ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசும், எரிபொருள் விநியோக நிறுவனமும் சேர்ந்து நுகர்வோருக்கு மானியம் அளித்துள்ளன. இதற்கிடையே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டதால் […]
Tag: எரிபொருள் பற்றாக்குறை
எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். சிரியா நாட்டில் வடகிழக்கு பகுதியில் அந்நாட்டினுடைய எண்ணெய் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இது தன்னாட்சி அதிகாரத்தால் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அங்கு கச்சா எண்ணெய் நிரப்புவதற்கு கடைசியாக செப்டம்பர் 14ஆம் தேதி கப்பல் ஒன்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக போருக்கும் முன் நாள் ஒன்றுக்கு எண்ணெய் உற்பத்தி அளவு 3 இலட்சம் பீப்பாயாக இருந்த நிலையில் போருக்குப்பின் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பீப்பாயாக குறைந்துள்ளது. இந்த தகவலை சிரிய […]
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை அதிகரிப்பால் நாளையிலிருந்து பள்ளிகளும் அரசு அலுவலகங்களும் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் முடக்கப்பட்டதால் மக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், தினசரி 13 மணி நேரங்கள் மின் தடை ஏற்படுகிறது. எனவே, நாளை முதல் […]
பிரிட்டனில் கால்பந்து விளையாட்டின் உச்ச நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஓட்டுனர் பல மணி நேரங்களாக பெட்ரோலுக்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனில் பெட்ரோல் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கால்பந்து விளையாட்டின் உச்ச நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ வசிக்கும் பகுதிக்கு சுமார் ஒரு மைல் தூரத்தில் அவரின் வாகன ஓட்டுனர், 2, 20,000 பவுண்டுகள் மதிப்பு கொண்ட பென்ட்லி காருடன் எரிபொருளுக்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். மேலும், ரொனால்டோவின் பாதுகாப்பு படையினரும், மற்றொரு காரில் அங்கு காத்திருந்துள்ளனர். அதாவது, அவரின் […]
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகன் ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கனரக வாகன ஓட்டுனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு வாகன ஓட்டுனர்களுக்கு தற்காலிகமாக விசா வழங்கி அவர்களை வரவழைப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று பிரித்தானியா பிரதமரான போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். ஆனால் அதிக ஊதியம் அளித்தாலும் சிறப்பு விசா கொடுத்தாலும் வெளிநாட்டு ஓட்டுனர்கள் வரமாட்டோம் என்று கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து […]