வாக்கெடுப்பின் போது உக்ரைன் போர் சூழலை காஷ்மீர் விவகாரத்திற்கு இணையாக ஒப்பிட்டு பாகிஸ்தானிய தூதர் பேசியுள்ளார். உக்ரைன் நாட்டின் டொனட்ஸ்க், ஜபோர்ஜியா போன்ற நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐநா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பற்றிய வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 143 உறுப்புகள் ஆதரவு தெரிவித்தது ஐந்து நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி உள்ளது. இருப்பினும் உக்ரைனில் […]
Tag: ஐநா சபை
ஐநாவுக்கான இந்திய பிரதிநிதியை நடிகர் சூர்யா சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தனது சொந்த காரணத்திற்காக மனைவியுடன் நடிகர் சூர்யா அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சூர்யா குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகர் சூர்யா நியூயார்க்கில் ஐ. நா-வுக்கான இந்தியத் தூதர் டி. எஸ் திருமூர்த்தியை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டி.எஸ் திருமூர்த்தி சூர்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக இந்தியா சார்பாக 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐநா சபையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக இந்தியா சார்பாக சுமார் 6.18 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் நகரில் இருக்கும் ஐநா சபைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து ஐ.நா சபை செய்திகளை இந்தி மொழியில் மொழி பெயர்த்து, உலகநாடுகள் முழுக்க இந்தி பேசக்கூடிய லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு […]
ஐநா மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில் 93 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 28 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதோடு 54 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்தியாவும் ரஷ்யாவை எதிர்க்கும் தீர்மானத்தின் மீதான வரைவில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்ததால் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்கும் தீர்மானத்திற்கு […]
மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக ஐநா சபை அறிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் கவுன்சில் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாற்பத்தி ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக சேர ஐநா பொதுச் சபையில் 193 நாடுகளில் 3 ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ரஷ்யாவின் உறுப்பினராக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உலகின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்க […]
ஐநா சபையில் உக்ரைன் நாட்டிலிருந்து ரஷ்ய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டின் ராணுவ இலக்குகளை அழித்து வருகிறது. மேலும், தொடர்ந்து 8-வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, இரு தரப்பை சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே உலக நாடுகள், ரஷ்ய படைகள் உக்ரைனில் மேற்கொள்ளும் தாக்குதலை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், ஐநா சபையில் […]
ஐ.நா சபை உலகிலேயே மிக பெரிய அளவில் இயங்கும் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை ஆதரிப்பதாக கூறியிருக்கிறது. இந்தியாவில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ம் தேதியிலிருந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இது, உலகளவில் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று கூறப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 163 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பில் ஐ.நா பொதுச் செயலாளரான ஆண்டனியோ குட்டரேஸின் செய்தி தொடர்பாளரான ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்திருப்பதாவது, தற்போது வரை உலகிலேயே […]
5 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட கொரோனா உட்பட பல காரணங்களால் உலகம் மிகவும் மோசமாகவுள்ளதாக ஐ.நா சபையின் பொது செயலாளர் கூறியுள்ளார். உலகம் 5 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட கொரோனா, காலநிலை மாற்றம் போன்ற பல முக்கிய காரணங்களால் மிகவும் மோசமாகவுள்ளதாக தனது 2 ஆவது ஆண்டு பதவி காலத்தை தொடங்கிய ஐ.நா சபையின் பொது செயலாளரான ஆன்டனியோ கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, ஐ.நா சபையில் பொதுச் செயலாளருக்கு அதிகாரமில்லை என்று கூறியுள்ளார். […]
உலக நாடுகள் முழுவதும், நவம்பர் 20-ஆம் தேதியான இன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும், குழந்தைகள் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகிறார்கள். எனினும், வருடந்தோறும் நவம்பர் 20ஆம் தேதி அன்று, உலக நாடுகள் முழுக்க சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1954 ஆம் வருடத்தில் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று குழந்தைகளிடையே உள்ள சகோதரத்துவத்தையும் புரிதலையும் மேம்படுத்துவதற்காக குழந்தைகள் நலன் கருதி ஐக்கிய நாடுகள் சபையானது, சர்வதேச குழந்தைகள் தினத்தை […]
உலக பணக்காரர்களின் மொத்த வருமானத்தில் வெறும் இரண்டு சதவிகிதத்தை வைத்து உலக மக்களின் பசியைப் போக்க முடியும் என ஐநா சபை நிரூபித்தால் டெஸ்லா பங்குகள் அனைத்தையும் விற்றுவிடுவதாக அதன் உரிமையாளர் எலன் மாஸ்க் சவால் விடுத்துள்ளார். உலகில் வாழும் பெரும் பணக்காரர்களின் மொத்த வருவாயில் வெறும் இரண்டு சதவிகிதம் அதாவது 6 மில்லியன் டாலர் தொகையில் உலகில் உள்ள அனைத்து மக்களின் பசியைப் போக்க முடியும் என ஐக்கிய நாடுகள் சபை நிரூபித்தால் அதற்காக தனது […]
ஐநாவின் இந்திய தூதரான திருமூர்த்தி, உலகநாடுகள் பிற நாட்டு தீவிரவாதத்தை குறை கூறிய காலகட்டம் திரும்ப வரக்கூடாது என்று கூறியிருக்கிறார். ஐநா பொதுச்சபையில் நடந்த தீவிரவாதத்திற்கு எதிரான தீர்மானத்தின் போது ஐநாவின் இந்தியாவிற்கான நிரந்தரமான தூதர் திருமூர்த்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அமெரிக்காவில் இரண்டு கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின்பு எந்த தடையும் இல்லாமல் நாடுகள் அனைத்தும் ஒன்றாக செயல்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வன்முறை தேசியம், வலதுசாரி பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதம் போன்ற […]
மியான்மர் நாட்டுடனான ஆயுத விற்பனையை நிறுத்துமாறு ஐ.நா. அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க ஆட்சியை ராணுவம் கைப்பற்றி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ராணுவத்தினர் தாக்கியும், துப்பாக்கி சூடு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் ஐ.நா. பொது சபை இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அதில் மியான்மர் நாட்டிற்கு வழங்கப்படும் […]
பிரான்ஸ் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் ராணுவம் கடந்த ஜனவரி மாதம் மாலி நாட்டில் உள்ள தீவிரவாதிகள் அழிப்பதற்காக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் “இந்த தாக்குதல் இரண்டு ஜெட் விமானம் மூலம் போண்டி கிராமத்தில் நடத்தப்பட்டதாகவும், இதில் தீவிரவாதிகள் மட்டும் தான் கொல்லப்பட்டதாகவும், அக்கிராமத்தில் திருமணம் […]
கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கோரும் ஐநா பொதுச் சபை புதிய தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்க்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐநா பொதுச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் 193 உறுப்பினர்களை கொண்ட ஐநா […]
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது அணு ஆயுதங்களை அதிகமாக கையில் வைத்துக்கொண்டு மற்ற நாடுகளை அச்சுறுத்தி வந்த ஈரானுடன் ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய 6 வல்லரசு நாடுகள் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். அணுசக்தி ஒப்பந்தம் என அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி தனது அணு ஆயுத கையிருப்பை ஈரான் படிப்படியாக குறைத்துக்கொள்ளவேண்டும். அதற்குக் கைமாறாக அந்நாட்டின் மீது பொருளாதார […]
கொரோனவை விரட்டிட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐநாவின் பொது செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகுக்கே மரண பயத்தை காட்டிக் கொண்டிருக்கும் கொடூர கொரோனா வைரசுக்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதேவேளையில் கொரோனவை எதிர்த்து போராடி வரும் உலக நாடுகள் அதற்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் […]