சென்னை நுங்கம்பாக்கம் வணிகவளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் ஆன பிகாஸ், கோ சாப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உணவு டெலிவரி செய்வதற்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் காய்கறி, உணவு ஆகியவை டெலிவரி செய்யக்கூடிய தனியார் நிறுவனம் ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஊக்குவிக்க முடிவுசெய்யப்பட்டு முதல் கட்டமாக 50 ஸ்கூட்டர்களை வழங்கியிருக்கிறது. விரைவில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் ஸ்கூட்டர்களை வழங்குவதற்கு திட்டமிட்டு உள்ளது. இதனிடையில் […]
Tag: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
மகாராஷ்டிரா மாநிலமான பீட் பகுதியில் சச்சின் கிட்டே என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த ஸ்கூட்டர் 6 நாள்களில் பழுதடைந்து ஓடாமல் நின்றுள்ளது. இதனால் சச்சின் ஓலா நிறுவனத்தை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தார். அப்போது ஓலா நிறுவனமானது மெக்கானிக்கை அனுப்பி செக் செய்வதாக சச்சினிடம் தெரிவித்துள்ளது. ஆனால் சொன்னபடி யாரும் வந்து ஸ்கூட்டரை சரிசெய்யவில்லை. இதையடுத்து சச்சின் மீண்டும் கஸ்டமர் சர்வீசை தொடர்புகொண்டு புகார் தெரிவித்து […]
தெலுங்கானா நிஜாமாபாத் மாவட்டத்தில் வீட்டுக்குள் சார்ஜில் வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி திடீரென்று வெடித்து தீப்பிடித்தது. இச்சம்பவத்தில் 80 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய மகன் பிரகாஷ், மனைவி கமலம்மா, மருமகள் கிருஷ்ணவேணி போன்றோர் காப்பாற்ற முயன்றபோது பலத்த காயமடைந்தனர். இதில் பிரகாஷ் கடந்த ஒரு ஆண்டாக மின்சார ஸ்கூட்டரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக மின்சார ஸ்கூட்டர் மரணத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து […]