Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஆக்கினீங்க… கேட்டதெல்லாம் செஞ்சி கொடுத்தேன்… எனர்ஜிட்டிக்காக பேசிய எடப்பாடி!!

சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம்,  சேலத்தை சுற்றியுள்ள பகுதிகள் 2011க்கு முன்பு எப்படி இருந்தது ? 2011 இல் இருந்து 2021 வரை எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த பத்து ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொற்கால ஆட்சியில் இந்தத் திட்டங்கள் எல்லாம் நடைபெற்றது. அதற்கு என்ன காரணம் ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! இம்புட்டு திட்டமா ? பட்டியல் போட்ட எடப்பாடி…. செமையா செஞ்சு வச்சுருக்காரு…!!

சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைக்கு சேலம் மாநகரம் வளர்ந்து வருகின்ற மாநகரம். அதற்கேற்றவாறு போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் என்பதற்க்காக எங்கெங்கெல்லாம் பொதுமக்கள் பாலங்கள்  கேட்டார்களோ, அங்கெல்லாம் உயர்மட்ட பாலத்தை கட்டிக் கொடுத்து, இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக சேலம் மாநகரம் திகழ்கின்றது. அதே போன்று குடிநீர் பிரச்சினை….  அந்த குடிநீர் பிரச்சினையும் […]

Categories
மாநில செய்திகள்

எம்.ஜி.ஆரின் கனவு திட்டம் பாழாகும் நிலை… “அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம்”… இ.பி.எஸ் பேச்சு…!!!!

பொங்கலுக்கு வேஷ்டி சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்காவிட்டால் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கலுக்கு வழங்க வேண்டிய விலையில்லா வேஷ்டி, சேலை நெய்யும் பணி முடங்கி போய் இருப்பதாக நெசவாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். ஜூலை […]

Categories
அரசியல் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்கத்துல தான் என் வீடு இருக்கு… எப்போ வேணும்னாலும் என் வீட்டுக்கு வாங்க… தொண்டர்களுக்கு இபிஎஸ் அழைப்பு!!

சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 2023 ஆம் ஆண்டு பிறக்க இருக்கின்றது. இந்த ஆண்டு துவக்கமே மிக மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. மேடையில் இருக்கின்றவர்களும் சரி, கழகத்திலே இணைகின்றவர்களும் சரி,  பார்த்த முகம். பார்த்த முகம் எல்லாம் இன்றைக்கு எங்களோடு இணைந்து பணியாற்றுகின்ற பொழுது,  இனி எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எவராலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணி குறித்து நிர்வாகிகள் இஷ்டத்துக்கு பேசக்கூடாது – இபிஎஸ் கண்டிப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி,  நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமை கழகமே முடிவெடுக்கும். தலைமை கழகம் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதற்கான வேலைகளை தலைமை கழக நிர்வாகிகள் பார்த்துக் கொள்கின்றோம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்பதோடு கூட்டணி குறித்து தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆவேசமான CVS…. அறிவுறுத்திய EPS….  காரசார விவாதமும் – கண்டிப்பும்!! 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் சிலர் ஓபிஎஸ்,  சசிகலா,  டிடிவி தினகரன் தரப்பிலிருந்து மீண்டும் அதிமுகவிற்கு வருவோரை சேர்த்துக் கொள்ளவோ, அவர்களுக்கு பொறுப்பு வழங்குவோ கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர். பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்தால் தான் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியும். அதிமுகவை பலப்படுத்த முடியுமென […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ்_ஸை தனிமைப்படுத்தனும்…! யாரும் அவரு கூட இருக்க கூடாது… எடப்பாடி போட்ட கூட்டத்தில் செம பிளான்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட செயலாளர் – கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2024 ஆம் ஆண்டு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதிமுக பல அணிகளாக செயல்பட்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை சேர்க்கக்கூடாது என ஒரு தரப்பும்,  ஓபிஎஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: மாநில மாநாடு நடத்த அதிமுக முடிவு: எடப்பாடி முக்கிய அறிவிப்பு!!

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மாநில அளவில் மிகப் பெரிய மாநாடு நடத்த அதிமுக முடிவு செய்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்குங்கள் என்ற ஒரு உத்தரவை இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அஇஅதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சொல்லியிருக்கிறார். விரைவில் மிகப்பெரிய மாநில மாநாடு நடத்துவதற்கான ஒரு முடிவும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்தில் ?  எந்த மாவட்டத்தில் ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதுகுக்கு பின்னால குத்துறது மனிதனே கிடையாது; ஒருத்தங்களை எதிர்க்கணும்ன்னா நேரில் நிக்கணும்; சசிகலா வேதனை

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஆறுமுகசாமி ஆணையத்தின் கேள்வி எல்லாத்துக்கும் சரியான பதிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ” மரண விசாரணை…. சசிக்கு கொடுத்த 3 ஆப்ஷன்…. வெளியான முக்கிய தகவல்…!!

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா  சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை  இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு,  நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன்,  உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். நீங்க முதலமைசர் ஆகியவர்கள் இன்னைக்கு விசுவாசமாக இல்லையே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒவ்வொருவருக்கும் ரூ.12,000…. 52 லட்சம் பேர் வாங்குனாங்க… மேடைக்கு மேடை சொல்லி காட்டும் எடப்பாடி…!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அம்மா இரு சக்கர வாகனம்….  அந்த ஸ்கூட்டர் இருந்தா ஏழைப் பெண்கள் உரிய நேரத்தில், வேலைக்கு போக முடியும். உரிய  நேரத்தில் வீடு திரும்புவதற்கு வாகனத்தை கொடுத்தோம், அதையும் நிறுத்தி விட்டார்கள். நாங்கள் 25,000 மானியம் கொடுத்தோம்.  அறிவுபூர்வமான கல்வி… அரசுப் பள்ளியில் படிக்க கூடிய மாணவச் செல்வங்கள்…  அவர்களை திறமையான மாணவச் செல்வங்களாக உருவாக்க வேண்டும். அதற்க்கு அம்மா அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்ல… ஸ்டாலினுக்கு பேச அருகதை இல்ல… கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 4 ஆண்டுகால ஆட்சி பேரிடர் காலம் என பேசுறாரு. பேரிடர் என்றால் என்ன என்று தெரியும் அவருக்கு ? நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது கடுமையாக வறட்சி, குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. சென்னைக்கு ரயிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து சேர்த்தேன். தமிழ்நாடு முழுவதும் வறட்சி.  அப்படிப்பட்ட வரட்சியான காலத்தில் கூட தடையில்லாமல் குடிநீர் வழங்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் ஒரு பொம்மை…. கீ கொடுத்தா ஜங் ஜங் என ஓடுவார்… எடப்பாடி கிண்டலடித்து பேச்சு ..!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாயி தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்த காரணத்தினால்… விவசாயி, தொழிலாளி  என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார் என ஆய்வு செய்து,  ஆராய்ந்து, அதன் மூலமாக திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய அரசாங்கம் அம்மா அரசாங்கம். ஸ்டாலினுக்கு என்ன தெரியும் ? பொம்மை முதலமைச்சர். பொம்மைக்கு கீ கொடுத்தா கை தட்டும், பாருங்க. நம்முடைய குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி கொடுத்து.. கீ கொடுத்தா ஜங் ஜங் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் விழாவிற்கு ரூ.3 கோடி வீணடித்தது ஏன்…? கடுமையாக சாடிய EPS..!!!

ஸ்டிக்கர் ஒட்டும் விழாவுக்கு திமுக அரசு ரூ. 3 கோடியை வீணடித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் ஈடுபட்டுள்ள திமுக அரசு, கடந்த 19 ஆம் தேதி அன்று அம்மாவின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தங்கிலீஷில் நம்ம ஸ்கூல் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் நோட்டீஸ்…. அரசியலில் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக சமீப காலமாகவே பெரும் பிரச்சினைகள் நிலவி வருகிறது. தலைமை வகிப்பது யார் என்ற போட்டியில் ops-eps இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு பரபரப்பு நோட்டீஸ் அனுப்பி இபிஎஸ் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், “அதிமுக கட்சிக் கொடி, பெயர், லெட்டர் பேடை பயன்படுத்தியது குறித்து பயன்படுத்தியது ஏன்?, அது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவில் மரியாதை இல்லை… கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் உதயநிதி. எடப்பாடி பகீர் தகவல்

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் பொன்மன செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அதை கட்டி காத்தவர் இதய தெய்வம் அம்மா அவர்கள். இருபெரும் தலைவர்கள். குடும்பம் கிடையாது. இங்கே இருக்கின்றவர்கள் தான் பிள்ளைகள் என்று அந்தப் பிள்ளைகளுக்காக உழைத்து மறைந்த தலைவர் நம்முடைய தலைவர்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும்,  இதயம் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும்… தன்னுடைய உயிர் இருக்கின்ற வரை… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்கு வழக்கு – ஜன.4க்கு ஒத்திவைப்பு …!!

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக  ஓ.பன்னீர்செல்வம்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகின்றது. இன்று மூன்றாவது முறையாக வழக்கு விசாரணை ஏதும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வழக்கை ஒத்திவைக்க கேட்டிருந்தார். அதற்கு பிறகு அலுவல் தினத்தில் கடைசி வழக்காகப்பட்டியிடப்படும் நேரமின்மை காரணமாக  வேறொருநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை சொன்ன மாதிரி தெரில…! எல்லாம் எடப்பாடியின் திருவிளையாடல்… DMKவை விளாசிய டிடிவி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான்கு ஆண்டு எடப்பாடி அவர்களின் திருவிளையாடலை எதிர்த்து, மக்கள் கோவப்பட்டு தான்  10 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த திமுகவுக்கு,  திருந்தி இருப்பார்கள் என்று நினைத்து ஆட்சியை கொடுத்தார்கள். திமுக சொன்ன தேர்தல் வாக்குகளை கூட நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும்,  ஊடகம் வெளிச்சத்தில் இருப்பதாலும்,  அவர்களை நிறைய பேர் தூக்கிப் பிடிப்பதாளும்  இன்றைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பலசாலி இல்லை…! நாங்களும் வீக் இல்லை… டிடிவி சுளீர் பதில் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால்,  அது பெரிய கூட்டணி வைத்துக்கொண்டு…  பத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்து ராவணன் மாதிரி திமுக இருக்காங்க. இன்னைக்கு அவங்க ஆளுங்கட்சியாக இருக்காங்க. அவங்களுக்கு தமிழ்நாட்டுல வீழ்த்த வேண்டும் என்றால் நல்ல கூட்டணி வைத்து செயல்பட வேண்டும். எல்லாக் கட்சியும் கூட்டணி வைத்து தான் தேர்தலில் போட்டியிடுறாங்க. நான் இபிஎஸ்ஸை சொல்லலையே. அம்மாவுடைய உண்மையான தொண்டர்களை சொல்லுகிறேன். இபிஎஸ் அம்மாவுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS கூட கூட்டணி இல்ல.. அம்மாவின் விசுவாசிகள் கூடதான்.. TTV Dhinakaran விளக்கம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையில் எல்லாம் நாங்க இணையவே மாட்டோம் அப்படின்னு தான் நான் பல முறை சொல்லி இருக்கேன். இப்பவும் சொல்லுறேன் அம்மாவுடைய உண்மையான தொண்டர்களாக தங்கள் நினைக்கிறவங்க,  அவங்க எங்கே இருந்தாலும் எல்லாம் ஒரு அணியில் சேர்த்தால்தான் நம்மோடு கூட்டணிக்கு வருகிற கட்சிகளோடு சேர்ந்து, தேசிய கட்சியுடன் சேர்ந்து தான் தேர்தலை சந்தித்தால் தான் திமுக என்கிற அந்த தீய சக்திகளை வீழ்த்த முடியும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருப்பு பணம், கமிஷன்”…. எதுலனாலும் ஆதிக்கம்….. சினிமாவை கூட விட்டு வைக்கல…. உதயநிதியை சீண்டிய இபிஎஸ்….!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டத்தில் திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 1000 பேர் விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக கட்சியானது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்று கட்சியிலிருந்து செல்பவர்களுக்கு மட்டும் தான் திமுக அமைச்சர் பதவி கொடுக்கிறது. திமுக ஆட்சியில் சம்பாதித்த அனைத்து கருப்பு பணத்தையும் வெள்ளை பணமாக மாற்றுவதற்காக […]

Categories
மாநில செய்திகள்

யாருக்கும் அஞ்சோம் என கூறியவர் பாரதியார்…. புகழாரம் சூடிய எடப்பாடி பழனிசாமி….!!!!

எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த 1982-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தார். இவர் எழுத்தாளர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல முகங்களை கொண்டவர். இதனால் இவரை மக்கள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைத்தனர். இந்நிலையில் இன்று இவரது 141 -வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது, ” “உச்சிமீது வானிடிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் கையில் தான் முடிவு…. கரெக்ட்டா சொன்ன எடப்பாடி…! நச்சுன்னு விளக்கிய எஸ்.பி வேலுமணி…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது குறித்து எடப்பாடியார் ஏற்கனவே தெளிவாக பதில் சொன்னார். சட்டமன்றம் முடித்து வரும்போது என்று நினைக்கின்றேன்…. இதற்கு எந்த தீர்மானமும் வேண்டியதில்லை. எடப்பாடியார் கூறிய பதிலையே நானும் மீண்டும் திரும்ப கூறுகிறேன். மு.க ஸ்டாலின் நினைத்தால் உடனே துணை முதலமைச்சர் ஆக்கலாம்.  வாய்ப்பு அவரிடமே இருக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து சொல்லி, ஸ்டாலின் செய்வது போல் ஒரு பாவனை காட்டுகிறார்கள். திமுக கட்சி பேரறிஞர் அண்ணா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி C.M… 10 வருஷ பட்டியல்…. பத்த வச்ச மாஜி… மீடியா முன்பு நழுவும் ஸ்டாலின் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பத்து வருடமாக அதிமுக ஆட்சியில் எடப்பாடி யார் முதலமைச்சராக இருந்தபோது அத்திக்கடவு அவிநாசி திட்டம், அனைத்து சாலைகளையும் விரிவுபடுத்தினோம்.  6 புதிய கல்லூரிகள் கொண்டு வந்தோம். புதிய தாலுக்கா அமைத்தோம், தாலுகா அலுவலகம் அமைத்தோம். கலெக்டர் ஆபீஸ் கட்டிக் கொடுத்தோம். எஸ்.பி ஆபீஸ் கட்டிக்கொடுத்தோம், அனைத்து யுனிவர்சிட்டி யும் கட்டிக்கொடுத்தோம், பேரூராட்சி கட்டி கொடுத்தோம். அரசு மருத்துவமனையை மேம்படுத்திய பிறகு,   தனியார் மருத்துவமனைக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: டிச.9.12,13 போராட்டம்…. EPS அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் டிச.12ம் தேதியும், ஊராட்சி ஒன்றியங்களில் டிச.12ம் தேதியும், மாநகராட்சி, நகராட்சிகளில் டிச.13ம் தேதியும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். டிச.9,12,13ஆகிய தேதிகளில் சொத்து வரி, விலைவாசி, பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் அதிமுகவினர், இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருமே C.M ஸ்டாலினை…. பாராட்டுறாங்க… போற்றுறாங்க…. பொறுத்துக்க முடியாமல் பதட்டத்தில் எடப்பாடி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜகவிலே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய உள்கட்சி பிரச்சனை உச்சகட்டத்தை எட்டி இருக்கக்கூடிய நிலையில் தமிழ்நாட்டில்…  அதிலிருந்து திசை திருப்புவதற்காக திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு கருவியாக மாறி  ஆளுநரை சந்தித்திருப்பதை போன்ற ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறாரா ? என்ற கேள்வியும் எனக்குள்ளே எழுகிறது. பொதுவாக சென்னை ஒரு பெரு மழையை சந்தித்திருக்கிற பொழுது,  அந்த பெரு மழையை மிக சாதுரியமாக,  மிக தைரியமாக , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அங்கே ரூ.5 கோடி கொடுக்கங்க… இங்கே ரூ.25 லட்சம் தான்… கடுமையாக எதிர்க்கும் விசிக…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது பரந்தூர் விமான நிலையத்திலும் தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அரசு அலர்ட் கொடுத்துச்சு … இப்போ எல்லாமே நிரூபணம் ஆகிட்டு… C.M MKSயை  பொறுப்பேற்க சொன்ன EPS..!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி,  அண்மையில் 23.10.2022 அன்று கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பு வெடிக்கப்பட்டது. இது ஏற்கனவே மத்திய உளவு ஏஜென்சி 18.10.2022 அன்று மாநில அரசுக்கு வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீவிரவாத செயல் நடைபெறும் என்ற செய்தியை மாநில அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த விடியா  திமுக முதலமைச்சர் அவர் தலைமையில் இருக்கின்ற ஆட்சி,  இருக்கின்ற உளவுத்துறை, காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வழக்கு போடும் DMK… பயத்தில் EPS எடுத்த முடிவு… கொளுத்தி போட்ட டிடிவி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் தொண்டர்கள், விசுவாசிகள் அந்த இயக்கத்தில் அந்த சின்னத்திற்காகவும், கட்சியின் பெயருக்காகவும் அங்கு இருப்பவர்கள் இன்றைக்கு உணர்ந்து வருகிறார்கள். பழனிச்சாமி அந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்கின்ற சுயநலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இன்றைக்கு இரட்டை இலையே செயல்படாமல் இருக்கிறது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் யாருக்கும் சின்னம் ஒதுக்க முடியவில்லை. எடப்பாடி கூட இருந்து ஆட்சியை காப்பாற்றிய பன்னீர்செல்வத்தை, எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல, 2இல்ல … நிறைய ஊழல்… வசமாக சிக்கிய ADMK…. ஆதாரத்தோடு எகிறி அடிக்கும் காங்கிரஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கடந்த அதிமுக  ஆட்சி காலத்தில் காவிரி குண்டாருக்கு நிதி ஒதுக்கினார்கள். அது என்ன நிலையில் இருக்கிறது ? நதிநீர் இணைப்புக்காக…  கடலில் வீணாக சென்று கலக்கின்ற தண்ணீரை பாதுகாத்து விவசாய பெருங்குடி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த பணம் என்ன ஆச்சு ? ஒதுக்குன பணம் எங்கே ?  எவ்வளவு தூரம் வேலை நடந்து இருக்கிறது ? இதெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அதனால் சிலதை உங்களிடம் நேரடியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் கையில் ”ஆதாரம்”…! கொத்தாக சிக்கிய ADMK… பயத்தில் நடுங்கும் எடப்பாடி & மாஜிக்கள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை,  நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும்.  காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவின் மெகா கூட்டணியா ? NDA-வை முடிவு பண்ணுனது யாரு ? எடப்பாடிகிட்ட கேட்க சொன்ன அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாங்க தெளிவா சொல்லிட்டு இருக்கோம்.  கோயம்புத்தூர் தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து பல விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆளுநரை சந்திக்கிறார் என்றால், நீங்க அவங்க கிட்ட கருத்து கேட்கணும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் வைக்கக்கூடிய வாதங்கள், கருத்துக்களை பொதுவெளியில் பத்திரிக்கை நண்பர்களிடம் வைக்கிறோம். ஆளுநரிடம் எப்ப போக முடியுமோ, அப்போது போய் ஆளுநரிடமே  நம்ம கருத்த சொல்றோம். அதனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி கிட்ட ஆதாரம் இருக்கா…! கேஸ் போட சொன்ன அமைச்சர்… ADMKவுக்கு நெத்தியடி பதில்

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அரசின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கு வகையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, நீங்கள் குற்றசாட்டை அவர் சொல்கிறார் என்றால்,  அதற்கு உரிய ஆதாரங்கள் அவரிடத்தில் இருந்தால் அவர் நீதிமன்றமே தாராளமாக அணுகலாம். நீதிமன்றத்தில் வழக்கு சந்திக்கலாம். நாட்டினுடைய வளர்ச்சியிலே உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருக்கும் என்று சொன்னால்,  அவர்கள் அதற்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் என்று எந்த காலத்திலும் வந்தால் அதை ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

350 ரூபாய் பேனருக்கு 7900 பில் ? DMK மீது பரபரப்பு புகார்… அதிரடி காட்டிய எடப்பாடி …!!

ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி அமைப்பில் முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள பணிகள் எல்லாம் விளம்பரப் படுத்துகிறார்கள். அந்த விளம்பரம் படுத்துகின்ற பேனர் விலை 350 ரூபாய், அதற்கு வந்து 7906 ரூபாய் பில் போட்டுள்ளார்கள். விளம்பர பேனருடைய தோராய மதிப்பு 350 ரூபாய் இருக்கும். ஆனால் 7906 உள்ளாட்சியில் இருந்து அரசு உத்தரவு போட்டு, ஒரே கம்பெனிக்கு  கொடுத்து இருக்கிறார்கள். இது தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை: எடப்பாடி அதிரடி பேட்டி

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அண்ணா திமுக என்பது தமிழகத்தில் பிரதான ஒரு எதிர்க்கட்சியாக இன்னைக்கு இருக்கிறது. 37 ஆண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்தது. பாரதி ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சி. அமித் ஷா, பாரத பிரதமர் சென்னைக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் எப்ப பார்த்தாலும், எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M பதவி கொடுத்தது யாரு ? லிஸ்ட் ரெடியா இருக்கு…! நேரம் பார்க்கும் ஓபிஎஸ்…  பரபரப்பு பேட்டியால் இபிஎஸ் ஷாக்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நான்கரை வருடம் அவர் ( எடப்பாடி ) செய்த பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை…  என்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அவர் செயல்பட்டார் என்பதனை நான் உங்கள் முன்னால் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். உரிய நேரத்தில் அது வெளியிடப்படும். துணை முதலமைச்சர் என்ற பதவியை எனக்கு தந்தாரா ? அவருக்கு யாரு முதலமைச்சர் பதவியை நியமனம் பண்ணுது ? அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

25வருஷமா பார்க்கல… எனக்கு யாரையும் தெரியாது… EPSக்கு சொல்லி கொடுக்கும் மகன், மனைவி ..!!

சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், கிட்டத்தட்ட 34 வயதில் நான் சட்டமன்ற உறுப்பினரான இருந்தேன். பலபேருக்கு அது தெரியாது. ஏனென்றால் நான் அரசியலில் அமைதியாக இருந்தேன். அப்படி அமைதியாக இருந்த காரணத்தினாலே பல பேருக்கு என்னுடைய உழைப்பு தெரியாது. ஆனால் என்னுடைய தொகுதி எந்த மூலையிலே, எந்த கிராமத்திலே, எந்த குறுக்குத் தெருவிலே போய் கேட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி என்றால் அத்தனை பேரும் சொல்வார்கள். ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பதவி வெறி புடிச்ச எடப்பாடி…! பேசாம வெளியே போய்ட்டாரு… கவனமாக காய் நகர்த்தும் ஸ்டாலின்…!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, இந்த தீர்மானத்தை எதிர்த்து,  அதற்காக ஆதரவளித்து பேசாமல், வாக்களிக்காமல், வெளியிலே சென்றவர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள் என்பதை நான் எச்சரிக்கிறேன். பதவி வெறி மட்டும் தான் அவர்களுக்கு…  பதவியில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு.. திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை நம் தலைவரை பொறுத்த வரைக்கும்,  பதவி என்பதல்ல,  நம்முடைய உரிமை, நம் மொழியை பாதுகாப்பதை தலைவர் மிக கவனமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடினா ? யாருன்னு… எந்த மூலையிலோ… எந்த கிராமத்திலோ… எந்த தெருவிலோ… போய் கேட்டு பாருங்க.. செம ஹேப்பியாக பேசிய ஈபிஎஸ் !!

சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், திரைப்பட இயக்குனர் சந்திரசேகர் குறிப்பிட்டார்கள்..  சாமானிய ஒருவர் நாட்டினுடைய முதலமைச்சராவது அவ்வளவு எளிதல்ல என்று சொன்னார். உண்மையிலேயே அது அப்படித்தான். திரைப்படத்தில் எப்படி ஒரு முத்திரை பதிக்கிறாரோ, அதேபோல தான் அரசியலிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று சொன்னால்,  எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது, ஒரு சிலருக்கு தான் கிடைக்கும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. திரைத்துறைக்கும் எங்கள் இயக்கத்திற்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாடி லாங்குவேஜ் மாறிடுச்சு…! எடப்பாடியோடு சேர ரெடி… டிடிவி பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி,  அதிகாரம்  கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

ஓ அப்படியா!…. எடப்பாடி மவுனத்தில் இப்படி ஒரு கணக்கா?… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு கட்சியை இரண்டாக நிற்கிறது. அரசியல் களத்தில் 50 ஆண்டுகளாக திமுக vs அதிமுக என்றே உள்ளது. ஆனால் அதை திமுக vs பாஜக என்றும் மாற்றிக் காட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக தலைமை பதவியை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தவறுகிறார். அதனால் தான் நேற்று வந்த அண்ணாமலை தனியாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருவதான தோற்றம் உருவாகியுள்ளது என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கொடுத்த 2 போனஸ்…  எடப்பாடி போட்ட பட்டியல்… அப்செட்டில் ஸ்டாலின்…!!

அதிமுக தொடங்கி  50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி,  கிராமத்தில் ஏழை பெண் தொழிலாளி 100 நாள் வேலை திட்டம்,  150 நாளாக உயர்த்தப்படும் என்று சொன்னார்கள் உயர்த்தினார்களா ? இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிகின்ற அந்த தொழிலாளிக்கு ஊதிய உயர்வு உயர்த்தினார்களா ? இல்லை. எல்லாம் ஏமாற்று வேலை. அதோடு கைத்தறி நெசவாளருக்கு 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட் உயர்த்தப்பட்டதா ?  இல்லை. விசைத்தறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே தீர்மானம் போட்ட C.M… இது எடப்பாடி போல அடிமை ஆட்சி இல்ல…! AIADMKவை நோஸ்கட் செய்த DMK ..!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம் ஆனது, இந்திய திருநாட்டின் உடைய மதசார்பின்மையை சிதைக்கின்ற வகையில், இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டை சிதைக்கின்ற வகையில், இன்றைக்கு ஒன்றிய அரசினுடைய உள்துறை அமைச்சரும்,  அலுவல் மொழியினுடைய பாராளுமன்ற குழு தலைவருமாக உள்ள மாண்புமிகு திரு அமித்ஷா அவர்கள் தலைமையிலான குழு குடியரசு தலைவர் அவர்கள் இடத்திலே  ஒரு அறிக்கையை தந்திருக்கிறார். குறிப்பாக திரு அமித்ஷா அவர்கள் கொடுக்கின்ற அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TTVயால் பதறி போன EPS… ! பதற்றத்தோடு போன EXமாஜிக்கள்…!! டக்குடக்குனு உடைச்சு பேசிய ஓபிஎஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாமக்கல் கூட்டத்தில் பழனிசாமி சொன்னதை நான் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நான் தர்மயுத்தத்தை தொடங்கினேன்.  எதற்காக தர்மயுத்தம் ? யாருக்கு என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் ? அந்த சூழ்நிலையில், பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததை தான் நான் எதிர்த்து வாக்களித்தேன். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதை ஏற்கனவே நான் பல கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். அதற்கு பின்னால் திரு.வேலுமணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சாதாரண தொண்டன்…! MGR, ”ஜெ” கிட்ட படிச்சவன்… ஒழுக்கத்துக்கு பெயர் போன ADMK ….!!

அதிமுகவின் 50ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது கம்பீரமா பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது தவறு செய்தால்,  நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற எச்சரிக்கை செய்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் எவராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். அதே ஸ்டாலின் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து எழுகின்ற பொழுது,  கட்சியிலே என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெம்பு இல்ல… பயமா இருக்குது…. ஸ்டாலின் வாக்குமூலம்… வச்சு செய்த எடப்பாடி…!!

அதிமுகவின் 50ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது கம்பீரமா பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது தவறு செய்தால்,  நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற எச்சரிக்கை செய்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் எவராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். அதே ஸ்டாலின் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து எழுகின்ற பொழுது,  கட்சியிலே என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி வாங்கிய EPS; பெரிய பாவத்தை செஞ்சுட்டாரு; ஓபிஎஸ் தடாலடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கினார்கள். மாண்புமிகு அம்மா அவர்களும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக 30 ஆண்டு காலம் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பெற்று பல தியாகங்களை இயக்கத்திற்காக செய்தார்கள், அதிமுகவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த 50 ஆண்டு நிறைவு விழாவில் நடைபெறுகின்ற போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு, தொண்டர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி இதை செய்யட்டும்..! நான் அரசியலை விட்டு விலகுறேன்… ரெடியான OPS, பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் இருந்து, எடப்பாடி நடவடிக்கை என்ன ? என்பதை பத்திரிக்கை நண்பர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள். யார் மீது குற்றம் ? என்பதை தமிழக மக்கள் நன்றாகவே கணித்து வைத்திருக்கிறார்கள். நேற்று கூட ஏதோ பொத்தாம் பொதுவாக  நான் சட்டமன்றத்தில் அரை மணி நேரம் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. அதற்காகத்தான் நான் இதுவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவின் சப்பக்கட்டு அரசியல்..! கொதிச்சு போன மக்கள்… அவசியம் இல்லனு சொன்ன எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை தலைவர் என்ன இறுதி முடிவு எடுத்தாரு? ஒரு நாற்பது எம்எல்ஏ திமுகவிலிருந்து வெளியே போயிடுறாங்க. இன்னைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முடிவு பண்ண முடியுமா ? சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் முதலமைச்சராக இருக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும். ஆனால் இதை ஏற்க மறுக்கிறார். ஏனென்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை மட்டும் நிரூபித்தால்…. நான் அரசியலை விட்டு விலகுகிறேன்…. ஓபிஎஸ் தடாலடி….!!!

நானும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதை பழனிச்சாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நான் ஒரு மணி நேரம் முதல்வருடன் பேசியதாக இபிஎஸ் குற்றம் சாட்டுகிறார். நான் அப்படி பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். ஒருவேளை அதனை நிரூபிக்க தவறினால் எடப்பாடி அரசியலை விட்டு விலகுவாரா என ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக என்னைப் பற்றி ஏதாவது விமர்சனம் […]

Categories

Tech |