தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.அதன் எதிரொலியாக தமிழகத்திலும் கனமழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இந்நிலையில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நெல்லை,குமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, […]
Tag: எச்சரிக்கை
சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பகுதி சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றி திரிகிறது. இந்த மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் அதிகாரிகள் மாடுகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து சொந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். இதனை மீறி கால்நடைகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி மூலம் பிடித்து அப்புறப்படுத்தப்படும் என […]
இனி அனுமதி இன்றி கட்டுமான பணிகளை மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டிட அனுமதி பணிகளை ஒருங்கிணைப்பதற்கு 2019 ஆம் ஆண்டு பொது கட்டட விதிகள் அறிவிக்கப்பட்டன. அந்த விதிகளின்படி உள்ளாட்சி அமைப்புகள் புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.இருந்தாலும் உள்ளாட்சி அமைப்புகளின் பல பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்துறைக்கும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்கள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து […]
தமிழகத்தில் ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தினமும் சராசரியாக விவசாயிகளிடமிருந்து ஆவின் நிறுவனம் மூலமாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது. இவை அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்ச், பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது. ஆரஞ்சு நிற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட 500 மில்லி லிட்டர் ஆவின் பால் 24 ரூபாய், பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய், நீல நிற பாக்கெட் 20 […]
கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் உள்ளூர் பயணிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கொடிவேரி அணைக்கு மக்கள் வந்து குளித்து மகிழ்கின்றார்கள். இந்த சூழலில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி கொடிவேரி அணையில் குளிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடை விதித்து இருக்கின்றனர். மேலும் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் போன்ற அணைகளில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழக கர்நாடக எல்லையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70 ஆயிரம் கன அடியாக […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் […]
தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வங்கிகளில் மோசடி, ஆன்லைன் மோசடி, ஏடிஎம் கார்டு மூலம் மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையில் போலீசார் வேலூர் கோட்டை சுற்றுலா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முன்னுக்கு பின் […]
வெள்ளப்பெருக்கின் காரணமாக வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கண அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதினால் அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. மேலும் வினாடிக்கு 60,000 கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மேட்டூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மேட்டூர் […]
அரசின் விதிமுறைகளை மீறி உரம் விற்பனை செய்யும் உர நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் அமைந்துள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், உரக்கிடங்குகள், கலவை உர உற்பத்தி நிறுவனங்கள், மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்கள் ஆகிய இடங்களில் நேற்று மேலாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ், அற்புதசெல்வி, ஆய்வாளர் ஜி. அனுசுயா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உர […]
இலங்கைக்குச் செல்ல உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறுகையில், இலங்கைக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள்,பயணத்திற்கு முன்பு கரன்சிகளை மாற்றுவது மற்றும் எரிபொருள் சூழல் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் நன்றாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கும் போது கவனம் உடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும்படி அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவசர காரியங்கள் மற்றும் அத்தியாவசிய காரணங்களுக்காக இலங்கைக்கு செல்ல விரும்புவோர் ஏதேனும் […]
இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் இணையதளங்களில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை விற்பனை செய்து பல லட்சங்கள் சம்பாதிக்கிறார்கள். அதாவது ஒரு ரூபாய் நாணயத்திற்கு கூட ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கிறது எனக்கூறி நாணயங்கள் மற்றும் நோட்டுகளும் பல ஆயிரங்களுக்கு பல லட்சங்களுக்கு விலை போகின்றன.அப்படி நீங்கள் பழைய நாணயங்கள் மற்றும் ஓட்டுகளை விற்பதற்கு அல்லது வாங்குவதற்கு தயாராக இருந்தால் உங்களுக்கான முக்கிய தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. […]
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பகுதியில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதிகளில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று குமரி கடல் பகுதி மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரள – கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு […]
கொரோனா பரவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது.அதில் சில புள்ளி விவரங்களின்படி கடந்த ஆண்டு 2.7 கோடிக்கும் அதிகமானோர் ஆன்லைன் மோசடிகளுக்கு பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுற்றுலா செல்லும்போது சமூக வலைத்தளங்களில் பயண விவரங்களை பகிர வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு கேரளா காவல்துறை எச்சரித்துள்ளது.சுற்றுலா செல்லும் இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் பயண விவரங்களை புகைப்படங்களுடன் டேக் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் […]
சென்னையில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள சென்னை ஆழ்வார்பேட்டை அருகிலும் திடீரென்று பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. மரம் விழுந்த இடத்தில் நடிகர் நிதின் சத்யா இருந்துள்ளார். இந்த விபத்தில் இருந்து நூல் இழையில் உயிர் தப்பியதாக அவர் தெரிவித்து உள்ளார். நிதின் சத்யா சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து வெளியிட்டுள்ள […]
தமிழகம், புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய […]
தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என போலி அறிவிப்பை நாளிதழில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என போலி அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் எனவும் கூட்டுறவுச் சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார். தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர்,இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரபல நாளிதழில் வெளியான விளம்பரம் போலியானது.பணம் பறிக்கும் நோக்கில் வெளியான […]
டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்வா என்பவர் ஆபாச வெப்சீரிஸ் பார்த்துக் கொண்டிருந்தபோது ஆபாச படத்தை பார்ப்பது சட்ட விரோதமானது நீங்கள் உடனடியாக பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கணினியின் திரையில் எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அதில் அபராதம் செலுத்துவதற்கான யுக்தியை பேமெண்ட் மட்டும் qr குறியீடு விவரங்களும் வந்துள்ளன. இதனைப் பார்த்த விஸ்வா லேசாக சந்தேகம் அடைந்து அந்த இணைய முகவரியை சரிபார்த்து அது […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது பயனாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி EPFOபயனாளிகள் தங்களது தனிப்பட்ட விவரங்களை சமூக வலைத்தளம் அல்லது மொபைலில் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஏனென்றால் சமீபகாலமாக pf கணக்குத்தாரர்களின் சுய விவரங்களை சில மோசடி கும்பல்கள் குறி வைத்து கொள்ளையடித்து வருகின்றன. இந்த கும்பல் PF ஃபைனாளர்களிடம் ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் உள்ளிட்ட வங்கி கணக்கு விவரங்களை […]
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 21.8.2022 மற்றும் 22.8.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு. 23.8.2022 அன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு […]
மும்பை அருகே உள்ள ராய்கார்டு கடலில் கடந்த வியாழக்கிழமை ஏகே 47 ரக துப்பாக்கிகள் தோட்டாக்களுடன் ஆயுத படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது பயங்கரவாதிகளின் சதி வேலையா என மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் போலீஸர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திடீரென பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கும் மிரட்டல் வந்துள்ளது. ஒர்லி போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் நம்பருக்கு நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் மர்ம நபரிடம் இருந்து அடுத்தடுத்து குறுந்தகவல் […]
பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகர தூய்மைக்காகவும், அழகுடன் பராமரிக்க வேண்டும் என்பதற்காக சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு […]
செல்போன் செயலி மூலமாக உடனடி கடன் பெறும் வசதியை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றது. அவ்வாறு அதிக வட்டியில் கடன் வாங்கியவர்களிடம் கடனை திரும்ப வசூலித்த பிறகும் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதாக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கடன் பெற்றவர்கள் மற்றும் அவரின் உறவினர்களின் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி பல கோடி ரூபாயை பறித்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இந்த […]
மருந்துகளை தவறான முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மருந்து விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மருந்து வணிகர்கள் சங்க தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ஹபீப் முகமது கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர் களிடம் மருந்து விற்பனையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். […]
இலவசம் வேண்டாம் என கூறுபவர்களே அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை கொடுத்து வருவதாகவும், இரட்டை வேடங்களை, தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கிறார்கள் எனவும் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பா.ஜ.க-வை சுட்டிக் காட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற மாதம் 15ம் தேதி கோவை வந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள இருந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து முதல்வரின் கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி […]
தமிழகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் பெயரை பயன்படுத்தி மர்மகும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரபலமான நபர்கள் மற்றும் பெரிய அதிகாரிகளின் படங்களை whatsapp dp யாக வைத்து அவர்களின் பெயரை பயன்படுத்தி மர்மகும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். உயர் அதிகாரிகளின் பெயரில் அவர்களுக்கு கீழ் பணிபுரிவோரின் மொபைல் எண்ணுக்கு போன் செய்து நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன் அமேசான் […]
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிக்கு உட்பட்ட திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், திருத்தணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் இது விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் இரண்டு தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, வருகின்ற 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கின்றது. இவ்விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலின்படி விநாயகர் சதுர்த்தி விழா […]
உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் அவ்வபோது அணுகுண்டு வீசி விடுவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்து வருகின்றது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா முதலான நாடுகள் துணை நிற்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவேளை அணுகுண்டு வீசப்படும் ஆனால் என்ன நடக்கும் என்பது குறித்த திடுக்கிட வைக்கும் தகவல்களை அறிவியல் அறிஞர்கள் வெளியிட்டு இருக்கின்றார்கள். அணு ஆயுதப்போர் வெடிக்கும் ஆனால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். மேலும் உணவு இல்லாமல் பட்டனி கிடந்து முழு […]
உலகில் சமீப காலமாக குரங்கு அம்மை நோயின் பெயர் பாரபட்சமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 1958 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் தான் முதன்முதலாக குரங்கு வைரஸ் நோய் கண்டறியப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த நோய் காரணமாக ஏராளமான குரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பல குரங்குகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனைப் போலவே சமீபத்தில் பிரேசிலில் நோய் பயத்தால் மக்கள் குரங்குகளுக்கு விஷம் வைத்துக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அதனால் உடனடியாக குரங்கு அம்மை நோய்க்கு புதிய […]
பிரித்தானியாவில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதனால் செல்போன், காப்பீட்டு நிறுவனங்கள், அவசர தேவைக்கு பணம் என பையுடன் வெளியேற தயாராக வேண்டும் என மூன்று மில்லியன் குடும்பங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. மேலும் பிரித்தானிய மக்கள் வெப்ப அலைகளால் கடும் அவதிக்குள்ளாக இருந்த நிலையில் நேற்று மின்னலுடன் பெருமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்த சூழலில் வாகன நெரிசல் மற்றும் மின்சாரம் துண்டிப்பு உட்பட நெருக்கடிகளுக்கு மக்கள் உள்ளாக கூடும் எனவும் […]
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் மேல் நிலமும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தில் நீலகிரி , கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். ஆகஸ்ட் 17ஆம் தேதி நாளை நீலகிரி, கோவை , ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]
போலியாக வரும் குறுஞ்செய்திகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு சிலரின் மொபைல் போன் எங்களுக்கு கடந்த மாத மின் கட்டணத்தை செலுத்தாததால் இன்று இரவு முதல் மின்விநியோகம் துண்டிக்கப்படும், உடனே மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று போலியான தகவல் ஒன்று அனுப்பப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை செலுத்தி பலரும் ஏமாந்துள்ளனர். அதனால் போலியாக அனுப்பப்படும் தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாங்கள் […]
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாளமாக உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு கூட ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. பிறந்தநாள் முதலில் ஆதார் எடுக்கும் வசதியை தற்போது ஆதார அமைப்பு வழங்குகிறது. இதற்கு ஆவணமாக குழந்தையின் பெற்றோரின் ஆதார் அட்டை கட்டாயம் அவசியம். அதனைத் தவிர்த்து தற்போது அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் நாம் மொபைல் எண், புகைப்படம் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அதனை […]
அதிமுக முன்னாள் அமைச்சர் டிஜே குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தன்னுடைய துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மக்களின் உயிரை காக்கும் நலவாழ்வு துறையை கடந்த 14 மாத காலமாக தனது தற்கொலை நிர்வாகத்தால் கோமா நிலைக்கு கொண்டு சென்ற மா.சு என்ற ஆளும் கட்சியினரால் அன்போடு அழைக்கப்படும் மா. சுப்ரமணியன் அவர்கள் எங்களுடைய கழக இடை பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான அண்ணன் திரு எடப்பாடி பழனிசாமி மீது […]
மத்திய அரசு ஆதார் கார்டு தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த ஆதார் அட்டை வங்கி சேமிப்பு கணக்கு எண், ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான முக்கிய ஆவணங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையை பிறந்த குழந்தைகள் வரை தற்போது எடுத்துக் கொள்ளும் வசதிகள் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையானது அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் […]
சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து நடைபெற்றதற்கு ட்விட்டர் மூலமாக கண்டனம் தெரிவித்த ஹாரிபோர்ட்டர் நூல்களின் ஆசிரியை ஜேகே ரௌலிங் க்கு அடுத்து நீதான் என மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஈரான் பின்னணி கொண்ட தீவிரவாதியிடம் இருந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கவலைப்படாதே அடுத்த தாக்குதல் உன் மீது தான் என அந்த தீவிரவாதி மிரட்டி இருக்கிறார். மேலும் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய ஹாதி மத்தரையும் அந்த மிரட்டல் செய்தியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சியில் நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார். அதனை அடுத்து மதுரை விமான நிலையம் நோக்கி வந்த போது அவரது காரை பாஜகவினர் வழிமறைத்துள்ளனர். அப்போது பாரத் மாதா கி ஜே எனவும் கோஷமிட்டு கொலைவெறியுடன் அந்த காரை நோக்கி பாய்ந்துள்ளனர். அதன் பின் அந்த கும்பலில் இருந்த பெண் ஒருவர் ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் அணிந்திருந்த செருப்பை கையில் எடுத்து வைத்திருந்த […]
இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதனால் பலரின் சொந்த விவரங்கள் சமூக வலைத்தள பயன்பாட்டின் மூலம் ஒரு சில நேரங்களில் திருடப்படுவது வழக்கமாகிவிட்டது. அவ்வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதன் மூலமாக தனி நபர் விவரங்கள் திருடப்படுவதாக புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதனை முன்னாள் கூகுள் பொறியாளர் ஆன பெலிக்ஸ் க்ராஸ் என்பவர் கண்டறிந்து அம்பலப்படுத்தி உள்ளார்.ஐபோனில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டால் பயன்படுத்தும் போது […]
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் விற்பனையாளராக பணியாற்றிய மகிரன் என்பவர் கடந்த 2006 ஆம் வருடம் சூப்பர்வைசர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் கடந்த 2015 ஆம் வருடம் மீண்டும் விற்பனையாளர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை எதிர்த்து மகிரன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எம் எஸ் சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் விசாரணையின் போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன்முறை படுத்தப்படாததால் சூப்பர்வைசராக அவரை நியமித்த உத்தரவு ரத்து […]
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய […]
உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவை இல்லாமல் தலையிட வேண்டாம் என சீனா எச்சரிக்கை எடுத்துள்ளது. சீனா தனது யுவான் வாங் 5 என்ற ஆராய்ச்சி கப்பலை இலங்கையின் ஹம்பன் தொட்டா துறைமுகத்தில் ஆறு நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு இலங்கை அரசும் ஒப்புதல் அளித்தது இதற்கிடையே சீனா ஆராய்ச்சி கப்பல் என்று கூறுவது உண்மையில் ஒரு உலக கப்பல் எனவும் அது இலங்கையில் நிறுத்தப்படுவது இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் […]
ஆசிய நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்தும் நோக்கத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013 ஆம் வருடம் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்ததாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக உலக நாடுகள் சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலமாக இணைத்துக்கொள்ளும். மேலும் சீனாவிற்கும் பெருநாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும் அதே போல கடல் வழியை போக்குவரத்து ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் […]
உலக நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் நான்காவது அலையில் நேபாள நாடு சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனாவிற்கு 1090 பேர் பாதிப்படைந்தும், இரண்டு பேர் உயிரிழந்தும் இருக்கின்றனர். 5000 பேருக்கு கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தெரியவில்லை. அந்த நாட்டின் மருத்துவமனைகளில் கொரோனா மற்றும் இன்புளுயன்சா காய்ச்சல் பாதிப்புகளுடன் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவது அதிகரித்து இருக்கின்றது. இது பற்றி காத்மன்ட் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் 4 வது அலையை சுகாதார […]
ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்தும் நோக்கில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013 ஆம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார்.இதன் மூலம் எளிதாக சரக்கு போக்குவரத்து செய்யப்படுவதுடன், உலகம் முழுவதும் உள்ள தொழில் முனையங்கள் ஒன்றிணைக்கப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த வளரும் நாடுகளுக்கு சீனா கடனளித்து வருகிறது. சீனா கடன் வழங்கும் முறையை வங்காளதேசத்தின் நிதி மந்திரி முஸ்தபா கமல் விமர்சித்துள்ளார் […]
அண்மைக்காலமாக வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ள அதிகபட்ச 12.5 சதவீத வட்டியை விட அதிகளவு வட்டி தரு வதாகக் கூறி பொதுமக்களிட மிருந்து பணத்தை வசூலிக்கின்றன. ஆனால் கூறியபடி வட்டி வழங்குவதில்லை. இந்நிலையில் அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனங்கள் கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்யக்கூடாது என்று பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக […]
ஒகேனக்கல்லில் கடந்த வாரம் 2,50,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் படிப்படியாக தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த மூன்று தினங்களாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் மட்டும் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. மேலும் கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியில் இருந்து 35,000 கனடியாக […]
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டதாலும் கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை நிரம்பியதை தொடர்ந்து அதிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள 349 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனை […]
தமிழகத்தில் ஆறு துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி , சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒடிசாவை ஒட்டிய வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் ஆயுதக்குழு பிரிவான அல்-குவாட்ஸ் பிரிகெடிஸ் தளபதி தைஷர் அல் ஜபரி கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து […]
பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மலையோர பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக அணைகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை எட்டு மணி அளவில் 48 அடி கொள்ளளவை கொண்ட பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது. இதனால் […]