எட்டு வழி சாலை விகாரத்தில் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலு தெரிவித்துள்ளார். சென்னை – சேலம் எட்டு வழி சாலை விவகாரத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எந்த கருத்தை தெரிவித்ததோ அதில் நிலையாக இருக்கிறோம் என்றும், சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் திட்டத்தின் மீது நடவடிக்கை என்ற முந்தைய நிலைப்பாட்டு தற்போது தொடர்ந்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Tag: எட்டு வழி சாலை
சேலம்-சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எட்டு வழி சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை-சேலம் சாலை திட்ட இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது சேலம்- சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறாமலேயே, இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் […]
சென்னை மற்றும் சேலம் இடையேயான எட்டு வழி சாலைக்கு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு விதித்த தடை தொடரும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் சேலம் இடையே எட்டு வழி சாலை அமைப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டது. அதற்காக பல்வேறு விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சி செய்தது. அதனால் விவசாய நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயற்சிப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில்சென்னை மற்றும் சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டம் தொடர்பான […]