வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா, சீன நாட்டின் உதவியை கோரியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்வது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக இருக்கும் ஆண்டனி ப்ளிங்கன், வடகொரிய நாட்டை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக சீனாவிடம் உதவி கோரியுள்ளார். அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் அவர் சீன நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். அங்கு வடகொரியா மேற்கொள்ளும் ஏவுகணை பரிசோதனை குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சிகள் பற்றி விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]
Tag: ஏவுகணை பரிசோதனை
வடகொரியா இந்த வருடத்தின் 15-வது ஏவுகணையை இன்று பரிசோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து பக்கத்து நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரியா அதனை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதனை செய்து வருகிறது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை அன்று கண்டம் தாண்டி கண்டம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்தது. இந்நிலையில் இந்த வருடத்தில் 15-ஆம் முறையாக இன்று அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்றை ஜப்பான் நாட்டின் […]
அரசியல் நிலைபாடு அற்ற நிலையில் இன்று பாகிஸ்தான் ஏவுகணை பரிசோதனையை நடத்தி உள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில் அந்நாடு தனது ஏவுகணை சோதனையை இன்று நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ஆயுத படையின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டில் உள்ள ஆயுத அமைப்பின் பல்வேறு வடிவம் மற்றும் தொழில்நுட்ப அளவீடுகளை மறுமதிப்பீடு செய்வதற்காக தான் ஷாகீன்-3 ஏவுகணை […]
அமெரிக்கா, வட கொரியா ஏவுகணை சோதனை செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. வட கொரியா, அமெரிக்காவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து பிற நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அதன்படி, வடகொரியா கடந்த ஜனவரி மாதத்தில் தொடர்ச்சியாக சுமார் எழு தடவை ஏவுகணை சோதனைகளை செய்திருக்கிறது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி அன்று கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை வடகொரியா சோதனை செய்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் வடகொரியா நேற்று ஏவுகணை […]
வடகொரியா இந்த வருடத்தில் எட்டாம் முறையாக ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக தென்கொரியா தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த, பதற்றத்தில் அமெரிக்கா திசை திரும்பிய நிலையில், வடகொரியா ஏவுகணை பரிசோதனை மேற்கொள்வது போன்ற ஆத்திரமடைய செய்யும் செயல்களை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக கடந்த வாரத்தில் தென்கொரிய அதிபர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், வடகொரியா இந்த வருடத்தில் எட்டாம் முறையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியிருக்கிறது என்று தென் கொரியாவின் ராணுவம் கூறியுள்ளது. வடகொரியா, கிழக்கு கடற்கரையில் […]
பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தாக்கங்களுக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை பரிசோதனை செய்து கிம் ஜான் உன் என்ன சாதிக்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. வடகொரியா, கடந்த 2017ஆம் வருடத்திற்கு பின் மிகப்பெரிதான ஏவுகணை பரிசோதனையை நேற்று செய்திருக்கிறது. வடகொரியா தற்போது பரிசோதனை செய்த ஏவுகணையானது, கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கக்கூடியது. சுமார் 2,000 கிலோ மீட்டர் உயரத்திற்கு பறந்து ஜப்பான் கடலில் விழுந்து விட்டது. வடகொரியா இதோடு இந்த மாதத்தில் 7-ஆம் முறையாக ஏவுகணை […]
அமெரிக்க அதிபர் ஜோபைடன் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்திக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் வட கொரிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது. வட கொரிய அரசு, நாங்கள் அணுசக்தி திறன்களை கொஞ்சம் நிறுத்தி வைக்கிறோம். அதற்கு பதில், எங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த வருடத் தொடக்கத்திலிருந்தே வடகொரியா கடும் நிதி […]
வடகொரிய நாடு ஏவுகணை பரிசோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது. வடகொரிய அரசு ஏவுகணை பரிசோதனை நடத்தி அவ்வபோது அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில் வடகொரியா மீண்டும் இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதனை செய்திருப்பதாக தென்கொரிய அரசு தெரிவித்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை, வடகொரிய நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபைக்குரிய தீர்மானங்களை மீறக்கூடிய செயல்பாடுகளில், வடகொரியா ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார். […]
வடகொரியா, ஒரே வாரத்தில் இரண்டாம் தடவையாக ஏவுகணை பரிசோதனை செய்திருப்பதை உலக நாடுகள் எதிர்த்திருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அந்த வகையில், வடகொரியா அரசு, சுமார் 700 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக தாக்கக் கூடிய ஏவுகணைகளை பரிசோதனை செய்தது. அதன் பிறகு, ஹைபர் சோனிக் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. இதனை, அதிபர் கிம் ஜாங் உன், நேரில் சென்று பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹைபர் சோனிக், ஒளியை […]
வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், ஏவுகணை சோதனையை நேரில் சென்று பார்வையிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா அடிக்கடி, அணு ஆயுதங்ளை கொண்டும் செல்லும் ஏவுகணைகளை பரிசோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும். இதனிடையே கடந்த புதன்கிழமை அன்று தொலை தூரத்தில் இருக்கக்கூடிய இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணையை பரிசோதனை செய்திருந்தது. மேலும், நேற்று வட கொரியா, ஏவுகணை பரிசோதனை செய்ததாக, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் கூறியிருக்கிறது. ஆனால், இந்த ஏவுகணை […]