அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை அதிமுகவினர் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை (17.01.2022) காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் […]
Tag: எம்ஜிஆர் பிறந்த நாள்
எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், வாழ்க்கை என்ற பயணத்தில் பலர் வருவர், பலர் போவர் எனினும் சிலர் மட்டுமே நிலைத்து நிற்பர். அந்த வரிசையில் முதலமைச்சராக நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்தவர் எம்ஜிஆர் அவர்கள். ஏழ்மையான […]
திரையுலகில் புரட்சி நடிகர் என பெயர் பெற்ற எம்ஜிஆர் பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாக விளங்கினார். பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சியை வளர்க்க அரும்பாடுபட்ட புரட்சித்தலைவர் அகிலம்போற்றும் அளவுக்கு கட்சியின் கொள்கையை பரப்பினார். இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆவதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காரணமாக விளங்கினார். அண்ணாவின் மறைவுக்கு பிறகு தன்மீது அன்பு கொண்ட மக்களுக்காக அண்ணா தோற்றுவித்த கட்சியை விட்டு விலகிய […]
தமிழகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் இன்னும் முழுமையாக தரவுகளை […]