இந்தியா ஒன்றிய துணை அமைச்சர் வி.கே சிங்கிடம் எம்.பி திருமாவளவன் மற்றும் எம்பி ரவிக்குமார் ஆகியோர் தனித்தனியே கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 27 திட்டங்கள் ஆக பிரிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அவுட்சோர்ஸ் முறையில் டோல் பிளாசாக்களை துணை ஒப்பந்தம் செய்துள்ளது. […]
Tag: எம்பி ரவிக்குமார்
விழுப்புரம் டிஜிபிக்கு எம்பி ரவிக்குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் தமிழக அரசால் ஒரு நபரை கேடி மற்றும் ரவுடி லிஸ்டில் சேர்ப்பதற்கு சில வழிகாட்டுதல்கள் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான காவல் நிலையங்களில் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. அதற்கு மாறாக ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக அரசியல் கட்சிகளில் இருந்து பாடுபடும் நபர்களின் பெயர்களை மனம்போன போக்கில் சேர்த்து வைத்திருக்கின்றனர். இந்த பட்டியலை காவல்துறை நிலை ஆணையில் சொல்லப்பட்டிருப்பது போன்று பட்டியலை சீராய்வு செய்வதோ பெயர்களை […]
அண்மையில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தண்டோரா முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அது பல்வேறு ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது. இவர் இதை பதிவிட்டதற்கான முக்கிய காரணம் திருச்சி மாவட்டம் துறையூரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம். துறையூரில் உள்ள மாநிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் தானே தண்டோரா அடித்து தெரு தெருவாக சென்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் தொலைக்காட்சி வழி பாடம் படிப்பதற்கான அவசியம் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]