புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். புரட்டாசி மாதத்தில் ஏழுமலையாணை தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று பலரும் கூறுவது உண்டு. ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பார்கள். தமிழகத்தை சேர்ந்த ஏழுமலையான் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். பெரும்பாலானர் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாக திருப்பதிக்கு வருகின்றனர். மேலும் வரும் 27ஆம் தேதி தொடங்கி அடுத்த […]
Tag: ஏழுமலையான் கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் சார்பில் 300 ரூபாய் தரிசன கட்டண டிக்கெட் நாளை வெளியிடப்படுகின்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பாக மாதம்தோறும் 300 ரூபாய் தரிசன கட்டண டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசனம் டிக்கெட் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. வருடாந்திர பிரமோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. […]
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி சரணம் செய்துள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறைகளும் நிரம்பி வழிந்தது. இலவச தரிசனத்திற்கு மூன்று கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் யானை கூட்டம் சுற்றி வருவதால், பக்தர்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் கீழ் திருப்பதி இருந்து மேல் திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசின் பஸ் போக்குவரத்து வசதி உள்ளது. இத்துடன் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கார், வேன் மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய இனி வரிசையில் காத்திருக்காமல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு, ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 750 டோக்கன்கள் என்ற வகையில் வழங்கப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டோக்கன்களை பக்தர்கள் https://triupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி செல்லும் பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகளால் பணக்கார கடவுளாக ஏழுமலையான் திகழ்கிறார். அதில் பணம், தங்கம், வைரக்கற்கள் பதித்த நகைகள், கிரீடம், வாள் உள்ளிட்டவை அடங்கும். இந்தநிலையில், திருப்பதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர், தங்க கை கவசத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளார். அந்தத் தங்கக் கவசம் 5.3 கிலோ கிராம் எடை கொண்டது. அதன் மதிப்பு 3 கோடி ரூபாய் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 4-ஆம் தேதி தீபாவளியன்று ஆஸ்தானம் நடக்கவிருக்கிறது. அன்று அதிகாலை மூலவர் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், கைங்கரியம் போன்றவை நடக்கிறது. இதையடுத்து தங்க வாசல் எதிரே உள்ள மணி மண்டபத்தில் காலை 7 மணி முதல் 9 மணிவரை தீபாவளி ஆஸ்தானம் நடக்க உள்ளது. அதன்பின்னர் ஏழுமலையானுக்கு பிரதான அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து, ஆர்த்தி காண்பித்து, பிரசாதம் வழங்கி தீபாவளி ஆஸ்தானத்தை நிறைவு செய்ய உள்ளனர். மேலும் மாலை 5 மணியிலிருந்து 7 […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் செப்டம்பர் மாதம் நடைபெறும் விழாக்கள் குறித்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. அதன்படி இந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை நாத நீராஜனம் மேடையில் பாலகாண்டா முதல் அகண்ட பாராயணமும், 3-ந் தேதி முதல் 18-ந் தேதிவரை வசந்த மண்டபத்தில் ஷோடா சதினா பாலகாண்ட பாராயண தீட்சையும், […]
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை தொடங்கி தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்ட பல சேவைகள் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் ஏழுமலையான் சுவாமிக்கு புதிதாக நவநீத சேவை என்ற பெயரில் ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டு பசு மூலம் பெறப்படும் வெண்ணையை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும். இதற்காக 33 கீர் பசுக்கள் குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, திருப்பதியில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்படுகின்றது. இந்த பசுக்களில் இருந்து பெறப்படும் […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இயற்கை பொருளில் தயாரித்த உணவிற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு உணவு தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தானம் நேற்று அதிரடியாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் தெரிவித்துள்ளதாவது: இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. […]
திருப்பதி ஜேஷ்டாபிஷேகம் இரண்டாவது நாள் விழாவில் நான்கு மாட வீதிகளில் மலையப்பசாமி உலாவரும் நிகழ்வு நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் இரண்டாவது நாளான இன்று உற்சவர் பூதேவி ஸ்ரீதேவியுடன் மலையப்பசாமி முத்து கவசம் அணிந்து ஊர்வலமாக பக்தருக்கு அருள் தந்தார். முன்னதாக காலை கோவிலில் சம்பங்கி பிரகாரத்தில் உற்சவர்களைக் கொண்டு வந்தனர். அங்கு 9 மணியிலிருந்து 11 மணி வரை உற்சவர்கள் முன்னிலையில் யாகம் வளர்த்து மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்பதிவு செய்தவர்களுக்கு கொரோனா காரணமாக வர முடியாமல் போனால் அவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனமான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டை, ஏப்ரல் 30ஆம் தேதி வரை முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா காரணமாக வர முடியாமல் போனால் அடுத்த 90 நாட்களுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதியில் ஆர்ஜித சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சாமி தரிசனத்துக்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கூட்டத்தில் மாதாந்திர செயல் அதிகாரி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கேசவ ரெட்டி, பக்தர்களிடம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்று நடிகை ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை உட்கட்டமைப்பு கழகத் தலைவருமான நடிகை ரோஜா கலந்து கொண்டார். நடிகை ரோஜா கூட்டத்தில் பேசியதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் செல்லும் […]
மயங்கி விழுந்த பெண்ணை காவலர் ஒருவர் முதுகில் சுமந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகத்திலேயே மிக தலை சிறந்தது என்று கருதுவது மனிதநேயம் தான். உலகில் மனிதநேயமுடைய பல மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த வகையில் ஏதாவது ஒரு வகையில் நாம் மனித நேயத்தை பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 58 வயது பெண் ஒருவர் தரிசனத்திற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மலைச்சரிவில் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். […]
ஏழுமலையான் கோவில் வளாகத்தில் பாம்பு வந்ததால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள மகா துவாரம் பக்கத்தில் பக்தர்கள் செல்லும் வரிசையில் சாரை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதைப் பார்த்து பயந்துபோன அங்கிருந்த பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாரைப்பாம்பு எங்கும் செல்லாதவாறு பிளாஸ்டிக் வாளி கொண்டு மூடியுள்ளனர். பின்னர் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளால் பாம்பு பிடித்து செல்லப்பட்டு பத்திரமாக […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தினசரி 3000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வருகின்ற ஆறாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் இலவச சுவாமி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புரட்டாசியில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதனால் இந்த வருடம் பக்தர்கள் நலனை கருத்தில் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலை உயர்ந்த நகைகள் முப்பரிமாணத்துடன் பக்தர்கள் கொண்டுவருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மன்னர்கள் காலம் முதல் இன்று வரை தங்கம், வைரம், வைடூரியம் மற்றும் மாணிக்கம் என பல்வேறு விலை உயர்ந்த நகைகள் காணிக்கைகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட காணிக்கையான 450க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் ஏழுமலையான் சுவாமிக்கு அலங்கரிக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் அந்த ஆபரணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த […]