தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பேசியபோது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர். அப்படியெனில் எவ்வளவு திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஆனால் நான்கைந்து திட்டங்கள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மற்றவையெல்லாம் சாதாரண திட்டங்கள் தான். கடந்த திமுக ஆட்சியில் 607 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. 198 […]
Tag: எடப்பாடி
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரின் வேட்புமனு திமுகவினரால் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதிமுகவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் […]
எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மாநில தேர்தல் கமிஷனருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 234 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் நிலையில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது தேவையற்றது. தேர்தலை 2 கட்டமாக நடத்துவதால் ஆளுங்கட்சியின் சட்டவிரோத […]
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரை அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையை புறக்கணித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை நிகழ்ச்சி தொடங்கியவுடன் அவசர முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு நிகழ்வுகள் குறித்து அவையின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். ஒன்று திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரத்தைச் சேர்ந்த வாசிம் அக்ரம் (வயது 40) சமூக ஆர்வலர். குறிப்பிட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வாணியம்பாடி காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் புகார் […]
அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த போது ஆ.ராசா பேசிய வீடியோவை காட்டி எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையியல் இன்று நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது., சட்டப்பேரவை தொடங்கியதும் வெளிநடப்பு செய்த அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஏற்கனவே நீட் தேர்வுக்கு பல விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. மாண்புமிகு அம்மாவின் அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே […]
கடந்த பத்து வருடங்களில் தமிழக அரசின் நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இதில் கடந்த அதிமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி சம்பவத்தை பெரிய அளவில் வெளியிட்ட ஊடகங்கள் திமுகவிற்கு ஆதரவாக மாறிவிட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எங்கள் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்கினோம் […]
சசிகலா அம்மாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த பலரும் சசிகலா அம்மாவிடம் பேசிய காரணத்திற்காக அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆளும் கட்சியான திமுக அணியில் சேர்ந்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கேள்வி எழுப்பியபோது, அந்த அம்மாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். அந்த அம்மா பத்து பேரிடம் அல்ல ஆயிரம் […]
தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். அப்போது முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, […]
முழு ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித் திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். முழு ஊரடங்கு என்பதால் பால், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவிவருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் பொது வெளியில் செல்பவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் விதித்துள்ளது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. […]
தாராபுரத்திற்க்கு வந்த பிரதமர் மோடி உரையாற்றிய பிறகு, எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். தாராபுரத்தில் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நம் கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. பிரதமர் ஒரு நிமிடம் கூட வீணாகாமல் இந்திய நாடு முன்னேற இரவு பகல் பாராமல் உரைக்கின்றார். இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற நாட்டு மக்களின் கனவை நனவாக்க இருக்கிறார். […]
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருநகர் பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது டி. டி. வி. தினகரன் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு யாருடனும் கூட்டணி இல்லை. பணத்துடன் மட்டுமே கூட்டணி வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி இழைத்த துரோகத்திற்கு தக்க பதிலடி மக்கள் கொடுக்கவேண்டும். திமுகவை சேர்ந்தவர்கள் கைகொடுப்பதுபோல் கையில் இருக்கும் மோதிரத்தை திருடி விடுவார்கள். பஜ்ஜி கடையில் பாக்சிங் செய்தவர்கள். அவர்கள் ஆட்சிக்கு […]
நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த தொகுதியில் மக்கள் வைத்த கோரிக்கையை பெரும்பாலும் நிறைவேற்றி இருக்கிறேன். இன்னும் தேர்தல் நேரத்தில் பல கோரிக்கையை வரும் என்று எதிர்பார்க்கிறேன். அந்த கோரிக்கைகள் முழுவதும் நிறைவேற்றப்படும். நான் ஏற்கனவே சட்டமன்ற வேட்பாளராக இந்த தொகுதியில் போட்டியிடும் போது, இந்த தொகுதி மக்கள் எங்களுடைய குழந்தைகள் என்றைக்கு குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவர்களுடைய கோரிக்கைகளை […]
வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டியிடுகிறார். அதிமுக விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் விருப்பமனு தாக்கல் செய்தனர். அதன்படி எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி, போடிநாயக்கனூரில் ஒ.பன்னீர்ச்செலவம், திண்டுக்கலில் சீனிவாசன், கோபியில் – செங்கோட்டையன், குமாரபாளையத்தில் தங்கமணி, தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
நேற்று திருப்பூரில் பேசிய திமுக தலைவர், முதல்வர் லட்சம், கோடி திட்டங்களை கொண்டு வருவாராம். லட்சக்கணக்கான பேருக்கு வேலை குடுப்பாராம், அவர் முதலமைச்சர் பழனிச்சாமியா… ? இல்ல மந்திரவாதி பழனிச்சாமியா புரியல. அதிமுக அரசு உருவானது முதல் சொல்லப்பட்ட அனைத்தும் வாய் ஜாலம் தான். ஜெயலலிதா முதலமைச்சரா இருந்தபோ தமிழகத்துக்கு விஸன் 2020என்ற ஒரு திட்டத்தை அறிவிச்சாரு. 2012ஆம் ஆண்டு அந்த புதிய கொள்கையை வெளியிட்டார். அதை இப்போது படிச்சாலும் புல் அரிக்குது. அதுல சொல்லியிருக்கிறார், தனிநபர் […]
அதிமுகவை காப்பாற்றுவேம் என பிப்ரவரி 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றி உறுதி எடுக்குமாறு கட்சியினருக்கு ஓபிஎஸ் – இபிஎஸ் கடிதம் எழுதி இருக்கிறார்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. அந்த கொண்டாட்டத்திற்காக அதிமுகவின் தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒருசேர ஒரு முக்கியமான கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். அதாவது, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விசுவாச தொண்டர்களுக்கு […]
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மகளை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தாதாபுரம் ஊராட்சியை சேர்ந்த ஆதிகாட்டுர் பகுதியில் வசித்து வருபவர் கோபால் (54) மனைவி மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .மகள் பிரியா (15 ) மகன் கண்ணன். கோபால் அப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தள்ளுவண்டி மூலம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மனைவி மணி கரும்பு வெட்டும் […]
கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பாராளுமன்ற தேர்தலில் எப்படி செய்யப்பட்டோமோ, அப்படி செயல்படுவோம். வேட்பாளர்கள் யார் என்று மாவட்ட பொறுப்பாளர்கள் தீர்மானித்து தேர்தல் பணியை மேற்கொள்வோம். தேர்வுக்கு எப்படி மாணவன் தயாராக இருப்பானோ அதே மாதிரி எங்க நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராயிட்டு இருக்காங்க. எல்லா பணிகளும் படிப்படியாக நடக்கும். சசிகலாவே செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து சொல்வார். தேர்தல் பிரசாரத்துக்கு வருவது பற்றியோ, அரசியல் நடவடிக்கை குறித்தோ அவர் பேசுவார். யார் முதல்வர் என்று மக்கள்தானே […]
நேற்று சோளிங்கநல்லூரில் தேர்தல் பிரசாரத்தின் போது, கிராமங்கள்ல தடையில்லா மின்சாரம் கொடுக்கின்றோம். 2006 -2011இல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில பார்த்தீங்கன்னா… கடுமையான மின்வெட்டு. எப்ப கரண்டு வரும், எப்போ போகும்னு தெரியாது. உங்க ஊர்ல இருக்குற ஆற்காடு வீராசாமி அவர்கள் தான் மின் துறை அமைச்சரா இருந்தாரு. அப்போ இந்த மாவட்டம் பிரிக்காமல் இருந்தது, வேலூர் மாவட்டத்தில் இருந்தாரு. அப்போ அவரிடம் நிருபர் கேக்குறாங்க… ஏங்க அடிக்கடி கரண்ட் போயிட்டு இதுக்கு என்ன பதில் சொல்லுங்கன்னு […]
சேலம் எடப்பாடியில் உள்ள காளியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு விநாயகர் ஓம் காளி அம்மன் திருக்கோயில் உள்ளது. 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவருக்கு கும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். இவ்விழாவிற்கான […]
டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் தமிழகத்தில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை திறந்து வைக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் படியும் கோரிக்கை வைத்ததாக அவர் தெரிவித்தார். சசிகலா விடுதலை தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சசிகலா அதிமுக காட்சியிலேயே இல்லை என்றும், அவர் விடுதலை ஆனாலும் அதிமுகவில் இணைவதற்கு […]
கொரோனா தடுப்பூசி போடு முகாமை நாடு முழுவதும் பிரதமர் மோடி தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. மதுரையில் முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். அதில் பேசிய தமிழக முதலவர், உலகையே உலுக்கி கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்திய நாட்டினுடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்த முயற்சி இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கின்றது. அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நான் பாராட்டுகளையும், […]
தமிழ் கடவுளான முருகப் பெருமான் சிறப்பித்து தமிழ்நாட்டின் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. அந்த திருவிழாவை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. அதேபோல இந்த விழாக்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்றபோது இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகள் தைப்பூச திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் […]
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகையை இரண்டு மடங்காக அதிகரித்து முதல்வர் வெளி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சேலம் எடப்பாடியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கியுள்ளார். இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் அடுத்த ஆண்டு பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் பணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். துண்டுக் கரும்புகளுக்கு பதிலா […]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக பரபரப்பு கடிதம் ஒன்று வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க இருப்பதால் முழுவேகத்தில் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஒருவரையொருவர் சமூக வலைத்தளங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் பிரச்சாரத்திற்கு செல்ல இருக்கும் நிலையில் மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் பழனிசாமி மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவேன் என்று சென்னை கேகே நகர் […]
பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று பேசியுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று விவாதம் பெரும் அளவில் பேசப்பட்டு வருகின்றது. பொது முடக்கம் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தன. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கருத்து கணிப்பு நடத்தி அதன் மூலம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் […]
தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் மற்றும் புதிய திட்ட பணிகள் தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தடுப்பு ஊசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. வந்தவுடன் தமிழகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். […]
புரெவி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி விசாரித்தார்.மேலும் புரெவி புயல் பாம்பனில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டுஇருக்கிறது.இலங்கையின் முல்லைத்தீவுவை 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதே போல், நோய் தொற்று குறைந்த மாநிலங்களில் தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா […]
ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புகளான INI – CET தேர்வு மையம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், நாக்பூர், ராய்ப்பூர் எய்ம்ஸ், நிமான்ஸ், ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் 6 வருடம் கால அளவு கொண்ட ஒருங்கிணைந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கு INI – CET என்றழைக்கப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் தேர்வு […]
மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார். […]
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்று நாளை அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் நாளை திட்டமிட்டபடி முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற அறிவிப்பை வெளியிடப்படும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் நாளை அறிவிக்காவிட்டால் பொதுமக்கள் மத்தியில் கட்சி மீதான நம்பகத்தன்மை கெட்டுவிடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதனால் தான் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் மூலம் தன்னுடைய கருத்தை தெளிவாக தெரிவித்திருந்தார் . அதில், தமிழக […]
கரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு, சிறப்பு வேலாண் மண்டலம், மீனவர்களுக்கு 5000 இலவச வீடுகள், மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள் என கரூர் நகர் முழுவதும் தமிழக அரசின் 23 நலத்திட்டங்களை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும் என ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில் நேதாஜி சுபாஷ் சேனை தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கரூரைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் புகைப்படம் […]
மோடி திட்ட மோசடிக்கு இந்த அறிவிப்புதான் காரணம் என்று தமிழக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். ஏழை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் சுமார் 5 லட்சம் பேர் விவசாயிகள் என்று தங்களை பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முறைகேட்டுக்கு துணைபுரிந்த 34 […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ வல்லுநர் குழுவினரோடு ஆலோசனை நடத்த இருக்கின்றார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு 31 ஆம் தேதியோடு நிறைவடைய இருக்கிறது. அதனை ஒட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன ? மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எந்த மாதிரியாக உள்ளது என்பது குறித்த விவரங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் நேற்று கேட்டறிந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் […]
நில அளவை உட்பிரிவு, புல எல்லை அமைத்தல், மேல்முறையீடு வழங்குதல், கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கான கட்டணங்களை வருவாய் துறை உயர்த்தியுள்ளது. அதன்படி அளவீடு புத்தகப் பிரதி (பக்கம் ஒன்றுக்கு) A4 அளவுக்கு ரூ. 20-ல் இருந்து ரூ. 50 ஆகவும், புல அளவீட்டு புத்தகப் பிரதி ( பக்கம் ஒன்றுக்கு) A3 அளவுக்கு ரூபாய் 100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், தமிழக […]
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில்வளம் முழுவதும் சிதைந்துள்ளது. அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, பொருளாதாரம் முழுவதும் சரிந்துள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தமிழக அரசும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் முயற்சியாக பல்வேறு விதமான அதிரடி உத்தரவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. பொதுமுடக்கம் காரணமாக பல தொழில்களில் ஈடுபட்டவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாழ்வாதாரம் […]
கொரோனா காலத்தில் தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து. பணியாளர்களுக்கு கொரோனா வந்துவிடஎன்பதற்காக குறைந்தளவு பணியாளரை வைத்து அரசுப் பணியில் இயக்கப்பட வேண்டும் என்றெல்லாம் அறிவிப்புகள் வந்து கொண்டு இருந்த வந்த நிலையில் தற்போது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாற்று திறனாளி அரசு பணியாளர்கள் வரும் 31ம் தேதி வரை பணிக்கு வரை பணிக்காக அலுவலகம் செல்ல தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது பேருந்து சேவை இயக்கப்படாததால் பணிக்கு செல்வதில் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டம் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார். கொரோனா பாதிப்பில் ஒட்டு மொத்த இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடமாக இருந்து வருகிறது. மகராஷ்டிரா அடுத்தபடியாக டெல்லி டெல்லி அடுத்தபடியாக தமிழகம் இருக்கிறது இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதில் முக்கியமான விஷயங்களையும் சொல்லியிருக்கிறார். இன்று காலையில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடலில் தமிழகத்தில் […]
குடிநீர் நோய்த் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செய்ததாக தமிழக முதல்வருக்கு அமெரிக்க நிறுவனம் பாராட்டை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் இயங்கி வரும் The Rotary Of Rotary International சார்பில் உலகளவில் குடிநீர், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுசூழல், உலக சமாதானத்தில் சிறப்பான சேவை புரிவோர் பாராட்டப்படுவார். அந்தவகையில் தமிழக முதல்வரும் தற்போது பாராட்டப்படுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பால் ஹேரிஸ் பெல்லோ (PAUL HARRIS FELLOW) என்று […]
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சென்னை வடக்கு மண்டல கொரோனா தடுப்பு அதிகாரியாக கபில் குமார் சி சரத்கர். சென்னை கிழக்கு மண்டலத்திற்கு பவானீஸ்வரி ஐபிஎஸ், சென்னை தெற்கு மண்டலத்திற்கு பாஸ்கரன் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளார்கள். சென்னை மேற்கு மண்டலதிற்கு சிறப்பு அதிகாரியாக கணேசமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கொரோனா சிறப்பு அதிகாரியாக உதயச்சந்திரன் ஐஏஎஸ், அன்பு […]
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே […]
தமிழக அரசுக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருவது தமிழக அரசை கவலை அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பதினோராம் வகுப்பு காண நான்கு முதன்மை பாடங்கள் 3 ஆக குறைக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்கனவே கடந்த ஆண்டு அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். வேலை கனவு சிதைக்கப்படும் என்றலெல்லாம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டதில், […]
திமுக சார்பில் அரசின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். இன்று சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, திமுக தலைவர் என்ன செஞ்சுட்டு இருக்காரு. தினமும் ஒரு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் செய்வதற்காக அறிக்கை விடுகிறார். நோய் சம்பந்தமாக என்ன அறிக்கை விட்டார். நோய் பரவலை எப்படி தடுக்க முடியும் ? நோய் வந்தால் எப்படி குணப்படுத்த முடியும் ? என்று ஏதாவது சொல்லியிருக்கிறாரா ? தினம்தோறும் அரசை […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரிகளாக இவர்கள் பணி புரிவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக தனித்தனியே மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த […]
நீட் தேர்வு மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு என்பது மிக மிக அவசியமான ஒன்று என்றுதான் கல்வியாளர் தரப்பிலிருந்து முன்வைக்கக்கூடிய கருத்தாக இருக்கின்றது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அரசு கல்லூரிகளில் 2600 மாநில ஒதுக்கீட்டு இடங்களாக […]
விமர்சனத்தை தவிருங்கள், ஆக்கபூர்வமான கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, 210 நாடுகளுக்கும் மேலாக இந்த நோய் இருக்கின்றது. வல்லரசு நாடுகளே இன்று விழிபிதுங்கிக் கொண்டு இருக்கின்றது. நாம் முதலமைச்சர் தலைமையில் மிகக் கடுமையாக போராடி பணி செய்து கொண்டு இருக்கின்றோம். பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியும், நடுநிலையாளர்களுக்கு தெரியும், விமர்சகர்களுக்கு தெரியும். எந்த அளவு […]
கொரோனா இறப்பு விதத்தில் வேறுபாடு இருக்கின்றது ஏற்ற கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். சென்னையில் கொரோனா இறப்பில் வேறுபாடு வருகிறது என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், டெத்ல என்ன டிஃபரண்ட். அரசாங்க மருத்துவமனைகளில் ஏற்படும் இறப்பு கணக்கு தெரியுது. தனியார் மருத்துமனையில் கிடைக்கின்ற செய்தியை வைத்து நாம் அறிவிக்கிறோம். இதுல இறப்பை மறைப்பதற்கு எதுவுமே கிடையாது, இறப்பை யாரும் மறைக்க முடியாது. கொரோனா இறப்பை எப்படி குறைத்து சொல்ல முடியும். […]
சேலத்தில் ரூபாய் 441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியதோடு, 35 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய தமிழக முதல்வர், சேல மக்களுக்கு இதையெல்லாம் வேண்டும் என்று மாண்புமிகு அம்மா அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தேன். சேலம் மாநகர மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டு என்றால் மேம்பாலங்கள் வேண்டும் என்று அம்மாவிடம் கோரிக்கை மனு கொடுத்தேன். உடனே […]
தமிழக அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து, அதற்கான அட்டவணையை வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு இக்கட்டான சூழலில் நடத்த வேண்டாம் என்றும், இதனை ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனிடையே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி […]