இஸ்ரேலில் இரு ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதலில், 2 போலீசார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள ஷரோன் மாகாணம் ஹடீரா என்ற நகரில் நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள ஒரு உணவகத்தின் அருகே சில போலீசார் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். அப்போது திடீரென அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். […]
Tag: ஐஎஸ் பயங்கரவாதிகள்
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் எஸ்.யூ.வி ரக காரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. அதில் 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தலிபான் அரசு, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலானது நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
நேற்று ஜலதாபாத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பயங்கரவாதிகள் முன்னெடுக்கும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதற்கிடையே தலிபான்களும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒரு பக்கம் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஜலதாபாத் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். இந்த தகவலை சீன செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இருப்பினும் […]
பல நாடுகளிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு செல்வதாக ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக ஆரம்பித்ததை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஐ.எஸ் பயங்கரவாதிகள் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறார்கள். இவ்வாறான சூழலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் லிபியா, சிரியா உட்பட பல நாடுகளிலிருந்து ஆப்கனிஸ்தான் நாட்டிற்கு செல்கிறார்கள் என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் ரஷ்ய நாட்டிற்கு […]
ஐஎஸ் பயங்கரவாதிகளால் ஈராக்கில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட உடல்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டு வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகள் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை அங்கு கொன்று புதைத்துள்ளனர். தற்போது அக்கு புதைக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் 200 இடங்களில் அதிகளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அதில் தற்போது 12 ஆயிரம் பேரின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை […]