ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் சமூக பரவல் அபாயகரமாக அதிகரித்துள்ளது என்றார். கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள […]
தமிழகத்திலும் ஊரடங்கு முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவு 18 நாட்களை கடந்த நிலையில் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு ஆதரவு தொடரும் என மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார். மக்களின் பாதுகாப்புக்கான தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கோவிட்-19 என்ற கொடிய தொற்றினால் பரவிவரும் […]
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1 லட்சத்து 6 ஆயிரத்து 539 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் அத்தியாவசிய தேவை தவிர்த்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு கொண்டே வருகிறது. இருப்பினும் விதிமுறைகளை மீறுவதால் அவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த […]
ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீடிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல வல்லுநர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சகத்தை செயலாளர் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற தகவல் தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஊரடங்கை நீடிப்பதற்கு வாய்ப்பில்லை […]
நேபாளத்தில் ஊரடங்கு நாளையுடன் முடியும் நிலையில், ஏப்ரல் 15ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை பல நாடுகள் அமல்படுத்தியுள்ளன. அந்த வகையில் இமாலய தேசமான நேபாளம், கோவிட்19 காய்ச்சலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஏழு நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் என்று நேபாளம் அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து […]
கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பல பெரிய ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில ID நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்து வருவதாகவும் கூறப்படும் நிலையில், இதற்கு எதிராக ஐடி ஊழியர் சங்கங்கள் களத்தில் குதித்துள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் இதுபோன்ற தொழிலாளர் விரோதப் போக்கில் செயல்படக்கூடாது என்று மத்திய அரசு எச்சரிக்கையை பல ஐடி நிறுவனங்கள் அலட்சியப்படுத்துவதாக செய்திகள் கசிந்துள்ளது. சட்ட விரோத நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களுக்கு உதவும் வகையில் […]
ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் 64,733 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவூதி அரேபியாவில் மக்கா மற்றும் மதீனாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 3 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். உணவு தொடர்பான அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. சவுதியில் 1,885 பேர் […]
ஊரடங்கு உத்தரவை மீறி சாலைக்கு வந்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளது. ஊரடங்கை மீறி பொதுமக்கள் அதிக அளவில் நடமாடுவதால் மத்திய அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளார். முன்னதாக கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி […]
நாடு முழுவதும் கோரோனோ வைரஸ் வேகமாக பரவி வரும் வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாநில முதலமைச்சர் உடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அவர் ஆலோசனையில் மேற்கொண்டார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது அலுவலகத்தில் இருந்தபடி தலைநகர் நிலவரங்களையும், பாதிப்புகளையும் தெரிவித்தார். இதேபோல தமிழக முதலமைச்சர் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் லாக்டவுன் விதிகளை மீறியதாக இதுவரை 1991 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விதி மீறல் காரணமாக 362 பேர் மீதி எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இதுவரை 1963 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல இடங்களில் பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடி வருகின்றனர். அவ்வாறு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காவல்துறை […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலுள்ள பிற வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற, மற்றும் சரக்கு ஏற்றி சென்ற […]
21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சரவை செயலாளர் ராஜீவ்கவுபா மறுப்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் உலகளவில் உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 1144 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கொரோனா பாதிப்பால் 28 பேர் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில் தெருக்களில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவு அளிக்கிறார். உலகில் ஒவ்வொரு நாட்டையும் உலுக்கி எடுத்துவிட்டு இப்பொழுது இந்தியாவிற்கு பரவிய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். அதேபோல்தான் திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறை சேர்ந்த பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் கன்னட திரைப்பட […]
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கன்னியாகுமரியில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பில் கொரோனா நோய் தடுப்பில் மாநிலம் […]
144 தடை உத்தரவு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மசூதிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மசூதிகளில் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இருப்பினும் இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளவாறு, 144 தடை உத்தரவை ஏற்று டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு இடங்களில் மசூதிகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் மெக்கா மசூதி மூடப்பட்டது. தெலுங்கானாவில் உள்ள மதகுருக்களும் மக்களை வீடுகளில் இருந்தே வழிபாடு நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோன்று ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் […]
ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு ஐநா சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. கொரோனாவை தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் ஐ.நா. அறிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிப்பை ஏற்படுத்தி கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரளா , மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். […]
உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சொந்த ஊருக்கு நடைபாதையாக சென்ற நபர்களுக்கு காவல்துறை அளித்த தண்டனையால் சர்ச்சை கிளம்பியது. நாடு முழுவதும் பிரதமர் வேண்டுகோளின் அடிப்படையில் 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல பல்வேறு முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு பணியில் காவல்துறை […]
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மக்களுக்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். தனியார், சுயநிதி நிறுவனங்கள் கடன்களை வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் வரை தடை தொடரும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முக்கியமான கடைகளை திறக்க நேர அளவு நிர்ணயம் […]
144 தடை உத்தரவை மீறி பைக்கில் சுற்றி திரிந்த 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி […]
புதுச்சேரியில் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்தந்த மாநில அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நேற்று இரவு 9 மணி […]