பிஎஃப் கணக்கு என்பது அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டம் மூலமாக பணியாளர்கள், ஊழியர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் இருந்து 12 சதவீதத்திற்கு சமமான தொகையை நிறுவனத்தின் கணக்கிற்கு செலுத்தி வருகின்றனர். இந்த பிஎஃப் தொகைக்கு வட்டி விகிதம் மற்றும் வரி சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஊழியர்கள் ஓய்வு நிதியை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மூலமாக அவர்களின் வங்கிக் கணக்கு […]
Tag: எச்சரிக்கை
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த வருடம் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு தனி மனிதனுக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் எனக்கூறியவர் பாரதி. ஆனால் இந்த வருடம் இதுவரை இல்லாத அளவிற்கு உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது 2050ஆம் ஆண்டிற்குள் 40 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி வறுமையால் பாதிக்கப்படும் என்றும் 40 […]
திமுக அமைச்சர் பொன்முடிக்கு நடிகை யாஷிகா இன்ஸ்டாகிராமில் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். திமுக அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ‘இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள், இங்கு பானிபூரி விற்பவர்கள் யார்?’ என்று சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு பலரும் பலவித பதில்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா’ ஒருவருடைய மொழிக்கும், வேலைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அனைவருமே பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். பானிபூரி விற்பவர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல, […]
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் எதுவும் திறக்கப் படாமல் இருந்தன. அதனால் மாணவர்கள் மத்தியில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது. மாணவர்கள் அத்து மீறும் செயல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்களை தரைகுறைவாக பேசுவதும் அவர்களை தாக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அவ்வகையில் சென்னையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள் நடத்துனரின் கட்டுப்பாடுகளுக்கு இணங்காமல் பல ஒழுங்கீனமான செயல்களை செய்து […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம்,கிருஷ்ணகிரி மற்றும் […]
கேரளாவில் 4 நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளாவில் அதிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று […]
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பர்கான் தசீர்கான் (35) என்பவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர் தற்போது ஒடிசாவில் வசித்து வருகிறார். அவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. இருந்தாலும் அதிக பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம் என்று யோசித்து உள்ளார். இதற்காக இணையத்தில் தனியாக ஐடி உருவாக்கி தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தன்னை பிடித்தவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி செல்போன் எண்ணையும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தான் இன்ஜினியரிங் […]
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது . கேரளாவில் இதனால் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது . இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், நாளை எர்ணாக்குளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. காசா்கோடு […]
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் மே 17ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் மே-17 வரை பலத்த காற்று […]
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. இதற்கு அசானி என பெயர் சூட்டப்பட்ட நிலையில் ஆந்திரா ஒடிசா மாநிலங்கள் இந்த புயல் மிரட்டி வந்தது. இந்நிலையில் இந்த புயல் காரணமாக தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வங்கியிலிருந்து பேசுவது போல நடித்து ஆன்லைன் மூலமாக பணம் சுருட்டும் கும்பல் அதிகரித்துள்ளது. அவர்கள் ஏதாவது ஒரு மொபைல் நம்பருக்கு போன் செய்து உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது அல்லது வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று கூறி அனைத்து தனிநபர் விவரங்களையும் கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். இது போன்ற மக்கள் யாரும் மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன் பின் […]
தமிழகத்தில் அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு வாகனம் அல்லாத மற்ற வாகனங்களில் தற்போது தமிழகம் முழுவதும் பதிவு எண் பலகை யில் இந்த எழுத்துக்கள் எழுதப்பட்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. […]
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இலங்கை முன்னாள் அமைச்சர் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில் இலங்கை காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சரி செய்து கொள்ளாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இணைய வழி வாடகை சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஓலோ, உபேர் போன்ற இணைய வழி வாடகை வாகன நிறுவனங்கள் மீது பொதுமக்கள் புகார் அளிப்பது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் குறிப்பாக முக்கிய நாட்களில் கட்டணத்தை அதிகரித்துக் கொள்வது, பயணத்திற்கு முன்பதிவு செய்த பிறகு அதனை ரத்து செய்ய ஓட்டுநர்கள் கட்டாயப் படுத்தப் படுவது மேலும் பணத்தை ரத்து […]
இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று முன்தினம் அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று முந்தினம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. […]
இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் பல்வேறு உள்ளன. இந்தத் திட்டங்கள் சாமானிய மக்கள் முதல் அனைத்து தரப்பினரும் சேர்ந்து பயன்பெறும் வகையில் உள்ளது. அதனால் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் சேர்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி அஞ்சலகத்தில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகள் சேமிப்பு திட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் பெரியவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மூத்த […]
அசானி புயல் காரணமாக ஆந்திராவுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இது நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலைகொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க கூடும் […]
நாடு முழுவதும் பாலியல் பலாத்கார வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆண்களைக் குறிவைத்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் காவல் துறையின் பொருளாதார மற்றும் சைபர் குற்றப்பிரிவு கடந்த 4 மாதங்களில் 15 பாலியல் வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கும்பல் பீகாரில் உள்ள தங்கள் கூட்டாளிகள் மூலம் வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலமாக மக்களை மிரட்டி […]
நாடு முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் இலவச உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளோடு நிதி உதவி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற ஏராளமான திட்டங்கள் அமலில் உள்ளது. இந்நிலையில் பொது மக்களுக்கு நிதி அமைச்சகம் சார்பாக 30,628ரூபாய் நிதி உதவி வழங்கப் படுவதாக செய்தி […]
தமிழகத்தில் பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்தால் டிசி சான்றிதழில் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திலுள்ள மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாக அல்லது மனரீதியாக தொந்தரவு தந்தால் TC, Conduct certificate ஆகியவற்றில் எந்த காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் எதற்காகவும் ஒழுங்கீனமாக […]
கடந்த வாரம் கேரள மாநிலத்தில் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து தஞ்சையில் சவர்மா சாப்பிட்ட 3 மாணவிகள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஷவர்மா உணவு கடைகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சவர்மா உள்ளிட்ட இறைச்சி கடைகளை விற்பனை செய்யும் கடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி சமைக்காத இறைச்சியை 18 […]
இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோவில்களில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அரசாங்கத்தில் உள்ள எந்த ஒரு அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது என மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பட்டினப்பிரவேசம் என்ற பாரம்பரிய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பல்வேறு தரப்பினரும் அதற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்த […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று முதல் மே 28 ஆம் தேதி வரை சுமார் 25 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரி செல்சியஸ்-ஐ தாண்டும் என்றும் வேலூர் மற்றும் திருத்தணி உள்ளிட்ட சில நகரங்களில் […]
கொரோனா தொற்றின் 4-வது அலை ஜூன் மாதத்திற்கு பிறகு உச்சமடைந்து அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக ஐஐடி கான்பூர் வெளியிட்ட தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா நான்காம் அலை ஜூன் மாதத்திற்கு பின் உச்சத்திற்கு சென்று அக்டோபர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக துல்லியமாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் பொது இடங்களில் முக கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்ததை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித புகாரும் இடம் தராமல் பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை […]
மருத்துவ படிப்பு, பல் மருத்துவம், ஹோமியோபதி ஆகிய படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதி அதில் தேர்ச்சியடைய வேண்டும். இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கை இப்போது நடைபெற்று வருகிறது. இவற்றில் சில ஹோமியோபதி கல்லூரிகளில் நீட்தேர்வு எழுதாமலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேசிய ஹோமியோபதி ஆணையம் சுற்றறிக்கை விடுத்து இருக்கிறது. அவற்றில் நீட்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடத்தி, பிறகு ஏதும் காலியிடம் […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா,ஒடிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. எந்த வருடமும் இல்லாத அதுபோல் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் […]
பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வட்டார போக்குவரத்து அலுவலர், தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் தலைமை தாங்கி உள்ளார். மேலும் போக்குவரத்து துறை மேலாளர்கள், பேருந்து உரிமையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தன் பேசியதாவது, பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு பேருந்துகள் […]
இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாநிலங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சராசரியாக 35.5. டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியுள்ளது. இதை 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைப்போலவே பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தை விட கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் […]
அதிதீவிர வெப்பநிலையால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் என சூழலியலாளர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 120 ஆண்டுகளில் ஏப்ரல் மாதங்களில் பதிவான வெப்ப நிலையே இந்த ஆண்டு உச்சத்தை எட்டி உள்ளதாக சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். […]
மின்தடை தொடர்பாக அவதூறான செய்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தற்போது மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. கொஞ்ச நேரம் கூட நம்மால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இந்த நிலையில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையங்களில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக பராமரிப்பு பணிகள் நடைபெறும். தொழிற்சாலை முதல் வீடுகள் வரை மின் […]
தமிழகத்தில் எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பொது தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் மறுபக்கம் தேர்வு நெருங்கி வருவதால் தேர்வு மையம் அமைக்கும் பணியில் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்வு […]
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்பதால், அம்மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோடைக்காலத்தையொட்டி பெரும்பாலான இடங்களில் வெப்பம் உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அடுத்த 5 நாட்களில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவிலும், அடுத்த 3 நாட்களில் கிழக்கு இந்தியாவிலும் கடுமையான அனல் காற்று வீசும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெப்ப நிலை 2 டிகிரி […]
டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இதையெல்லாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது மற்றும் ஷாப்பிங் செய்வது போன்ற பல்வேறு விஷயங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவே முடிந்து விடுகிறது. அதனால் போன்பே, கூகுள் பேய் மற்றும் பேடிஎம் போன்ற மொபைல் ஆப் நிறைய வந்து விட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நிறைய வசதிகள் இருந்தாலும் அதில் ஆபத்துக்களும் உள்ளன. […]
நாடு முழுவதும் இலவச ரேஷன் பொருட்களை பெறும் தகுதி இல்லாத நபர்கள் உடனடியாக ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் என்றும் இதைச் செய்யத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சூழலில் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இலவசமாக ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில் தகுதியில்லாத ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று […]
தற்போதைய காலகட்டத்தில் பலரும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். பணம் இல்லாத சமயத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள நினைத்து வாங்குகிறார்கள். ஆனால் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பலர் அதை வேண்டாம் என்று நினைப்பார்கள். காரணம் கிரெடிட் கார்டு என்பது உங்களை கடன் வலையில் சிக்க வைக்கும். அதை சரியாக பயன்படுத்தினால் நிறைய நன்மைகள் உள்ளது. அதனை சரியாக கையாளுவதற்கு தனித்திறமை வேண்டும். அதை எவ்வாறு சரியாக பயன்படுத்துவது மற்றும் பிரச்சினைகளில் சிக்காமல் எவ்வாறு பாதுகாப்பாக வைப்பது என்பது […]
உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் குறித்து ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் இரவு நேரத்தில் சுமார் 423 இடங்களில் ரஷ்ய படை தாக்குதல் மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டின் 26 ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உக்ரைன் நாட்டுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, மேற்கு உலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு உதவி செய்வது நீடிக்கும் பட்சத்தில், மூன்றாம் உலகப்போருக்கான உண்மையான ஆபத்து […]
உரங்களை விதி மீறி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தனியார் தொடக்க, வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் யூரியா 1,442 டன் டி.ஏ.பி 897 டன், பொட்டாஷ் 389 டன், காம்பளக்ஸ் 3,802 டன், எஸ். எஸ். பி […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 2 செல்போன் எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வங்கி மோசடிகள் அதிக அளவு நடைபெறுகின்றன. மக்கள் அனைவரும் தற்போது பல்வேறு நிபந்தனைகளுக்காக வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஏடிஎம் பயன்படுத்துகின்றனர். இதனிடையே வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி வங்கி கணக்கு மற்றும் ஏடிஎம் ரகசிய எண்கள் போன்றவற்றை கேட்டுப் பெற்று மோசடி நடந்து […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததால் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடந்த மாதம் கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் […]
மானியம் வழங்குவதாக கூறும் போலி இணையதளங்களுக்கு எதிராக தபால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சில ஆய்வுகள் மற்றும் வினாடி வினாக்கள் மூலமாக அரசு மானியங்களை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்களில் பரவும் மோசடியான இணையதள யூஆர்எல்-களுக்கு எதிராக இந்திய அஞ்சல் சனிக்கிழமை பொதுமக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கணக்கெடுப்புகளின் அடிப்படையில் மானியங்கள், போனஸ் அல்லது பரிசுகளை அறிவிப்பது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் இந்திய அஞ்சல் ஈடுபடவில்லை என்பதை நாட்டின் குடிமக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். […]
உக்ரைனின் மற்ற நாடுகளையும் ரஷ்யா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு வெறும் ஆரம்பம் தான், மற்ற நாடுகளையும் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். முன்னதாக, ரஷ்ய மத்திய ராணுவ மாவட்டத்தின் துணை தளபதி Rustam Minnekayev, தெற்கு உக்ரைனை முழுமையாக கட்டுப்பாட்டில் எடுத்தால் Transnistria-வை எளிதாக அணுக முடியும் என தெரிவித்தார். Transnistria, மேற்கில் மால்டோவாவில் இருந்து பிரிந்த ரஷ்ய-ஆக்கிரமிப்பு பகுதியாகும். ஒட்டுமொத்த […]
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் படியில் பயணம் செய்து 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் தண்டவாளத்தில் செல்பி எடுப்பதால் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அரசு பல்வேறு அறிவுரைகளை கூறினாலும் செல்ஃபி மோகத்தால் உயிரிழப்புகள் தினம் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
வேலூர் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த பேருந்து குடியாத்தம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆற்காடு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படடியும், பேருந்தின் பின்புறம் ஆபத்தான முறையில் பயணம் செய்ததை ஓட்டுநரும், நடத்துனரும் […]
அரசியலுக்கு போவதாக தான் கூறியதும் தன்னுடைய தாயார் எச்சரித்ததாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான இவர் மிகச் சிறு வயதிலேயே அரசியலில் நுழைந்தவர். தற்போது இவர் காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவர் அரசியலுக்கு போவதாக முதன் முறையில் தன் தாயிடம் கூறியபோது அவர் எச்சரித்ததாக கூறியுள்ளார். ஆனால் “உன்னுடைய செயல்களுக்கு நீதான் பொறுப்பு. எப்போதும் நேர்மையும், குணமும் மிக முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்” என்று தாயார் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லி மட்டும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் […]
பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரென்ஸியை பயன்படுத்தலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து கூறியுள்ளார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அரசின் மிகப்பெரிய ஆபத்து, பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்க கிரிப்டோகரன்சியை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 52 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் தொடர்ந்து கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் இருந்து உக்ரைனிய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டால் ரஷ்யாவுடனான அனைத்து அமைதி பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு போரோடியங்காஸ் நகரம் முழுவதும் ரஷ்ய தாக்குதலால் முற்றிலும் சீர்குலைந்து காணப்படுகிறது என கூறிய அவர் உக்ரைன் தனது குடிமக்களை வைத்தோ அல்லது பிரசவ பிரதேசத்தை வைத்தோ […]
மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வன பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் காணொலிக் காட்சி வெளியானது . இதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்குவோர், மது அருந்திய பின், அந்த காலி கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் […]
உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமை நிலைக்கு தள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை ஐ.நா விடுத்திருக்கிறது. அதாவது 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ் கூறும் போது, உக்ரைனில் நடக்கும் துயரங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உக்ரைன் எல்லைகளையும் தாண்டியும் இந்தப் போர் வளர்ந்த நாடுகள் மீது சத்தமில்லாமல் […]