தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் டிசம்பர் 8 ஆம் தேதி உருவாக போகும் புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ’மாண்டஸ்’ என்னும் பெயரை பரிந்துரை செய்துள்ளது. அதனால் இந்த புயல் ’மாண்டஸ்’ என அழைக்கப்படும்.
Tag: ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் அதிக சலுகைகளோடு விசா நடைமுறைகளை இன்று நடைமுறைப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் பத்து வருடங்கள் விரிவுபடுத்தப்பட்ட தங்க விசா திட்டம், திறமை மிகுந்த ஊழியர்களுக்கு ஐந்தாண்டு பசுமை விசா திட்டம் போன்றவை இருக்கிறது. சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கலாம். கிரீன் விசா உடன் வருபவர்கள் அனுமதி காலாவதியான பிறகும் ஆறு மாதங்களுக்கு தங்க முடியும். […]
பிரபல நடிகைக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 10 வருடங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். இந்த கோல்டன் விசா நடிகர்கள் மம்மூட்டி, ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், துல்கர் சல்மான், பிரித்திவிராஜ், நடிகை ஊர்வசி ரவுதாலா, மீரா ஜாஸ்மின் உள்பட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நடிகை திரிஷா, ஜோதிகா, […]
வளைகுடாநாடுகளில் எப்போதாவது தான் கனமழை பெய்யும். இங்கு பாலைவனங்கள் அதிகம் என்பதால் வெயில் கொளுத்தும். இதற்கிடையில் கோடைக்காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும். இதன் காரணமாக இந்தியா போன்ற நாடுகளிலிருந்து செல்வோர் அந்த மாதங்களில் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம் ஆகும். அதேநேரம் மழைக்காலத்தில் லேசான மழை பெய்யும். சில நேரங்களில் கன மழையும் பெய்து மக்களை மகிழ்விக்கும். அந்த அடிப்படையில் ஐக்கியஅரபு நாட்டில் சென்ற சில வாரங்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதனால் […]
பிரபல நடிகர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய நாட்டைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தினர் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் ஊர்வசி ரவுதலா, துஷார் கபூர், ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் கோல்டன் விசாவை பெற்றிருந்தனர். இதனையடுத்து தென்னிந்திய திரை பிரபலங்களான ஆண்ட்ரியா, பிரணிதா, ராய் லட்சுமி, காஜல் அகர்வால், அமலாபால், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், துல்கர் சல்மான், மம்மூட்டி, பிரித்திவிராஜ், மோகன் லால் […]
பிரான்ஸ் அரசு எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் TotalEnergies என்னும் நிறுவனமும் ஐக்கிய அரபு அமீரகத்தினுடைய ADNOC என்ற எண்ணைய் நிறுவனமும் நேற்று முன்தினம் ஆற்றல் குறித்த ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஐக்கிய அரபு அமீரகத்தினுடைய அதிபர் Sheikh Mohamed bin Zayed Al-Nahyan பாரிஸ் சென்றிருந்தார். அப்போது இரண்டு நாடுகளுக்கு இடையே இந்த முக்கிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே, ஆற்றலுக்குரிய மாற்று ஏற்பாடுகளை தேடி […]
ராமநாதபுரத்தை சேர்ந்த ஹமீது யாசின் என்ற நபர் ஐக்கிய அரசு அமீரகத்தினுடைய கோல்டன் விசாவை பெற்றிருக்கிறார். பல துறைகளில் சிறப்பாக திகழக்கூடிய, தங்கள் நாட்டில் அதிகமாக முதலீடு செய்யக்கூடிய தொழிலதிபர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகமானது கோல்டன் விசா வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கோல்டன் விசா இருந்தால் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகனாக இருக்கலாம். திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திலும், மற்ற நேரங்களிலும் சமூக […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் இருக்கும் விமான நிலையத்தை சீரமைத்து பொறுப்பை ஏற்க தலீபான்களோடு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பக்கமும் நில எல்லைகளுடைய ஆப்கானிஸ்தான் நாட்டின் வான்வழி தொடர்பிற்கு காபூல் நகரின் விமான நிலையம் முன்னிலையாக திகழ்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகள் அந்த விமான நிலையத்தை சீரமைத்து பொறுப்புகளை கவனிக்க தலீபான்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றன. பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகு காபூல் […]
ஜெர்மனியின் எல்மாவ்நகரில் ஜி 7 மாநாடு 2 தினங்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜெர்மனிக்கு சென்றார். இதையடுத்து அம்மாநாட்டில் பங்கேற்ற மோடி, பின் ஐக்கியஅரபு அமீரகத்திற்கு இன்று புறப்படுகிறார். அதன்பின் அங்கு ஐக்கியஅரபு அமீரக அதிபர் ஷேக்முகமது பின் சையது அல் நஹ்யானை சந்தித்து பேச இருக்கிறார். அதனை தொடர்ந்து மோடி, ஐக்கியஅரபு அமீரகத்தின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
தமிழ் திரையுலக நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ் திரையுலக நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அமீரகத்தில் குடிமகன்களாக 10 ஆண்டுகளுக்கு கருதப்படுவார்கள். இதற்கிடையே அண்மையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. இவ்வாறு இருக்க ஐக்கிய அரபு அமீரகம் பல துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் […]
மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த அதிபயங்கர குண்டு தாக்குதலில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளி ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் போட்டுக்கொடுத்த பிளானின் அடிப்படையில் அடுத்தடுத்து 12 இடங்களில் அதிபயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் 257 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்கள். இதற்கு மூல காரணமான தாவூத் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிப்படைந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இந்தியர் உயிர் பிழைத்த சம்பவம் பிரம்மிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த 32 வயதான அருண்குமார் நாயர் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஜூலை மாதம் 31-ஆம் […]
ஐக்கிய அரபு அமீரகம் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அறிவித்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம், ஆப்பிரிக்க நாட்டு மக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தடை அறிவித்தது. இந்த தடையை வரும் 29ம் தேதியிலிருந்து நீக்குவதாக தற்போது தெரிவித்திருக்கிறது. இது தொடர்பில் பேரிடர் மேலாண்மை ஆணையம், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஜனவரி 29ஆம் தேதியிலிருந்து எத்தியோப்பியா, நைஜீரியா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, ஜிம்பாப்வே, தான்சானியா, […]
ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 17 ஆம் தேதி நடத்திய ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து மீண்டும் தற்போது 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டின் அதிபரான மன்சூரின் ஆதரவைப் பெற்ற ஹாதி கிளர்ச்சியாளர்களுக்கும், ஈரான் நாட்டின் ஆதரவுடைய ஹவுதி படையினருக்குமிடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இதில் ஹாதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் உதவி செய்து வருகிறது. இதனால் கடுப்பான […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் என்ற பகுதியை சேர்ந்த அன்வர் சாதக் ஆரம்பத்தில் அங்கு சாதாரண கணக்கராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களை ஆரம்பித்து தற்போது அனைவரும் வியந்து பார்க்கும் விதமாக வெற்றிகரமான தொழிலதிபராக மாறியுள்ளார். இந்நிலையில் அமீரக அரசு அவருடைய சாதனையை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு கோல்டன் விசா வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு […]
அபுதாபியில் எண்ணெய் நிறுவனத்தின் கிடங்கிற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 எண்ணெய் டேங்கர்கள் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்கிருந்த எண்ணெய் நிறுவனத்திற்குரிய கிடங்கில் 3 எரிபொருள் டேங்குகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த இருவர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு, ஈரான் ஆதரவுடன் இயங்கும் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த தமிழர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரரான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தினகர் என்ற இளைஞர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப கடனை அடைப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலை தேடிச் சென்றுள்ளார். பின்னர் கட்டிட தொழிலாளியாக Fujairah என்ற நகரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி தினகர் லாட்டரி டிக்கெட் ஒன்றை […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்த நபர் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் Junaid Rana என்பவர், சமீபத்தில் Mahzooz என்ற இணையதள குலுக்களில் 50 மில்லியன் திர்ஹாம் பரிசுத்தொகை பெற்றிருக்கிறார். இவருக்கு மனைவியும் ஆண் குழந்தைகள் இருவரும் இருக்கிறார்கள். பாகிஸ்தான் வம்சாவளியினரான இவரின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் இருக்கிறார்கள். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, நான் இறுதி நேரத்தில் தான் அதை வாங்கினேன். நான் எனக்கான எண்களை, கண்களை மூடியவாறு […]
கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டதாக பட்டத்து இளவரசர் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று பரவலானது படிப்படியாக குறைந்து மீண்டும் பழைய நிலைமை திரும்பியுள்ளது. இதனை அபுதாபி பட்டத்து இளவரசரான ஷேக் முகமது பின் சயீத் தெரிவித்துள்ளார். இந்த கடினமான சூழலில் இருந்து நாங்கள் பல அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுக்கொண்டுள்ளோம். #MohamedbinZayed: We overcame the […]
டி 20 உலகக் கோப்பை போட்டியை நேரில் காண 70 % பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது . டி20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 17-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது .இதற்கான அட்டவணையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது .அதோடு தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் வீரர்களின் […]
அதிக வலிமை வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தை பெற்றுள்ளது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு கடவுச்சீட்டு மிகவும் அவசியம். இதனை மற்ற நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதி சீட்டு என்று கூட கூறலாம். இந்த நிலையில் தற்பொழுது Arton Capital கடவுச்சீட்டு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிக புள்ளிகள் பெற்று உலகளவில் முதலிடத்தை ஐக்கிய அரபு அமீரகம் பிடித்துள்ளது. ஏனென்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 152 நாடுகளுக்கு செல்லலாம் […]
அடுக்குமாடி கட்டிடத்தில் மாட்டியிருந்த கர்ப்பிணி பூனையை இந்தியர்கள் உட்பட நான்கு பேர் கொண்ட குழு காப்பாற்றி போலீசாரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மாகாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் கர்ப்பிணி பூனை ஒன்று தரைக்கு வர முடியாமல் மாட்டியுள்ளது. இதனைக் கண்ட இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து கர்ப்பிணி பூனையை பத்திரமாக […]
நின்று கொண்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உம் அல் குவைனில் அல் ரபா என்ற பகுதியில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இதில் வெளிநாட்டு கப்பல்கள், மீன்பிடி கப்பல்கள், படகுகள் ஆகியவை வந்து நிற்கும் தளமாக உள்ளது. இதனையடுத்து மீன்பிடி மற்றும் சரக்கு ஏற்றிச் செல்வதற்காக அந்தத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென […]
ஆப்கான் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஐக்கிய அரபு அமீரகம் அடைக்கலம் கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கை வசம் சென்றது. இதனையடுத்து ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு தனது குடும்பத்துடன் வெளியேறினார். மேலும் அவர் பணத்தை நிரப்பிக்கொண்டு ஹெலிகாப்டரில் சென்றதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அஷ்ரப் கனியின் விமானம் தஜகிஸ்தானில் […]
14- வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது . 14- வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மே 2-ம் தேதி போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள ஐபிஎல் தொடரை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐபிஎல் சீசன் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியின்போது ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி […]
இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த தீபா (50) என்ற பெண் சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் தனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கேரளாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சல் அவரை ஒரே இரவில் கோடீஸ்வரியாக மாற்றியதாகவும், அவர் தற்போது எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளதாகவும் தகவல் […]
இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் விமான தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் விமானங்களுக்கு சில நாடுகள் தற்காலிகமான போக்குவரத்து தடையை அறிவித்திருந்தது. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகமும் முன்னெச்சரிக்கையாக இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான போக்குவரத்து தடையை ஆகஸ்ட் 5ஆம் தேதி […]
விமான சேவைகளின் தடையானது வரும் 7 ஆம் தேதிக்கு பின்னரும் தொடரும் என எதிகாத் மற்றும் எமிரேட்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி வரை பல்வேறு நாடுகளிலிருந்து வரும் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த போக்குவரத்து தடையானது வருகிற 7ஆம் தேதி வரை தொடரும் என எதிகாத் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் விமான சேவை […]
இளவரசியின் தொலைபேசி உளவு பார்ப்பதாக கூறிய விவகாரத்தில் துபாய் மாகாணம் எந்த வித கருத்துகளையும் வெளியிடவில்லை. இஸ்ரேல் நாட்டின் NSO குழுமத்தின் PEGASUS SOFTWAREரினால் தொலைபேசியின் தகவல்கள் உளவு பார்ப்பதாக செய்தி வெளிவந்தது. இந்த பட்டியலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் துபாய் மாகாணத்தின் இளவரசிகளான லதிஃபா மற்றும் ஹயா ஆகியோரின் தொலைபேசிகளும் உளவு பார்ப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 2018 […]
ஐக்கிய அரபு அமீரகம் வெயிலை சமாளிப்பதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மழை வரவழைத்து சாதனை படைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் கொளுத்தும் வெயிலை சமாளிக்க தங்கள் நாட்டிற்காக மழையையே உருவாக்கிவிட்டது. நாட்டில் சுமார் 120 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் அழகாக மழை கொட்டி தீர்க்கக்கூடிய வீடியோ வெளியாகி ஆச்சர்யமடைய செய்துள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/21/6209537806104048739/640x360_MP4_6209537806104048739.mp4 அதாவது ட்ரோன்களை மேகத்திற்குள் பறக்க வைத்து மின்சார ஷாக் கொடுத்து அவை அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து மழை பொழியச் செய்திருக்கிறார்கள். இது […]
OPEC மற்றும் அதன் கூட்டு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல பல நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே டீசல் மற்றும் பெட்ரோலின் விலை 100ஐ எட்டியுள்ளது. இதனால் சரக்கு வாகன கட்டணங்கள் உயர்ந்து காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேறியுள்ளது. இந்த எரிபொருட்கள் விலை […]
அபுதாபியில் நடக்கவுள்ள பறவைகள் கண்காட்சிக்காக அந்த நாட்டின் தேசிய பறவையை பழக்கப்படுத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய பறவை பால்கன் ஆகும். அந்த நாட்டு மக்களின் வாழ்வோடு இணைந்தும் , கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகவும் பால்கன் பறவை உள்ளது. இதற்கு தமிழில் வல்லூறு, ராஜாளி என்ற பெயர்களும் உண்டு. இந்த பறவைகளை மனிதர்களாலும் விலங்குகளாலும் வேட்டையாட முடியாத முயல் ,எலி போன்றவற்றை வேட்டையாட பயன்படுத்துகின்றனர். இந்த பால்கன் பறவையானது மணிக்கு 400 முதல் 500 கிலோ மீட்டர் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகன விபத்தில் பலியான இந்தியாவை சேர்ந்த மாணவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள Yas என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று வாகன விபத்தில் ஒரு இளைஞர் பலியானார். அவர் குறித்த எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அந்த இளைஞரின் பெயர் Ibad Ajmal என்று தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இவர் தனியாக வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம், மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயங்களுடன் […]
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு அரசு அலுவலங்களில் அனுமதி கிடையாது என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கு அனுமதிக்கப்படுவர் என்று அந்நாட்டு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து நாட்டு […]
உலகளவில் அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் சாதனை படைத்துள்ளது . உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அதிகக் தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் சாதனை படைத்துள்ளது . இதுவரை அங்கு 15.5 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் ,மொத்த மக்கள் தொகையில் 72.1 சதவீத மக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு […]
உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக நாடு விட்டு நாடு செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாடுகளில் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மற்றும் அவசியத் தேவைகளுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு தனது குடிமக்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்வதற்கு ஜூலை 21 வரை […]
அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டி20 உலகக் கோப்பையை முதலில் இந்தியாவில் நடத்துவதற்கு ஐசிசி முடிவு செய்திருந்தது. அதன்படி, 7 -வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இந்த உலகக் […]
டி20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது . 7 -வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தை ஐசிசி தேர்வு செய்துள்ளது. இந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவில் […]
உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் குறிப்பிட்ட அளவிலான விமானங்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி விதிமுறைகளுடன் அனுமதி வழங்கிய நிலையில் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட […]
இஸ்ரேல் நாட்டின் பிரபல செய்தி நிறுவனத்தின் அலுவலகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறக்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் கடந்த 2020 ஆம் வருடத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து இரண்டு நாடுகளும் தூதரகத்தின் உறவை மேம்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலின் தூதரகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 29ம் தேதியன்று திறக்கப்படவிருக்கிறது. இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரியான யெய்ர் லாப்பிட் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு […]
உலகம் முழுவதும்கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் விமான சேவையை நிறுத்தி வைத்தன. இதையடுத்து கொரோனா ஓரளவிற்கு குறைந்து வருவதன் காரணமாக மீண்டும் விமான சேவையானது ஒரு சில நாடுகளில் இயக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் 23ம் தேதி முதல் மீண்டும் விமானத்தை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஏதாவது ஒரு தடுப்பூசி 2 டோஸ் எடுத்துக்கொண்டதற்கான சான்று கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ,தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் ,கடந்த ஏப்ரல் மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. மே 2-ம் தேதி வரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் , ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ தீவிர முயற்சியில் ஈடுபட்டு […]
டி 20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 16 அணிகள் பங்கேற்க உள்ள 7 வது டி 20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் வருகின்ற அக்டோபர் , நவம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 ம் அலை தாக்கத்தால், இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு மாற்று இடமாக ஐக்கிய […]
ஐக்கிய அரபு அமீரகத்தில், இந்தியர் ஒருவரை மரண தண்டனையிலிருந்து, இந்திய தொழிலதிபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பேக்ஸ் கிருஷ்ணன் என்ற நபர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்திருக்கிறார். அப்போது கடந்த 2012ஆம் வருடம் செப்டம்பர் மாதம், வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் மீது மோதிவிட்டார். இதில் சூடான் நாட்டை சேர்ந்த அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் நீதிமன்றம், கண்காணிப்பு கேமராக்களின் மூலம் […]
கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சார்பில் நடத்தப்படும் ,பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி பிப்ரவரி- மார்ச் மாதங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. ஆனால் போட்டியில் பயோ பபுளையும் மீறி, வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது . இந்நிலையில் மீதமுள்ள போட்டிகளை ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அனுமதி கேட்டிருந்த நிலையில், அமீரக அரசும் இதற்கு […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ,ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் தற்போது உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக , ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் சிஎஸ்கே வீரரான சுரேஷ் ரெய்னாவை வைத்து ,சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 14 வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வந்தது. ஆனால் ஒருசில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த, பிசிசிஐ தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், மீதமுள்ள […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ,பிசிசிஐ முடிவு செய்துள்ளது. பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக் கூட்டம் ,காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு , பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், வருங்கால கிரிக்கெட் போட்டிகளை, நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது . இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய […]
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் ,வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது . இந்தியாவில் நடத்தப்படும் ஐபில் தொடரை போலவே பாகிஸ்தானிலும் ,பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற்று வந்தது. இந்த வருடமும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி , கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடைபெற்று வந்தது. ஆனால் போட்டியில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் , போட்டிகள் காலவரையின்றி […]