தனியார் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நேரடியாக நடைபெற்று வருகிறது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் இதனை 9 லட்சம் மாணவர்கள் எழுதயிருக்கிறார்கள். பதினோராம் […]
Tag: எச்சரிக்கை
தைவான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, “தைவானின் தென்மேற்கில் உள்ள தீவில் நேற்று முன்தினம் திடீரென சீன நாட்டின் மக்கள் விடுதலை ராணுவம் விமானப்படையின் Y-8 எலியன்ட் ஸ்பாட்டர் விமானம் காணப்பட்டது. இதையடுத்து உடனடியாக சீன விமானத்தை தங்களுடைய நாட்டிற்கே திரும்பி செல்லும்படி வானொலி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் இந்த புலனாய்வு விமானத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக பயன்படுத்தினோம். இந்த ஆண்டில் இதுவரை இல்லாத […]
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று வரும் 23ஆம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகும். சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். […]
இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் அதிக வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த சில தினங்களுக்கு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதிகமான வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவாவில் அடுத்த இரண்டு மூன்று நாட்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில், இத்தகைய வெப்ப அலைகள் வீசுவதற்கு தெற்கு கண்டக் காற்றே காரணம்” என்று இந்திய வானிலை […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்ததால் அண்மையில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகளை அறிவித்திருந்தது. அதன் வாயிலாக பல்வேறு பட்டதாரிகள் பயனடைந்து கொள்ளலாம் என்பதால் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது குரூப்-4 அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற விழுப்புரம் டாக்டர் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு […]
சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள தெருவிளக்கு மின்கம்பங்களில் கேபிள் டி.வி., இணையதள வசதிகளை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டு, அங்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் மின்துறை வாயிலாக தெருவிளக்கு கம்பங்களிலுள்ள உபயோகமில்லாத மற்றும் வாடகை செலுத்தாத கேபிள் டிவி, இணையதள நிறுவனங்களின் 74.60 கி.மீ. நீளமுள்ள “வயர்கள்” அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் 59.91 கி.மீ. நீளமுள்ள வயர்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே வாடகை செலுத்தாத நிறுவனத்தின் வயர்களை அகற்றுதல் மற்றும் ஒழுங்குப்படுத்தும் பணிகள் தொடர்ந்து […]
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (15-03-2022) முதல், நாளை மறுநாள் (17-03-2022) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், பூமத்திய […]
கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை தனியார் பள்ளிகள் வெளியில் நிற்க வைக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் தொடக்கக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களையும் படித்து அறிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாக சீரான எதிர்காலத்தை உருவாக்க முடியும். பெற்றோரின் விருப்பப்படி […]
“திருமணத்திற்கு நாள் குறிப்பது போல மீண்டும் இந்தியாவில் கொரோனா பரவல் தொடரும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது. ஆகையால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்” என்று அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இன்று 100 க்கு கீழ் சென்றதால் இனி கொரோனாவால் எந்த பிரச்சினையும் இல்லை.ஊரடங்கு போன்ற செய்திகள் வராது என மக்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் இந்த எச்சரிக்கையை சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொதுமக்களை பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்க அல்லது விற்கலாம் என்ற போலியான விஷயங்களுக்கு பலியாகிவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளது. ரிசர்வ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாக பயன்படுத்துகிறது. மேலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நாணயங்கள், பழைய ரூபாய் நோட்டுக்களை விற்குமாறு வலியுறுத்தி வருவதாகவும், கட்டணங்கள், கமிஷன்கள் அல்லது வரிகள் வசூலிக்கப்படுகிறதாகவும் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் கட்டணங்கள் மற்றும் கமிஷன்களை ரிசர்வ் […]
தங்களுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு வழங்கி வரும் ஆயுதங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் தாக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு துணைப் பிரதமா் சொ்கெய் ரியப்கோவ் கூறியதாவது, பாதுகாப்பு விவகாரத்தில் ரஷ்யா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. தற்போது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பெரும்பாலான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருவது மிகவும் ஆபத்தான செயலாகும். அத்தகைய ஆயுதங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ரஷ்யா ராணுவத்தின் சட்டப்பூா்வ தாக்குதல் இலக்குகள் என்பதை […]
உக்ரைனில் ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் ரஷ்யாவின் வழக்கமான வர்த்தக உறவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி 7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கு விருப்பமான நாடுகளின் அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். சர்வதேச […]
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியா-ஜப்பான் ஆய்வகம், ரிகா இன்ஸ்ட்டியூட் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் மதிவாணன், ஜப்பான் கியோ பல்கலைக்கழகத்தின் இந்தியா-ஜப்பான் ஆய்வகத்தின் இயக்குனர் ரஜிப் ஷா, சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டுக்கான தூதர் டகா மசயுகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை உள்ளிட்ட நகரங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தியா ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் கருதினர். ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் எந்த […]
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் ஆன்லைன் மோசடி தொடர்பான எச்சரிக்கை. சமீப காலமாக இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதன் மூலமாக பணத்தை இழந்தவர்கள் ஏராளம். இந்த விஷயத்தில் வங்கி தரப்பில் இருந்தும் நிறுவனங்கள் தரப்பில் இருந்தும் பல விழிப்புணர்வு வழங்கப்பட்டு வந்தாலும் தொடர்ந்து ஏமாறுபவர்கள் […]
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த 2021ஆம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இந்நிலையில் ஆட்சிக்கு வந்ததும் நிதி நெருக்கடி காரணமாக அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி அளிக்க முடிவு செய்யப்பட்டு, 5 சவரன் அளவு உள்ள நகைகளை வைத்து கடன் பெற்றவர்களிடம் விபரங்களை சேகரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. […]
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் இன்று (மார்ச்.5) திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு […]
மீன் கடைகளை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மீன் கடைகளை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், தியாகராஜ், உதவியாளர் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் டாக்டர் பிரபாவதி கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுகிறதா? ரசாயனம் தடவி […]
பேஸ்புக் நிறுவனம் சில பயனாளர்களுக்கு எச்சரிக்கை இ-மெயில் ஒன்றை அனுப்பி வருகிறது. அதில் பேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பேஸ்புக்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தாதவர்களின் கணக்கு ஹேக் செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த இ-மெயிலை அனுப்பி வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 7-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]
பிரிட்டன் அரசு அந்நாட்டு மக்கள் யாரும் ரஷ்யாவிற்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்கிரன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நாட்டை காப்பாற்ற முனைப்பில் உள்ள உக்ரைன் படைகளை முன்னேற விடாமல் ரஷ்யா தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். ரஷ்ய […]
உலகம் முழுவதும் யூடியூப் (Youtube) பயன்படுத்தி பலர் ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்து வருகிறார்கள். ஆனால் சிலர் ‘prank show’ என்ற பெயரில் ஆபாசமாகவும், வெறுப்பை தூண்டும் வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், ‘kovai 360’ யூடியூப் சேனல் prank show என்ற பெயரில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கன்டென்ட்டுகளை உருவாக்கி அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சாலையில் நடந்து செல்பவர்களின் முகத்தில் அடிப்பது போல் நடிப்பது, எலக்ட்ரிக் […]
வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறும் யாரையும் நம்பி மோசடியில் சிக்காதீர்கள் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் பணவீக்க பிரச்சினையும், வேலையில்லா திண்டாட்டமும் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது.மேலும் வேலை தேடுவோருக்கு ஒரு வேலை கிடைப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வேலை தருவதாக கூறி நிறையப் பேர் ஏமாற்றுகின்றனர். வருமான வரித்துறை இது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை வாங்கித் தருவதாக […]
உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்ய படைகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருவதால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம்,உக்ரைனின் தங்கி இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக ஆலோசனை வெளியிட்டுள்ளது, “அதில் உக்ரைனில் ராணுவச் சட்டம் அமலில் இருப்பது உங்களுக்குத் தெரியும். இந்நிலை மக்கள் வெளியே வருவது கடினம். தலைநகரில் தங்குவதற்கு இடம் இன்றி தவிக்கும் மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மீண்டும் எச்சரித்துள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாளமாகும். ஆதார் கார்ட் இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாது. அதேபோல் பணப் பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் பான் கார்டு என்பது கட்டாயமாகும். இந்த ஆதார் கார்டையும் பான் கார்டையும் பொதுமக்கள் அனைவரும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சற்று கால […]
SRide ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் நூதன கும்பல்களின் மோசடி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் சில நிறுவனங்கள் உரிய அனுமதியும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில்sRide எனப்படும் மொபைல் ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில்sRide உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி […]
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்த காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மீண்டும் ரயில் சேவைகள் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நாட்களில் பல பேர் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கின்றன என்று தகவல் வெளியாகியது. இதன் காரணமாக சோதனை செய்யப்பட்டு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் […]
தமிழகத்தில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முன் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. அலகு தேர்வுகளை நடத்துவது அனைத்தும் மொபைல் வழியாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் தொடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடங்களை படித்து வருவதால் அவர்களின் கற்றல்திறன் பாதிக்கப்படுவதாகவும் கல்வியாளர்கள் எச்சரித்தனர். […]
ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப் செயலிகள் மூலம் பகிர வேண்டாம் என மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. இந்தியாவில் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஒரு செல்போன்குள்ளே உலகம் அடங்கிவிடும் என சொல்லும் அளவிற்கு டெக்னாலஜி உள்ளது. இதில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற செய்திகள் வாயிலாக நாம் பலவற்றை பார்த்து,பகிர்ந்து வருகிறோம். எனினும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் ஆய்வுகள் மூலம் […]
ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருவதால் பிஎஃப் நிறுவனம் தனது உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் சமூக ஊடகங்களில் பிஎஃப் பற்றிய தகவலை பகிர கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு ஒரு சமூக ஊடகத்தில் பகிர்வதால் பெரிய மோசடிகளுக்கு ஆளாகலாம். மேலும் பிஎஃப் அமைப்பு தனது வாடிக்கையாளர்களிடம் ஒருபோதும் பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி விவரங்கள், […]
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்களது பான் கார்டு ஆதார் எண் இணைக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் இதை செய்யாவிட்டால் அவர்களின் வங்கி சேவை நிறுத்தப்படலாம் என வங்கி கூறியுள்ளது. இதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இது பற்றி ஸ்டேட் பாங்க் […]
உக்ரைன் ரஷ்யா படையெடுப்பைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளனர். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை நோட்டா அமைப்பில் சேர கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பு நிராகரித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் ஒரு லட்சம் படை வீரர்களையும் போர் தளவாடங்களையும் குவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மேலும் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் தான் ரஷ்ய படைகளை குவிப்பதாக அமெரிக்கா […]
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கட்டிப்பிடி தினம், மேற்று முத்தத் தினத்தை தொடர்ந்து இன்று (பிப்ரவரி 14) காதலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 14) கன்னியாகுமரி கடற்கரைக்கு வரும் காதலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக காதலர்கள் மறைவான இடங்களுக்கு சென்று அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதேபோன்று சென்னை உள்ளிட்ட […]
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கட்டிப்பிடி தினம், இன்று முத்தத் தினத்தை தொடர்ந்து நாளை (பிப்ரவரி 14) காதலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 14) கன்னியாகுமரி கடற்கரைக்கு வரும் காதலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதன் காரணமாக காதலர்கள் மறைவான இடங்களுக்கு சென்று அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதேபோன்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் […]
தமிழகத்தில் 8ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான தேசிய வருவாய் வழி தேர்வுக்கு கட்டணத்தை செலுத்தாவிட்டால், ஹால் டிக்கெட் கிடைக்காது என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இணை இயக்குனர் பொன்குமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “தேசிய வருவாய்வழி, திறன் தேர்வான என்.எம்.எம்.எஸ். ஆகிய தேர்விற்கு பள்ளிகளிலிருந்து விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த விவரங்களை தேர்வுத் துறை உதவி இயக்குனர்கள் இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவேண்டும். இதனிடையில் தேர்வு கட்டணம் செலுத்தாதோர் […]
லோன் ஆப் செயலிகள் வாயிலாக அதிகமான வட்டிக்கு கடன் கொடுத்து, பிறகு தொல்லை செய்யும் மோசடி கும்பலை கடந்த வருடம் ஜனவரி மாதம் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட செயலிகளை கண்டறிந்து அவற்றை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கிடையில் லோன் செயலிகள் மறுபடியும் பிளே ஸ்டோர், வெப்சைட்டுகள் ஆகியவைகளில் அதிகரித்து வருவதாக தெரிகிறது. லோன் ஆப் செயலிகள் மூலமாக கடன் வாங்கும்போது, தனிப்பட்ட விபரங்களை சேகரித்துக் கொண்டு […]
குரங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3 வது அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், தற்போது குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசனூர் வன நோய்(kyasanur Forest Disease) கேரளாவில் உள்ள வயநாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதன் முதல் பாதிப்பானது கல்பெட்டா அருகே உள்ள ஒரு கிராமத்தில் பதிவாகியுள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் முன்னதாக விலங்குகளும் பதிவாகியுள்ளது. மேலும் இது டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட […]
அண்மையில் ரயில்வே வாரியம் நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு பீகார் மாநிலத்தில் பெரிய கலவரம் வெடித்தது. ரயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுவதாக ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் ரயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் மோசடியாளர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தென்னக ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே பணிகளில் சேர அதிகாரப்பூர்வமாக 21 ரயில்வே பணியாளர் தேர்வாணையங்கள்(ஆர்.ஆர்.பி.) மற்றும் […]
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சென்னை திருவள்ளூர்,காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்து வருவதாகவும், அதோடு கோவை, திருப்பூர், நீலகிரி எல்லைப்பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். அதோடு தமிழகத்தில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் தடுப்பூசி […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அது மிகப்பெரிய உயிர் சேதங்களை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்ற கோரிக்கையை அந்நாட்டிற்கு விடுத்துள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மேல் குறிப்பிட்டுள்ள அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா […]
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெற்றி பெற்றாலும், வெற்றி வாய்ப்பை இழந்தாலும் […]
2021-2022-ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய மார்ச் 15-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே இந்த கெடு தேதிக்குள் யாரேனும் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அவர்களுக்கான வருமானவரி தொகையில் 50% முதல் 200% வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் 3-7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். அபராதம் மற்றும் சிறை தண்டனை இரண்டும் சேர்த்தும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் வருமானவரி தொகை ரூ.1,000-க்கும் மேல் இருக்கும் பட்சத்தில் வருமான வரித்துறை […]
ஓமிக்ரானை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் நியோகோவ் என்று உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா மென்மேலும் உருமாறி உலக நாடுகளுக்கு பரவுவதால் இதுதொடர்பாக அனைவரிடத்திலும் பெரும் அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரானை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் புதிய மாறுபாடான […]
தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக சீனா கூறுகிறது. ஏற்கனவே அமெரிக்கா கடந்த மாதம் சீனாவின் மனித உரிமை மீறல்கள் காரணமாக அதிகாரப்பூர்வ குழுவை குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அனுப்பப் போவதில்லை என்று அறிவித்தது. இந்நிலையில் சீனா அமெரிக்காவை கடுமையான எச்சரித்துள்ளது. அதாவது சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் பேசிய […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோணா பரவல் அதிகரித்து வந்த நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்நிலையில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த கட்டமாக பிப்ரவரி 15ஆம் தேதி வரை […]
மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் பொய்யான செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அந்த புகாரில், பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை மக்களிடையே பரப்பும் வகையில் பதிவு ஒன்றை செய்துள்ளதாகவும், அதேபோல மதத்தின் அடிப்படையில் மக்களிடையே, வெறுப்பு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன . தமிழகத்தை பொருத்தவரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும்,மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவல் வேகம் குறைந்து வருவதாகவும் மத்திய குடும்ப நலத்துறை […]
தற்போதைய காலகட்டத்தில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர். தொழில்நுட்பம் பெருகப் பெருக மோசடிகளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவ்வகையில் பழைய மோசடி ஒன்று மீண்டும் உயிர் பெற்றுள்ளது. அதில் அதிக மோசடிக்கு ஆளாக்கப்படுபவர்கள் யார் என்றால் தங்களது கணினிகளில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் தான். இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பவர்களுக்கு “browser has been locked” என்ற போலியான popup […]
தற்போது மெட்ரோ நகரங்களில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் வைரஸ் வரும் காலத்தில் சிறு மற்றும் குறு நகரங்கள் அதைத்தொடர்ந்து கிராமங்களில் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கேரளாவின் கொச்சி இந்திய மருத்துவக் கழகத்தின் கோவிட் தடுப்பு குழு தலைவர் டாக்டர் ராஜு ஜெயதேவன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தற்போது பெரிய நகரங்களில் பரவிவரும் இந்த தொற்று சில வாரங்களில் கிராமங்களில் பரவும். மேலும், டெல்டா, ஒமைக்ரான் என எந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸும் வீரியம் […]
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் மத விவகாரம் நுழையக் கூடாது. குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு […]