Categories
உலக செய்திகள்

அதிபர் தேர்தலில் தலையிடும் 3 நாடுகள்… நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்… அமெரிக்கா எச்சரிக்கை…!!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கின்றது. அந்தத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மிகப்பெரிய திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை பெருக்க சீனா திட்டம்… பென்டகன் எச்சரிக்கை…!!!

சீனா தனது அணு ஆயுதங்களை வருகின்ற 10 ஆண்டுக்குள் இரு மடங்காகப் பெருக்க திட்டம் தீட்டியுள்ளது. சீனா தனது அணு ஆயுதங்களை அடுத்து வருகின்ற 10 ஆண்டுகளுக்குள் இரு மடங்காக பெருக்குவதற்கு திட்டம் தீட்டியுள்ளது. அதில் நிலம், கடல் மற்றும் வான் வழியாக பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமாக ஏவக்கூடியவை உட்பட பல்வேறு ஆயுதங்கள் அடங்கியுள்ளன. இத்தகைய தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை பென்டகன் கூறியுள்ளது. தென்சீனக் கடலில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள், தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவில் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு “அலர்ட்”… பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் கொடுக்க ஏற்றவாறு  மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அறிவிக்க வேண்டும் என்றும், அதில் பெற்றோர்கள் தங்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் அதனை தெரிவிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதிக கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“ஜியோ மார்ட்” யூஸ் பண்றீங்களா?…”மக்களே உசார்”… ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!

ரிலையன்ஸ் நிறுவனம், பொருட்களை வாங்கும் ஜியோ மார்ட் போன்ற போலி செயலி வலம் வருவதாக மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் வீட்டிற்கு  தேவையான பொருட்களை ஆன்லைன் செயலிகள் மூலம் வாங்கி வருகின்றனர். ஆனாலும் இதில் அவ்வப்போது சில சிக்கல்களை மக்கள் எதிர்கொள்கின்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில்  ஆன்லைனில் விற்கும் ஜியோமார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள் இயங்கி வருவதாகவும் வாடிக்கையாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் ரிலையன்ஸ் சில்லறை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“இந்த ஆப் எல்லாம் இருக்கா?”… உடனே டெலிட் பண்ணுங்க… இல்லனா மாட்டிப்பிங்க…!!

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆபத்தான செயலிகளை நீக்கம் செய்யாவிட்டால் பணம் திருட்டு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலிகள் மூலம் நாம் அனைத்து வேலைகளையும் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஆனாலும் சில செயலிகள் மூலம் நம்முடைய மொபைல் போன்களுக்கோ அல்லது நமது பேங்க் அக்கவுண்டிலிருந்து பணத்தை திரட்டுவதற்கோ அதிக வாய்ப்புள்ள சில செயலிகள் நம்முடைய பிளே ஸ்டோரில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை… இந்திய வானிலை ஆய்வு மையம்..!!!

டெல்லியில் அடுத்து வருகின்ற மூன்று நாட்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை சில நாட்களாக தீவிரமடைந்துள்ளதால், குஜராத், அசாம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் அடுத்த மூன்று நாட்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ” தலைநகர் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை … சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்  இன்று கன மழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகாதில் உள் மாவட்டமான திருச்சி ,பெரம்பலூர்,கரூர்,நாமக்கல் , சேலம் போன்ற மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை இருந்தது . திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை சுமார் ஒருமணி நேரத்திற்குமேல்  கொட்டி தீர்த்தது.  இந்த நிலையில் மண்டல வானிலை ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

அமீரகத்தில் வேகமெடுக்கும் கொரோனா… சுகாதார அதிகாரி எச்சரிக்கை…!!!

அமீரகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமீரகத்தின் கொரோனா பாதிப்பு குறித்து அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் செய்தி தொடர்பாளரான டாக்டர் பரிதா அல் ஹொசனி கூறுகையில், ” அமீரகத்தில் சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா பாதிப்பிற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பின சார்ந்த மக்களுமே காரணம். இந்த பாதிப்பினை தடுப்பதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஒரு […]

Categories
உலக செய்திகள்

குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயம்… உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!!!

12 வயது குழந்தைகள் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அதில் எந்தவித பயனும் இல்லாமல், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா உபகரணங்கள் ஊழல்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!!!

கொரோனா பாதுகாப்பு உபகரணங்களில் ஊழலில் ஈடுபடுவது கொலை செய்வதற்கு சமம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியிருக்கிறார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இதுகுறித்து கூறுகையில், ” உலகின் கொடூரமான காலகட்டத்தில், தொற்று நோய்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை கொலை செய்வதற்கு சமம். அதிலும் குறிப்பாக பிபிஇ தொடர்பான ஊழல் உண்மையிலேயே கொலை செய்வதற்கு தான் சமம். ஏனென்றால் சுகாதார ஊழியர்கள் அனைவரும் இந்த உபகரணங்கள் இல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து மீண்டும் முடக்கப்படலாம்… அதிகாரிகள் கடும் எச்சரிக்கை…!!!

இங்கிலாந்தின் மீண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், நாடு மீண்டும் முடக்கப்படலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், மீண்டும் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மற்றொரு முறை இங்கிலாந்தை முடக்குவது கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். மேலும் ஸ்பெயினை போன்று கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டை மடக்குவதை தவிர வேறு எந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

நாகலாந்தில் பரவும் சீன பெண் இயேசு வழிபாட்டு முறை… பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் எச்சரிக்கை…!!!

சீனப் பெண் இயேசு வழிபாட்டு முறை குறித்து நாகலாந்து மாநிலத்தில் பாப்டிஸ்ட் சர்ச் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் கடந்த 1990ஆம் ஆண்டு பெண் இயேசுவை வணங்கும் வழிபாட்டு முறை நிறுவப்பட்டது. அதன் பெயர் சர்ச் ஆப் சர்வ வல்லமையுள்ள கடவுள் வழிபாட்டு முறையாகும். அதுமட்டுமன்றி சீனாவில் இயேசு ஒரு பெண்ணாக உயிர்த்தெழுப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது சீனாவில் இந்த வழிபாட்டு முறை தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தப் பெண் இயேசு வழிபாட்டு முறை சீனாவின் அருகே […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அத்துமீறி நுழையும் மீனவர்கள்… அதிபரின் கடுமையான எச்சரிக்கை…!!!

இலங்கையில் வெளிநாட்டு மீனவர்கள் அத்துமீறி நுழைய கூடாது என்று அதிபர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே தற்போது பதவியேற்றுள்ளார். அதன் பின்னர் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய அதிபர் கோத்தபயா ராஜபக்சே, ” இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கக் கூடிய வகையில், அவர்களின் தொழில் துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு தடை தடை விதித்து, அதன் மூலமாக உள்நாட்டு மீன்களை சந்தைக்கு கொண்டு […]

Categories
உலக செய்திகள்

பாத்ரூம் சென்ற நபர்… கோப்பையில் தலையை நீட்டிய பாம்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் கழிவறை ஒன்றில் தலையை நீட்டியபடி பாம்பு ஒன்று வரும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் ஒருவரது வீட்டில் அமைந்துள்ள கழிவறையில் இருக்கும் கோப்பையில் தலையை நீட்டியபடி பாம்பு ஒன்று வருகிறது. அந்தப் பாம்பு விஷ தன்மை அற்றது என அறியப்பட்டாலும் எப்படி அது இதனுள் வந்து இருக்கும் என்பது பற்றிய தகவல் இல்லை. இந்த காணொளி சமூக வலை தளத்தில் பதிவிட்டு சில மணி நேரங்களிலேயே […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தை புரட்டி எடுக்கும் புயல்… எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்…!!!

இங்கிலாந்தை 70 மைல் வேகத்தில் புயல் புரட்டி எடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தைக் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் புயல் புரட்டிப்போட இருப்பது மட்டுமல்லாமல், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்க்க இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இன்று ஒரு சில இடங்களில் சில மணி நேரங்களிலேயே 50 மில்லி மீட்டர் வரை மழை கொட்டி தீர்த்தது. அது மட்டுமன்றி பல்வேறு இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியில் சந்தேகம்… ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஜெர்மனி…!!!

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி போதுமான அளவிற்கு பரிசோதனை செய்யப்படவில்லை என்ற ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனைகளுக்கு பின்னர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு ரஷ்யா என்று ஜனாதிபதி புதின் நேற்று அறிவித்திருந்தார். அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று பிதின் மற்றும் பிற அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த மாதத்தின் இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தன்னார்வ அடிப்படையில் மருத்துவ பணியாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இறப்பு விகிதம்… ஏழாவது இடத்தில் பிரான்ஸ்… மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர்…

பிரான்ஸ் மக்கள் அனைவரும் தவறான பாதையில் செல்வதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்சில் கொரோனாவின் பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பொது மக்களை எச்சரித்துள்ள பிரதமர், நாடு கடந்த இரண்டு வாரங்களாக தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். கடந்த 2 நாட்களில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,397 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவின் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு பருவ மலையின் தீவிரத்தால் கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவிலும் ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. கிருஷ்ணராஜசாகர், ஹேரங்கி, ஹேமாவதி மற்றும் கபினி ஹாக்கி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்நிலையில் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, சிக்கமகளூரு, ஆசன், கூடக்க மற்றும் ஷிமோகா ஆகிய  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

24 மணி நேரத்திற்குள்….. குமரியில் கடல் சீற்றம்….. மக்களே பாதுகாப்பா இருங்க! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கடற்கரை பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்க கூறி வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் நீலகிரி பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் நமது அண்டை மாநிலமான கேரளத்திலும் பல்வேறு பேரிடர்கள் கனமழையால் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கேரளாவில் ரெட் அலார்ட் எச்சரிக்கை…!!

கேரளாவில் அதிகரிக்கும் பருவமழை காரணமாக இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, வயநாடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதுவரை மழை தொடர்பான விபத்துக்களில்  36 பேர் பலியாகியுள்ளனர். மழை வெளுத்து வாங்குவதால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகி […]

Categories
மாநில செய்திகள்

“UNKNOWN SOURCE” சிறு ஆசை…. பேரிழப்பு தரும்…. மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை….!!

ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு செயலிகளை இன்ஸ்டால் செய்வது குறித்த முக்கிய தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். ஆண்ட்ராய்டு மொபைலை பொருத்தவரையில், பிளே ஸ்டோரில் பல செயலிகள் பணம் கொடுத்தால் மட்டுமே சரியாக இயக்க முடியும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இருக்கும். அந்த வகையான செயலிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் ஏராளமாக இலவசமாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இலவசமாக நல்ல செயலிகள் கிடைக்கிறதே என்ற ஆசையில் மக்கள் அந்த செயலிகளை டவுன்லோட் செய்து விடுகிறார்கள். அப்போது அதனை இன்ஸ்டால் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 4 விசயத்த பண்ணிடாதீங்க….. மொத்த பணமும் சுவாகா….. மத்திய அரசு எச்சரிக்கை….!!

ஆன்லைன் கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க கீழ்க்கண்ட நான்கு செயல்முறைகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில், ஆன்லைன் கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளதாகவும், கீழ்கண்ட இந்த நான்கு முறைகள் மூலமாக நடைபெற்று இருப்பதால் இவற்றிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய, மாநில அரசுகள் அறிவுரை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா ட்ரைலர் தான்…. 2060இல் காத்திருக்கும் பேராபத்து….. பில்கேட்ஸ் கருத்து….!!

கொரோனாவை விட மிகப்பெரிய ஆபத்து எதிர்காலத்தில் காத்திருப்பதாக பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் கையில் எடுத்த ஒரே ஆயுதம் ஊரடங்கு உத்தரவு தான். இந்த ஊரடங்கு உத்தரவால், பல நாடுகள் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து பிரபல தொழிலதிபரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் கருத்து […]

Categories
மாநில செய்திகள்

“மிகவும் ஆபத்து” இந்த இடத்தில் முகக்கவசம் அணியாதீங்க….. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

உடற்பயிற்சி கூடங்களில் முக கவசம் அணிவது மருத்துவரீதியாக ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் பல செயல்களுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் உடற்பயிற்சி கூடங்கள் வருகின்ற 10ம் தேதி முதல் செயல்பட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருருந்தார். […]

Categories
உலக செய்திகள்

“டிக் டாக் செயலி” அமெரிக்காவை எதிர்க்கும் சீனா….. வலுப்பெறும் மோதல்….!!

டிக் டாக் செயலியை அமெரிக்கா திருட முயற்சி செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையத்தளத்தில் மிகவும் பிரபலமாக்கிய டிக் டாக், தற்போது அனைத்து இடங்களிலும் எதிர்ப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் டிக் டாக் செயலுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும் இழப்பாக சீனா கருதி இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவும் தடை விதிப்பதாக கூறி பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.டிக் டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை விலைக்கு வாங்குவதற்கு அதன் தாய் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

10 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ..!!

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அரபிக்கடல் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே….. கவனம் செலுத்துங்க…… குழந்தைகள் வாழ்க்கை பாதிப்பு….. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் தளர்வுகளுடன் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை” பிரிட்ஜில் இருந்த உணவை சாப்பிட்ட பெண் மரணம்…. பலருக்கும் இது ஒரு பாடம்…!!

பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ரெஃப்கா. வெயிட்டராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த வாரம் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர் பிரிட்ஜில் இருந்து பாஸ்தாவை எடுத்து சாப்பிட்டுள்ளார். ஆனால் பிரிட்ஜின் உள்ளே இறால் இருந்ததை கவனிக்காமல் அப்படியே சாப்பிட்டதால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் உதவியை நாட, அவர்கள் மருத்துவ குழுவை அழைத்தனர். ஆனால் அதற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு கொரோனா….. 16 நோயாளிகள் தப்பியோட்டம்….. பத்திரமா இருங்க…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…..!!

திருவள்ளூர் அருகே 16 கொரோனா நோயாளிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அயராது உழைத்துவரும் அதிகாரிகள் மத்தியில், சிலரின் அலட்சியத்தாலும், பொதுமக்களின் தேவையற்ற செயல்களாலும் கொரோனா பாதிப்பு பரவுவதற்கான வாய்ப்புகள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றன. அந்த வகையில், திருவள்ளூர் அருகே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 16 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆரஞ்சுஅலெர்ட்” அடுத்த 5 நாட்களுக்கு தீவிரம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!

கேரள, கர்நாடக மாநிலத்திற்கு கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்பதால், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அசாம் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

விவசாயத்தை அழிக்க மர்மபார்சல்….. சீனாவின் புதிய சதி….. 3 நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை….!!

சீன நாடுகளிலிருந்து கீழ்கண்ட மூன்று நாடுகளுக்கு மர்ம பார்சல் ஒன்று வந்துள்ளதையடுத்து அந்நாட்டு அரசுகள் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் ஒரு விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு தான். இந்த கொரோனா வைரஸ் சீனா நாட்டின் ஹூகான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கி, இன்று உலக நாடுகளில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் சீன நாட்டின் மீது மிகுந்த […]

Categories
தேசிய செய்திகள்

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதில் கொரோனா பரவும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்..!!

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா மிக எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளது. அதில் “புகைப்பழக்கம் கொண்டவர்கள் கையில் கொரோனா வைரஸ் தொற்றி விட்டால் வாய்க்கு மிக எளிதாக செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. புகைப்பிடிக்கும் போது கை விரல்கள் வாய் பகுதியினை அதிகமாக தொடக் கூடிய வாய்ப்பு உள்ளதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்ற நபர்களை விட மிக எளிதில் கொரோனா பரவும். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் பாதிக்கப்படுவார்கள் – அதிர்ச்சி கொடுத்த அதிகாரி..!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி லட்சுமி பிரியா அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,107 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் நேற்று (நேற்றுமுன்தினம்) மட்டும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று எதிரொலி…. 70 லட்சம் குழந்தைகளுக்கு அடுத்த பிரச்சனை – ஐநா எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோய் நெருக்கடியால் 70 லட்சம் குழந்தைகள் தங்களின் வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் பாதிப்படைவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உணவு வினியோகத்தை பாதிப் அதன் விளைவாக 70 லட்சம் குழந்தைகள் தங்களின் வயதுக்கு ஏற்ற உயரம் அல்லாமல் பாதிக்கப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. 118 ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நிபுணர்கள் குழு விசாரித்தது. அதில், ஐந்து வயதிற்கு உள்ளான குழந்தைகளுக்கிடையே […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றை ஒழிப்பது கடினமான செயல்…. உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை…!!

உலகம் எவ்வளவு முயற்சி மேற்கொண்டாலும் கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. அதற்குமுன் ஒரு கடின பாதை உள்ளது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்து உலகம் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டாலும் அதற்கு முன்னே நீளமான ஒரு கடின பாதை இருக்கின்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தால் ஐந்து முறை சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இரண்டு முறை எபோலா பரவல்கள், ஜிகா, போலியோ […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்யாதீங்க….. மொத்த காசும் போய்டும்….. காவல்துறை எச்சரிக்கை….!!

இலவசமாக ஆக்ஸி மீட்டர் என்னும் செயலியை டவுன்லோட் செய்ய கூறி லிங்க் ஏதேனும் வந்தால் அதனை புறக்கணிக்குமாறு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில்நுட்பம் வளர வளர அது நமக்கு கூடவே ஆபத்தையும் தேடித்தருகிறது. இன்று அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. ஸ்மார்ட்போன் இல்லாத வீடுகளை காண இயலாது. தற்போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதிலிருந்தே வீட்டில் இருந்தபடியே அனைத்து வேலைகளையும் முடிந்த அளவிற்கு மக்கள் பார்த்துக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள். அதற்கு பெரிதும் உதவியாக […]

Categories
தேசிய செய்திகள்

“கவனம் தேவை” இந்த தவறை செய்யாதீர்கள்….. மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!

டிக்டாக், ஹலோ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட செயலிகளின் லிங்குகளை அனுப்பி டவுன்லோட் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டால், அந்த தவறை செய்யாதீர்கள் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த மாதம் இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ வீரர்களின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக இந்தியர்கள் சீன பொருட்களை வாங்கக் கூடாது என்றும், சீன செயலிகளை பயன்படுத்தக்கூடாது […]

Categories
உலக செய்திகள்

ஐநா எச்சரிக்கை: மிக விரைவில் இந்தியாவிற்கு வெட்டுக்கிளிகள் வந்துவிடும்… உணவு பொருட்கள் நாசமாகும் அபாயம்…!!

இந்தியா பாகிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் உணவு தானிய பாதுகாப்புக்கு பாலைவன வெட்டுக்கிளிகளால் ஆபத்து வருவதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராஜஸ்தான் மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தட்பவெப்பநிலை மாற்றத்துக்கும், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பிற்கும் தொடர்பு இருக்கின்றது என ஐ.நா சர்வதேச வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்துமாக் கடலில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தட்பவெட்ப நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. உலகம் வெப்பமயமாகி வருவதற்கு வெட்டுக்கிளிகளின் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா இனி வேடிக்கை பார்க்கப் போவதில்லை…. களத்தில் இறங்கி செயல்படும்… சீனாவிற்கு எச்சரிக்கை…!!

இந்தியா வேடிக்கை பார்க்காமல் சர்வதேச விவகாரங்களில் களமிறங்கி செயல்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயற்சி செய்த சீன வீரர்களால் அப்பகுதியில் போர் பதற்றம்  உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அணிசேரா கொள்கையினை பற்றியும், அமெரிக்க நாட்டிடம்  இருந்து தள்ளி இருப்பது பற்றியும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அக்கேள்விகளுக்கு பதில் கூறிய அமைச்சர், அணிசேரா கொள்கையானது குறிப்பிட்ட காலகட்டதுடன் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

“பக்கவிளைவு-எச்சரிக்கை” இந்த உணவை சமைத்த பின்…. மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீங்க….!!

சில உணவு வகைகளை ஒருமுறை சமைத்தபின் மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பொதுவாக சாப்பாட்டிற்கு குழம்பு அல்லது கூட்டு ஏதேனும் ஒன்றை வைக்கிறோமெனில், அது அதிகப்படியாக மிச்சமாகும் பட்சத்தில், அதனை சூடு செய்து மறுநாள் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆனால் அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் இதேபோன்று ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால் அது ஆரோக்கியத்தை பாதுகாக்குமா? என்றால், அது கேள்விக்குறிதான். அந்த வகையில், […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்த மாதிரி படங்களை எடுக்க கூடாது…. இயக்குனர்களுக்கு எச்சரிக்கை….!!

இயக்குனர் மற்றும் ott தளங்களுக்கு விஷ்வஹிந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகாலமாக இந்து மதம், அதில் இருக்கக்கூடிய சாதிய கட்டமைப்பு, அரசியல் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து பல முற்ப்போக்கான இயக்குனர்கள் படங்களை இயக்கி வந்தனர். தற்போது இதற்கு ஆப்பு அடிக்கும் விதமாக சம்பவம் ஒன்று ஆரங்கேறியுள்ளது. அது என்னவெனில், இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை படைப்பின் மூலம் பரப்ப நினைத்தால் அந்த படைப்பை இயக்கும் இயக்குனர்கள் மற்றும் அதை திரையிடும் OTT தளங்கள், திரையரங்கள் எதுவாயினும் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“வைரஸ் ஷூட் அவுட்” கொரோனாவை அழிக்குமா? மருத்துவர்கள் விளக்கம்….!!

வைரஸ் ஷூட் அவுட் என்ற சாதனம் ஒன்று கொரோனாவை அழிக்குமா என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் இந்த வைரசுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் பணியை இந்திய அரசும், பிற உலக நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பரிசோதனையை தீவிரப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்துவதன் மூலம் கொரானா வைரஸ் சங்கிலியை முறியடிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சமயத்தில் இதை பயன்படுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

கிளி மற்றும் லங்கூர் வளர்த்தால் அவ்வளவு தான்… எத்தனை ஆண்டு சிறை தெரியுமா?

கிளி மற்றும் லங்கூரை வளர்த்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று பொதுவாக நாய் பூனை போன்றவற்றை வீட்டில் அதிகம் வளர்ப்பார்கள். சில இடங்களில் கிளி, லவ் பேர்ட்ஸ், புறா போன்றவற்றில் வளர்ப்பார்கள். ஆனால் சிலர் குரங்குகளை வளர்ப்பதற்காக வைத்திருப்பார்கள் ஆனால் தற்போது கான்பூர் வனச்சரகம்  கிளி மற்றும் குரங்கு வகைகளில் ஒன்றான லங்கூர் வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது. கிளியையும் லங்கூரையும் பிடித்து […]

Categories
உலக செய்திகள்

40 நொடிகளில் உயிர் தப்பிய 166 விமான பயணிகள்… நடந்து என்ன?… பதறவைக்கும் சம்பவம்..!!

40 வினாடிகளில் இளம் விமானியின் செயலால் நடக்க இருந்த பெரும் விபத்திலிருந்து விமானம் தப்பியுள்ளது  பிரான்ஸில் இருக்கும் பெர்கெராக்  விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானம் தானியங்கி பாதுகாப்பு அமைப்பினால் மிகப் பெரிய விபத்தில் இருந்து தப்பியது. சம்பவம் நடந்த அன்று வானம் அதிக அளவு மேகமூட்டத்துடன் தென்பட்டதால் விமானி குறிப்பிட்ட விமானத்தை மிகவும் தாழ்வாக செலுத்தியுள்ளார். 842 அடி மட்டுமே விமானத்திற்கும் தரைக்கும் இடையே இருந்த இடைவெளி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்கள் தாழ்வாகவே […]

Categories
உலக செய்திகள்

“எங்கள் பதிலடி பயங்கரமாக இருக்கும்” வடகொரியாவை எச்சரித்த தென்கொரியா…!!

இனி வடகொரியா தாக்குதலில் ஈடுபட்டால் எங்களது பதிலடி மிகவும் மோசமானதாக இருக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது சில தினங்களாக தென்கொரியாவை மிகவும் கடுமையாக வடகொரியா மிரட்டி வந்தது. 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரண்டு நாடுகளுக்கும் பொதுவான தொடர்பு அலுவலகத்தை தகர்க்கப் போவதாகவும்,  இனி இரு நாட்டிடையே எந்த உறவும் இல்லை என்றும், எதிரி நாடாகவே பார்க்கப்படும் என்றும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதனிடையே தென் கொரியா எல்லைமீறி நடந்து கொள்வதாகவும் இதனால் தங்கள் ராணுவத்தினரிடம் நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம்..!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

 “முழு ஊரடங்கு” இந்த செய்தியை பரப்பாதீங்க…. முதல்வர் எச்சரிக்கை….!!

சென்னையில் முழுஊராடங்கு என்ற தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என தமிழக முதல்வர் எச்சரித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் உள்ளது. இருப்பினும் இந்த ஐந்தாவது கட்டத்தில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் சுதந்திரமாக வெளியே நடமாட தொடங்கியுள்ளன. ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட பின் கொரோனா பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் தகவல்!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடல் அலை 3.4 மீ வரை எழும்பும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மணிக்கு 40 முதல் 55கி.மீ வரை சூறாவளி […]

Categories
மாநில செய்திகள்

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வடதமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் […]

Categories

Tech |