எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு அல்வா தான் கொடுக்கின்றார் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திமுக பிரசாரத்தில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டதால் மக்கள் சொல்வது பல்லாயிரம் கோடி திட்டங்களுக்கான கோரிக்கைகள் . அல்ல. அவர் எல்லாமே அவங்களோட அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சனைகள். அதை தீர்க்கத்தான் கோரிக்கை வைக்கிறாங்க. அதை கூட பழனிச்சாமி அரசாங்கம் நிறைவேற்றல. பல்லாயிரக்கணக்கான மக்கள் என்னிடம் […]
Tag: எடப்பாடி பழனிசாமி
திருப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் தேர்தல் சுற்றுபயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்கு வந்தார். பல்லடத்தில் பேசிய அவர் , திமுகவின் குடும்பங்களில் உள்ள அனைவரும் ஆட்சியைப் பிடிக்கக் கிளம்பிவிட்டனர். திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர் என்று குறிப்பிட்டார். உதயநிதி ஒரு வாரிசு என்பதை தவிர வேறு எந்த முத்திரையும் கிடையாது. ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று கூறியவர் , மக்களோடு மக்களாக அதிமுக […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா அவர்கள் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டேன் என்று சசிகலா சொன்னதற்கு பதில் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இது என்ன வம்பா இருக்கு ? இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் அடக்குமுறையை நடத்த மாட்டார்கள். அவர்களிடம் கேட்கும் கேள்வியை என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வது? சசிகலா மீண்டும் கட்சி பணியில் ஈடுபடுவேன் என்று சொன்னதத்திற்கு பதிலளித்த முதல்வர், எங்களுடைய அமைச்சர் ஜெயக்குமார் சொல்லிவிட்டார், அண்ணன் […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய போது, தமிழகத்திலே அம்மா அரசு எடுத்த நடவடிக்கை பெண்கள் முன்னேற்றம் எந்தளவிற்கு பயனளிக்கிறது என்பது பெருமைபட வைக்கிறது. பெண்கள் நாட்டின் கண்கள். பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், அந்த சக்தி அவர்களிடத்தில் இருக்கின்றது. ஒரு குடும்பத்திலே குடும்பத்தலைவி எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகின்றார்களோ அந்த அளவுக்கு அந்த குடும்பம் ஏற்றம் பெறும். ஆகவே தான் புரட்சி தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கு முன்னுரிமை […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய போது, இங்கே அதிகமாக நம்முடைய மகளிர் அணியை சேர்ந்த சகோதரிகள் குழுமி இருக்கிறீர்கள். அம்மாவுடைய அரசு தான் மகளிருக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கின்றது. மகளிர் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு அம்மாவுடைய அரசு 81,000 கோடி ரூபாய் வங்கி இணைப்பு கடன் கொடுத்து சுயஉதவி குழுவை ஏற்றம் பெற வைத்தது புரட்சித்தலைவி அம்மா. அதே வழியில் […]
தமிழகத்தில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிஸியாக உள்ளார். நேற்று சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த முதலவர், திமுகவை கடுமையாக தாக்கினார். அவர் பேசும் போது, திமுக நாட்டு மக்களை எண்ணி, திட்டங்களை தீட்டி செயல்படுத்தி இருந்தால் நாட்டு மக்கள் உள்ளத்திலே நீங்கள் இருப்பீர்கள். பொன்மலைச் செம்மல் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா, அந்த வழியில் நடைபெறுகின்ற அம்மாவுடைய அரசு நாட்டு மக்களை எண்ணிப்பார்த்து திட்டங்களை […]
நேற்று சோளிங்கநல்லுரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர், 2019 ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தினோம். சுமார் மூன்று லட்சத்தி ஐநூறு கோடி தொழில் முதலீட்டை ஈர்த்தோம். 304 தொழில் வருவதற்கு புரிதல் ஒப்பந்தம் போட்டோம். இப்போ இருபத்தி ஏழு சதவீத தொழில் தமிழகத்தில் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணி துவங்கி நடைபெற்றிருக்கிறது. அதன் மூலமாக சுமார் ஒன்றேகால் லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு பெறக்கூடிய சூழலை உருவாக்கி தந்திருக்கிறோம் . இந்த முன்னூற்றி நான்கு […]
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சோழிங்கநல்லூர் தொகுதியில முப்பது ஆண்டுகால கோரிக்கை… மாண்புமிகு அம்மாவுடைய அரசு நிறைவேற்றி தந்திருக்கிறது. ஏழை எளிய மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொடுத்திருக்கிறோம். சோழிங்கநல்லூரில் மருத்துவ சிகிச்சை பெற 8 அம்மா மினி கிளினிக் இருக்கு. தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் திறந்துளோம். ஏழை மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதியில் அம்மா மினிகிளினிக் திறந்து அங்கே ஒரு டாக்டர், செவிலியர், […]
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எதை சொல்கிறதோ, அதை சாதிக்கும். சொல்லாததையும் சாதிக்க கூடிய ஒரே அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம் தான். இன்றைக்கு கல்வில் சிறக்கின்றது அரசு மாண்புமிகு அம்மாவுடைய அரசு. இந்த பகுதியில் கூட அரசு கலைக்கல்லூரியை கொடுத்து ஏழை எளிய, ஒடுக்கப்பட் , நசுக்கப்பட்ட, விவசாய, தொழிலாளி உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்கும் நாங்கள் தான் வித்திட்டுள்ளோம். அதிகமா அரசு கலை […]
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூரில் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர், ஸ்டாலின் திமுக கூட்டத்துல பேசிட்டு இருக்கும் போது, எடப்பாடி பழனிச்சாமி தினந்தோறும் பத்திரிகையில் செய்தி வெளியிட்டு இருக்காரு. அவர் எண்ணத்தை கிழிச்சாரு அப்படின்னு சொல்றாரு. நாம எதோ கிழிச்சோமா… நாங்க கிழிச்சத தான்பா சொல்லிட்டு இருக்கிறோம். நாங்க என்ன என்ன செஞ்சேம்னு தான் சொல்லிட்டு இருக்குறோம். நீ ஏன் கோவபடுற ? நீ செஞ்சிருந்தா சொல்லு… நீ செய்யல, சொல்லுறதுக்கு வழி இல்ல. ஆனால் நாங்கள் […]
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசிய அவர், நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் பொழுது எடப்பாடி பழனிச்சாமியுடைய அரசு பத்து நாட்கள் தாங்காது என ஸ்டாலின் வெளியில் பேசினார், பொதுக்கூட்டத்தில் பேசினார், பத்திரிக்கையிலே ஊடகத்திற்கு செய்தி கொடுத்தார். ஒரு மாதம் தாங்காது, மூன்று மாதம் தாங்காது, ஆறு மாதம் தாங்காது என்றார் இப்பொழுது நாலு ஆண்டு காலம் நிறைவு பெற்று, ஐந்தாண்டு காலம் தொடர இருக்கின்றது ஸ்டாலின் அவர்களே… ஸ்டாலின் […]
திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசிய போது, தமிழகத்தில் அம்மாவுடைய அரசு பல்வேறு வகையிலே விவசாயிகள் உதவி செய்த காரணத்தால் இன்றைக்கு தொடர்ந்து உணவு தானிய உற்பத்திலே அதிக விளைச்சலை கொடுத்து, கிஸ்கருமான் விருதை தொடர்ந்து நம்முடைய மாநிலம் பெற்று கொண்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் பத்து மாவட்டங்களிளே வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்கள் எல்லாம் சரியான […]
திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசிய போது, கிராமப்புறத்தில் இருக்கின்ற வேளாண் பெரு மக்கள் வேளாண்மையை மேற்கொள்வதற்காக அங்கே இருக்கின்ற கூட்டுறவு வங்கியில் பயிர்க் கடனை பெறுகின்றார்கள். இதுதான் எதார்த்த உண்மை. வேளாண் பெரு மக்கள் புயலால் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் கொடுக்கின்றோம். தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டாலும் பயிர் சேதத்திற்கு கணக்கிட்டு நிவாரணம் அளிக்கின்றோம். வறட்சி ஏற்பட்டாலும் நிவாரணம் கொடுத்த ஒரே […]
இந்தியாவிலேயே அதிகமாக போய் பேசுகிற ஒரே தலைவர் திமுக தலைவர் தான் என முதலமைச்சர் பழனிச்சாமி விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் முதலமைச்சர் பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முக ஸ்டாலின் தந்திரமாக, கவர்ச்சியாக பேசி ஆட்சியை பிடிக்க பார்ப்பதாக தெரிவித்தார். திமுக என்றாலே அராஜக கட்சி , ரவுடி கட்சி என குற்றம் சாட்டிய முதலமைச்சர் பழனிச்சாமி, கொஞ்சம் ஏமாற்றத்தால் திமுகவினர் நாட்டையே பட்டா போட்டு விடுவார்கள் எனவும் விமர்சித்தார். இதனைத் […]
திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டிற்கு உணவளிக்கின்றவர்கள் விவசாயிகள். விவசாயிகள் வெயிலில் – மழையிலும், இரவு என்றும், பகல் என்றும் பாராமல் நாட்டுக்காக உழைத்து ,உணவு உற்பத்தியை பெருக்கி, இன்றைக்கு தமிழ்நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுகின்ற அளவிற்கு விளைச்சலை கொடுக்கின்றவர்கள் வேளாண் பெரு மக்கள். உடுக்கை இழந்தவன் கை போலே, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என […]
திருவள்ளூர்அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, இன்றைய தினம் வேளாண் பெருமக்கள், நெசவாளர் என இரு பிரதிநிதிகளும் இங்கே அவர்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்தார். வேளாண் பெருமக்களை பொறுத்த வரைக்கும், இங்கே நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள். அதை அம்மாவுடைய அரசு ஏற்படுத்தி கொடுக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த ஆண்டு தமிழகத்திலே இதுநாள் வரை இல்லாத […]
தமிழக முதல்வர் விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பை ஜல கண்ட புரம் பேருந்து நிலையத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி அதிமுக நிர்வாகிகள் கொண்டாடினர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் நூற்றி பத்தாவது விதியின் கீழ் பன்னிரெண்டாயிரத்தி நூற்றி பத்து கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயப் பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பிணை வெளியிட்டு இருந்தார். பயிர் கடன் தள்ளுபடியால் தமிழகத்தில் பதினாறு லட்சத்து நாற்பத்து மூன்றாயிரம் […]
தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. மற்ற மாநிலங்கள் புருவங்களை உயர்த்தும் வகையில் அமைந்த ஒரு சில முக்கிய தீர்மானங்கள் குறித்த சிறிய தொகுப்பை பார்க்கலாம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதையே தமிழக அரசு தனது நிலைப்பாட்டாக கொண்டுள்ளது. அவர்களின் விடுதலைக்காக […]
பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்றபோது அவர் சென்ற காரின் அதிமுக கட்சி கொடி இருந்தது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி, சிஆர் சரஸ்வதி கூறுகையில்,சசிகலா தான் பொதுச் செயலாளர் என்ற வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கின்றது, அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. அண்ணா திமுகவின் சட்ட விதிகளின்படி […]
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா சற்றுமுன் டிசார்ஜ் செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும், அவரின் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் கட்சி கொடியை சசிகலாவின் காரில் இடம்பெற்றிருக்கிறது என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளராக அவர் சில காலங்கள் இருந்தார், அதன் பின்னராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கட்சியை வழி நடத்திச் செல்கிறார்கள். இதனிடையே சசிகலா வெளியே வந்தால் […]
முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், கொரோனா காலத்தில் தமிழக மக்களை அரசு கைவிட்டது. திமுக ஆட்சியில் இல்லாத எந்த சூழ்நிலையிலும் திமுக மக்களை கைவிடல. அதற்கு உதாரணம் தான் ஒன்றிணைவோம் வா என்ற அற்புதமான திட்டம். அதைத்தொடர்ந்து விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை நம்முடைய கழக முன்னணியினர் ஏறக்குறைய 20 பேர் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து மக்கள் கிராம சபை கூட்டம் கிராமத்திலிருந்து நகரம் வரை […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் மூன்று, நான்கு மாதங்களே உள்ள நிலையில் ஆளும் அரசு தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சி கட்டலை அலங்கரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மக்களை கவரக்கூடிய வகைகளில் திட்டங்களும், அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப் படும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அடைதரர்களும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ஊக்கத் தொகையாக ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். அந்த வகையில் கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி 12ஆம் தேதிக்குள் இதனை விநியோகம் செய்யவும், குறிப்பிட்ட நாளில் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்க வில்லையென்றால் 13ஆம் தேதியன்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு, சிறந்த காளை உரிமையாளருக்கும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார்கள் பரிசாக வழங்கப்படும் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோல் விழா நடைபெற்றது. ஜல்லிக்கட்டு கமிட்டி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர் […]
எடப்பாடி தொகுதியின் அம்சங்களும், தொழில்கள் ,நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்கள் பாலங்கள் நிறைந்த சேலத்தில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சொந்தத் தொகுதியான எடப்பாடி சேலம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாகவும் எடப்பாடி உள்ளது. 1951ஆம் ஆண்டு எடப்பாடி ஆனது சட்டமன்றத் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது அதிலிருந்து பல தேர்தல்கள் நடைபெற்றுள்ளது அதில் அதில் நான்கு தேர்தல்களில் தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி […]
தமிழ் கடவுளான முருகப் பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டின் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. அந்த திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதேபோல இந்த விழாக்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகள் தைப்பூச திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க […]
பொய் பேசுவதில் டாக்டர் பட்டம் கொடுத்தால் ஸ்டாலினுக்கு கொடுக்கலாம் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டி, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், குளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். குளக்கரை பகுதியில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு நிறைவேற்றியுள்ள அடுக்கடுக்கான மக்கள் நலத்திட்டங்களை பட்டியலிட்டார். அதிமுகவில் பிளவு ஏற்படுத்தவும், ஆட்சியை கலைக்கவும் ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்ததாகவும், […]
சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அமைவது உறுதி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை புறநகர் தெற்கு மாவட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்டம், கோவை மாநகர் மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகள் கூட்டம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா, கனமழையால் கவலை அடைந்துள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நோக்கில், 2 ஆயிரத்து […]
“அ.தி.மு.க. அரசின் அவலங்களை அம்பலப்படுத்தும் தி.மு.க. கிராம சபைப் பிரச்சாரக் கூட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது; இனி ‘மக்கள் கிராமசபைக் கூட்டம்’ என்ற பெயரில் நடத்தப்படும்” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற கிராமசபைக் கூட்டங்களில் மிகப்பெரிய அளவில் இளைஞர்களும், தாய்மார்களும் – அனைத்துத் தரப்பு மக்களும் கூடுவதைப் பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியில் மூழ்கி – அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி “கிராம சபைக் கூட்டங்கள் நடத்தக் […]
தி.மு.க நடத்தும் கிராம சபைக் கூட்டங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதைப் பார்த்து அச்சமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளார் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பொன்னையாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் சமீபத்தில் பெய்த மழையில் மேம்பாலம் பழுதடைந்தது. இதனை இன்று காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன் […]
இன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் பேசிய முக.ஸ்டாலின், அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் மூலமாக கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் நாம் ஆட்சியர் மூலமாக நடத்தவில்லை. இப்போது இந்த கூட்டத்திற்கு நான்தான் ஆட்சியர். நாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்துகின்றோம். வேண்டுமென்றே இந்த கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென காவல்துறை மற்றும் ஆட்சியர் மூலமாக முயற்சித்தனர். அதனால் கிராம சபைக் கூட்டத்திற்கு தடை விதித்தனர். தடையை மீறி நம்மால் நடத்த முடியும். ஆனால் தேவையற்ற […]
பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 13ல் வழங்கி முடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை டோக்கன் விநியோகிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. […]
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வழக்கமாக வழங்கி வரும் பொங்கல் பரிசை உயர்த்தி ரூபாய் 2500 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும், ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக முழு கருப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 13ல் வழங்கி […]
திமுக ஆட்சி காலத்தில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் கட்சியின் மூத்த தலைவர், நிர்வாகிகளுடன் இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து முதல்வர் உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் முக. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை […]
முதல்வர் உட்பட அதிமுக அரசின் மீதான ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் திமுக தலைவர் மனு அளித்துள்ளார். இன்று காலை ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளரை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், “கடந்த 2011ல் இருந்து 2016 வரை அதிமுக ஆட்சியில் நடைபெற்றிருக்கும் ஊழல் குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கும் ஆட்சியில் நான்கு வருடத்தில் எல்லாத்துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. […]
வரும் ஜனவரி 9ஆம் தேதி ஆர் திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் ஜனவரி 9ஆம் தேதி காலை 8.50 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் […]
எடப்பாடியை ஜெயலலிதாவாகவும், எம்ஜிஆரை பன்னீர்செல்வமாகவும் பேசுகின்றார்கள் நம்முடைய வீரம் என்ன ஆனது ? என துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுகவின் மாவட்ட செயலாளர்கள், மாநகர செயலாளர் கள், பேரூர் கழகச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. வரக்கூடிய சட்டமன்ற பொதுத் தேர்தலில் தேர்தல் பிரசார வியூகம் அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டமாக இது அமைந்துள்ளது. இதில் 2500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வரவேற்புரையில் பேசிய திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டுவது என முதல்வர் துணை முதல்வர் தலைமையில் இன்று மாலை ஆலோசனை நடத்துகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியில் இருந்து நேற்று பரப்புரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுக்கூட்டம் இன்னும் கூட்டப்படவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. மேலும் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி […]
எடப்பாடி தொகுதியில் 43 வருட வரலாற்றிலே திமுக வென்றதாக வரலாறு இல்லை என முதல்வர் தெரிவித்தார். நேற்று சேலம் மாவட்ட எட்டப்படியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கனிமொழி அவர்கள் திமுகவின் பிரச்சாரத்தை எடப்பாடி தொகுதியில் வந்து தொடங்கியிருக்கிறார். எடப்பாடி சட்டமன்றதொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை.புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து 77ல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து முதல் முதலாக சட்டமன்ற […]
திமுக ஆட்சியில் கரண்ட் எப்போது வரும், போகுமென தெரியாது, அதிமுக ஆட்சியில் அந்த பேச்சிக்கே இடமில்லை என முதல்வர் தெரிவித்தார். நேற்று சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், துறைவாரியாக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி இன்று தேசிய அளவில் விருதை குவித்துக் கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் துறையை எடுத்துக்கொண்டால் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை நாம் பெற்றுள்ளோம். நீர் வேளாண்மை ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டு ஏரி […]
நல்ல சாலை, நல்ல பாலம் கட்டி கொடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் கொண்டார். நேற்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக முதலவர், ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவன் திறமையானவராக இருந்தபோதும் பொருளாதார சூழ்நிலையால் தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த ஏழை எளிய மாணவனுக்கு அரசு இருக்கிறது அம்மா இருக்கிறார் என்று சொல்லி பொது வரை அனைத்து பகுதியிலும் அரசு கலைக்கல்லூரியில் இடம் […]
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தமிழக முதல்வர் நேற்று தொடங்கினார். அதில் பேசிய அவர், சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றியை மக்கள் சக்தியோடு பெரும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரும் தொடக்கிவைத்த இயக்கம் அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். சுமார் 31 ஆண்டுகள் ஆட்சி நடத்தி அதிகம் ஆட்சி புரிந்த இயக்கம் அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் […]
அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்த பின்பு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழை எளிய மக்களுக்கு அவர்களது பகுதியிலேயே சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதற்காக அம்மா மினி கிளினிக் நாங்கள் தொடங்கினோம். தமிழகம் முழுவதிலும் 2000 அம்மா மினி கிளினிக் துவக்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்தது மட்டுமில்லாமல் அனைத்து பகுதிகளிலும் இன்று தொடக்கப்பட்ட நிகழ்ச்சி அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி பகுதியிலும் இன்றைய தினம் முதலமைச்சர் […]
தமிழக முழுவதும் உள்ள 2.06கோடி அரிசி அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக குடும்ப அட்டை தாரர்களுக்கு 2, 500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இவற்றோடு 1கிலோ பச்சரிசி, சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய், உலர் திராட்சை பழங்கள் மற்றும் கரும்புகளும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த தொகையினை வருகின்ற ஜனவரி 4-ம் தேதி முதல் அனைத்து நியாயவிலை கடைகளில் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடி தொகுதியிலிருந்து இன்று தொடங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கிவைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஓமலூரில் செய்தியாளர்களை சென்ற முதலமைச்சர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று நங்கவள்ளி அருகே பெரியசுரகையில் உள்ள சென்றாய பெருமாள் ஆலயத்தில் நாளை சாமி தரிசனம் செய்த […]
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், நாளைய தினம் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும், சென்றாயப்பெருமாள் கோயிலிலிருந்து என்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கின்றேன். என்னுடைய சொந்த தொகுதியிலே உள்ள அந்த கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கின்றோம். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள். அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கட்சியின் சார்பாக, கழக உடன்பிறப்புகள், எங்களுடைய ஒன்றிய கழகச் செயலாளர்களோடு தேர்தல் பிரச்சாரத்தை […]
எம்.ஜி.ஆர் பாடல் பாடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக சார்பாக பொது கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் நேற்று கடலூர் மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற சிறப்பு பொதுக்கூட்டதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் எம்ஜிஆர் பாடல் பாடி தமிழக முதல்வர் பழனிசாமி விமர்சித்தார். அப்போது, உங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள… உங்களை காப்பாற்றிக்கொள்ள…. தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு […]
கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு விரட்ட சபதமெடுப்போம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் சூளுரைத்தார். நேற்று தேர்தல் பிரச்சார சிறப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், செம்மொழிக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்பது நூறு வருட கோரிக்கை. ஆட்சியில் காங்கிரஸ் திமுக கூட்டணி இருந்தபோது முதல் நிபந்தனையாக வைத்து பெற்றுக்கொடுத்தார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் இன்று அதன் நிலைமை என்ன? இதைவிடவும் தமிழ் துரோகம் இருக்க முடியுமா? செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு […]
மத்திய அரசுக்கு தலையாட்டனும், இல்லனா முதல்வர் பதவி போயிரும், சுயநலம் சுருண்டு போச்சு என ஸ்டாலின் அதிமுக அரசை விமர்சித்துள்ளார். திமுக நடத்திவரும் தேர்தல் பிரச்சார சிறப்பு பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், மத்திய அரசின் புதிய மின்சார சட்டமானது தமிழக விவசாயிகள் இதுவரை பெற்று வரும் இலவச மின்சாரத்தை பறிக்கப் போகிறது. விவசாய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய மாபெரும் கொடை தான் இலவச மின்சாரம். அந்த உரிமையை […]
தமிழக அரசு சார்பில் இன்று 18 நிறுவனங்களோடு முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதிதாக கையெழுத்திட்டுள்ளார். தமிழகம் வர இருக்கும் புதிய 18 நிறுவனங்களின் மூலமாக சுமார் 26 ஆயிரத்து 508 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற இருக்கிறது. இதில் எரிவாயு, இணையவழிக் கல்வி, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு 18 நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளது. ஏற்கனவே புரிந்துணர்வு செய்யப்பட்ட ஐந்து நிறுவனங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. மொத்தமாக இன்றைய தினத்தில் 26 ஆயிரத்து 650 […]