முதலமைச்சரின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழகத்தின் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு தலைமை தாங்கினார். அதேபோல் சென்னை மாநகராட்சி கமிஷனர், […]
Tag: எஸ்.பி.வேலுமணி
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களை தனிமைப்படுத்த 50,000 படுகைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சுமார் பத்தாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவலையும் அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடுத்திருக்கிறார்.
12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். இந்த முழு ஊரடங்கு முடிந்தவுடன் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் குறையும் என தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், […]