இந்தியாவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட கொடுமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யூபிஎஸ்சி தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. தமிழகத்தில் இந்த தேர்வு எழுதும் பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது 21 முதல் 32 குள் இருக்க வேண்டும். இதில் பட்டியல் இனத்தவர்கள் மூன்று […]
Tag: ஐஏஎஸ்
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது. இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி […]
தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு அரசு சார்பாக சென்னையில் உள்ள அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமை பணி முதல் நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமை பணி பயிற்சி மையங்களிலும் இந்த இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு தமிழகத்தில் […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிப்பதற்காகவும், ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கவும், கற்றல் இடை நீற்றலை தவிக்குவதற்காக காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 1545 அரசு பள்ளிகளிலும் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தினை திறன் பட செயல்படுத்திட ஏதுவாக […]
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அரசியல் சார்பு இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்றும் இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகு குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்தலில் போட்டியிட தடை […]
முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் அதிகாரி நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற பிறகு முதலில் நான்கு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று உங்கள் தொகுதியில் ஒரு முதலமைச்சர் என்பதாகும். இதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவு சிறப்பு அதிகாரியாக […]
தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட முதலில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். தமிழகத்தில் தற்போது வரை பல ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் கலெக்டராக […]
லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளுக்கு எதிராக ஓய்வுபெற்ற 93 ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் பட்டேல் அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தரப்புகளும் லட்சத்தீவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் கேரளாவில் சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]
தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல பொறுப்புகளில் இருந்த அதிகாரிகள் வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். ஏற்கனவே 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்த நந்தகுமார் பள்ளிக் கல்வித் துறை ஆணையராகவும், […]
மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக புதிய துறை ஒன்றை உருவாக்கி மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். இன்று தலைமை செயலகத்திற்கு முகஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார் அப்போது அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் விருது வழங்கப்பட்டது இதை […]
அரசு பணியில் இருந்து விடுப்பு அறிவித்த சகாயம் ஐஏஎஸ் அடுத்த கட்ட பணிகளை குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். சகாயம் ஐஏஎஸ்க்கு கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அரசு முக்கிய பதவிகள் எதுவும் வழங்கவில்லை எனவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரது பணிக் காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. இதற்கிடையில் விருப்ப ஓய்வு கேட்டு தமிழக அரசுக்கு சகாயம் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உட்பட 6 அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, சமரச சிக்ஷா திட்ட கூடுதல் இயக்குனர் என் வெங்கடேஷ் என்பவர் பள்ளிக்கல்வித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு வணிக வரித்துறை […]
சென்னை ராயபுரம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராயபுரம் மண்டலத்திற்கு பாலசுப்ரமணியம், ஆலந்தூர் மண்டலத்திற்கு நிர்மல் ராஜ், பெருங்குடி மண்டலத்தில் அனீஸ் சேகர் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15வது மண்டலமான சோழிங்கநல்லூருக்கு விஷ்ணு ஐஏஎஸ், சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, சென்னை ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. கொரோனா தடுப்பு பணியில் இருந்த […]
சென்னை ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் இருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கருணாகரன், பெருங்குடிக்கு நியமிக்கப்பட்ட வெங்கடேஷ், ஆலந்தூருக்கு நியமிக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கொரோனா தடுப்பு பணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரப்பட்டன. வருவாய்த்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் […]
சிங்கப்பூரில் இருந்து வந்த கேரளா வந்த துணை ஆட்சியர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பி சென்றதால் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணிபுரிந்து வருபவர் அனுபம் மிஸ்ரா. இவர் தனது விடுமுறையின் போது சிங்கப்பூருக்கு சென்று விட்டு இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து மார்ச் 19ஆம் தேதியன்று பணிக்குத் திரும்பிய அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா அச்சம் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, அவரும் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், அடுத்த சில நாட்களாக […]