ஜப்பானில் புகுஷிமா மற்றும் பிற பேரிடர் பாதித்த பகுதிகளின் மறு சீரமைப்பு துறையின் மந்திரியாக இருந்தவர் கென்யா அகிபா. இவர் அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளை தன்னுடைய சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடா, கென்யா அகிபாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட கென்யா அகிபா நேற்று பிரதமரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் புமியோ […]
Tag: ஊழல்
முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ரூபாய் 200 கோடி ஊழல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அவரது சொந்த கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்து சேர்த்த்துள்ளதாக புகார்அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராம மக்கள் ஆவணங்களுடன் கையெழுத்திட்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளனர். கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. முறையாக விசாரணை […]
பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் பகுதியில் அமைந்துள்ள கண்டக் ஆற்றில் ரூ.13.43 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த பாலம் கட்டப்பட்ட சில வருடங்களிலேயே அதில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது சரி செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் அணுகு சாலை இல்லாத காரணத்தினால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பாலத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தூண்களுக்கு இடையே விரிசல் […]
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக பணியாற்றி வருபவர் சிரில் ரமபோசா (70). இவர் தன்னுடைய பார்ம் கேட் என்னும் பண்ணை வீட்டில் இருந்து சுமார் 4 மில்லியன் டாலர் திருடு போனதை தன்னுடைய பதவியை பயன்படுத்தி மறைத்துள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் குறித்து விசாரணை நடத்திய சுயாதீன குழு தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இதனை ஆய்வு செய்து அதிபர் சிரில் மீது அடுத்த வாரம் ‘இம்பீச்மென்ட்’ […]
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கின்றது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,ஊழலை சிறிதும் சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்து கடந்த எட்டு வருடங்களாக இந்தியா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. ஊழலில் ஈடுபடும் எந்த தனிநபரோ அல்லது நிறுவனமோ தப்ப முடியாது. ஊழலை வேரோடு அகற்ற ஒட்டுமொத்த நடைமுறையும் வெளிப்படையாக ஆக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல வரும் […]
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,800 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இது தவிர 20 லட்சம் வீடுகள் சேதுமடைந்தோ அல்லது முற்றிலும் அழிந்தோ இருக்கிறது மேலும் 79 லட்சம் பேர் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர். 5.98 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர் 25,100 பள்ளிகள் சேதம் அடைந்துள்ளது. 7000 பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வெள்ள நிவாரணம் மற்றும் மனிதநேய […]
மதுரையில் வருகிற 29-ஆம் தேதி அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதன்பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில்தான் நகை கடன் மற்றும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு […]
சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் முன்னாள் சட்டத்துறை மந்திரியான பூ செங்குவா, பதவியில் இருந்த போது குற்றவாளிகளோடு இணைந்து சுமார் 58 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். மேலும் அவரின் குடும்பத்தாருக்கு சலுகைகள் செய்தது, தொழில் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றது போன்ற வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு ஜிலின் மாகாணத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான் கொடுக்கிறார்கள். திமுக அரசின் தொடர் விலை ஏற்றத்தின் மூலம் மக்களின் மேல் அக்கறை கொண்டவர்கள் போன்று நாடகமாடிய சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மின் கட்டண உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு முன் ஆவின் பொருள்களின் விலையை அதிகரித்துள்ளார்கள். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. அதை உண்மை […]
தமிழகம் முழுவதும் நேற்று அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கரூர் புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எடப்பாடியார் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் திமுகவுடன் கைகோர்த்து செயல்படுகிறார். நீதிமன்றம் சென்று எப்படியாவது கட்சி தலைமை பதிவை பிடித்து விட வேண்டும் என்று ஆசையில் இருக்கிறார். […]
ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவி தார் இன்று தாக்கல் செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015 ஆம் வருடம் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது. நகரம் ஒன்றிற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் […]
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடை பெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கல்வித் துறை அமைச்சர் பரேஷ் அதிகாரி ஆகியோருக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை மேற்கொண்டது. இதில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் மட்டும் ரூ.20 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 20 செல்போன்கள், முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சி, தங்கம் ஆகியவையும் சிக்கியுள்ளன. இந்நிலையில் […]
கடந்த ஆட்சியில் மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்ட வழக்கில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி கைது செய்யப்படலாம் என லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.. இது தொடர்பாக புகாரில் வழக்குப் பதிந்து அவரது வீடு,அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பல முக்கிய ஐஏஎஸ் அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் வேலுமணி மீதும் கைது நடவடிக்கை பாயும் […]
அரசியலில் இருப்பவர்களில் ஒரு சிலர் மக்களுக்காக சென்றடையும் திட்டங்களில் ஊழல் செய்கின்றனர். இதனால் மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைவதில்லை. இந்த ஊழல்களை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் பல்வேறு இடங்களிலும் இன்னும் ஊழல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ACB 14400 செல்போன் செயலியை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். ஆந்திர மாநில ஊழல் தடுப்பு […]
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பொங்கல் பரிசு தொகுப்பு 100 சதவிகிதம் எந்தவித குறைபாடும் இல்லாமல் அனைத்து மக்களுக்கும் கொடுக்கப்பட்டுவிட்டது. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக சில வீடியோக்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்தும் பொய்யானவை எந்த கிராம மக்களும் அதுபோல பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து குறை கூறவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான வெல்லம் […]
ராதாரவி டப்பிங் சங்கத்தின் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஊழல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகர் ராதாரவி இவர் சமீபத்தில் டப்பிங் சங்கத்தின் நிர்வாகியாக இருந்தார். அப்போது அவர் டப்பிங் சங்கத்தில் பல்வேறு ஊழல் செய்ததாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து டப்பிங் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளான மயிலை எஸ் குமார், சிஜி மற்றும் மறைந்த காளிதாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அழைத்திருந்தனர். […]
உலகிலுள்ள 180 நாடுகளை ஆய்வு செய்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அரசு சாரா அமைப்பு நடப்பாண்டிற்கான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகிலுள்ள 180 நாடுகளை ஆய்வு செய்யும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அரசுசாரா அமைப்பு வருடந்தோறும் 100 மதிப்பெண்களின் அடிப்படையில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் 100 மதிப்பெண்களிலிருந்து படிப்படியாக குறையும் நாடுகள் ஊழல் நிறைந்த நாடாக கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்தாண்டிற்கான ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. […]
பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு உணவுத்துறை அமைச்சர் பதிலடி கொடுத்து பேசியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக கூறினார். 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புகள் கொடுக்கப்படுவதாக கூறிவிட்டு வெறும் 18 பொருட்களே அந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. மேலும் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற கரும்புக்கான கொள்முதல் விலையை 33 […]
கோயமுத்தூரில் குப்பை அள்ளும் வாகனங்கள் மற்றும் குப்பைத்தொட்டி வாங்கியதில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். கோவை மாநகராட்சியில் புதிதாக தார் சாலை அமைக்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி துவங்கி வைத்தார். இதன் மொத்த மதிப்பீடு 3.18 லட்சம் ஆகும். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, கோவை மாநகராட்சியில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்காக 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும் கடந்த ஆட்சியில் பாதாள […]
ராஜேந்திர பாலாஜியின் ஊழல்கள் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளிவரும் என பால்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் நேற்று தேனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலேயே 83 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஊழல் செய்த 10 அமைச்சர்களின் பெயர்களில் எடப்பாடி […]
அரசு ஊழியர்கள் ஊழல் முறைகேடு செய்தால் அவர்கள் மீது புகார் செய்ய ஆன்லைன் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா 2013 சட்டத்தின் கீழ் இதுவரை நேரடியாகவும்,.மின்னஞ்சல் மூலமாகவும் தரப்பட்டு வந்த மனுக்கள் லோக்பால் இணையதளத்தின் மூலம் பெறப்படும் என்றும் மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று நீதிபதி அபிலாஷா குமாரி தெரிவித்துள்ளார். அவர்கள் மீதான புகார்கள் ஆதாரத்துடன் https://lokpalonline.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது விரைவான […]
ஊழலுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எந்தவொரு நாடுகளும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் ஊழல் தடுப்பு நடவடிக்கையானது கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 ஆம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ‘உங்கள் உரிமை, உங்கள் பங்கு, ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள்’ என்பது இந்த ஆண்டிற்க்கான முக்கிய கருத்தாக கூறப்பட்டுள்ளது. […]
ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பதவியேற்ற அலெக்சாண்டரின் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டினால் தற்போது அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமரான செபஸ்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆகையினால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக அந்நாட்டின் புதிய பிரதமராக அலெக்சாண்டர் என்பவர் பதவியேற்றுள்ளார். இதனையடுத்து இவரது மீது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் அலெக்சாண்டர் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக பதவியேற்று 2 மாதங்களே ஆன […]
ஜேம்ஸ்பாண்ட் போலவும், சங்கர்லால் போலவும், கோட் சூட் போட்டுக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை வியாசர்பாடி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மதிய உணவு வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மழைக்காலத்தில் திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுவதாகவும், மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பது இல்லை எனவும், விமர்சித்தார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் […]
சென்னை கொளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடக்கவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்கி அதிலும் பல கோடி ரூபாயை மத்திய அரசின் நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என்பது இதுவரை […]
அவதூறு கருத்து தெரிவித்தற்காக பாஜக தலைவர் அண்ணாமலை 10 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் BGR நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எதிராக முறைகேடு புகார்களை முன்வைத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். அது BGR நிறுவனத்திற்கு மின்வாரியம் சில சலுகைகளை வழங்கியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் அண்ணாமலைக்கு எதிராக BGR […]
காவல் துறையினரிடமிருந்தே லஞ்சம் வாங்கும் தலைவர்கள் கட்சியில் இருப்பதாக பாரதிய ஜனதா எம்பி வருண் காந்தி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர் வருண் காந்தி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.தான் ஊழல் ஏதும் செய்யவில்லை என்று கூறியவர் ஆனால் கட்சியில் உள்ள பல தலைவர்கள் காவல்துறையினர்,சுரங்கதுரை […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி 24 மணி நேரம் கால அவகாசம் கொடுத்துவிட்டு இதற்குள் ஆதாரங்களை வெளியிடவில்லை என்றால் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து அண்ணாமலை சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். இதன்பின்னரும் அண்ணாமலையை மன்னிப்பு கோர வேண்டும் என்று மீண்டும் கெடு விதித்து அதிர வைத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அண்ணாமலை மின் வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறியுள்ளார். இதற்கு ஆதாரத்தை கேட்டால், வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிய நிதியை […]
கடந்த அதிமுக ஆட்சியில் விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், உடுமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் கடந்த ஆட்சி காலத்தில் கால்நடை துறையில் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு விளக்கம் அளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த ஆட்சியில் விலையில்லா கறவைப் பசு மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் தமிழ்நாட்டில் கால்நடைகளை […]
அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக அறக்கட்டளை மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. ராமர் கோவிலுக்காக பேக் பைசி கிராமத்தில் 1.208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியிருப்பதாகவும், இதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாடியை சேர்ந்த மாநில முன்னாள் மந்திரி பவன்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர். இது […]
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் தொண்ணூறுகளில் மிகச் சிறந்த காமெடியர்களாக இருந்தவர்கள் கவுண்டமணி-செந்தில். இவர்கள் கூட்டணியில் உருவான நகைச்சுவை காட்சிகள் இன்றும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து செந்தில் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு செந்தில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றினார். இந்நிலையில் இன்று செந்தில் பாஜக கட்சியில் இணைந்துகொண்டார். பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஊழலற்ற […]
தமிழக தேர்தலை கருத்தில் கொண்டு நேற்று திமுக சார்பில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு சென்னை மாநகரத்தில் பார்க்கிறோம் எங்க பார்த்தாலும் குப்பை நகரமாக மாத்திட்டாங்க. சிங்கார சென்னையை சீரழிந்த சென்னையாக ஆக்கிட்டாங்க. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் 200வார்டுகளிலும் எந்த பக்கம் திரும்பினாலும் குப்பைகள் தான் ஊருக்கு. குப்பை மேடுகளில் தான் இப்போ மக்கள் நடந்து போயிட்டு இருக்காங்க. குப்பைத்தொட்டிகளில் இல்ல, இருந்தாலும் அது நிரம்பி வழிஞ்சிட்டு இருக்கு, எடுக்குறது இல்ல.நிரம்பி […]
ஜெர்மன் நாட்டில் முக கவசத்திற்க்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக அனைத்து நாடுகளிலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். ஜெர்மனில் முகக்கவசம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்சர்வடிவ் எம்.பி ஜார்ஜ் நுஸ்ளெய்ன் முகக்கவசம் சப்ளையர்க்கு ஒப்பந்தத்தை வழங்க 6,60,000 யூரோ பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகம் செய்தி ஒன்றில் லஞ்சப்பணம் பெற்ற ஜார்ஜ் நுஸ்ளெய்ன் நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு அப்பணத்தை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. […]
மீன்வளத்துறையில் 25 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது . சென்னை ஆலந்தூரில் உள்ள தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை தலைமை இயக்குனரிடம் திமுக எம்எல்ஏ அப்பாவு அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்பு புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உபரி கடற்கரை கிராமத்தில் தூண்டில் வலை அமைக்கும் திட்டத்தில் 65கோடி ரூபாய் திட்டத்தில் 25கோடி பணத்தை அமைச்சர் ஜெயக்குமார் கொள்ளையடித்து விட்டதாக குற்றம் சாட்டினார். […]
தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இருந்தால் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடி இருப்பார் என தமிழ் துறை வளர்ச்சி தலைவர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லாத காரணத்தால் பிரேக்கிங் நியூஸ் வரவேண்டும் என்பதற்காக, அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் கொடுப்பதாக அவர் விமர்சித்தார். மேலும், சிஎம் துறையில் ஸ்டாலின் வச்ச குற்றச்சாட்டுக்கு அடுத்த நாளே முதல்வர் அதை உடைத்தார். டெண்டரே […]
ஊழல் என்ற வார்த்தையை திமுக தலைவர் ஸ்டாலின் மறந்துவிட்டு பேசினால் நல்லது என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் தொடர்பாக ஏகப்பட்ட விருதுகளை வாங்கியவர்கள் திமுகவினர் என்றும், ஊழலுக்காக தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலக அளவில் விருது வாங்கி அவர்கள் திமுகவினர் எனவும் விமர்சித்தார். 2G வழக்கு இன்னும் முடியவில்லை எனவும், தேர்தலுக்கு முன்பாகவே திமுகவினர் சிறை செல்லவேண்டிய நிலை […]
முதலமைச்சருக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராசா ஊழல் பற்றி விவாதிக்க நேரம் இடம் ஒதுக்குங்கள் என்று சவால் விடுத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ,ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது, திமுக தலைவர் மீது குற்றங்களை சுமத்தி முதலமைச்சர் பழனிசாமி விவாதத்திற்கு அழைத்தார். ஆனால் […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஈசூர் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவில் குளக்கரை அண்மையில் பெய்த மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் குளத்திற்கு கரை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒப்பந்தத்தில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் குளத்தை10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரினார்கள். காண்ட்ராக்ட் காரர்கள், ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தரையை கட்டியுள்ளார்கள். இதனால் ஒருநாள் மழையில் மொத்தமாக சரிந்துவிட்டது. மீண்டும் […]
மத்திய அரசு விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் நிறைய திட்டங்களை வைத்துள்ளார்கள். அதில் புதிய செய்தி என்னவென்றால் பிரதம மந்திரியின் உழவர் நிதி திட்டத்தில் தமிழகத்தில் நடந்த ஊழல் முறைகேடு…. இது என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இதில் நடந்த முறைகேட்டால் சுமார் 110 கோடி ரூபாய் சுருட்டபட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றார்கள். இதில் விவசாயி அல்லாத சுமார் 5.5 லட்சம் பேர் விவசாயி என்ற போர்வையில் பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது. இந்த கொரோனா […]
கொரோனா பாதுகாப்பு உபகரணங்களில் ஊழலில் ஈடுபடுவது கொலை செய்வதற்கு சமம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியிருக்கிறார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இதுகுறித்து கூறுகையில், ” உலகின் கொடூரமான காலகட்டத்தில், தொற்று நோய்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை கொலை செய்வதற்கு சமம். அதிலும் குறிப்பாக பிபிஇ தொடர்பான ஊழல் உண்மையிலேயே கொலை செய்வதற்கு தான் சமம். ஏனென்றால் சுகாதார ஊழியர்கள் அனைவரும் இந்த உபகரணங்கள் இல்லாமல் […]