ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை உள்ளரங்கில் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தரப்பில் காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சில மனுக்கள் முடிவு எடுக்கப்படாத நிலையிலும், 50 இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த […]
Tag: ஊர்வலம்
நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக ஊட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நடைபெறவில்லை. இந்நிலையில் அனைத்து திருச்சபைகள் சார்பாக நடைபெற்ற ஊர்வலத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலமாக வந்துள்ளார். இதனையடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பை அறிவித்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் புனித தாமஸ் ஆலயத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பேருந்து நிலையம், லோயர் பஜார், கமர்சியல் சாலை, […]
தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ஊர்வலம் நடத்துவதற்காக அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி கடந்த 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் […]
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சனையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவில் மூன்று நாட்கள் தொடர்ந்து விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதனை ஆறுகள், குளம், கடல் போன்றவற்றில் கரைப்பது வழக்கம். அப்படி ஊர்வலமாக கொண்டு செல்லும் போது பட்டாசு வெடித்து, மேல தாளங்கள் வாசிக்க, ஆட்டம் பாட்டத்துடன் செல்வார்கள். இதனால் சில இடங்களில் வன்முறை வெடிக்கும். இதை தவிர்க்க தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது தமிழகத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது […]
மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், நகரில் உள்ள எந்த ஒரு இடங்களிலும் வரும் 29-ஆம் தேதி வரை அனைத்துக் கட்சி கூட்டங்கள், சாலைகள், பொது ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பாக பழனியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கனக ராஜ் தலைமை தாங்கினார். இதையடுத்து மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்து, ஊர்வலத்தை துவங்கி வைத்தார். பழனி தேரடியிலுள்ள நேதாஜி சிலை பகுதியிலிருந்து ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலத்தின் போது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 500 மீட்டர் நீள பிரமாண்ட தேசியக் கொடியை ஏந்தி பா.ஜ.க. நிர்வாகிகள் சென்றனர். பழனி நகரின் முக்கியமான வீதிகள் வழியே […]
இந்திய மாணவர் சங்கத்தின் மாநாடு கோவை மாவட்ட காந்திபுரம் கமலம் துரை சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனால் மாநாடு பிரதிநிதிகள் காஞ்சிபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக மாநாட்டுக்கு அரங்கை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கும் மாணவ அமைப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களை போலீசார் எச்சரித்தனர். […]
குத்தாலம் அருகே டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குத்தாலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் தலைமையிலான அரசு உயர்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பாக டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலம் சென்றார்கள். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் டெங்கு ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள். முன்னதாக டெங்கு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் […]
மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீராணம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பாலித்தீன் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மஞ்சள் பை ஊர்வலம் நடந்தது. இதற்கு துணை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் டி.டி.டி.ஏ தொடக்கப்பள்ளி, முஸ்லீம் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி, வீராணம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் ஒன்றிய […]
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் என்.சி.சி. பாட்டாளியன் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் அரசினர் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள், 8-வது பாட்டாளியின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாணவர்கள் ஆயிகுளம், காந்தி பூங்கா, டாக்டர் பெசன்ட் ரோடு, லட்சுமி விலாஸ் ஆகிய பகுதிகளின் வழியாக சைக்கிளில் ஊர்வலமாக சென்று பல்கலைக்கழகத்தை […]
இரண்டாம் உலக போரில் மரணமடைந்த தங்களது முன்னோர்களின் புகைப்படங்களை ஏந்திக்கொண்டு ரஷ்ய மக்கள் இன்று ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா, ஹிட்லரின் நாஜி படைகளை எதிர்த்து போரிட்டது. இந்த போரில் ரஷ்யா வெற்றி கண்டது. அதன் நினைவாக மாஸ்கோ நகரின் செஞ்சதுக்கத்தில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஒன்பதாம் தேதி அன்று ராணுவ அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்த வருடம், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையிலும் வெற்றி நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அதன்படி, […]
இலங்கையில் விலையேற்றம் உட்பட பொருளாதார சீர்கேடுகளை எதிர்த்து அதிகமான மக்கள் திரண்டு முல்லைத்தீவில் ஊர்வலமாக சென்றிருக்கிறார்கள். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி மற்றும் விலையேற்றத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் தங்களின் கண்டன போராட்டத்தை மக்கள் ஆரம்பித்தனர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். அந்த சமயத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்துகொண்டு ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் […]
மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் ராமநவமி ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறையில் 8 நாட்களுக்கு பின் இன்று முதல் உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது. உயிரிழந்தவர் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் காணவில்லை என தேடப்பட்டு வந்த இப்ரீஷ் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தூர் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் உடலை அடையாளம் கண்டு இருக்கின்றனர். மேலும் இந்த உயிரிழப்பை மறைக்க காவல்துறையினர் முயற்சி செய்ததாக இப்ரீஷ் கான் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கார்க்கோன் பகுதியில் வன்முறை வெடித்ததிலிருந்தே […]
டெல்லி காவல் துறையினருக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். டெல்லி ஜஹாங்கீர்புரியில் நேற்று நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். மேலும் இந்த மோதல் குறித்து டெல்லி காவல்துறை ஆணையர் உள்பட உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த வன்முறை பற்றி விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் […]
நேற்று புனித வெள்ளியையொட்டி சேலத்தில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றார்கள். அதன்படி நேற்று புனித வெள்ளியானது கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை ஊர்வலமாக நடத்தப்படும். இந்நிலையில் நேற்று சேலத்தில் உள்ள தேவாலயங்களில் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் சிலுவையை ஒருவர் தூக்கி வர ஆயுத படை வீரர்கள் அவரை சவுக்கால் அடித்த […]
சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவல்துறை, போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத்துறைகள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தாசில்தார் மணிகண்டன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், கோட்ட மேலாளர் செந்தில்குமார், வேணுகோபால், வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், மருத்துவர் மத்தியாஸ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து […]
பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்றனர். பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க கட்சி உறுப்பினர்கள் ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஊர்வலம் செட்டிநாடு பகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி சசிகலா கலந்து கொண்டார். இந்த ஊர்வலத்தில் […]
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் வட்டார வள மையம் சார்பில் நடத்தப்பட்டது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் அரசு பள்ளியில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மணிக்கூண்டு திடலில் நிறைவடைந்தது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்த்து […]
அனுமதி ஊர்வலம் சென்று தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் அருகே இரட்டைமலை கிராமம் உள்ளது. இப்பகுதியில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனை கண்டித்து அப்பகுதியினர் பரமக்குடி தனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்றனர். இதனையரித்து சென்ற எமனேஸ்வரம் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றதாக கூறி […]
மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து எஸ். எஸ். ஐ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜான் முகமது, தலைவர் சந்திரசேகர், கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி, தி.மு.க.வின் ஒன்றியச் செயலாளர் பூமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், […]
விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் கிராம மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்திலிருந்து அழகப்பர் சிலை வரை ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை நிர்வாக மேலாளர் செந்தமிழ்செல்வம் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில் காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம், மருத்துவர் அருள்தாஸ், தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுஷல் யோஜனா திட்டத்தில் கீழ் பயிலும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அய்யா பிறந்த நாளை முன்னிட்டு மகா ஊர்வலம் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வாகைபதி அய்யா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அய்யா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று அய்யா பிறந்த நாளை முன்னிட்டு அம்பை கிருஷ்ணன் கோவிலில் இருந்து வாகைபதி வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் […]
நேற்று முன்தினம் ஓசூர் மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஓசூர் மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு நேற்று முன்தினம் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்த இந்த தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஓசூர் அரசு ஐ.டி ஐ. என்.எஸ்.எஸ். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். […]
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூரில் திமுகவை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பேராட்சிக்கு உட்பட்டிருக்கும் 2-ஆம் வார்டில் இருக்கும் பாரம்பரியமாக திமுக குடும்பத்தில் உள்ள குமரேசன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சுமார் 200க்கும் அதிகமானோர் இன்று அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிதாக கட்சியில் சேர்ந்தவுடன் கட்சியின் உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டது. அதன்பின்பு குமரேசன் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சி.வி ராஜேந்திரன், அவர்களின் தலைமையில் ஊர்வலம் சென்று பர்கூர் பேருந்து […]
டெல்லியில் உள்ள கஸ்தூர்பா என்ற நகரில் குடியரசு நாளான நேற்று 20 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும் அந்த கும்பல் இளம்பெண்ணின் தலைமுடியை வெட்டி அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அக்கம்பக்கத்தினர் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் அந்தப் பெண்ணுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். சிலர் அந்த இளம்பெண்ணை பயங்கரமாக அடிக்கும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. कस्तूरबा नगर […]
ஆஸ்திரேலியாவிலுள்ள கிறிஸ்மஸ் தீவிலிருந்து இனப்பெருக்கத்திற்காக மிகவும் அதிகமான சிவப்பு நிற நண்டுகள் சாலையை கடந்து கடற்கரைக்கு சென்றதால் அப்பகுதிகளில் போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் தீவு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த தீவிலிருந்து வருடந்தோறும் சிவப்பு நிற நண்டுகள் இனப்பெருக்கத்திற்காக சாலையை கடந்து கடற்கரைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் தற்போதும் அதே போல் லட்சக்கணக்கான சிவப்புநிற நண்டுகள் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து இனப்பெருக்கத்திற்காக சாலையை கடந்து கடற்கரைக்கு சென்றுள்ளது. அவ்வாறு லட்சக்கணக்கான சிவப்பு நிற […]
தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தினர். உலக அளவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக ஒன்பது மாதகாலமாக அங்கு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து அங்கு வசிக்கும் 80% மக்களுக்கு இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு பின்பு தான் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்பொழுது உணவகங்கள், அரங்கங்கள், பணி புரியும் அலுவலகங்களில் கொரோனா தடுப்பூசி […]
மத்தியபிரதேச மாநிலத்தில் மழை வேண்டி சிறுமிகளை நிர்வாணமாக தவளை மாலையுடன் ஊர்வலம் அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநில புதல்கண்ட் என்ற கிராமத்தில் மழை வேண்டும் என்பதற்காக சிறுமிகளை நிர்வாணமாக வைத்து அவர்களின் கழுத்தில் தவளையை மாலையாக கட்டி போட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். புதல்கண்ட் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இந்த சடங்கிற்கு பயன்படுத்தியுள்ளனர். அந்த கிராமத்தில் மழையின்றி வறட்சி ஏற்பட்டு உள்ள காரணத்தினால், […]
அமெரிக்காவில் ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது ஒருவர் வாகனத்தை கொண்டு மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அமெரிக்காவில் உள்ள லாடர்டேல் கோட்டைக்கு வடக்கே சுமார் 10 மைல் தொலைவில் உள்ள வில்டன் மேனர்ஸில் எனும் பகுதியில் மாலை 7 மணி அளவில் பகீர் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது அந்தப் பகுதியில் ஊர்வலம் நடந்து கொண்டிருந்த வேளையில் அங்கு வந்த வாகனம் ஒன்று ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியுள்ளது. அதில் […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 […]
சென்னையில் நடைபெற்ற பழமையான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சென்னை அடையாறில் உள்ள தனியார் பள்ளியில் ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் – விண்டே ஜ் இணைந்து இந்த கண்காட்சியை நடத்தின. 1920ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரையிலான ரோல்ஸ் ராய்ஸ், ட்ராச்சி பிரதர்ஸ் , ஜாக்குவார், போர்ட், போரிஸ் செவர்லெட் மற்றும் 1886 ஆம் ஆண்டு பென்ஸ் அவர்களால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம், 1896ஆம் ஆண்டு போர்ட் அவர்களால் […]
மொகரம் பண்டிகைக்கு அரசு போட்டிருந்த தடையை மீறி ஊர்வலம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பொது முடக்கத்தால் மக்கள் பல்வேறு விழாக்கள் போன்றவற்றை கொண்டாட முடியாமல் வீட்டிலிருந்தவாறு எளிமையாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி சமீபத்தில் மிக எளிமையாக ஊர்வலம் எதுவும் இல்லாமல் கொண்டாடப்பட்டது. ஏனென்றால் அரசு ஊர்வலம் செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தது. தற்பொழுது நடைபெற்ற மொகரம் பண்டிகைக்கு அரசு முன்னதாக கூறியதுபோல் ஊர்வலம் செல்லக்கூடாது என்று […]
மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் செய்ய அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பல்வேறு விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது வந்த விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் எளிதாக நடந்து முடிந்துள்ளது. இந்த விழாவிற்கு ஊர்வலம் செல்ல அனுமதி கொடுக்காத உச்சநீதிமன்றம் வழிபாட்டிற்கு மட்டும் அனுமதி கொடுத்திருந்தது. அதேபோல் இந்த மாத இறுதியில் வர இருக்கும் மொகரம் பண்டிகைக்கு ஊர்வலம் […]
கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவும் ஊர்வலம் செல்லவும் அனுமதி கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடக தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர் கொடுத்துள்ள செய்திக்குறிப்பில், வரும் 22-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் எளிமையாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களிலோ, வீடுகளுக்கு முன்போ பெரிய அளவிலான விநாயகர் சிலை வைக்கக்கூடாது எனவும், மக்கள் தங்களது வீடுகளுக்குள் வைத்து வழிபடும் சிலைகளை […]
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, பண்டிகையை வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாடவும் அறிவுறுத்தி உள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், ஊர்வலத்தை நடத்தவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.