இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் மாணவிகள் சேர்க்கை 2021-22ம் வருடத்தில் 20% ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்தார். இது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று (டிச..14) மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நாடு முழுவதும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பை தொடரும் மாணவிகளை ஊக்குவிக்க பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மாணவிகளுக்கென சிறப்பு முதுகலை உதவித்தொகைகளை வழங்குகிறது. இதேபோன்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தொழில்நுட்பக் கல்வியில் […]
Tag: ஐஐடி
உலகின் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச அளவில் பல்வேறு முறைகளில் மின் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி கடல் அலையின் வீச்சில் டர்பைன் என்ற சுழலியை சுழற்றி மின்சாரம் தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த முறையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தொழில்நுட்ப கருவிகளை கண்டறிந்து வரும் நிலையில் சென்னை ஐஐடி தற்போது புதிய கருவியை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி கடற்கரையிலிருந்து சரியாக ஆறு […]
மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் புதிய முயற்சிகளை ஊக்குவிக்க கூடிய வகையில் “அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்” என்ற புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். ‘ப்ரவர்தாக்’ என்ற சென்னை ஐஐடியின் அமைப்பு மூலமாக ஆன்லைனில் எந்தவித கட்டணமும் இல்லாமல் கணித பாட திட்டத்தை இளம் தலைமுறையினர் அனைவருக்கும் கற்றுத் தரும் நோக்கத்தில் இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 6வகுப்பில் இருந்து வயது வரம்பின்றி அனைவரும் […]
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பி.டெக். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதற்க்கு சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் ஐஐடி மெட்ராஸ் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உடன் உடன்படிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக கல்வி உதவித்தொகை நிதியம் ஒன்றை ஏற்படுத்த, […]
சென்னை ஐஐடி வளாகத்தில் இதுவரை 4,974 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் 2,729 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது. சென்னை ஐஐடியில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் சென்னையில் இதுவரை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா ஆர் வேல்யூ கணிசமாக உயர்ந்திருப்பதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில் ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பரவுகிறது என்பதைக் கணக்கிடும் ஆர் வேல்யூ கணிசமாக அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. ஆர் வேல்யூ 1-க்கு குறைவாக இருந்தால் தொற்று பரவல் வேகம் குறைவாக இருக்கிறது. 1-க்கு அதிகமாக இருந்தால் தொற்று பரவல் வேகம் அதிகரிக்கின்றது […]
சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். சென்னை ஐஐடியில் இதுவரை 1420 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 55 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.
சென்னை ஐஐடி வளாகத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்று உறுதியான 10 பேரில் 3 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை, 7 பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டும் இருந்துள்ளன. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் பரிசோதனை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு முறையை கண்டுபிடிக்கவும் மருத்துவ செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
தேசிய உயர் கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியின் வர்த்தக அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நவீன முறையில் கணிதம் கற்று தரும் வீடியோ வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. முழுவதும் ஆன்-லைன் வழியில் வீடியோவாக நடத்தப்படும். இந்த வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. மேலும் இந்த வகுப்பில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோவாக பாடங்கள் ஒளிபரப்பப்படுகிறது. பாடங்கள் தொடர்பான ஆன்லைன் வழியாக கணித செய்முறை பயிற்சி வழங்கப்படும் மொத்தம் நான்கு நிலைகளாக வகுப்பு நடைபெறுகிறது. ஐந்தாம் […]
சென்னை ஐஐடி மாற்று திறனாளிகளுக்காக செயற்கை முழங்கால் அறிமுகம் செய்துள்ளது. முழங்கால் மேல் பகுதியை இழந்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது பன்மையான செயற்க்கை முழங்காலை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் அறிமுகம் செய்திருக்கிறது.கதம் என அழைக்கப்படும் இந்த மேட் இன் இந்தியா தயாரிப்பு, சொசைட்டி ஃபார் பயோமெடிக்கல் டெக்னாலஜி (SBMT) மற்றும் மொபிலிட்டி இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட, முழங்காலுக்கு மேல் உள்ள செயற்கை உறுப்புக்கான பாலிசென்ட்ரிக் […]
சென்னை ஐஐடியின், பி.எஸ்.சி டேட்டா சயின்ஸ், ஆன்லைன் படிப்பிற்கு 20ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேசிய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் பி.எஸ்.சி., டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் ஆன்லைன் படிப்புகள் நடத்தப்படுகிறது. மே மாத பருவத்தில் சேர,https://online degree.iitm.ac.in/என்ற இணையதளத்தில் வரும் 20ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளஸ் டூ முடித்த அனைவரும் இந்த படிப்பை படிக்கலாம். தற்போது பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் […]
சென்னை ஐஐடி மாணவர்கள் எடுத்துள்ள புதிய முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை ஐஐடி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ராபர்ட் போஷ் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் வணிக ஆலோசனை நிறுவனமான சூப்பர் பிலிம் ஸ்டுடியோஸ் போன்றவை இணைந்து பாலின இடைவெளியை குறைப்பதற்கான ‘மறைக்கப்பட்ட குரல்கள்’ என்ற முயற்சியைத் தொடங்கி இருக்கின்றன. சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் சங்கத்துடன் இணைந்து நடக்கும் இந்த முன்முயற்சி விக்கிப்பீடியாவில் […]
“திருமணத்திற்கு நாள் குறிப்பது போல மீண்டும் இந்தியாவில் கொரோனா பரவல் தொடரும் என கான்பூர் ஐஐடி தெரிவித்திருக்கிறது. ஆகையால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்” என்று அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இன்று 100 க்கு கீழ் சென்றதால் இனி கொரோனாவால் எந்த பிரச்சினையும் இல்லை.ஊரடங்கு போன்ற செய்திகள் வராது என மக்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் இந்த எச்சரிக்கையை சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பி.டெக், பி .ஆர்க் படிப்புகளில் சேருவதற்கான JEE மெயின் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும். மேலும் இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கும், jeemain.nta.nic.in. என்ற இணைய முகவரியை அணுகவும்.
இந்தியாவின் மிகுந்த புத்தகம் நிறைந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. சிறந்த புத்தாக்கம், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிக்காக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மும்பை இரண்டாவது இடத்திலும், டெல்லி ஐஐடி 3வது இடத்திலும், மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனம் உத்திரபிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
கடந்த மாதம் சென்னை ஐஐடியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்த விபின் புதியத் என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டுமுதல் சாதி தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறேன் எனக்கூறி தனது வேலையை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேராசிரியர் விபின், பேராசிரியர் முரளிதரன் என்பவரை ஐஐடி நிர்வாக இயக்குனர்கள் அமைப்பு சார்பாக செயற்குழுவில் நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் பொன்முடி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஐஐடி இயக்குனர் […]
நாட்டின் 7 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்ந்த பட்டியலின மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டுவெளியேறுவது கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அதில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் 40% முதல் 72% வரை பட்டியலின மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டு வெளியேறுவது தெரியவந்துள்ளது. நாட்டின் 7 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்பில் இருந்து பாதியில் வெளியேறும் 10 மாணவர்களில் 6 பேர் இட […]
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் கேரளாவைச் சேர்ந்த கௌரவ விரிவுரையாளர் மர்மமான முறையில் எரிந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா என்ற கோணாத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்ற எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவு திட்ட கௌரவ விரிவுரையாளராக […]
சென்னை ஐஐடியில் முனைவர்பட்ட ஆய்வு மாணவி ஒருவருக்கு கல்லூரி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவியை வீட்டுக்கு வரச் சொல்லியும், சமையல் செய்து தரச்சொல்லியும், ஆபாசமாக பேசியும் பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். ஐஐடியில் சிவில் இஞ்சினியரிங் துறை பேராசிரியராக இருந்தவர் மாதவகுமார். இவரது தலைமையில் மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தார். மாணவியிடம் அடிக்கடி பேராசிரியர் ஜொல்லு விட்டு […]
ஐஐடி என்ஐடி உட்பட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து இருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக தற்போது உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும் காலநீட்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐஐடி என்ஐடி உட்பட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு […]
ஜே.இ.இ. மெயின் தேர்வை இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 563 பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் ஜே. இ. இ. மெயின் தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியது. வரும் 6ம் தேதி வரை நாடு முழுவதும் 12 கட்டங்களாக 660 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் தேர்வை எழுத மொத்தமாக […]
இரண்டு நாட்களுக்குள் விடுதியில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கோரி சென்னை ஐஐடி தெரிவித்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரனோ பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி கற்க வந்த மாணவர்களும், தமிழகத்தில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்களும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு , ஊர்களுக்கு செல்ல முடியாமல் தமிழகத்திலேயே சிக்கி தவித்து வந்தனர். இவர்களுக்கு […]
கிழக்கு ரயில்வே துறையின் கீழ் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பல்வேறு துறைகளில் 2020ம் ஆண்டுக்கான அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. காலியிடங்கள் : வெல்டர், வயர்மேன், ஸ்டீல் மெட்டல் வொர்க்கர், லைன்மேன், பெயின்டர், கார்ப்பென்டர், ஃபிட்டர் என பல்வேறு தொழிற்பிரிவுகளில் அரசு விதிகளின்படி மொத்தம் 2792 பேருக்கு உதவித்தொகையுடன் கூடிய அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. கல்வித் தகுதி : பல்வேறு தொழிற்பிரிவுகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதால் பணிகளுக்கு ஏற்றாற்போல் கல்வித்தகுதி மாறுபடுகிறது. விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் […]