Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஊழியர்களுக்கு…. அரசு அதிரடி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தில் எச். எம்.எஸ், ஏ.ஐ.சி.டி.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ‌சி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளனர். இந்த போராட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 8ல்… ரேஷன் கடை ஊழியர்கள்… பெரும் பரபரப்பு அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் கடலூரில் அளித்துள்ள பேட்டியில்,பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார் துறையை ஏற்படுத்த நீண்ட நாட்களாகவே கேட்டுக் கொண்டிருக்கிறோம். பொது விநியோகத் திட்டம் ஒரு துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென முதல்வர் அறிவித்திருந்தார். இதை நிறைவேற்ற வேண்டும் 2010 முதல் அரசுப் பணியாளர்களுக்கு வழங்குவது போல் ரேஷன் கடை பணியாளர் களுக்கும் 31 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். மேலும் சரியான விலையில் பொருட்களைத் தானமாக […]

Categories
தேசிய செய்திகள்

“பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி”… நெருக்கடியில் ஊழியர்கள்… நிறுவனம் கூறிய விளக்கம்…!!!!

zomato  நிறுவனத்தின் பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் தலைவர் அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார். வீட்டிற்கு உணவு எடுத்து வரும் zomato  நிறுவனத்தின் 10 நிமிட சேவை திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினையும் இருக்காது என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார். ஹோட்டல்களில் ஆர்டர் செய்யும் உணவை 30 நிமிடங்களில் வீடுகளில் சென்று வழங்கும் சேவையை zomato  நிறுவனம் செய்து வருகிறது. ஹோட்டல்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி….. ரேஷன் கடை ஊழியர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு காரணமாக ரேஷன் கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு மாறாக அந்த வாரங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை நாளாக அறிவிக்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடந்த ஜனவரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது ரேஷன் பொருட்கள் வழங்குவது தாமதமாக துவங்கியதால் விடுமுறை நாளான ஜனவரி 30-ஆம் தேதி ரேஷன் கடை செயல்பட்டது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

இரட்டை பணி முறை அமல்….. போக்குவரத்து ஊழியர்கள் அச்சம்…. போராட்டத்தில் தொழிலாளர்கள்….!!!

தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இரட்டை பணி முறை அமல்படுத்துவதாக அறிவித்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து 2021-22ம் கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உருமாறிய தொற்று காரணமாக நோய் பரவல் தீவிரமடைந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் சந்தாதாரர்களே…! விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…. என்ன தெரியுமா..??

பென்சன் தொகை உயர்வது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உறுப்பினர்களுக்கு பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் தொகை  வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் மட்டுமே பென்சன்  வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பிஎப் சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச மாதாந்திர பென்ஷன் ரூபாய் 1000 என்பது மிகவும் குறைவாகும் […]

Categories
மாநில செய்திகள்

துணை ஆணையர் அலுவலகத்தில் நடத்திய திடீர் சோதனை… பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊழியர்கள்…!!!!

போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி கொண்டிருக்கும் போது போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கிய நிகழ்வு பதற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை மாவட்ட போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்து வருபவர் நடராஜன். இவரது அலுவலகம் சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ளது. இவர் தனது அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்குவதற்காக உதவியாளர்களிடம் ரூ. 5 லட்சம் வீதம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் எழிலகத்தில் உள்ள போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க… அரசு எடுக்கும் அதிரடி முடிவு…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!

ரேஷன் கடைகளில் எடையாளர், பணியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் 33,000 ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் எடை யாளர்கள் என மொத்தம் 25,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது ஒரு கடைக்கு ஒரு பணியாளர் கூட இல்லாத அளவுக்கு ஊழியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன்விளைவாக ஒரே நபர் 2,3 கடைகளை கூடுதலாக கவனிக்க வேண்டிய நிலை நீடித்து வந்ததால் பணிச்சுமை ஊழியர்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு…!!!!

2022-23 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதில் குறைந்த பலனே உள்ளதால் அதனை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக  போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே 2 நாட்கள் வங்கி இயங்காது…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!!

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து  பிப்ரவரி 23, 24 இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு ஊழியர் சங்கங்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கொரோனா  மூன்றாம் அலை மற்றும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக வேலை நிறுத்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் இனி இது வேண்டாம்…. ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமானோருக்கு கைரேகை பதிவாகாத காரணத்தினால் பொருட்கள் வழங்க முடியாது என ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆதாரில் கைரேகை பதிவு செய்ய சேவை மையங்களுக்கு படையெடுக்கின்றன. சிலசமயங்களில் அங்கும் கைரேகை பதிவாகாத காரணத்தினால் உணவுப் பொருட்கள் வழங்கல் அலுவலரிடம் மனு செய்து பெற்று வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் அலுவலகம் செல்லும் போதும் உடனடியாக வழங்காமல் அலைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…. முக்கிய உத்தரவு பிறப்பிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு சட்டமன்ற குழு ஒன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதனால் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வந்தது. இந்த நிலையில் சட்டமன்ற குழு மூலமாக மாவட்ட வாரியாக பொதுமக்களின் மனுக்களை பெற்று அதனை ஆய்வு செய்து குறைகளை நிறைவேற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பரிசீலனை செய்து […]

Categories
மாநில செய்திகள்

“வருவாயை வசூலித்தால் தான் முழு சம்பளம்”… அறநிலையத்துறை உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!!!

கோயில்களில் நிலுவையில் உள்ள 2,66,942 சொத்துக்களின் வருவாயை வசூலித்தால் தான் முழு சம்பளம் வழங்கப்படும் என்ற கமிஷனரின் உத்தரவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயில்களின் கீழ் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய் கோயில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 3, 66,019 சொத்துக்களில் 99,077 சொத்துகள் மட்டுமே வருவாய் ஈட்டுகிறது. மீதமுள்ள 2,66, 942 சொத்துக்களில் இருந்து வருவாய் ஈட்ட அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வருவாயை ஈட்ட செயல் அலுவலர்களை […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. மீண்டும் அகவிலைப்படி உயர்வு…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு நாட்டின் பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இதுவரை இறுதியாக மத்திய அரசு ஊழியர்கள் 7 சதவீதம் டிஏ பெற்று வருகிறார்கள். தற்போது 2022 ஜனவரி 1 ஆம் தேதிக்கான டிஏ இன்னும் அரசால் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் AICPI கணக்கீட்டின் படி 3 […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள விடுப்பு உயர்வு…? மத்திய அரசு நல்ல முடிவு…!!!

அரசு ஊழியர்களின் சம்பள விடுப்பு 300 நாட்களாக உயர்த்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வுகாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு இன்னொரு பெரிய பரிசை வழங்க இருக்கிறது. இந்த ஆண்டு முதல் தொழிலாளர் சட்டத் திருத்தங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நடந்தால் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு 20 லட்சம் வரை … அரசு வங்கியில் இப்படி ஒரு சலுகையையா?…

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை வழங்குகிறது. சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும். விபத்து காப்பீடாக ரூபாய் 20 லட்சம் வரையில் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில்பஞ்சாப் நேஷனல் வங்கி சேலரி அக்கவுண்ட் வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரையில் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஓவர் டிராப்ட் வசதியும் உள்ளது. இச்சலுகை 4 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. (அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“இனி இது கட்டாயம்”…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு… தமிழக அரசு எச்சரிக்கை…!!!!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களை  வாங்கியதாக எஸ்எம்எஸ் வருவது, பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்வதில் சிக்கல், வயதானவர்களுக்கு கைரேகை சரியாக வரவில்லை என அவர்களுக்கு பொருட்களை வழங்க மறுப்பது என பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அரசின் கவனத்திற்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகளையும் பொருத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…! அரசு ஊழியர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு…. மிக மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

அரசு ஊழியர்கள்  கல்வி படித்தொகை பெறுவதற்கு  இம்மாத இறுதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் கொரோனா  நெருக்கடிக் காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற முடியாமல் இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி படித்தொகை  கிளைம் செய்ய மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும். கல்வி உதவித்தொகை கிளைம் செய்ய குழந்தையின் பள்ளி சான்றிதழ் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா…! பென்ஷன் வாங்குவோருக்கு நிம்மதி…. மத்திய அரசு சூப்பர் உத்தரவு…!!!

பென்ஷன் வழங்குவதில் தாமதம் இருக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Ppo(pention payment order) வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் பணி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மேல் பென்ஷன் பணிக்கொடை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி பிபிஓ வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஆறு மாதங்கள் வரை பென்சன் வழங்கப்படும் இதில் மத்திய பென்ஷன்  மற்றும் பென்ஷனர்  நலத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

“ஊழியர்கள் வெளியேறலாம்”…. பெலாரஸில் தூதரக செயல்பாடுகள் நிறுத்த…. பிரபல நாட்டின்உத்தரவால் பரபரப்பு….!!!

மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற ஊழியர்கள்  தாமாக வெளியேறும்படி அமெரிக்கா  அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யாவின் ஆதரவு நாடான பெலாரஸில் தூதரக செயல்பாடுகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ரஷ்யாவில் இருந்து வெளியேற விரும்பும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் குடும்பத்தினரும் வெளியேறலாம் என அமெரிக்கா கூறியுள்ளது. மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து பிற ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தாமாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் படையெடுப்பிற்கு கடுமையான பதிலடியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு…. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்?…. அரசின் முடிவு என்ன?….!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் மாநில சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஓய்வு பெற்றதற்கு உரிமை உண்டு என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய […]

Categories
தேசிய செய்திகள்

அகவிலைப்படி நிலுவைத் தொகை…!!! அரசு ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்த நிலுவை தொகை மொத்தமாக வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகின. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் தற்போது அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அரசு அதிகாரிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு அகவிலைப்படி உயர்வு தற்போது வழங்கப்பட மாட்டாது எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அரசு ஊழியர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! மார்ச்-28, 29 வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டம் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா மூன்றாம் அலை காரணமாகவும் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாகவும்  […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: இவர்களுக்கு ரூ.10,000 அட்வான்ஸ்…. வெளியான செம சூப்பர் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் அட்வான்ஸ் தொகை வழங்க உள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகைகாகவும்  அரசு ஊழியர் காத்திருக்கின்றனர். இதற்கிடையே பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் அதற்கான தேவை முன்பை விட அதிகமாகியுள்ளது.  இதற்கு இடையில் மார்ச் மாதம் ஹோலி பண்டிகையையொட்டி சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் திட்டத்தின்கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

இதை மட்டும் செய்ய வேண்டாம்…. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை….!!

ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப்  செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. இந்தியாவில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஒரு செல்போன்குள்ளே உலகம் அடங்கிவிடும் என சொல்லும் அளவிற்கு டெக்னாலஜி உள்ளது. இதில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற செய்திகள் வாயிலாக நாம் பலவற்றை பார்த்து,பகிர்ந்து வருகிறோம். எனினும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் ஆய்வுகள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பணியாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் பிப்ரவரி 19-ஆம் தேதி பொது விடுமுறை தினமாக போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து பொதுசேவை எந்த […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா. ஊழியர்கள், பத்திரிக்கையாளர்களை சிறைபிடித்த தலீபான்கள்…. உச்சகட்ட பரபரப்பில் ஆப்கான்….!!

ஐ.நா. ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை தலீபான்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தொடங்கினார்கள். அன்று முதல் அங்கு மிக கடுமையான மனித நெருக்கடி நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின்  ஊழியர்கள் அங்கு முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.நா ஆணையத்துடன்  இணைந்து பணியாற்றி வந்த 2 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்….. ஊழியர்களின் அலட்சிய பதில்?…. விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கார்டு தாரர்களுக்கு மலிவு விலையில் மாதந்தோறும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும், தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. அந்த பொங்கல் பரிசு தொகுப்பில் அரிசி […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகின்ற 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளான 19-ஆம் தேதி வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுமுறை வழங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் அவர்களுடைய சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது என்று தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் செம ஷாக்… இனி 12 மணி நேரம் வேலையா…? வெளியான முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களின் நான்கு சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிமுறை ஒன்று கடந்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த புதிய விதிகளை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” ஊழியர்களுக்கு பணி நேரம்…. வெளியான செம குட் நியூஸ்…!!!!!

ஊழியர்களுக்கு பணி நேரம் உயர்த்துவது குறித்து எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி நேரத்தை உயர்த்துவது போன்ற திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களே!…. இனி இந்த தவறை பண்ணாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக ரேஷன் பொருள்கள் தொடர்பாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பொருள்கள் சரியான தரம், எடை, அளவுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன்தாரர்களே…! பணம் எடுக்க புது ரூல்ஸ்…. என்னனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க…!!!!

பென்ஷன் பணத்தை எடுப்பவர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் என்பது அனைவருக்கும் மிக பயன் உள்ள ஒன்றாகும்.  இது 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். மேலும் 2009ஆம் ஆண்டில் இத்திட்டம் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டது. முன்பு ஓய்வு பெறும்போது, முதலீட்டாளர்கள் இறந்துவிட்டால், மற்றும் வயது முதிர்ச்சியின் பின், பணம் தேவைப்பட்டால் ஆகிய மூன்று முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு அலுவலகங்களில் இன்று முதல்…. 100% பணியாளர்களுடன்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

கொரோனா  தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக இன்று முதல் 100% பணியாளர்களுடன்  அரசுஅலுவகங்கள்   செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.  உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் தற்போது கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின்  வேகம் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அதில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு புதிய வழிகாட்டு  நெறிமுறைகள்  பின்பற்றப்பட்டுள்ளன. அதில் மத்திய அரசில் பணிபுரியும் கர்ப்பிணி […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி” வீட்டு வாடகைப்படி உயர்வு…. மாநில அரசின் அறிவிப்பு…. அரசு ஊழியர்கள் ஹேப்பி…!!!!

அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி  அதிகரித்து அறிவிப்பு ஒன்றை மாநில அரசு  வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில்முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில்ஒய் .எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி   நடைபெறுகிறது. இதில் 11 வது ஊழியர் திருத்த குழு அளித்த பரிந்துரையின் படி இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதற்கு அம்மாநில அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 11 வது ஊதிய திருத்த குழுவின் பரிந்துரையின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் அமல்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் தர மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரேஷன் ஊழியர்களை உணவு துறை எச்சரித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு அக்., 1-ல் நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் ஒருவர் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்கள் குடும்பஅட்டை மூலம் ரேஷன்களில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். கூடுதலாக, தமிழகத்தில் வசிக்கும் கார்டுதாரர்கள், தங்கள் வார்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்….!! ஜாலியான ஊழியர்கள்….!!

புதுச்சேரியில் இரண்டு நாட்களாக மின்வாரிய ஊழியர்களால் நடத்தப்பட்ட தொடர் போராட்டம் முதல்வர் ரங்கசாமி உடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு வாபஸ் பெறப்பட்டது. புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தினர். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தை நிறுத்துவதற்காக மின்வாரிய ஊழியர்களுடன் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊழியர்கள் கூறுகையில், அரசு தங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளதாகவும் தொடர்ந்து போராட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மாநில முழுவதும் இருளில் தவிப்பு…. ஊழியர்களின் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!!!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின் துறையை மத்திய அரசு தனியார் மயமாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிகாரிகளும், ஊழியர்களும் பிப்..2 (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காலை முதல் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியிலுள்ள தென்றல் வீதி , குறிஞ்சி வீதி, சாலைத்தெரு உள்ளிட்ட வீதிகளில் இன்று அதிகாலை முதல் மின்தடை ஏற்பட்டது. இதனை கண்டித்து […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 31 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த மாதம் மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயரும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 34 சதவீதம் அகவிலைப்படி அளித்தால் அடிப்படை சம்பளம் ரூபாய் 18,000 பெறும் நபர் 34 சதவீதம் அகவிலைப்படி ரூபாய் 6,120 சம்பளம் கூடுதலாக கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் 18 மாதங்களாக நிலுவையிலுள்ள அகவிலைப்படி நிலுவைத்தொகை ஒரே தவணையில் ஊழியர்களின் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த அதிரடி…. முறைகேடுகளில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஆப்பு ரெடி…. அமைச்சர் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின் ரேஷன் கடைகள் வாயிலாக பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த வருடம் கொரோனா நிவாரணத் தொகை, இலவச மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி 14 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச 21 வகை பொருட்களை அடங்கிய பொங்கல் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு….!! வெளியாகப்போகும் செம சூப்பர் அறிவிப்பு….!!

2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு கணிசமான தொகை சம்பள உயர்வாக கிடைக்கும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. கான்பெரி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை சம்பள உயர்வு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய நிலைமை தற்போது திரும்பி பல்வேறு நிறுவனங்கள் பழையபடி லாபம் ஈட்ட தொடங்கியுள்ளதால் ஊழியர்களுக்கு கட்டாயம் ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் அந்த ஆய்வு முடிவு கூறுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது….!! மாநில அரசின் ஷாக் அறிவிப்பு….!!

ஆந்திர மாநில அரசு 11வது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அறிவித்திருந்தது. அதோடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் சம்பள உயர்வை திரும்ப பெற வேண்டுமெனவும் பழைய ஊதிய உயர்வு திட்டத்தையே மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திர மாநில அரசு ஓய்வு பெறும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…!! அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் ஊதிய உயர்வு….!!

பல்வேறு துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கணிசமான தொகை சம்பள உயர்வு கிடைக்கும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. கான்பெரி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை சம்பள உயர்வு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய நிலைமை தற்போது திரும்பியுள்ளது இதனால் பல்வேறு நிறுவனங்கள் பழையபடி லாபம் ஈட்ட […]

Categories
உலக செய்திகள்

“ஊழியர்களே தடுப்பூசி போடலையா?”…. அப்போ மிகப்பெரிய இழப்பு தான்!…. அரசு சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

ஜெர்மனியில் ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் நிலையில் அரசு அவர்களுக்கு ஊதிய இழப்பீட்டினை வழங்கி வந்தது. ஆனால் இனி பூஸ்டர் தடுப்பூசி பெற்று கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒரு டோஸ் தடுப்பூசியை மட்டும் பெற்றுக் கொண்டவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்த வருடத்தின் தொடர் விடுமுறை தினங்கள்….!! இதோ மொத்த லிஸ்ட்…!!

ஆண்டு முழுவதும் வேலைக்கு செல்வோரின் எண்ணம் முழுவதும் விடுமுறை தினம் குறித்து தான் இருக்கும். ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் பொழுதும் அந்த ஆண்டில் எத்தனை தொடர் விடுமுறைகள் வந்தது என்பதை வெளியூர் சென்று வேலை பார்க்கும் ஊழியர்கள் கணக்கிட்டு வருவது வழக்கம் சொந்த ஊருக்கு சென்று விடுமுறையை ஜாலியாக கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் தொடர் விடுமுறையை எதிர்பார்ப்பார்கள். எனவே இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை உள்ள அனைத்து விடுமுறை தினங்கள் குறித்தும் […]

Categories
உலக செய்திகள்

பிப்.1ம் தேதி முதல்…. அரசு அலுவலக மேலதிகாரிகளுக்கு…. அமலுக்கு வரும் அதிரடி உத்தரவு….!!!!

பெல்ஜியம் அரசு அந்நாட்டில் அரசு அலுவலக மேலதிகாரிகளுக்கு புதிய விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது அரசு அலுவலக மேலதிகாரிகள் பணி நேரம் தவிர்த்து பிற நேரங்களில் ஊழியர்களை அழைக்க கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த உத்தரவானது பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பெல்ஜியம் அரசு ஊழியர்கள் “Right to Disconnect” என்ற இந்த முறையை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. கொரோனா காரணமாக தேசிய அளவில் 2 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு…. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்…. பெரும் பரபரப்பு….!!!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஆந்திராவில் அரசுத்துறையில் அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர் வரை பணிபுரிந்து வரும் லட்சக்கணக்கானோரின் சம்பளம் விகிதம், ஓய்வூதியர் பங்களிப்பு, அரசு ஊழியர்கள் ஓய்வு வயது பற்றி ஜெகன்மோகன் ரெட்டி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை 23 சதவிகிதமாக உயர்த்தி முதல்-மந்திரி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த ஊதிய உயர்வை அமல்படுத்துவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

PF கணக்கு வைத்திருப்போருக்கு…. ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் ரூ.2 கோடி பெறும்…. சூப்பர் திட்டம்….!!!!

எதிர்கால தேவைக்காக தங்களது பணத்தை சேமித்து வைக்க விரும்பும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ( EPFO ) கணக்கு வைத்திருந்தால் ரூ.20 ஆயிரம் அடிப்படை ஊதியத்தில் ரூ.2 கோடி வரை பெறும் சூப்பர் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாத்து கொள்வதற்காக ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால் முதலீடுகளில் நஷ்டமும் இருக்கலாம், லாபமும் இருக்கலாம். ஒருவேளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்திருந்தால் இந்த […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா இவ்ளோ ஏற்பாடா?…. “பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் 2022″…. வெளியான முக்கிய தகவல்….!!!!

வருகின்ற பிப்ரவரி 4-ஆம் தேதி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் வீரர்-வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சிலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பிரத்தியேக தானியங்கி மின்சார பேருந்துகள் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு இயக்கப்படுகிறது. இதற்கிடையே ஒலிம்பிக் கிராமம் வருகின்ற 27-ஆம் […]

Categories

Tech |