போதையின் உச்சத்தில் மதுவுக்கு பதில் பெட்ரோலை குடித்து ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.அரியலூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு என்கிற சேதுராமன் வசித்து வந்தார். இவர் முன்பு ஊராட்சி மன்ற தலைவராக இருந்ததால் அப்பகுதி மக்களுக்கான பணிகளை உடனுக்குடன் செய்து கொடுத்து நல்ல பெயர் எடுத்து வந்தார். இதற்கிடையில் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் 6/12/2021 அன்று பெட்ரோல் பங்கிற்கு […]
Tag: ஊராட்சி மன்ற தலைவர்
ஊராட்சி மன்ற தலைவருக்கு மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஊராட்சிகளில் அத்தியாவசிய பணிகளான குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள் அமைத்து பராமரித்தல், சாலை வசதிகள் ஏற்படுத்துதல், சுகாதாரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்ட இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருலதா போட்டியிட்டார். அவர் ஒரு வாக்கு […]
திருச்சி, சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல் மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், அதேபோல் மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.. இந்நிலையில் இன்று பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.. இதில், திருச்சி சிறுமருதூர் ஊராட்சி தலைவர் இடைத் தேர்தலில் கடல்மணி என்பவர் […]
புதுக்கோட்டை மாவட்டம், பாச்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் விரட்டி சென்று கைது செய்துள்ளனர். கோவையை சேர்ந்த மருத்துவருக்கு ரூபாய் 100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூபாய் 2.85 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு பாச்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மோசடி செய்துள்ளார். இதையடுத்து கோவையை சேர்ந்த மருத்துவர் காவல்துறையில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை தேடி வந்த காவல்துறையினர், அவர் சென்னையில் […]
கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்கு உரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை என்ற கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். அவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்று கூறி கீழே அமரவைத்து அவமரியாதை செய்துள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவமரியாதை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]
கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலர் சிந்துஜா புவனகிரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் . கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள தெற்குதிட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி. கடந்த ஜூன் 17ஆம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தின்போது ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி மன்ற கூட்டத்தின் போது ராஜேஸ்வரி கீழே தரையில் […]
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள தெற்குதிட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகன் என்பவரும் இருக்கின்றனர். இந்நிலையில் தெற்குதிட்டையில் ஜூலை-17-ம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தின்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தலைவர் ராஜேஸ்வரியை துணைத் தலைவர் மோகன் தரையில் உட்கார வைத்ததாக சமூக வலைதளங்களில் நேற்று புகைப்படம் வெளியானது. இதை பற்றி புகார் எழுந்ததும் காவல்துறையினர் […]
அரியலூரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ள சாத்தாம்பாடி கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கூறியும் அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்துப் […]