பீகாரில் பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ராஜ்னீஷ், மனீஷ் ஆகிய 2 பேரும் சகோதரர்கள். இந்த 2 பேரும் கைதாகி பாட்னா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிறையிலிருந்து 2 பேரும் தப்பிச் சென்றனர். இந்த 2 குற்றவாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலம் படகான் பகுதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி அண்மையில் திருடப்பட்டது. துப்பாக்கியை திருடியது யார்? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை திருடியவர்கள் வாரணாசியில் […]
Tag: என்கவுண்டர்
ஜம்முகாஷ்மீரின் பிசேம்பூர் நகர் பகுதியில் இன்று காலை பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறிப்பிட்ட இடத்தினை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இந்நிலையில் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிசுட்டசூடு நடத்தினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 3 பேர் காயமடைந்தனர். வேறு யாரேனும் […]
சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட ஓரிரு நாளில் என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திமுக அரசு மீது வைத்து குற்றச்சாட்டுகளில் ஒன்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பது தான். இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவியை அதிமுக பாஜக நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். ஆட்சி மீது எந்தவிதமான புகார் வந்தாலும் அது பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துவரும் ஸ்டாலின் […]
ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரும் காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சில பேர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் காஷ்மீர் காவல்துறையினருடன் இணைந்து அந்த பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதாவது புல்வாமாவின் நைனா பேட்புரா எனும் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் […]
செங்கல்பட்டில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் எதிரேயுள்ள காவல் நிலையம் அருகில் அப்பு கார்த்திக் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தனர். மேலும் மேட்டுத்தெருவில் வசித்து வந்த மகேஷ் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், அவரையும் வெட்டிப் படுகொலை […]
செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் காவல் துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தனர். செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே நேற்று அப்பு கார்த்தி மற்றும் மகேசை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மைதீன் மற்றும் தினேஷ் இருவரும் கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.. இந்த நிலையில் காவல்துறை 4 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தது.. இந்த நிலையில் திருப்புலிவனம் காட்டுப்பகுதியில் மைதீன் மற்றும் […]
டெல்லி போலீசாருக்கும், குற்றவாளிக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குற்றவாளி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பெகும்புர் பகுதியில் இன்று போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் மாறி, மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட நிலையில், குற்றவாளி தீபக் என்ற டைகர் கொல்லப்பட்டார். இந்த சண்டையில் காவல்துறையினர் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு […]
ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்களில் ஒருவன் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளான்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே நேற்று காலை பேருந்துக்காக காத்திருந்த வயதான பெண்மணியிடம் 3 பவுன் நகைகளை பறித்து விட்டு 2 வடமாநில கொள்ளையர்கள் தப்பித்து செல்ல முயன்றனர்.. அப்போது பொதுமக்கள் விரட்டி பிடிக்கும் போது கை துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என்று பொது மக்களை மிரட்டி இருக்கிறார்கள். இது தொடர்பாக தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சுதாகர் […]
உத்திரபிரதேசத்தில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளியை என்கவுண்டரில் சுட்டுள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த லல்லு யாதவ் என்கிற வினோத் யாதவ் என்பவர் பிரபல ரவுடி ஆவர். தேடப்படும் குற்றவாளியான இவர் மீது 82 கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் போலீசார் இவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து மாவூ மாவட்டத்தில் உள்ள பான்வர்பூர் என்ற பகுதியில் லல்லு யாதவ் இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் […]
கடலூர் அருகே போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திருப்பதிரிபுலியூர் சுப்பராயலு பகுதியில் வீரா என்கிற வீரங்கையன் 30 வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபல ரவுடி. வீரா மீது போலீஸ் நிலையத்தில் பல கொலை- கொள்ளை சம்பவம் குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் உழவர்சந்தை பக்கத்தில் வீராவுக்கு சொந்தமான பழக்கடை ஒன்று இருந்தது வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு […]
புதுப்பேட்டை பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி புதுப்பேட்டை மணலாறு பகுதியில் கிருஷ்ணா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். வீரா என்பவரை கழுத்தறுத்து கொன்று விட்டு தப்பிய கிருஷ்ணாவை போலீசார் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது போலீஸ் மீது கிருஷ்ணா தாக்குதல் நடத்தினார். அதனால் ஆத்திரமடைந்த போலீஸ் உடனே துப்பாக்கியை எடுத்து கிருஷ்ணாவை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீரா என்பவரை […]
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சிங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அச்சமயத்தில் பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் […]
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலகில் கொரோனா தாக்குதல் மட்டுமில்லாமல் தீவிரவாத தாக்குதல்களும் அவ்வப்போது சில நாடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் புல்வாமாவில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல் நடைபெறுகிறது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் மற்றும் போலீஸ் படையினர் தாக்குதல் நடத்தி வீரர்களும் தீவிரவாதிகளும் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், ஜதூரா என்ற பகுதியில், ராணுவம், சிஆர்பிஎஃப் போன்ற படைவீரர்கள் இன்று அதிகாலை தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் தீவிரமாக இறங்கி மோதலில் […]
இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி நேற்று இரவு காவல் துறையினரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார். இலங்கையில் 35 வயதுடைய அங்கொட லொக்கா நிழல் உலக தாதாவாக இருந்து வந்துள்ளார். அவர்மீது இலங்கையில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு ஆகிய வழக்குகள் இருக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அவர் தலைமறைவாக கோவை சேரன் மாநகர் பகுதியில் தங்கியிருந்தார். அதன் பின்னர் கடந்த மாதம் மூன்றாம் தேதி மாரடைப்பால் […]
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சுமார் 124 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சென்ற 42 மாதங்களில் மட்டும் சுமார் 124 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மீரட்டில் 14 பேரும், முசாபர்நகரில் 11 பேரும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். மாநில அரசு பிராமணர்களை குறிபார்த்து என்கவுண்ட்டர் […]
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காஷ்மீர் போலீசுடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது கம்ரஷிபுரா என்ற பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட பாதுகாப்பு படையினரை அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள், குறிபார்த்து துப்பாக்கிச்சூடு நடத்த ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி […]
இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை காவல் துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித்த ஹேமதிலக்க இலங்கை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கையின் முல்லேரியாவில் அசித்த ஹேமதிலக்கவை காவல்துறையினர் சுற்றிவளைத்த நிலையில், அவர்கள் மீது கையெறி குண்டுகளை ஹேமதிலக்க வீசியுள்ளார். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹேம திலக்க சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது […]
விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டது சரிதான் என்று அவரது மனைவி ரிச்சா துபே தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே நேற்று காலை என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார். விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் உத்தர பிரதேச எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விகாஸ் துபேயின் குடும்பத்தினர் அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டதுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விகாஸ் துபே காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது மிகச்சரியான செயல் என்று அவரது தந்தை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து விகாஸ் […]
கிழக்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வாகாமா பகுதியில் இன்று நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக, இந்த பயங்கரவாதிகள் இருவரும் 5 வயது சிறுவன் மற்றும் ஒரு சிஆர்பிஎப் படை வீரரை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் டோடாவில் வசிக்கும் மசூத் அஹ்மத் பட் என அடையாளம் காணப்பட்டார். இவர், கடைசியாக எஞ்சியிருக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி என்று அழைக்கப்படுபவர். மேலும் ஒரு பாயங்கரவாதியை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட […]
டெல்லியில் இன்று அதிகாலையில் பிரபல ரவுடிகள் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். டெல்லியின் தென்கிழக்கு பகுதியான பிரகலாத்பூர் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என்ற இரண்டு ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியின் காவல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் என்று காவல்துறை அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை என பல்வேறு […]