கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை தொடக்கியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மதுபானக் கடைகள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் 31ம் தேதி வரைதொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய […]
Tag: ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரஸால் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதான நபர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 415ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து யூனியன் பிரதேசங்கள் உட்பட நாட்டில் 19 மாநிலங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
பிரதமரின் ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் முழுமையாக பின்பற்றப்பட்டது, ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைத்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல், ராணுவம், விமானம், ரயில்வே பணியாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அரசு தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் வெளிப்படைத்தன்மையுடன் செய்து வருகிறது. கொரோனா தொடர்பாக அரசு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். எதிர்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு தேவையான விளக்கங்களை அரசு அளித்துள்ளது. என்ன காரணத்திற்காக எதிர்க்கட்சிகள் பேரவையை புறக்கணித்தனர் […]
கொரோனா அச்சம் காரணமாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இலங்கை முழுவதும் […]