மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தர் ஆகவும் வலம் வருபவர் பிரித்திவிராஜ். இவருடைய வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வியாழக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதேபோன்று பிரித்திவிராஜ் மற்றும் நடிகர் மோகன்லால் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், மம்முட்டியின் படங்களை தொடர்ந்து தயாரிக்கும் ஆன்டோ ஜோசப் மற்றும் தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோரது வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் வருமானவரித்துறையினர் […]
Tag: ஐடி ரெய்டு
தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவைகள் சப்ளை செய்யும் 2 நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையானது வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மண்ணடியில் உள்ள அருணாச்சலம் இன்பேக்ஸ், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ் மற்றும் இண்டர் கிரேடட் சர்வீசஸ் குரூப் போன்ற நிறுவனங்களில் சோதனை நடைபெற்று […]
அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், ஆகியோரின் யார் பக்கம் இருப்பது என தெரியாமல் கட்சித் தொண்டர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் புதுக்கோட்டையில் நடந்த ஐடி ரெய்டு அதிமுகவில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெய்டு இருக்க ஆளான நபர் நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். அவர் பெயர் பாண்டிதுரை. நெடுஞ்சாலைத்துறை இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து உதவிக்கோட்ட அலுவலக உதவியாக பதிவு உயர்வு பெற்று அதிமுக ஆட்சியில் செல்வாக்கு பெற்ற நபராக வளர்ந்துள்ளார் […]
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் முதல் தகவல் அறிக்கையில் (எஃப் ஐஆர்) இப்போது தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருக்கின்ற அப்பாவு முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏவாக இருந்தபோது 2புகார் கொடுத்துள்ளார். அந்த பெட்டிஷன்ல என்ன சொல்றாரு ? என்றால், சேலம், தர்மபுரி, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி இந்த மாவட்டங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்லாம் LED லைட்களாக மாற்றுவதற்கு […]
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் இன்று 2ஆவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரையில் அன்புச்செழியனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமானவரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டும் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் வசிக்கும் தி.மு.க.வைச் சேர்ந்த தொழில் அதிபர் ஏ.வி. சாரதி என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது ஏ.வி.சாரதியின் அலுவலகங்களிலும் வருமானம் வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக அதிமுகவில் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளராக இருந்த சாரதி கடந்த ஆண்டு திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ஓப்போ மொபைல்கள் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களும், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்தியாவைப் பொறுத்தவரை சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் ஒப்போ மற்றும் பாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் நாடு முழுவதும் […]
சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரிஏய்ப்பு புகாரின் பேரில், தமிழகம் முழுவதும் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்-க்கு சொந்தமான கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில், 60-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், பாடி சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை, போரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் வரிஏய்ப்பு, […]
கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று ஒரே நாளில் மட்டும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். ஊழலில் திளைத்த 15 அதிகாரிகளை குறிவைத்து அவருடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது. எட்டு எஸ்பி கல் 400க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய படை மாநிலம் முழுவதும் ரெய்டு நடத்தியது கர்நாடகாவையே அதிரவைத்தது. இதில் பொதுப்பணித்துறை இளநிலை இன்ஜினியரான சாந்தா கெளடா பிராதார் வீட்டில் சிக்கிய பணக்கட்டுகள் தான் அனைவரையும் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.பி வேலுமணியிடம் வருமானம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடியான கேள்விகளை கேட்டு துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது. காலை தொடங்கி சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் ரூ.13.8 இலட்சம், ரூ.2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், 9 […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சுகுணாபுரத்தில் எஸ்.பி வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு கூடிய அதிமுகவினருக்கு மதிய உணவு […]
தமிழகத்தில் நேற்று அதிமுக தலைமையில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் கருப்புச்சட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்று முயற்சி நடந்து வருகிறது. மேலும் என்னுடைய வீட்டில்தான் ஐடி ரெய்டு நடக்கும் என்று நான் முதலில் எதிர்பார்த்தேன். நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம். என் மீது எந்தவொரு வழக்கு […]
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள ஒரு வீடு உட்பட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனால் அவருடைய வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை […]
கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அவருடைய வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதபோதகர் பால் தினகரனின் வீட்டில் வருமானவரித்துறையினர் 3 வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதபோதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர் மதபோதகர் பால்தினகரன் ஆவார். இவர் மீது வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடு சம்பந்தமாக வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். […]