விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களிடம் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றும் வகையில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதி முழுவதிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் அதிகம் கூட கூடிய முத்தாரம்மன் பஜார் பகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அத்தியாவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சுற்றி […]
Tag: ஊரடங்கு விதிமுறை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்த 52 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு வருகின்ற 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அக்ரஹாரம் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலத்தூர் வட்டாரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேவையில்லாமல் கொரோனா விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் முக கவசம் அணிந்து, […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் அருகே ஊரடங்கு விதிமுறைகளை மீறி காரணமில்லாமல் சுற்றித்திரிந்த 2 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணியாரம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் உலகம்பட்டி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வளநாடு வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி ( 23 ), மணியாரம்பட்டியைச் சேர்ந்த சிவா ( 23 ) ஆகிய இரண்டு பேரும் காரணமில்லாமல் மோட்டார் சைக்கிளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்துள்ளனர். […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 29 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முழு கொரோனா ஊரடங்கு காலத்திலும் மோட்டார்சைக்கிளில் தேவையில்லாமல் இளையான்குடி பகுதியில் சுற்றித்திரிந்த 29 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அரசு விதிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்ட சலூன் கடைக்கு “சீல்” வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி-புதூர் பகுதியில் தனிக்கொடி என்பவரது மகன் குமரேசன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி சலூன் கடையை திறந்து வைத்துள்ளார். அப்போது அந்த வழியாக காலை 11 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தாசில்தார் ஆனந்த், சலூன் கடையை பூட்டி “சீல்” வைக்குமாறு உத்தரவிட்டார். […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி நகரில் ஊரடங்கு விதியை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகள் அமல் படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் முழு ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பகல் 12 மணி வரை மட்டும் அத்தியாவசியப் பொருள் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி ஆணையர் டி.ராஜவிஜயகாமராஜ், மற்றும் […]