சிலி நாட்டில் இருக்கும் ஆல்டிபிளானோ என்னும் நகராட்சியில் ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்பில் கொடூர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சிலி நாட்டில் ஏழைகள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், தீ விபத்து ஏற்பட்டு, 100-க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையானது. எனவே, அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். வீடுகள் மரப்பலகைகளால் அமைக்கப்பட்டிருந்ததால், தீ அதிவேகத்தில் பரவியிருக்கிறது. இந்நிலையில், அங்கு வசிக்கும் ஏழை மக்கள், அரசாங்கம் தங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். எனினும், […]
Tag: ஏழை மக்கள்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் தமிழரசி எம்.எல்.ஏ. ஏழை, எளிய குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பல்வேறு பகுதிகளில் தமிழரசி எம்.எல்.ஏ. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து வின்சென்ட் நகர், காந்திஜி நகர் பகுதியில் நேற்று 125 குடும்பங்களுக்கு காய்கறிகள், அரிசி ஆகிய நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார். […]
உணவின்றி தவித்தவர்களுக்கு பிரபல நடிகை உதவி செய்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பலபேர் பொருளாதார ரீதியாகவும் சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது அறக்கட்டளையின் மூலம் உதவி செய்து வருகிறார். […]
ஹைதராபாத் தெலுங்கானாவில் ஏழை மக்கள் நலன் கருதி நோய் கண்டறியும் சோதனை மையங்களை அரசு தொடங்கியுள்ளது. ஹைதராபாத் மாநிலம் தெலுங்கானாவில் ஏழைகள் நலன் கருதி நோய் கண்டறியும் சிறிய சோதனை மையங்களை அரசு திறந்துள்ளது. அதில், அல்ட்ராசோனோகிராபி (யு.எஸ்.ஜி) போன்ற முக்கிய நோயறிதல் சேவைகள், எக்ஸ்-ரே போன்ற கதிரியக்க சேவைகள், ஈ.சி.ஜி (எலெக்ட்ரோ கார்டியோகிராபி) போன்ற அடிப்படை இருதய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். இதுகுறித்து அமைச்சர் மஹ்மூத் அலி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் […]
இலங்கையில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு வீடு அமைத்து தருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு ‘உங்களுக்கு ஒரு வீடு- நாட்டிற்கு எதிர்காலம்’ என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது அரசாங்கம் கூறியுள்ளது. இதனைத்தொடர்ந்து வீடுகள் அற்ற 14000 பேருக்கு நான்கு மாதங்களில் வீடுகள் அமைக்க எதிர்பார்த்துள்ளதாக, கிராமிய வீடு மட்டும் நிர்மாணிப்பு மற்றும் கட்டிடப் பொருள் தொழில் நிறுவனத்தின் ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்த வீடமைப்புத் திட்டம் தற்போதைக்கு […]
ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை அடுத்த 2 மாதங்ளுக்கும் இலவசமாக வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுய சார்பு பாரதம் திட்டத்தை வலுப்படுத்த திட்டங்கள் வகுக்கப்படுகின்றன என்றும் சரக்குகளை கையாளுவதில் உள்ள சிரமங்களை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நிலம், தொழிலாளர், பண கையிருப்பு, […]