மொத்த மாணவா் சோ்க்கை 50 சதவீதத்திற்கும் குறைவாகவுள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலுள்ள 220 பொறியியல்கல்லூரிகள் வருகிற கல்விஆண்டில் புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் ஏஐசிடிஇ எனப்படும் அகிலஇந்திய தொழில்நுட்பக்கல்விக் குழுமம் சாா்பாக 2022- 23ஆம் கல்வியாண்டுக்கு கல்வி நிறுவனங்களுக்கான ஒப்புதல் பெறும் விதிமுறைகள் சமீபத்தில் வெளியாகியது. இவற்றில் கல்வி நிலையங்களில் 50%க்கும் குறைவான மாணவா் சோ்க்கை உள்ள பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
Tag: ஏஐசிடிஇ
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏஐசிடிஇ குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர வேதியியல், கணிதம் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஏஐசிடிஇ மின் & மின்னணு பொறியியல், கணினி அறிவியல் படிப்பில் சேர 12 ஆம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமல்ல எனவும், பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல என்றும் அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக […]
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கான புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்லூரிகளும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இன் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக புதிய கல்வியாண்டு தொடக்கமும் மாணவர் சேர்க்கையும் தள்ளி போய் உள்ளது. இதையடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் […]
பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் பல மாற்றங்களை அரசு செயல்பட தொடங்கியுள்ளது. உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கை மற்றும் பாட திட்டம் போன்றவற்றில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் பொறியியல் படிப்பு இயங்கி வருகின்றது. இந்நிலையில் ஏஐசிடிஇ, பிடெக் மாணவர்கள் ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. பி டெக் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்கலாம் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப பல்கலைக் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து […]
இந்தியாவில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்ட தால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான […]
கேட் அல்லது ஜிபாட் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட் மற்றும் ஜிபாட் எனப்படும் தேசிய நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் கல்லூரிகளில் முதல்நிலை பயிலும் மாணவர்களுக்கு ஏஐசிடிஇ முதுநிலை உதவி தொகை திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதற்கு மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்ப கட்டணம் […]
அரியர் தேர்வு விவகாரத்தில் மாணவ சமுதாயம் அஞ்சத் தேவையில்லை என சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பழகன் யுஜிசி ஏஐசிடிஇ ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உயர்கல்வித்துறை செயல்படுவதாகவும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி அரசு செயல்படும் என்றும் குறிப்பிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மெயில் ஐடியில் இருந்து ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பப்படவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பியதாகவும் கூறினார். அரியர் தேர்வு […]
அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என ஏஐசிடிஇ தலைவர் திரு அணில் கருத்து தெரிவித்துள்ளார். கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரியர் இருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு பாலகுருசாமி, வழக்கறிஞர் திரு ராம்குமார், […]
பொறியியல் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய கூடாது என்று வெளியான தகவல் பொய்யானது என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ,பொறியியல் படிப்புகளில் அரியர் போட்டிருந்த மாணவர்களை ஆல் பாஸ் செய்வதற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் கூறியதாக தகவல் ஒன்று வெளியாகியது. மேலும் அரியர் மாணவர்களை ஆல் பாஸ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஏஐசிடிஇ மின்னஞ்சல் செய்தி அனுப்பி இருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது. இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் இது குறித்து கொடுத்த […]
மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை நடத்தலாம் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, வருடம்தோறும் எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை மேலாண்மை டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கேட் தேர்வு,மேட் தேர்வு, மற்றும் பல்வேறு பொது நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகள் அடிப்படையில் தான் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேசமயம் இப்போது […]