புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து மராட்டிய சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் முக்தா திலக் (57). இவருக்கு கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் நோய் பாதிப்பு அதிகமாகி 10 நாட்களுக்கு முன்பு புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிரகு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் திடீரென உயிரிழந்துள்ளார். கடந்த […]
Tag: எம்.எல்.ஏ
சேலத்தில் எம்எல்ஏ ஒருவர் டாஸ்மாக் கடை ஊழியர்களின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருக்கும் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் சென்ற 7-ம் தேதி பாமக எம்எல்ஏ அருள் தலைமையில் போராட்டம் நடந்தது. இதற்கு அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் கடையை மூடுவதாக உறுதி அளித்தனர். தற்போது ஒரு மாதம் ஆகியும் கடை இன்னும் அகற்றப்படாததால் அப்பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் முற்றுகை […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரம்பலூர் திமுக எம்எல்ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. […]
பேச்சிப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் எந்த விதி மீறலும் இல்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமிதோப்புக்கு தமிழக சட்டசபை சபாநாயகரும், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்பாவு வந்துள்ளார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது காமராஜர் காலத்தில் ராதாபுரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டுமென்று 42 அடி கொள்ளளவு உள்ள பேச்சிப்பாறை அணையை, 48 அடி தண்ணீர் தேக்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். எனவே கூடுதலாக உள்ள 6 அடி […]
திருவண்ணாமலையில் போட்டியிடுவதற்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி தருவதாக கூறி பாஜக பிரமுகர் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த பாஜக பிரமுகர் விஜயராமன், ரகோத்தமன் ஆகியோர் தேர்தலை சாதகமாக வைத்துக்கொண்டு, தங்களது சித்தப்பா மகள் வசந்திக்கு திருவண்ணாமலையில் […]
புதுவையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் ரஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுவையில் சமிபத்தில் காங்கிரஸில் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ மேலும் இரண்டு பேர் ராஜினாம செய்தார். இதையடுத்து புதுவையில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில் ராஜினாமா செய்ய […]
ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஒரு எம்எல்ஏவின் விலை 15 கோடி ரூபாய் என்ற அளவில் குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் திரு அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் திரு அசோக் கெலாட் எதிராக காங்கிரஸ் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியதால், துணை முதலமைச்சர் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் சச்சின் பைலட் மற்றும் […]
கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய கர்நாடக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ள நிலையில் 473 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் இன்று மட்டும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் […]