திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் கீழ்வணக்கம்பாடி ஊராட்சி அமைந்துள்ளது. இதன் ஊராட்சி மன்ற தலைவராக எஸ் குமார் என்பவர் இருக்கின்றார் இந்த ஊராட்சியில் உள்ள ஏரி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதனால் ஏரி நீரை பயன்படுத்தும் போது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அங்குள்ள பல ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியிருக்கிறது. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் சீர் கெட்டு போய் இருப்பதாக மக்கள் […]
Tag: ஊராட்சி
ஊராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மானியமாக 751.99 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் பி அமுதம் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் படி மாநிலத்தில் சொந்த வரி வருவாயிலிருந்து 10 சதவிகிதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் கிராமப்புற அமைப்புகளுக்கு 56 சதவீதமும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 44 சதவீதமும் நிதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இவற்றில் […]
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கணேசபுரம், பள்ளங்கி, கோம்பை போன்ற மலை கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்த வண்ணம் இருக்கிறது. வீடுகளை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் விளை நிலங்களையும் காட்டு யானை சேதப்படுத்தி வருகின்றது. இந்த சூழலில் நேற்று காலை 9 மணி அளவில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் ஒற்றை யானை உலா வந்திருக்கின்றது. அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ மாணவிகள் யானையை கண்டு அதிர்ச்சடைந்துள்ளனர். மேலும் […]
சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா என அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் குமாரபாளையம், தாளக்கரை, வடவேடம்பட்டி, புத்தி வதம்பச்சேரி, செஞ்சேரி புத்தூர், கள்ளப்பாளையம், ஜல்லிப்பட்டி, பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட மொத்தம் 20 ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த ஊராட்சிகளில் 75 குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மற்றும் 40 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் இருக்கிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டிகள் மூலமாக பொது மக்களுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் […]
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல்வேறு நீர் மேலாண்மை பணிகள், தடுப்பணை கட்டுதல், கசிவுநீர் குட்டை தூர்வாருதல், வரவு கால்வாய் மற்றும் புறம்போக்கு நிலங்களில் நீர் உறிஞ்சி கழிவுகள் வெட்டுதல், மரக்கன்று நடுதல், அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்தல் போன்ற நீர் மேலாண்மை பணிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட […]
தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 12 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 ஊராட்சிகளுக்கு ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளை பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள் சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளனர். ஒவ்வொரு […]
இல்லம் தேடி கல்வி மருத்துவம் போன்று இல்லம் தேடி கருவூலத்துறை சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கபடும் என நீதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது நன்னிலம் தொகுதியில் கருவூல அலுவலகத்தில் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என உறுப்பினர்கள் ஆர் காமராஜ் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதிலில், அனைத்து துறைகளின் செலவுகளையும் கட்டுப்படுத்தும் துறை நீதித்துறை. எங்களது செலவுகளையும் நாங்கள் கட்டுப்படுத்துவது கடமை. தமிழகத்தில் இணையதள […]
தமிழக சட்ட பேரவையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.. இதில் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர மதிப்பு ஊதியம் ஆயிரத்திலிருந்து 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு மூலம் தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பயன்பெறுவர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் மேம்படுத்தப்படும்.. 550 ஊராட்சிகளுக்கு புதிய கட்டடங்கள் […]
சென்னை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க முதல்வர் நடவடிக்கையை மேற்கொள்வார் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக தற்போது ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அமல் படுத்தி வருகிறார். மேலும் மக்கள் குறைதீர் மன்றம் என்று தனியாக அமைத்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் சென்னைக்கு அருகே உள்ள ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் […]