அடிப்படை நடவடிக்கைகளை செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள உலையூர் வடக்கு கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம், மயான வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவை முறையாக செய்து தர வலியுறுத்தி அப்பகுதியில் பல்வேறு முறை ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]
Tag: ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
100 நாள் வேலை வாய்ப்பு முறையாக வழங்க வேண்டும் என ஏராளமான பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள செல்வநாயகபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு தற்போது முறையாக வழங்கப்படுவதில்லை என அப்பகுதி பெண்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் செல்வநாயகபுரம் ஊராட்சியில் […]
மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் சுமார் 3 கோடியே 6 லட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரான திரு.விசாகன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் வேடச்சந்தூர் எம்.எல்.ஏ-வான காந்திராஜன் என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் விழாவின் வரவேற்புரையை திட்ட இயக்குனர் தினேஷ்குமார் தொடங்கியுள்ளார். […]
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் பாக்யராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில துணை தலைவர் சண்முகம் மற்றும் மாவட்ட செயலாளரான செல்வம் போன்றோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் ஒன்பது ஊராட்சிகளில் கொரோனா காலகட்டத்தில் 100 நாட்கள் வேலை திட்டம் […]
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சித் தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் 10 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக தலையிட்டு ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான உரிமைகள் பறிக்கப் படுவதாக குற்றம் சாட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் […]