தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் பொதுவெளியில் சில சர்ச்சை வார்த்தைகளை பேசுவது கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்திள்ளது. சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மேடையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை பார்த்து கவனமாக பேச வேண்டும் என்று எச்சரித்து இருந்தார். அதன் பிறகு ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொள்ளும் என்ற பழமொழியை கூறி கட்சிக்காரர்கள் சிலர் […]
Tag: எதிர்க்கட்சிகள்
பிரேசில் ராணுவம் வயாகரா மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை வாங்குவதற்கு லட்சக்கணக்கான பணத்தை அரசாங்கம் செலவிடுவதாக எதிர்கசிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரேசில் நாட்டின் ஆட்சி அதிபர் ஜயார் பல்சொனாரோ தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அந்நாட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எலியாஸ் வாஸ் பிரேசில் ராணுவத்துக்கு எந்த விஷயங்களுக்கெல்லாம் அரசு செலவு செய்கிறது என்று கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்து இருந்தார். இதற்கு பிரேசில் ராணுவம் வயாகரா […]
பாகிஸ்தானில் எதிர்க்கட்சியினர் தங்களுக்கு உள்ள ஆதரவை காண்பிக்கும் வகையில் நேற்று இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தியிருக்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் அரசாங்கத்தின் மீது எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த தீர்மானம் தொடர்பான விவாதம் நாளை நடக்கவிருக்கிறது. அதனையடுத்து வரும் 3ஆம் தேதி அன்று வாக்கெடுப்பு நடக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாக எதிர்க்கட்சியினருக்கு தனக்குள்ள ஆதரவை காண்பிப்பதற்காக, இம்ரான்கான் கடந்த 27-ஆம் தேதியன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் அதிக கூட்டத்தை கூட்டி, பேரணி […]
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதற்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பாஜகவை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல விவரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதனிடையில் எதிர்க் கட்சிக் கூட்டத்திற்கு காங்கிரஸ் விடைத்திருந்த அழைப்பை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்துவிட்டு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக பிரதான கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை முன்னிறுத்த வேண்டும் […]
ஆப்கானிஸ்தான் நாடு தொடர்பாக அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் எடுக்கும் முடிவுகள் எதிர்கட்சிகள் உட்பட அனைவருக்கும் அவருக்கு எதிரான கேள்வியை எழுப்பும் விதமாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஞாயிறு முதல் அந்நாட்டின் தலைநகரான காபூலையும் கைப்பற்றியுள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாடு தொடர்பாக அமெரிக்க அதிபரான ஜோ […]
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல்கேஸ் சிலிண்டர் விலை, சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைப்பது உள்ளிட்ட 11ம் அம்ச கோரிக்கைகளை வலியுத்தி செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 30 வரையில் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக எதிர்கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சிதலைவர் சோனியா தலைமையில் 19 எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தின. இந்த கூட்டத்தில் வரும் 2024 ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலைதிட்டமிடுவதற்கான நேரம் […]
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 19 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் காஷ்மீரில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதுமாக சீக்கிரம் செயல்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர், சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை […]
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளின் காரணமாக பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தற்போது பெகாஸஸ் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த எட்டு நாட்களாக இந்த விவகாரத்தின் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று காலை மக்களவை கூடிய உடன், ராகுல்காந்தி தலைமையில் எது கட்சி எம்பிக்கள் இன்று காலை […]
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வரும் நிலையில் 14 எதிர்க்கட்சி எம்எல்ஏ மற்றும் எம்பி களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்திய பிறகு கொட்டும் மழையில் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் நாடாளுமன்றத்தில் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க […]
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மூன்றாவது நாளாக நடந்து வரும் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தர விடும்படி வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களாக மக்களவை […]
3 மாதங்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஜப்பான் நாட்டில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையில் அமைந்த தாராளவாத ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஜப்பானின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. மேலும் இந்த கூட்டத்தொடரை 3 மாதங்களுக்கு நீட்டிக்க எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . இந்த கூட்டத்தொடரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கும் நடைபெற உள்ள […]
நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், கே.பி சர்மா ஒலி மீண்டும் பிரதமராக அதிபரால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். நேபாளத்தில் ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட்டில், பிரதமர் சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பிரதமர் சர்மா ஒலி பாராளுமன்றத்தை கலைக்க பரிந்துரைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரியும் அதை ஒப்புக்கொண்டார். ஆனால் நாட்டின் உச்சநீதிமன்றம் இந்த முடிவிற்கு தடை விதித்துவிட்டது. இதனால் குழப்பம் நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் […]