தலைநகர் டெல்லியில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இத்தேர்தலில் பணத்துக்காக உள்ளாட்சி இடங்களை ஆம் ஆத்மி விற்பனை செய்வதாக பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவர் இச்சம்பவம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், டெல்லி மத்தியாலா தொகுதி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறியதாவது, “எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் இரவு 8 மணியளவில் […]
Tag: எம்எல்ஏ
கர்நாடக மாநிலத்தில் சிக்மளூர் மாவட்டம் குண்டூரில் யானை மிதித்து ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல மூடிவரை தொகுதி எம்எல்ஏ குமாரசாமி கிராமத்திற்கு சென்றார். கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி எம்எல்ஏ வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தினர். அவரைப் போட்டு பிராண்டி எடுத்ததில் எம்எல்ஏவின் சட்டை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கிறது.
உத்திரபிரதேச எம்எல்ஏ வை நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் பிரபல ரவுடியாக இருந்து அதன் பின் அரசியலில் ஈடுபட்டவர் முக்தார் அன்சாரி. இவர் ஐந்து தடவை எம்.எல்.ஏவாக இருந்த இவர் மீது சுமார் 50 குற்ற வழக்குகள் இருக்கிறது. இதில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். மேலும் அவரது மகனும் மாவ் தொகுதியின் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி எம்எல்ஏவும் ஆன அப்பாஸ் அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினர் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வெளியான நிலையில் பின் அதில் உண்மை இல்லை என்பதை தெரியவந்தது. இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பாஜக கட்சியானது பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகளை வாங்குவது போன்று மற்ற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது. ம.பி, கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் எம்எல்ஏக்களை […]
தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி கட்சியின் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு குதிரை பேர முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் பண்ணை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் எம்எல்ஏக்கள் சிலர் போலீசாருக்கு போன் செய்து கட்சி மாறுவதற்கு தங்களுக்கு லஞ்சம் கொடுக்க சிலர் முயற்சி செய்கின்றார்கள் கட்சி மாறுவதற்கு பெரும் பணம் ஒப்பந்தங்கள் மற்றும் பதவிகள் வழங்க உறுதியளித்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அஜிஸ் நகரில் அமைந்துள்ள […]
சட்டசபையில் இன்று சமூகநலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ உதயநிதி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மிக முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர் சேப்பாக்கத்திற்குச் செல்ல பிள்ளையாக மட்டுமின்றி தமிழ்நாட்டின் செல்ல பிள்ளையாக இருந்து திட்டங்களை நிறைவேற்ற விரும்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் சட்டப்பேரவையில் “stalin is more dangerous than kalaignar” என பாஜக பிரமுகர் ஒருவர் […]
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடலூரில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கோ. ஐயப்பன். இவர் கடலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் அமைச்சர் கோ. ஐயப்பனை திடீரென கட்சியின் பொறுப்புகள் மற்றும் பதவிகளிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது திமுகவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. கடலூர் திமுக உறுப்பினர் ஐயப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து விதமான கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் […]
முஸ்லீம் லீக் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஏ யூனுஸ் குஞ்சு தனது 80-வது வயதில் காலமானார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி- தரிபா பீவி, 4 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். யூனுஸ் குஞ்சு 1991ல் கேரள மாநிலம் மலபுரத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் இரவிபுரம் மற்றும் புனலூர் தொகுதிகளிலும் போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் தோல்வியை […]
காணொலிக்காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக எம்எல்ஏ மகேஷ் திரிவேதி, பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் நடத்தி வருகிறது. இந்நிலையில், கான்பூரின் பா.ஜ.க எம்எல்ஏவான மகேஷ் திரிவேதி, கித்வாய் நகரத் தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவர் தெரிவித்ததாவது, “இந்த சமயத்தில் ஒரு பக்கமாக பேசுபவர்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள், கொடுங்கோலர்கள் போன்றவர்களை […]
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் எம்எல்ஏ உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநருக்கும் கொரோன தொற்று உறுதியாகி உள்ளது. நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் எம்எல்ஏ ஒருவருக்கு (இந்த ஆட்சியில்) முதல் முறை கொரோனா தொற்று உறுதி ஆனதால் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஆசிய அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் 140 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்ட இந்தியாவிலுள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவிலுள்ள சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவாக ராஜா என்பவர் உள்ளார். இந்நிலையில் இவர் துருக்கியில் வைத்து நடைபெற்ற ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் 140 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டுள்ளார். அவ்வாறு கலந்துகொண்ட தி.மு.க எம்.எல்.ஏவான ராஜா 140 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று […]
ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் கோவில் கட்டியுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மதுசூதனன் ரெட்டி என்பவர் 2 கோடி செலவு செய்து ஒரு கோவில் கட்டியுள்ளார். இந்த கோவில் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கட்டுமானத்தின் பின்னணியில் அரசாங்கத்தின் நலத்திட்டங்களை காட்சிப் படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முதல் […]
நெல்லை அடுத்த நாங்கு நேரியில் எம்எல்ஏவை காணவில்லை என்று எழுதப்பட்டுள்ள வாசகம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் நான்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரூபி.மனோகரன். நான்குநேரி தொகுதியை தமிழகத்தின் முன்னணி தொகுதியாக மாற்றுவேன் என்று கூறி வாக்கு சேகரித்தவர் ரூபி.மனோகரன் என்றும், போக்குவரத்து பிரச்சனை குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் வில்லுக்கு விஜயன் சொல்லுக்கு […]
பீகார் மாநிலத்தில் எம்எல்ஏ ஒருவரின் காரில் டீசலுக்கு பதிலாக தண்ணீரை ஊற்றி ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலத்தின் சிக்தா சட்டமன்ற தொகுதியின எம்எல்ஏ வாக இருப்பவர் விரேந்திர குப்தா. இவர் சமீபத்தில் மேற்கு சாம்பாரா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தனது காருக்கு டீசல் போட்டுள்ளார். அங்கு தனது காருக்கு 51 லிட்டர் டீசலை நிரப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து காரை எடுத்து 500 மீட்டர் தான் சென்றிருப்பார், உடனே கார் நின்று விட்டது. […]
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல் என்பவர் ரயிலில் உள்ளாடையுடன் நடந்து சென்ற சம்பவம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல். இவர் நேற்று முன்தினம் இரவு பாட்னா-டெல்லி தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்தார். அப்போது தனது மேலாடையை கழற்றி விட்டு பனியன் மற்றும் உள்ளாடையுடன் அங்குமிங்கும் நடந்துள்ளார். மேலாடைகளை கழட்டிவிட்டு வெறும் பனியன் […]
மருத்துவமனையின் அலட்சியத்தால் தனது மகன் உயிரிழந்ததாகக் கூறி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு உத்திரப்பிரதேச மாநிலம் பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் போராடி வருகிறார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த சண்டிலா தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் அகர்வால் என்பவரின் மகன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் கூறுகையில்: “எனது மகன் 26-ஆம் தேதி காலையில் நன்றாக […]
வறுமையில் தவிக்கும் பெண் எம்எல்ஏ சந்தான பவுரிவிற்கு பாதுகாப்புக்கு சென்ற வீரர்களே அவருக்கு உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது வன்முறைகள் நடைபெற்று வருவதால் அங்கு உள்ள பாஜக எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மேற்கு வங்க மாநிலத்தில் சால்டோரா தொகுதியில் பாஜக எம்எல்ஏ சந்தான என்பவர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்கி வருகிறது. ஆனால் இவரது […]
கொரோனா பரவுவதை தடுக்க மாட்டுச் சிறுநீரை அதாவது கோமியத்தை குடிப்பது நல்லது என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தாண்டி ஆயுஸ் 64 மற்றும் கபசுர குடிநீர் போன்ற சித்த மருத்துவம் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாகுபலி தொகுதியின் எம்எல்ஏ மருமகன் மீது மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் எம்எல்ஏவின் மருமகன் மற்றும் அவரது உறவினர் மீது காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் புகாரில் கூறியுள்ளதாவது: “உத்திர பிரதேச எம்எல்ஏவின் மருமகன் எனக்கூறி மனிஷா என்பவர் தன்னிடம் அறிமுகமானார். அவர் என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி […]
பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலத்தின் அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற […]
தமிழகத்தில் கட்சிக்கு எதிராக பேசிய அதிமுக எம்எல்ஏவை அதிமுக தலைமை கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
புதுவை அரசியல் சூழலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் நிலையில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்த நிலையில் அடுத்தடுத்து திருப்பமாக புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். […]
மதுரை அவனியாபுரத்தில் ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணை பலரும் பாராட்டி வருகின்றனர். திருப்பரங்குன்றம் அவனியாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த மலைச்சாமி ஆனந்த ஜோதி தம்பதிகளுக்கு அபிராமி, மணிகண்டன் என்று இரண்டு குழந்தைகள் உண்டு. மலைச்சாமி நான்கு வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். கணவர் மறைவுக்குப் பின்பு மனைவி ஆனந்தஜோதி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அன்றாட செலவுக்கே கஷ்டப்பட்டு வந்தனர். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பிள்ளைகள் […]
தமிழகத்தில் அடுக்கடுக்காக பெருகிவரும் தற்கொலை சம்பவங்கள் இந்திய திரையுலகில் அதிகம் தற்போது நடந்து வருகின்றது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு உயிரை பரிகொடுக்கும் நிலை தற்போது பெருகி வருகிறது. சின்னத்திரை நடிகை சித்ரா ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஒரு மந்திரியின் கார் வந்து சென்றிருக்கிறது. அந்த ஹோட்டலுக்கு அமைச்சரின் கார் அடிக்கடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் பாதுகாப்பை தவிர்த்து விலை உயர்ந்த காரில் ஆரோக்கியமான மாதிரி அங்கு வருவது வழக்கம். சித்ராவிற்கு ஆடி கார் […]
ஆர்கே நகர் தொகுதியில் எம்பி, எம்எல்ஏ வை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை ஆர்கே நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பின்னர் ஆர்கே நகர் பகுதியில் நடந்த தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இந்நிலையில் ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர், ஜே ஜே நகர், கத்திவாக்கம் பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய […]
தெலுங்கானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற எம்எல்ஏ மீது காலனி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் இப்ராஹிம் பட்டண தொகுதி எம்எல்ஏ மன்சிரெட்டி […]
திருத்துறைப்பூண்டியில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அப்பகுதி எம்எல்ஏ பெட்ரோல் கேனுடன் சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டி தொகுதியில் ஆடலரசன் என்பவர் எம்எல்ஏவாக இருக்கிறார். அவர் திமுக கட்சியை சேர்ந்தவர்.அவரின் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள தாண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமம். அங்கு அவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருக்கின்றன. அங்கு விரைந்த 356 நெல் மூட்டைகளை திருத்துறைப்பூண்டி அருகே இருக்கின்ற நெடும்பலம் நேரடி நெல் முதல் […]
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளையும், கலாச்சாரத்தையும் சொல்லிக்கொடுத்த வளர்த்தால் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தடுக்கப்படும் என பாஜக எம்எல்ஏ கூறிய கருத்துக்கு திரு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க […]
மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கிழக்கு மிட்னாபூரின் ஏக்ரா தொகுதி எம்.எல்.ஏவான சமரேஸ் தாஸ்(71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு ஏற்கனவே இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை […]
கர்நாடக மாநிலத்தில் மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சென்ற மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. அதிலிருந்து கடந்த 2 மாதங்களாக இந்த வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து கொண்டே வருகிறது. சென்ற ஒரு வார காலமாக 7 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 8,800 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கொடிய வைரசுக்கு மக்கள் […]
கொரோனாக்கு பலியான பெண்ணின் உடலை எம்எல்ஏ அடக்கம் செய்தார். திருப்பதியில் கொரோனாக்கு ஒரு பெண் பலியானார். அவரின் உடலுக்கு திருப்பதி கோவிந்ததாமத்தில் இறுதிச்சடங்கை திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. பூமண.கருணாகர்ரெட்டி மேற்கொண்டு நடத்தி வைத்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் கிரிஷா மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர். கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றும்போது, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு கவச உடையணிந்து, பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றார்கள். கோவிந்ததாமத்தில் உடலை இறக்கும் […]
வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற எம்எல்ஏ வழுக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டதும் ஆதரவாளர்களும், தொண்டர்களும் அவரை மீட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஸ் தாமி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளை பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது, பித்தோராகரில் வெள்ளத்தால் மூழ்கியிருந்த பகுதியை அவர் கடந்தபோது வழுக்கி விழுந்து வெள்ள நீரில் சிறிது தூரம் அடித்துச் செல்லப் பட்டார். இதையடுத்து அவரது கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் உடனடியாக எம்.எல். ஏ வை மீட்டு விட்டனர். இதில், எம்எல்ஏ […]
ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கடந்த 13ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது எம்எல்ஏ இவர் ஆகும். இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள MIOT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே எம்எல்ஏ-வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு கவுன்சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா தெரிவித்துள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கடவாலாவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. முதல்வர் விஜய் ரூபாணியை சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கொரோனா சோதனை செய்த அவர் முடிவு […]
குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கடவாலாவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. முதல்வர் விஜய் ரூபாணியை சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கொரோனா சோதனை செய்த அவர் முடிவு தெரியும் முன்னரே முதல்வர் உடனான ஆலோசனை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் நேற்று கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் உட்பட அனைவரும் […]
சிஆர்பிசி பிரிவு 144 ன் கீழ் விதிகளை மீறியதற்காக காங்கிரஸ் எம்எல்ஏ சித்தார்த் குஷ்வாஹாவுக்கு எதிராக சத்னாவில் உள்ள கொல்கவன் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ மற்றவர்களுடன் சேர்ந்து நாய் பஸ்தி பகுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார். இதையடுத்து. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், விதிகளை மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் தகுந்த தண்டனையை […]