இமாச்சல் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 40 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், கடந்த 11-ம் தேதி முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பொறுப்பேற்றார். அதன் பிறகு துணை முதல்வராக முகேஷ் அக்னி ஹோத்ரி பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது இமாச்சல் பிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி பாஜக கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் முதல்வராகவும், 6 முறை […]
Tag: எதிர்க்கட்சி தலைவர்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா உலக தலைவர்கள் தங்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனவே, மக்கள் அதிபரை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா தெரிவித்திருப்பதாவது, இது இயற்கையான ஆர்ப்பாட்டம். Colombo: It's an organic uprising. We'll use all methods available through constitutional procedures to achieve the expectations of the […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் இந்திய நாட்டை பெருமையாக பேசியிருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தானில் நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கு முன் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் இந்திய நாட்டிற்கு எதிர்ப்பாளர் இல்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, எந்த வல்லரசு நாடுகளும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது. யாரும் இந்தியாவிற்கு ஆணை பிறப்பிக்க முடியாது. மக்களின் நலன்களுக்காக ரஷ்யா-உக்ரைன் போரில், இந்தியா […]
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் தமிழ்நாட்டின் சட்டசபை கூடும் போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்தின் தொடக்கத்திலும் சட்டசபை கூட்டமானது, இன்று தொடங்கியிருக்கிறது. அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில், நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரையின் போது அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தார்கள். அதன் பின்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் […]
திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு மூலம் இந்த விடியா அரசில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது நிதர்சனமாகிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் சமூக விரோதிகளால் திருச்சி நவல்பட்டு காவல்நிலைய உதவி ஆய்வாளர் பூமிநாதன் சமூக விரோதிகளால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த […]
கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுற்றேரி மற்றும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூவாலை கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக புவனகிரி பேருந்து நிலையம் அருகே கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மழையால் […]
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியால் ஆரம்பிக்கப்பட்ட ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பினை நீதிமன்றம் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி ( 44 ) “ஊழலுக்கு எதிராக போராடும் அமைப்பு” என்ற அமைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆட்சிக்கு எதிராக உருவாக்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து கடந்த வருடம் நோவிசோக் என்ற வேதிபொருள் தாக்குதலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்ற நவால்னி தொடர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார். […]
கேரள மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவராக வீட்டில் வி.டி.சதீசன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கேரளாவின் முதல்வராக பினராய் விஜயன் நேற்று முன்தினம் பதவியேற்றார். இதைதொடர்ந்து 20 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசை சேர்ந்த வி.டி.சதீசனை காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக ரமேஷ் சென்னிதலா இருந்த நிலையில் தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவராக வி.டி.சதீசன் […]
பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பெயர் வெளிநாடு செல்வதற்கான தடைவிதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். இதனிடையே கடந்த மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதோடு மருத்துவ சிகிச்சைக்காக ஒரு முறை மட்டும் வெளிநாடு செல்லலாம் என்றும் மற்றபடி எக்காரணத்திற்காகவும் வெளிநாடு செல்லக் கூடாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஷெரீப் லண்டன் செல்ல […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு பணியில் பத்திரிக்கையாளர்களையும் முன்களப்பணியாளர்களாக தமிழக அரசு […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற […]