மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என எம்எல் ரவி என்பவர் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. வழக்கை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்தது. மின்சார மானியம் பெற ஆதாரை இணைக்க வற்புறுத்தக் கூடாது என்றும், மின் இணைப்புடன் ஆதார இணைப்பதில் வாடகைதாரருக்கு பல்வேறு சிக்கல் இருக்கிறது என்றும், ஆதார் இணைப்பு சமூக நலத்திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக மனுதாரர் ரவி வழக்கு […]
Tag: ஐகோர்ட்
தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த மார்ச் மாதம் 7382 குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றதாகவும், இது சம்பந்தமான அறிவிப்பாணையில் கலப்பு மணம் புரிந்தோருக்கான முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை என […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் மருவிய பாலினத்தவர் மற்றும் LGBTQIA PLUS போன்ற சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊடகங்களில் இந்த பிரிவினரை குறிப்பது தொடர்பான சொல் அகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு மருவிய பாலினத்தவர் மற்று ம் LGBTQIA PLUS சமூகத்தினர் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1,11,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதன் பிறகு இந்த சமுதாயத்திற்கான விதிகள் […]
சென்னை உயர்நீதிமன்றதில் நடந்த வழக்கில் நீதிபதி கூறிய கருத்து ஆசிரியர்களுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் […]
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆங்கில பாடத்திற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தமிழ் பாடப்பிரிவில் பிஎட் படிப்பை முடித்த பிறகு தொலைதூரக் கல்விமுறையின் கீழ் மனுதாரர் பி.ஏ ஆங்கிலம் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை […]
தொலைதூரக் கல்வி முறையில் படித்தவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. தற்போது ஆசிரியர்களாக உள்ள பலர் கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று படிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டியுள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பயின்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்யும் வகையில் நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தி இருக்கிறது உயர்நீதிமன்றம். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் வகையில் நியமன நடைமுறையை மூன்று மாதங்களில் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த வாரம் நடை திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹெலி கேரளா என்னும் நிறுவனம் இணையதளத்தில் விளம்பரம் ஓர் விளம்பரத்தை கொடுத்தது. அதில் கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் கொச்சியில் இருந்து சன்னிதானத்தில் வி.ஐ.பி தரிசனம் செய்வது வரை அனைத்திற்கும் 45 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கக்கூடிய சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரை கிளை பொதுநல மனுதாக்கல் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கோவில்களில் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படங்கள் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது, மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற […]
உணவகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கூடிய வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள உணவகங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆய்வு நடத்தியதாகவும். அதில் 12% உணவுகள் போதுமான அளவு தரத்துடன் செய்யப்படவில்லை என்று அறிக்கையில் சுட்டிக்காட்டி இருப்பதாகவும், பல ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், உணவு தயாரிக்கும் பொழுது உரிய சுத்தமான […]
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் தடுத்து நிறுத்தக்கூடாது..? என்று தமிழ்நாடு அரசை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த கோரிய வழக்கில் இந்த கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தடையை நடைமுறைபடுத்த தீவிரம்காட்டி வருகிறோம் என தமிழக அரசு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை வெளியிட சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டனர். அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி 152 உதவி பேராசிரியர்களுக்கும் இந்த விகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இது சம்பந்தமான வழக்கை விசாரித்து வரக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் […]
நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நவம்பர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குடும்பம் மீதான நிலமோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மருமகனின் சகோதரரின் சொத்துக்களை அபகரித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள் மற்றும் மருமகன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்புடையது அல்ல என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் கோரி மனு தாக்கல் […]
காற்று மாசுபாடு காரணமாக உடல் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டு மத்திய மற்றும் டெல்லி அரசாங்கத்திடம் ரூ.15 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு கோரி கல்லூரி மாணவர் டெல்லி ஐகோட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காற்று மாசுபாடு நுரையீரலை பாதிக்கிறது மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் மாசு என்பது ஒரு நபரின் வாழ்க்கையை 5 முதல் 9 ஆண்டுகள் வரை குறைக்கும் என ஒரு பொதுவான விஷயமாகும் […]
அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நேற்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசினுடைய சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 3 அறிக்கைகள்: பள்ளி கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவக் […]
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்றைய தினம் வந்த போது, தமிழக அரசின் சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கைகளையும், […]
நாடு முழுவதும் கடந்த 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமரின் உத்தரவுபடி வீடுகளில் மூன்று நாட்கள் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகம், கோர்ட்கள் என ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐகோர்ட் மற்றும் அதன் கிளைகளான தார்வார், கலபுரகி ஆகியவை வழக்கம்போல் இயங்கியது. இந்நிலையில் பெங்களூரு, தார்வார், கலபுரகி ஐகோர்ட்டுகளுக்கு […]
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகம் பள்ளியை சீரமைக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் 10 நாளில் பரிசீலித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் முடிவு எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த +2 மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளியில் மர்மமாக உயிரிழந்து கிடந்தார்.. இதையடுத்து இதற்கு நீதிகேட்டு 4 நாட்களாக நடைபெற்ற போராட்டம் 17ஆம் தேதி வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பள்ளி முழுவதும் சேதப்படுத்தப்பட்டு பேருந்துகள், பள்ளியின் ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.. […]
தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை புதிய விதி 2020 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. அதன்படி 18 வயதில் இருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அச்சகர்களாக […]
பிரபல நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபாரதத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. வருமானவரித்துறை ரூபாய்.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக் கால தடை விதித்துள்ளது. மேலும் செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2016 -2017 நிதியாண்டில் ரூபாய் 15 கோடி வருமானத்தை மறைத்ததாக ரூ.1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை 2022 ஜூன் 30ல் உத்தரவிட்டது. சட்டப்படி உரிய […]
இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாத நியமனத்தால் ஏராளமான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிப்பு. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்காமல் விருப்பம் போல் டாஸ்மாக் பணியாளர்களை நியமிப்பதா? டாஸ்மாக்கில் விருப்பம் போல் அரசியல் கட்சி பிரமுகர்களை நியமிப்பதை ஏற்க முடியாது. டாஸ்மாக்கில் நியமனங்கள் நியமனதிற்கு எந்த விதியும் வகுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. டாஸ்மார்க் நிறுவனம் தொடங்கி 19 ஆண்டுகள் ஆகியும் விதி வகுக்காததை அரசு கவனிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜேபிக்கு உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஒரு வார்த்தை போதும் ஆனால் அரசிடம் இருந்தோ டிஜிபிடமிருந்தோ அது வருவதில்லை என்று நீதிபதி அதிர்ச்சி தெரிவித்து இருக்கிறார் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன். காவலர்களுக்கு காவலர் குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் அந்த இடத்தை ஒப்படைக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. காவல்துறை உத்தரவை எதிர்த்து, சம்மந்தப்பட்ட காவலர் தொடர்ந்து வழக்கில், இடத்தை காலி […]
பெரியார் சிலை குறித்து கனல் கண்ணன் பேசியது சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில் தற்போது அவரது முன் ஜாமின் பண்ணுவானது தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்ப பிரச்சாரப் பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயிலில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சினிமா “ஸ்டண்ட் மாஸ்டர்” ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசி இருந்தார். […]
2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தி இருந்தால் நடிகர் விஜய்-க்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. ஜனவரிக்கு பின் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. அதேபோல், நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் அவர்கள் பேருந்துகளில் எளிய முறையில் ஏறும் வகையில் பிரத்தியேகமாக பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி 2, 213 புதிய பேருந்துகள், 500 மின்கல பேருந்துகளை கொள்முதல் […]
ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என இடைக்கால உத்தரவு ஜூன் 23ஆம் தேதி பொது குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பிறகு நடக்கும் பொதுக்குழுவுக்கு பொருந்தாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓபிஎஸ் தரப்புக்கு கொடுத்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. நாளுக்கு நாள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கருத்து யுத்தம் நடத்தி வருகின்றன. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட […]
சட்ட விதிமுறைகளை பின்பற்றினால் திருமண பதிவு சான்றிதழ் வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருசுழியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் லெடியா என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் சென்ற ஜூன் மாதம் பத்தாம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் தங்கள் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கோரி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஜூன் 17ஆம் தேதி கேட்டபொழுது சார் பதிவாளர் லெடியாவுக்கு 21 வயது பூர்த்தியாகவில்லை என […]
பாலியல் பலாத்காரத்தினால் கருவுற்ற மைனர் பெண் 16 வார கருவை கலைக்க மும்பை ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. பாதுகாப்பு காப்பகத்தில் இருந்த சிறுமி ஒருவர் கர்ப்பமாக இருந்த விவகாரம் தொடர்பாக பெண் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தூர்க்கர் மற்றும் ஊர்மிளா ஜோஷி பால்கே ஆகியோர் அடங்கிய அமர்வு 16 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக இந்த வழக்கை […]
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. ஏழை,எளிய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக பரவி வந்த தொற்று அதன்பிறகு படிப்படியாக குறைந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பள்ளி குழந்தைகளும் மீண்டும் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக இன்று ஒரு நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் சென்னை உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் கட்டுப்பாடுகள் […]
குரூப்-1 முதல்நிலைத் தேர்வின் மாதிரி விடைகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அதில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த 200 கேள்விகளுக்கான மாதிரி விடைகள் வெளியிடப்பட்டது. அதில் 60 கேள்விகளுக்கான விடை தவறு என்று கூறி இதனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் […]
முதியவருக்கு சொந்தமான ஒரு இடத்தை போலி பட்டா தயாரித்து வேறு ஒரு பெயருக்கு மாற்றியது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி உத்தரவிட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், காட்டுப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் முதியவர் தட்சிணாமூர்த்தி இவர் கடந்த 1994ஆம் ஆண்டு தமிழக அரசு கிராம நத்தம் நிலத்தில் 792 சதுர மீட்டர் பரப்பளவில் பட்டா வாங்கியதாகவும், அந்த நிலத்தில் ஓலை வீடு அமைத்து மண்பாண்டம் தொழில் செய்து […]
ஹர்ஷித் கோயல் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், குற்றவியல் நடைமுறை (அடையாள) சட்டம் அடிப்படை உரிமைகளுக்கும், அரசமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. ஆகவே சட்டத்தை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பொதுநல மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் எதற்கு வசூலிக்கிறீர்கள்..? மாமல்லபுரத்தில் இருக்கும் குப்பையைக் பார்கவா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பக்கிங்காம் கால்வாய்பகுதி குப்பையைப் பிரிக்கும் இடமாக மாற்றப்பட்டு வருவதை எதிர்த்து கடந்த 2018 ஆம் வருடம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையின்போது குப்பைகளை அகற்றி மாமல்லபுரத்தை தூய்மையாக பராமரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமல்லாமல் மாமல்லபுரத்துக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளிடம் எதற்காக கட்டணம் வசூலிக்கிறீர்கள்..? அங்கிருக்கும் குப்பையைக் […]
மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவ கல்லூரிகளிலுள்ள காலிப் பணியிடங்களை அவர்களே நிரப்பிக்கொள்ள கடந்த 2020-21-ம் கல்வி ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இச்சம்பவத்தின் பின்னணியிலுள்ள நபர்கள் யார்..? என்பது தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் இந்த முறைகேடுகளுக்கு காரணம் அப்போதைய மருத்துவ மேற்படிப்பு தேர்வுக் குழுவின் செயலாளர் செல்வராஜன்தான் […]
அரசுப்பள்ளி மாணவா்களுக்கான 7.5 % இடஒதுக்கீட்டின் கீழ் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு மருத்துவப்படிப்பில் இடம் ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மேற்கொள்ளும்படி மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சென்னையைச் சோ்ந்த முனுசாமி என்ற 63 வயதுள்ள அரசுப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் நீட் தோ்வில் 348 மதிப்பெண்கள் பெற்ற தனக்கு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கை வழங்கக் கோரி விண்ணப்பித்து இருந்தாா். ஆனால் 6-12 ஆம் வகுப்பு […]
சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவராக அண்ணாத்துரை இருக்கிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டா கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் இருப்பதாவது “ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் பகுதியில் பல்வேறு வருடங்களாக வசித்து வருகிறோம். நாங்கள் வசித்துவரும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்தும், அது நிறைவேற்றப்பாடாமல் இருக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. ஆகவே எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று […]
ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. கோவையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை வழக்கில் யாசுதீன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2001ஆம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருக்கும் காலத்தில் சிறையில் ஆய்வு செய்யவந்த சிறைத்துறை டிஐஜி யை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர் பிறந்த நாட்களின் போது ஆயுள் கைதிகளை […]
முன்னதாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழக செய்தி, மக்கள் தொடர்புத்துறை செயலாளர் ஜெயசீலன் இன்று (பிப்..17)உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த பிறகு குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு பிரஸ் கவுன்ஸிலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்பின் அங்கீகாரம் அட்டையை பெறுவதற்கு 2021 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இரண்டு […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஒட்ட […]
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யபப்ட்டார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டார். முன்பாக அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த வருட நவம்பர் மாதம் பதவியேற்றார். அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) […]
இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய தடை என்று பலகை வைக்கக்கோரிய வழக்கில் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஹிஜாப் அணிவதற்காகவும், கோவில்களில் வேட்டி அணிவதற்காகவும் போராடுவது அதிர்ச்சியளிக்கிறது. ஆகம விதிப்படி வேட்டிதான் அணிய வேண்டுமா என்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பிலுள்ள பார்களில், தின்பண்டங்கள் விற்பனை, காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனமானது அறிவித்தது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக பார் உரிமையாளர்கள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, டாஸ்மாக் பார்களுக்கான டெண்டர்கள் வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளன. எந்த ஒளிவு மறைவும் இல்லை என்று விளக்கம் […]
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரை அவமதித்த நீதிபதிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . நீதிபதிக்கு எதிராக போராட்டம் கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவிற்கு ராய்ச்சூர் மாவட்ட கோர்ட்டில் தேசியக்கொடி ஏற்றுவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதி மல்லிகார்ஜுன கவுடா அங்குள்ள அம்பேத்கரின் உருவப்படத்தை அகற்றினால் தான் தேசியக் கொடியை ஏற்றுவதாக கூறினார்.அதன்படி அவரின் உருவப்படம் அகற்றப்பட்டது. இந்நிலையில் கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் வக்கீல்கள், சங்கங்கள் […]
தென் ஆப்பிரிக்காவின் மிக உயரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திரன் ஜோடி கோலப்பனை தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நியமித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த நீதித்துறை ஆக இருக்கும் 11 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு ஐகோர்ட்டில் ஒருவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நரேந்திரன் ஜோடி கோலப்பன் நீதிபதியாக பொறுப்பேற்க வருகிறார். நீதி துறையால் பரிந்துரைக்கப்பட்ட கோலப்பன் மற்றும் மாதப்போ ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் மிக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பொறுப்பேற்க விருக்கிறார். 64 வயதுடைய ராஜேந்திரன் ஜோடி […]
அரசின் சார்பாக பணம் திரட்டி குழந்தைகளுக்கான மருத்துவ செலவுக்கு பயன்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. அபூர்வ நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சைக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று பயன்படுத்த வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. தனி நபர்களால் மிகப் பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடிகின்றது. மாநில அரசு நினைத்தால் நிச்சயம் இதனை செயல்படுத்த முடியும். இதற்கான நடைமுறையை மாநில அரசு கொண்டுவந்து பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. சமீபத்தில் […]
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரிவிதிப்பு குழுவை அமைக்கும் பணி ஊரக வளர்ச்சி துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் வளையக்காரனுர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் சொத்து வரி செலுத்தும் படி தட்டாங்குட்டை கிராம பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி […]
நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான செல்வந்தர்கள் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். அவர்களும், காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அவை நிலுவையில் இருந்து வருகின்றன. இதில் சில வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வரித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசுக்கு வரவேண்டிய வருவாய் காலதாமதம் ஆகிறது. ஆனால் அதிகாரிகளுக்கு மாதத்தின் கடைசி நாளில் அரசு சரியாக ஊதியம் […]