எம்.ஜி.எம் மருத்துவமனையில் ஒருவர் எலி கடித்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்ரீனிவாஸ் என்பவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்துள்ளார். இவரை திடீரென எலி ஒன்று கடித்துள்ளது. இவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக ஸ்ரீனிவாசை மேல் சிகிச்சைக்காக நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக […]
Tag: எம்ஜிஎம் மருத்துவமனை
சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை சென்னை எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்..
பிரபல பாடகர் எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்பிபி உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. மேலும் அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோர் கருவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களின் யோசனை பெற்று உயிர் கக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு எம்ஜிஎம் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.